#FarmersProtestDelhi2020#FarmerPolitics#FarmersProtestHijacked உண்மை என்ன?
பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் விவசாயிகளுக்கும் கொள்முதல் நிறுவனங்களுக்கும் இடையில் முக்கிய இணைப்பாக இருப்பது ஆர்ஹித்யாகள் (கமிஷன் முகவர்கள்). அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண்
மசோதாக்கள் அவர்கள் வணிகத்தை மோசமாக பாதிக்கிறது என்பதால், மையத்தின் வேளாண் சந்தைப்படுத்தல் கட்டளைகளுக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். பஞ்சாப் & ஹரியானாவில் 30,000 த்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கமிஷன் ஏஜண்டுகள் விவசாய சந்தையில் வெகு காலமாக கோலோச்சி வருகின்றனர்.
இவர்கள் விவசாய நடவடிக்கைகளிலும் இரு மாநில அரசியலிலும் வலுவான செல்வாக்கை செலுத்தி வருகிறார்கள். இந்த 30,000 பேர், இன்னுமொரு 3,00,000 துணை முகவர்கள் அல்லது அல்லக்கைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்புடுத்தித் தந்திருக்கின்றனர். இவர்கள் வேறு எந்த வேலை செய்ய லாயக்கில்லாவிட்டாலும் ஒரு பெரிய
நெட்வொர்க்கை உருவாக்கி இந்த 30,000+ பேரின் ஆதரவாளர்களாக வளைய வருகிறார்கள். ஆனால் பஞ்சாபில் இருப்பது என்னவோ 1500 விவசாய கிராமங்கள் மட்டுமே. 330,000 / 1500 என்று வகுத்தால் ஒரு கிராமத்திற்கு சராசரியாக 220 பேர் இடைத்தரகர்களாக வேலைச் செய்கிறார்கள் என்பது தெரிகிறது.
இது ஏன்?
1970 கள்
வரை நம் நாட்டில் உணவு பற்றாக்குறையும் அதை ஈடுகட்ட தானிய இறக்குமதிகளை நம்பியும் இருந்தோம். நார்மன் போர்லாக் விவசாய சாகுபடியில் பல புதுமைகளை புகுத்தி அதனால் முன்பு இருந்த விளைச்சலை 10 மடங்காக்கும் முறைகளை கண்டுபிடித்தார். ஆனால் அதற்கு 3 மடங்கு உரம் தேவைப்பட்டது. பசியை தீர்க்கும்
களமாக பஞ்சாப் தேர்வு செய்யப்பட்டது. தொழில்முனைவதில் வல்லவர்களான சீக்கிய விவசாயிகள் பசுமைப் புரட்சியை உருவாக்க கடுமையாக உழைத்தனர். பெரும் பற்றாக்குறை இருந்ததால் அங்கு பண்ணை/விவசாய நிலங்களை பங்குச் சந்தையில் அனுமதிக்கவோ விற்கவோ முடியாத மாதிரி விவசாயிகளுக்கு சாதகமான சட்டங்கள்
இயற்றப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் சட்டம்-APMC சட்டம் (விவசாயிகள் APMCயில் உரிமம் பெற்ற வர்த்தகர்களுக்கு மட்டுமே விற்க நிர்பந்திக்கப்பட்டனர்-உரிமம் அனுமதி ஒதுக்கீட்டு ராஜாங்கம் நினைவில் இருக்கிறதா?) விவசாயி தனது கடின உழைப்பிற்கான உத்தரவாதமாக குறைந்தபட்ச ஆதரவு விலைகள் உறுதியளிக்க
பட்டன. உற்பத்தி எவ்வளவாக இருந்தாலும் அரசு விவசாயிகள் உற்பத்தியை வாங்கிக் கொண்டு குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் அல்லது டன்னுக்கு இவ்வளவு என இழப்பீடாக தொகை வழங்கப்பட்டது. ஆனால் அரசிடம் இருந்து பணத்தைப் பெறுவது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. அதனால் அதிகாரத்துவம், அரசாங்கத்தின்
