தமிழ் மொழிக்கு கிரந்த எழுத்துக்களான, ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஶ்ரீ தேவையற்றது, எப்படி, ஏன்?
தமிழில் ba, bha,ga, gha,dha போன்ற ஒலி உடைய கிரந்த எழுத்துக்கள் போன்று தமிழில் இல்லை, அவற்றை ஏற்றுக் கொள்வதால் தமிழ் மேலும் வளரும் என்கிறார்கள்.
1/12
ஒரு மொழி சிதைந்து காணாமல் போவதற்கு அவை பிறமொழி சொற்களை ஏற்றுக் கொள்வது காரணியாக அமைவதில்லை. எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதாலேயே அவ்வாறு அமைந்துவிடுகிறது.
2/12
கிரந்த எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதால் புதிய சொற்களையோ, அல்லது பழைய சொற்களையோ புதுப்பித்து பயன்படுத்த முடியாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்தும் நிலை வந்துவிடும்.
3/12
கலப்பு அதிகம் ஆக ஆக மொழியின் வளர்ச்சி குன்றும் சில நூற்றாண்டுகளில் மொழி தன் உருவத்தை இழந்து முற்றிலும் அழியும்.
இது பல்வேறு மொழிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் நடந்துள்ளது. பிறமொழி எழுத்துக்களால் மொழி வளர்ச்சி என்பெதெல்லாம் வீண் வாதம்.
4/12
ஆங்கிலத்தை எடுத்துக் கொண்டால் கூட a(அ) இருக்கிறது aa (ஆ) இல்லை இது போல் இரண்டு மாத்திரைக்கு மேல் ஒலிக்கும் பல எழுத்துக்கள் ஆங்கிலத்திலும் இல்லை. ஆங்கிலத்தின் வளர்ச்சி குன்றவில்லையே.
5/12
பல ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பையே அகராதியைப் பார்த்துதானே நாம் தெரிந்து கொள்கிறோம்.
நீள் ஒலி (நெடில்)எழுத்துக்கள் இல்லாதது ஆங்கிலத்தின் குறை என்று சொல்வதில்லை. ஆங்கிலம் பிறமொழி புதுச்சொற்களை இருபத்து ஆறு எழுத்துக்களை வைத்துக் கொண்டு தான் எழுதுகிறது.
6/12
மங்கோலிய மொழிகளான சீனம் மற்றும் ஜப்பான் மொழிகளில் R எழுத்து பயன்பாட்டில் இல்லை. பெயர் சொல்களில் வரும் R ஐ தவிர்த்துவிட்டுதான் சொற்கள் அமைத்து அதன்படியே எழுதுகிறார்கள்.
சீனர்களோ, ஜப்பானியர்களோ அது தங்களின் மொழியின் பெரும் குறை என்றெல்லாம் சொல்வதில்லை.
7/12
மேலும் அவர்களின் மொழியில் புதிய எழுத்துக்களை சேர்க்காததால் அவர்களுடைய மொழியில் பெயர் சொற்களின் சிதைவு உச்சரிப்பு நீங்கலாக வினைச் சொற்களில் பிறமொழி கலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.
8/12
சிங்கப்பூர் என்பதை சீனர்கள் சிஞ்சப்பூ(ர்), ஆஸ்திரேலியா என்பதை ஆடேலியா என்றுதான் எழுதுவார்கள் அதற்கு அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை தங்கள் மொழியின் குறை என்றெல்லாம் வீணாக கற்பனை செய்து கொள்வதில்லை.
9/12
எல்லா ஒலியையும் ஒலிக்கும் எழுத்துக்களை கொண்டிருக்கிறது என்று எந்த ஒரு மொழியும் இல்லவே இல்லை.
10/12
சீன எழுத்துக்களில் பன்மாத்திரை (நெடில் நீள் ஒலி எழுத்து 'கூகூகூ' என மூன்று மாத்திரைக்கு மேல் ஒலிக்கும் ஒற்றை எழுத்துக்கள்)மற்றும் கால் மாத்திரை அளவுள்ள குறும் ஒலி எழுத்துக்கள் பிறன் மொழியில் இல்லை.
11/12
சீன பெயர் சொற்கள் (ஊர், இடம்) பெயரை பிறமொழிகளில் எழுதும் போது அதே போன்ற உச்சரிப்பில் நிச்சயம் இருக்காது எழுத முடியாது.
இதனால் சீன எழுத்துக்களை கடன் வாங்கினால் ஆங்கிலம் மேலும் சிறக்கும் என்று சொல்ல முடியுமா ?
12/12
நமது இந்திய தண்டனை சட்டங்கள் காலத்துக்கு ஒவ்வாதவை. இப் பொழுதுள்ள குற்ற நடைமுறைகளால் எல்லா குற்றவாளிகளையும், குறிப் பாக பணபலமும், அரசியல் பின்புலமும் உடைய குற்றவாளிகளை தண்டிக்கவே முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இதைவிட கேவலம் சட்டம் ஒழுங்கையும் காக்க வேண்டிய அமைப்புகள் காவல்துறையும், நீதித்துறையுமே அதை காலில் போட்டு மிதிப்பது அன்றாட நிகழ்ச்சி.
மக்கள் நீதிமன்றங்களின் மேல் உள்ள நம்பிக்கையை இழந்த கேவலமான, பலவீனமான, வலுவிழந்த நமது இந்திய குற்றவியல் சட்டங்களை அதை வலுப்படுத்த வேண்டிய, ( நீர்த்துப் போக அல்ல) சட்டத் திருத்தம் செய்வது மிகவும் அவசியம்.
இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்
தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில்,
1/22
இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.
ஆம். *மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள்* பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் _இரண்டு மருத்துவர்கள்_ மூலம்.
2/22
மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே*, “ _*Dissenting Diagonisis*_" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள்.
மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
3 /22
சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவிற்கு உண்மை? இந்தப் புரளி எப்படித் தொடங்கியது?
1985இல் வெளியான AI Magazine எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த சஞ்சிகையில், அமெரிக்காவில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்
1/15
Research Institute for Advanced Computer Science எனும் நிறுவனத்தைச் சேர்ந்த ரிக் ப்ரிக்ஸ், 'சமஸ்கிருதம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அறிவை வெளிப்படுத்துதல்' (Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence) எனும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.
2 /15
மனிதர்கள் பயன்படுத்தும் வாக்கியக் கட்டமைப்புகளை உள்ளீடுகளாக கணினியில் செலுத்தினால் அதை அவ்வாறாகவே புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற மொழி குறித்து அந்தக் கட்டுரையில் அவர் விவரித்துள்ளார்.
3 /15