கட்சிகளின் தவறுக்காக திராவிட கட்சிகள் என சித்தாந்தத்தை குறைசொல்வது, சாடுவது தவிர்க்கப்பட வேண்டும்....
கட்சியை,கட்சி தலைமையை, தலைவர்களின் செயல்களை குறைகூறுங்கள்... கருத்தியல்,அரசியல் ரீதியாக...
மதம் வேறு... ஆன்மீகம் வேறு...
திராவிட கட்சிகள் வேறு..
திராவிடம் வேறு...
இந்த கட்சிகளின் நோக்கம் பெரியாரை,அம்பேத்கரை, திராவிடத்தை தங்கள் எதிர்க்கட்சியினர் திட்ட வேண்டும் என்பதே... அதற்காகவே அதை தூக்கிப்பிடிப்பார்கள், மதத்தை திட்டுவார்கள்.. தனிப்பட்டவகையில் திட்டுவார்கள். அதனால் வெறுப்பு அரசியலை கைவிட்டு எல்லாவற்றிலும் உள்ள நல்லதை மட்டுமே பேசுவோம்.
பெரியார்,அம்பேத்கர் பேசியதின் நோக்கத்தை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம் சரியாக எடுத்து சென்றிருந்தால் சாதி வேறுபாடுகள் ஒழிந்திருக்கும்.சாதி வேறுபாட்டை விட்டு,கடவுள் மறுப்பை பேசுனத மட்டும் மக்களிடம் பேசி பிராமண வெறுப்பை பிரதானமாக்கி அரசியல் செய்ததே வெறுப்புக்கு காரணம்.
2020 வந்தாச்சு இன்னமும் மக்க்ளோட இன்றைய தேவை, வளர்ச்சி,கல்வி வியாபாரத்தை ஒழிப்பது,வேலைவாய்ப்பு அதிகரிப்பு பத்தி யாருமே முழுமூச்சா பேசுரது இல்ல. எல்லாருமே மொழி,மதம்,சடங்கு, சம்பிரதாயம்,இனம்,சாதிய சுத்தி பேசி,உன்னோட அந்த உரிமை,இந்த உரிமை போய்டும்னு சொல்லி பயமுறுத்திட்டே இருக்காங்க.
மக்களை பயமுறுத்துவது, ஏமாற்றுவது,இலவசம், தள்ளுபடினு ஜவுளி கடை போல மக்களோட அறியாமையை, ஆசையை,வறுமையை வைத்து அரசியல் செய்வதை நிறுத்தும் வரை மக்களே மீண்டும் பாதிப்பதை தடுக்கமுடியாது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட இலவச பொருட்களே போதும். கல்வியை இலவசமாக தாருங்கள். 5ஆம் வகுப்பு வரையாவது.
இலவசம் என்றால் வறுமை கோட்டுக்கு கீழ்,அரிசி கார்டு போன்று ஒரு வரைமுறை வைத்து இலவசத்தை சொல்லுங்க.. தள்ளுபடி என்றால் குறைந்தபட்சம் 1 அல்லது 3 லட்சம் வரை மட்டுமே என அறிவியுங்கள்.. இப்ப கல்வி கட்டணம் தான் மக்களுக்கு பெரும்சுமை. அதை குறைக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கல.
அரசியல்வாதிகள் பள்ளி,கல்லூரி நடத்துனா அது தனிப்பட்டது, சாராய ஆலையும் தனிப்பட்டது... அதுல நடக்கும் தவறுகள்,பாதிப்புகள அவங்க சரிசெய்ய மாட்டார்கள். ஆனா ரஜினி மட்டும் தயாரிப்பாளர், நடிகர் டூ டிக்கட் கவுண்டர் வரை எல்லா சங்க பிரச்சனைகளையும் தீர்த்துட்டு மட்டுமே அரசியல் பேசனுமாம்.
வாரிசுகளுக்கு பதவி தந்து அதற்காக பதவிகளை உருவாக்கி, அதற்காக பல போராட்டங்கள வேனும்னே நடத்தி, அனுமதியில்லாம கூடி கைதாகி கட்சிக்காக வழக்கு,கைதுனு வரலாற்றுல பதியவைத்து மக்கள,தொண்டர்கள ஏமாத்துற வேலையை செய்ற கட்சிகள் மக்கள எங்க கவனிப்பாங்க. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு நோய் இருக்குன்னா அத சரிசெய்யும் வழிகள்:
1.சாப்பாடு மூலம்..
2.வீட்டு வைத்தியம்..
3.சித்தா,ஆயுர்வேதா..
4.அலோபதி-மருந்து,மாத்திரை,ஊசி..
5.இறுதியாக ஆப்பரேசன்.
ரஜினி சொல்லிருக்கிற மாற்று அரசியல் பாதை இதுதான்.. நோயை குணப்படுத்த முடிவெடுத்த ரஜினி ஆப்பரேசன் செய்யவும் தயங்கமாட்டார்.
ரஜினி எதார்த்தத்தை உணர்ந்து உண்மையாக மக்களை மாற்ற எண்ணி இத சொல்லியிருக்கிறார். அரசியல்வாதிகள் பாணி மாறனும்னா மக்கள் முதலில் மாறனும்.. கேரள மக்கள் அப்டி இருப்பதால்தான் அரசியல்வாதிகள் அப்டி இருக்காங்க... அதை நோக்கி மக்களை திருப்ப முயற்சிக்கிறார் ரஜினி.
சும்மா ... ஜெய்த்தோம்...