ஊழல் நிறைந்த துறைகளிடம் இருந்து ஏழை விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கித் தர இடைத் தரகர் இனம் பிறந்தது. அரசியல் ஆதரவு நெட்வொர்க்குகள் தழைத்தோங்கின. உணவு தானியங்களில் உபரி உற்பத்தி நிலை ஏற்படும் என்பாதை யாரும் கணிக்காததால் இந்த சட்டங்கள் எப்போது நிப்பாட்டப்பட வேண்டும் என்பதை
சட்டம் இயற்றியவர்கள் தெரிவிக்கவில்லை. இதன் விளைவு: ஹரியானா, உ.பி., பீகார், ராஜஸ்தான் மற்றும் எம்.பி போன்ற அனைத்து மாநிலங்களும் தானிய உற்பத்தியில் பெருகி உபரியை அவர்களுக்கும் சொந்தமான எம்.எஸ்.பி நெட்வொர்க்கில் விற்பனைக்குக் கொண்டுவந்தனர். ஆனால் பஞ்சாபில் உள்ள மண்டிகளில் அதிகமானவை
வாங்கப்படுவதால் (மத்திய அரசு வாக்குறுதியை நினைவில் கொள்க) உ.பி. மற்றும் பீகாரில் இருந்து வரும் தானியங்களும் பஞ்சாபின் மண்டி அமைப்பில் அதன் நெட்வொர்க்கில் வர ஆரம்பித்தன. தேக்காதார் வந்து நிலத்தில் வளரும் தானியங்களின் அளவை கணக்கெடுத்துக் கொண்டு போவார். இதற்கு தேகா அல்லது ஒப்பந்தம்
என்று பெயர். நேரடியாக கார்பரேட்கள் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்வது பற்றி முணுமுணுப்புகள் உருவாகியுள்ளன. காரணம் பழைய முறைப்படி ஒவ்வொரு பயிர் பருவத்தின் முடிவில் ஏராளமான விவசாயிகள் தங்கள் தொகையைப் பெறுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. 220: 1 என்பது தான் இன்று பஞ்சாபில் ஒரு
கிராமத்திற்கு இடைத்தரகர்கள் எவ்வளவு என்கிற விகிதம். இந்த வணிகம் பின்னோக்கி ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. ஊழல் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும், கமிஷன் முகவர்கள் பணக்காரர்களாக விவசாயிகளின் ஏடிஎம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பஞ்சாபில் வங்கியில்லாத கிராமங்களில்
67% கடன்களுக்கும், வங்கி இருக்கும் பகுதிகளில் 55% கடன்களுக்கும் அவர்கள் நிதியளித்தனர். அதனால்தான் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPO) ஊக்குவிக்கும் முயற்சிகள் இருந்தபோதிலும் விவசாயிகள் கமிஷன் முகவர்களிடமே செல்ல விரும்புகின்றனர். ஹரியானாவில் முன்னாள் தலைமை அரசியல்வாதிகள் பஜன்லால்
மற்றும் ஓ.பி.சௌதாலா ஆர்ஹிதியா (தரகு) வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஆதம்பூர், சிசா சந்தைகளில் கடைகளை வைத்திருந்தார். அங்கிருக்கும் எல்லா பெரிய அரசியல்வாதிகளும் இந்த வியாபாரத்தில் தான் திளைத்திருக்கிறார்கள். இதற்கிடையில் ஜம்கேத்கர் கமிட்டி, FCI யால் MSP யின் கீழ் கையகப்
படுத்தப்பட்ட தானியங்களில் 40% க்கும் அதிகமானவை நுகர்வுக்கு தகுதியற்றவை அல்லது வெறுமனே வீணடிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கிறது. வாங்கிய ஒவ்வொரு இரண்டு கிலோவிலும் ஒரு கிலோ வீணாகிறது. பல வருடங்களாக உபரி உற்பத்தி இதை ஏற்படுத்தியுள்ளது. MSP இருப்பதால் இலாபகரமாக தொழில் செய்ய வேண்டும்