இலவசம் கொடுத்தோம்...கடன் தள்ளுபடி கொடுத்தோம்... பந்தாவா வலம் வந்தோம், தெரிஞ்சவனுக்கு வேலை, காண்ட்ராக்ட், கமிசன், வசைபாடுனோம்னு மக்களை ஒரேமாதிரி வைத்திருக்கும் அரசியல்வாதியா இருக்க ரஜினி விரும்பல... இதுதான் முக்கிய நோக்கம்...
பார்ப்பனீயம் ஆபத்து-பிரசாந்த் கிஷோருடன் இணைவோம். திராவிடம் ஆபத்துனு சொல்ர பார்ப்பனீயம் திமுக ஜெய்க்க உதவும்.பெரியாரை எதிர்ப்பர், ராஜாஜியுடன் சேர்வர்,காமராஜரை எதிர்ப்பர், பாஜகவோடு சேருவர், சாதிகட்சிகளோடு கூட்டணி அமைக்கும்,ஆட்சிக்காக யாருடனும் சேரும்/விலகும். எல்லாம் ராஜதந்திரமாம்.
50 ஆண்டு கட்சி மொழி, சித்தாந்தத்துக்காக போராடிய கட்சி கார்ப்பரேட் கம்பெனியுடன் கைகோர்க்கிறது தேர்தல் வெற்றிக்காக. இதை எந்த மீடியாவும் பேசாது..ரஜினியை கேள்விகேட்கும் பலரும் கேட்க மாட்டார்கள்.ஏன்னா ஆல்ரெடி அவங்க ட்ரெயல் பாக்க தொடங்கியதன் சாம்பிள்தான் இவர்களின் ரஜினி எதிர்ப்பு.
திமுக & கட்சிகளின் நோக்கம் வெற்றி மட்டுமே. அதற்காக எந்த முடிவையும் எடுப்பர்.அதற்கேற்ப பேசுவர்.கொள்கைலாம் தூசு.
ஆனா ரஜினி ரசிகர்கள் கூட்டணி வைக்க தயங்கியும்,அவர் திட்னாரு அவரோடு எப்டி சேருவதுனு ஈகோ பார்த்தும் பேசிட்டு இருக்கோம்.அங்க ஒருத்தன் வெற்றிக்கு கார்ப்பரேட் கூட போறான்.
ஏன் @rajinikanth மீது கோபம்?
தன் அபிமான நடிகரை விட புகழ் பெற்றிருப்பதால்...
ரஜினி யார் வாய்ப்பையும் பறிக்கவில்லை. மக்களுக்கு பிடிச்சா படம் ஓடும் இல்லன்னா ஓடாது. ரஜினிக்கும் ஒரு சில தோல்வி படங்கள் உண்டு.1
தன் ஆதரவு கட்சியின் வெற்றியை தடுத்துடுவாரோ என்ற பயம்? ஒரு கட்சி வெற்றி/தோல்வி அடைய அந்த கட்சியின் கடந்த/நிகழ் கால செயல்பாடுகள்.. தொண்டர்களின் அத்துமீறல்,மக்கள் விரோத செயல்கள், அதை கண்டு கொள்ளாத தலைமை,etc இவைகள் தான் காரணம். இது எல்லா கட்சிக்கும் பொருந்தும்.2
பல புரட்சிகர,சமூக சீர்திருத்த மக்கள் நல திட்டங்களை தந்த திமுகவால் தொடர்ந்து வெற்றி பெற முடியல. மக்கள் ஏன் ஞாபகம் வைக்கல. பல இடங்களில் கட்சியினர் செய்த அத்துமீறல்களை, தலைமை கண்டு கொள்ளாததன் விளைவு இது. எங்க,எப்ப என்ன நடந்ததுநு கேப்பாங்க. ஒன்னும் தெரியாத மாதிரி. 3
எல்லா நடிகர்களும் ரஜினி மாதிரி ஆகனும்,ரஜினி மாதிரி மக்கள் செல்வாக்கு பெறனும்னு தான் விரும்புறாங்க... அதுக்கு தான் உழைக்கிறாங்க... எல்லா ரசிகர்களுமே தன் அபிமான நடிகர் ரஜினியை போல தனக்கு திருப்தியை தரனும்னு தான் விரும்புறாங்க.எல்லாத்துக்கும் பெஞ்ச் மார்க் ரஜினிதான்.1
ரஜினியை,ரஜினி பட வியாபாரத்தை பென்ச் மார்க்கா வச்சுட்டுதான் திரையுலகமே ஓடிட்டு இருக்கு. ஆனால் ரஜினி மற்றவர்கள் போல அல்ல... அவர் ஒரிஜினல்.அவர்கிட்ட இருக்கும் மேஜிக் வேற யார்கிட்டயும் இல்ல.
திகட்டாத நடிகர்.ஆயிரம் பேர் இருந்தாலும் தன்னை மட்டுமே பார்க்கவைக்கும் வசீகரம் உள்ளவர்.2
எல்லாரும் பஞ்ச்,பைட்,டான்ஸ், கோட்சூட்,வாக்,ஸ்டைல் எல்லாம் பன்றாங்க.அவர்களது ரசிகர்களும் கட் அவுட்,ப்ளக்ஸ், பா.அபிசேகம்,4 மணி ஷோ,ட்ரெண்டிங்,லைக்ஸ் எல்லாம் பன்றாங்க.ஆனா ரஜினி படத்துக்கு வரும் கூட்டம்,பேமிலி ஆடியன்ஸ் மிக அதிகம்.ஏன்னா அதான் ரஜினி மேஜிக்...3