என்கிற எண்ணமே விவசாயிகளுக்கு இருப்பதில்லை. அரசு மானியத்தில் பிழைப்பு நடத்துவதால் இந்த நெட்வொர்க்கை விட்டு விலக வேண்டிய எண்ணமே இல்லை. இது ஒரு அரசியல் வர்க்கத்தை உருவாக்கியுள்ளது, ஊழல் குண்டர்களை செழித்து வளர்த்துள்ளது. லாரிகள் எடை குறைவாகவும், அதிக பணம் செலுத்தப்படுவதும் மற்றும்
தானிய தரங்களை மாற்றுவதும் இங்கு பொதுவான நடைமுறையாகும். நீங்கள் மண்டிக்கு சில நாட்கள் சென்று பார்த்தாலே ஊழல்களை கண்டுபிடிக்கலாம். இதெல்லாம் நம் வரிப்பணத்தில் நடக்கும் மோசடிகள். இந்த ஊழலுக்கான ஆண்டு பில் சுமார் 8 லட்சம் கோடி. ஏன் விவசாயிகள் வேறு எதையாவது அதிக லாபம் ஈட்டக்கூடிய
ஒன்றை சாகுபடி செய்யக் கூடாது? ஏனெனில் ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்குப் பணம் வந்து கொண்டிருக்கும்போது வேறு எதற்கு முயற்சி செய்யவேண்டும்? களத்தில் போட்டியிட ஏன் முயலவேண்டும்? போட்டியிட ஊக்கத்தொகை எங்கே? தற்போதுள்ள அமைப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் இருக்க டெல்லிக்கு செல்லும் சாலைகளை
அவர்கள் மறியல் செய்கிறார்கள். இது மட்டுமல்லாமல், FCIயின் அழுகிப்போன கோதுமை மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இதை யார் வாங்குகிறார்கள் என்றால் மசோதாக்களை எதிர்க்கும் அதே அரசியல்வாதிகளே வாங்குகின்றனர். அவர்களுக்குச் சொந்தமான மது ஆலையில் மதுபானங்கள் உற்பத்தி செய்ய! மேலும்
பஞ்சாபில் மது அருந்துதல் மற்ற மாநிலங்களை விட அதிகம். விவசாயி இயக்கத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்களும் பச்சைக் கொடி ஏற்றப்படுவதும் ஏன்? காலிஸ்தானிய பயங்கரவாதிகளின் படங்களை வைப்பது, இந்திரா காந்தி தீர்க்கப்பட்டார், மோடியும் அவ்வாறே தீர்க்கப்படுவார் என்று தேசிய எதிர்ப்பு கோஷம்
எழுப்பப்படுகிறது. (இது அனைத்தும் யூடியூப்பில் உள்ளது.) விவசாயிகள் நிச்சயமாக இவ்வாறு அச்சுறுத்தமாட்டார்கள் என்பதை எந்த இந்திய குடிமகனும் புரிந்துகொள்வான். இந்த சக்திவாய்ந்த கமிஷன் முகவர்கள் மூன்று மசோதாக்களுக்கு எதிர்ப்பை தங்கள் பிழைப்புக்கான போராட்டமாக கருதுகின்றனர். பஞ்சாப்
மற்றும் ஹரியானாவில் அடுத்தடுத்து வந்த மாநில அரசுகள் ஆர்ஹிதியாக்களை திருப்திப் படுத்த முயன்றன, இதனால் அரசியல் ரீதியாக குழுக்கள் உருவாகின. எவ்வாறாயினும், வேளாண் சந்தைப்படுத்தல் மசோதாக்கள் இப்போது கமிஷன் முகவர்களை பாதிப்பதால் எதிர்ப்பை அதிகப்படுத்தப் பாடுபடுகின்றனர். இதற்குத் துணை
போவது நாட்டை உடைக்கக் காத்திருக்கும் எதிரி சக்திகள். உண்மையை அறிவோம்- விவசாயிகள் போராட்டமன்று இது. நடுத் தரகர்கள் தங்கள் லாபம் போகிறதே என்கிற போராட்டம் இது. 29 மாநிலங்களில் விவசாயிகளுக்கு இம்மசோதாவினால் எந்த பாதிப்பு இல்லாத போது பஞ்சாப் ஹரியானாவுக்கு மட்டும் எப்படி?
சிந்தியுங்கள்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உலகிலேயே பழமையான க்ஷேத்ரம் காசி. அந்த காசி க்ஷேத்ரத்தின் காவல் தெய்வம் காலபைரவ மூர்த்தி. ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி. காசியின் முக்கியப் பகுதியான மைதாகினியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர் கன்ச்சில் அமைந்துள்ளது இந்த ஆலயம். உள்ளே நுழைந்ததும், வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிக்கும்
ஸ்ரீகால பைரவரின் திருமேனியை கண்ணாரத் தரிசிக்கலாம். அவர் சிவபெருமானின் ஒரு அம்சமாவார். சிவபெருமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். "கால பைரவரவரைக்" கண்டு
மரணம் கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது. காசிக்குச் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில்
#FarmersAgitation#FarmerPolitics#FarmersProtestHijacked Learn the truth.
Arhtiyas (commission agents) who have been the main link between farmers and procurement agencies in the two states of Punjab and Haryana, launched their campaign against the Centre’s agri-marketing
ordinances early as the three bills cleared by Parliament will adversely affect their business. There are over 30,000 registered Arhtiyas in Punjab and Haryana who are deeply entrenched in the system. They exercise a strong influence on agricultural activities and the politics of
both states. These 30,000 employ another 300,000 sub agents or sidekicks or people who would not have made it into doing anything anyplace were it not for the patronage network of these 30,000. But there are only 1500 farming villages in Punjab. 330,000 / 1500 is about 220 people
புராணக் கதைகளை எடுத்துரைப்பவர்களுக்குப் #பௌராணிகர்கள் என்று பெயர். வைசம்பாயனர் தனது குரு வியாசர் எழுதிய ஜெயம் எனும் மகாபாரதத்தை 24,000 அடிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தி ஜனமேஜயன் என்னும் அரசனுக்குக் நாக வேள்வியின் போது எடுத்துரைத்தார். வைசம்பாயனர் எடுத்துரைத்த மகாபாரதக் கதையை கேட்ட
உக்கிரசிரவஸ் என்ற சூத முனிவர், பின்னாளில் சௌனகர் தலைமையிலான நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். நாரத முனிவர் இதைக்கற்று, தேவருக்குக்கூறினார். இவர்களே முதலில் தோன்றிய பௌராணிகர்கள்.
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம்
(பாகவதம் 7-5-23)
அதாவது கடவுளின் நாமத்தைக் கேட்டல், பக்திப் பரவசத்துடன் பாடுதல், கடவுளின் பெயரை எல்லா நேரமும் நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை அர்ச்சித்தல், அவனை கைகூப்பி வணங்குதல், அவனுக்கு அடிமையாக பணியாற்றுதல்,
#அஷ்டாட்சரமந்திரம்#எட்டெழுத்துமந்திரம்#விசிஷ்டாத்வைதம்
ஓம் நமோ நாராயணாய என்பது அட்டாட்சரம். இதில் ஓம் என்பது ப்ரணவம். நமோ என்பது பல்லாண்டு. மேலும் நான் உட்பட எல்லாமே அவனுடையது என்னும் பொருள். நாராயணாய என்பது பகவானின் திருநாமம். இந்த அட்டாட்சரம் வேண்டியன அனைத்தையும் தரவல்லது.
வேண்டுதலின்றியும் அன்றாடம் நாம் இந்த மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இந்த மூன்று சொற்களின் பொருளினை விளக்குவதற்கும் நினைவில் நிறுத்துவதற்கும் இராமாயணத்தின் மூன்று கதாபாத்திரங்களை உதாரணமாக கூறலாம்.
லக்ஷ்மணன்.
பரதன்.
சத்ருக்கனன்.
அவர்களின் செயல்களை புரிந்து கொண்டாலே ஓம் நமோ நாராயணாய
மந்திரத்தின் பொருளை புரிந்து கொள்ளலாம். இதில் முக்கியமாக மூன்று அங்கங்கள் உள்ளன.
சேஷத்வம்
பாரதந்த்ரியம்
கைங்கர்யருசி #சேஷத்வம்
பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தல். ஆதிசேஷன் என்று கூறுகிறோமே. நான் எல்லா வகையிலும் பெருமானுக்கு அடிமை என்று அவனை சேஷியாக அதாவது ஆண்டானாகவும் நாம் சேஷனாக
யுவன் சங்கர் ராஜா தற்போது அப்துல் கலிக் தனது உண்மையான இஸ்லாமிய முகத்தைக் காட்டியுள்ளார்! தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் முகத்தை சிதைக்க அழைப்பு விடுத்து எழுதியுள்ளார். என்ன ஒரு கயமைத்தனம்! thecommunemag.com/abdul-khaliq-a…
“பேச்சு சுதந்திரம் என்ற முழக்கத்தின் கீழ், ஒன்றரை பில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம் விசுவாசிகளின் உணர்வுகளை புண்படுத்தும் இந்த ஜந்துவின் முகத்தையும் அவரை பின்பற்றுபவர்களையும் முகங்களையும் சர்வவல்லமையுள்ளவர் சிதைக்கட்டும். இந்த வாழ்க்கையிலும், அடுத்த வாழ்க்கையிலும் அவர்களை
அவமானப்படுத்தட்டும். அல்லாஹ் விரைவாகக் கணக்கிடுவான், அதை நீங்கள் காண்பீர்கள்.
நாங்கள் முஸ்லிம்கள், எங்கள் தாய்மார்கள், தந்தைகள், குழந்தைகள், மனைவிகள் மற்றும் எங்கள் இதயங்களுக்கு நெருக்கமான மற்ற அனைவரையும் விட எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறோம். என்னை நம்புங்கள்,
இன்று #வால்மீகிஜெயந்தி#valmikijayanti
ஆதி கவி என்றும் அழைக்கப்படும் வால்மீகி முனிவர் இந்து சந்திர நாட்காட்டியின்படி அஸ்வினி பௌர்ணமியில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. சமஸ்கிருத இலக்கியத்தின் முதல் கவிஞராக மதிக்கப்படுகிறார். இராமாயணத்தை 7 காண்டங்களில் 24,000 ஸ்லோகங்களில்
காவியமாக வடித்தார். பிரம்மாவே இவர் நாவில் சரவஸ்தி தேவியை ஆவாகனம் செய்து இவரை எழுத வைத்தார். அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நாரத முனிவர். அவர் தான் வால்மீகிக்கு இராமாயண கதையை முதலில் சொன்னவர். வால்மீகிக்கான கோவில்களில் இவரை இன்று வணங்குவதன் மூலமும், இராமாயண ஸ்லோகங்களை படிப்பதன்
மூலமும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்று சென்னை திருவன்மியூரில் உள்ள 1,300 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இராமாயணம் எழுதிய பின் வால்மீகி ஓய்வெடுத்த இடம் இது என்றும் நம்பப்படுகிறது. சீதையின் தூய்மையை மக்கள்