புராணக் கதைகளை எடுத்துரைப்பவர்களுக்குப் #பௌராணிகர்கள் என்று பெயர். வைசம்பாயனர் தனது குரு வியாசர் எழுதிய ஜெயம் எனும் மகாபாரதத்தை 24,000 அடிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தி ஜனமேஜயன் என்னும் அரசனுக்குக் நாக வேள்வியின் போது எடுத்துரைத்தார். வைசம்பாயனர் எடுத்துரைத்த மகாபாரதக் கதையை கேட்ட
உக்கிரசிரவஸ் என்ற சூத முனிவர், பின்னாளில் சௌனகர் தலைமையிலான நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். நாரத முனிவர் இதைக்கற்று, தேவருக்குக்கூறினார். இவர்களே முதலில் தோன்றிய பௌராணிகர்கள்.
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம்
(பாகவதம் 7-5-23)
அதாவது கடவுளின் நாமத்தைக் கேட்டல், பக்திப் பரவசத்துடன் பாடுதல், கடவுளின் பெயரை எல்லா நேரமும் நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை அர்ச்சித்தல், அவனை கைகூப்பி வணங்குதல், அவனுக்கு அடிமையாக பணியாற்றுதல்,
அவனை உயிருக்குயிரான நண்பனாகக் கருதுதல், இதயபூர்வமாக தன்னையே அர்ப்பணித்தல் ஆகியவை நவவித/ஒன்பது வகை பக்திச் செயல்கள் என்று கூறப்பட்டிருக்கு. இந்த ஒன்பதில் முதலாவதான இறைவனின் பெருமையை கேட்பதில் பெரும் உதவியை செய்கிறவர்கள் பௌராணிகர்கள் அதாவது புராணக் கதைகளை சொல்லி பகவான் நினைவை
உண்டாக்குகிறவர்கள் தாம். "அதையும் அந்தப் புராணத்தில் சொல்லியிருக்கிற பிரகாரம், அதை விட்டு ரொம்பவும் வெளியே ஓடிவிடாமல், மனஸில் பதிகிற மாதிரி சொல்ல வேண்டும். இதற்கு முக்கியமாக ஸ்வாநுபூதி இருக்க வேண்டும். கதை சொல்கிறவருக்கே ஆஸ்திக்யம், ஆசாரங்கள், தெய்வ பக்தி, தாம் சொல்கிறதில்
மனமார்ந்த நம்பிக்கை எல்லாம் இருக்க வேண்டும்." என்று மகா பெரியவா அருளியிருக்கிறார். பௌராணிகர்களில் புராணங்களின் உள் அர்த்தங்களைஉள்ளபடித் தாமும் உணர்ந்து, சொல்லும் போது பிறருக்கும் உணர்த்த வல்லவர்களாய் இருந்து நமக்குக் கேட்க கிடைத்தால் அது நம் பெரிய வரமே. அப்படி பெரும் புலமை
இல்லாதவராயினும் உபந்யாசகர்கள் மக்களுக்குப் பல விஷயங்களை ஆன்மிக மன நிலையுடன் சிந்தித்துப் பார்க்கும் வாய்ப்புகளை புராணப் பிரவசனங்கள்/உபன்யாசங்கள்/சொற்பொழிவுகள் மூலம் தந்து வந்திருக்கின்றனர். கதை, கதைகளில் உள்ள குறியீடுகளின் பொருள், அவை சொல்லும் பெரும் தத்துவ அர்த்தங்களை மக்களின்
மனத்தில் புகுத்திவிடும் வல்லமை புராணங்களுக்கும், பொதுவாக பௌராணிகர்களுக்கும் இருந்து வந்திருக்கிறது. அகில பிரபஞ்சத்தையும் ஒரே தத்துவ வடிவாகக்கண்டு போற்றுதல்தான் உண்மையில் இறை வழிபாடு என்னும் அரிய கருத்தை அழகாக புராணங்களால் குறியீடுகளின் மூலம் காட்டிவிட முடிகிறது! இந்த அளவிற்கு
தத்துவ செறிவான உள்கருத்துகளை பௌராணிகர்கள் பலர் அந்நாளில் மிகவும் முயன்று மக்களுக்குப் பொதுவில் அமர்ந்து விளக்கியதன் காரணமாகத்தான் பாரதம் ஆன்மிகச் செழுமை உடையது என்ற புகழைப் பெற்றது. தத்துவச் செறிவுகளை ஆழ்ந்து விளக்குவதில் மிகுந்த முனைப்பு காட்டி வரும் பௌராணிகர் என்று சொன்னால்
முன்பு கிருபானத வாரியார், புலவர் கீரன் போன்றோரும் இன்று ஸ்ரீகிருஷ்ண பிரேமி, உ.வே.ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன், இலங்கை ஜெயராஜ், விசாகா ஹரி, ஜோசப் ஐயங்கார் போன்றோரும், இன்னும் பல பிரபலம் அடையாத ஆனால் மிகச் சிறப்பாக பௌராணிகர்களாக சமய பணியாற்றி வரும் நிறைய பேர் உள்ளனர். அதற்கு நாம்
இறைவனுக்கும் இந்தச் சேவையில் ஈடுபட்டிருக்கும் அவர்களுக்கும் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். #அர்த்தமுள்ளஇந்துமதம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

6 Dec
#FarmersProtestDelhi2020 #FarmerPolitics #FarmersProtestHijacked உண்மை என்ன?
பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் விவசாயிகளுக்கும் கொள்முதல் நிறுவனங்களுக்கும் இடையில் முக்கிய இணைப்பாக இருப்பது ஆர்ஹித்யாகள் (கமிஷன் முகவர்கள்). அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண்
மசோதாக்கள் அவர்கள் வணிகத்தை மோசமாக பாதிக்கிறது என்பதால், மையத்தின் வேளாண் சந்தைப்படுத்தல் கட்டளைகளுக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். பஞ்சாப் & ஹரியானாவில் 30,000 த்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கமிஷன் ஏஜண்டுகள் விவசாய சந்தையில் வெகு காலமாக கோலோச்சி வருகின்றனர்.
இவர்கள் விவசாய நடவடிக்கைகளிலும் இரு மாநில அரசியலிலும் வலுவான செல்வாக்கை செலுத்தி வருகிறார்கள். இந்த 30,000 பேர், இன்னுமொரு 3,00,000 துணை முகவர்கள் அல்லது அல்லக்கைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்புடுத்தித் தந்திருக்கின்றனர். இவர்கள் வேறு எந்த வேலை செய்ய லாயக்கில்லாவிட்டாலும் ஒரு பெரிய
Read 24 tweets
6 Dec
#FarmersAgitation #FarmerPolitics #FarmersProtestHijacked Learn the truth.
Arhtiyas (commission agents) who have been the main link between farmers and procurement agencies in the two states of Punjab and Haryana, launched their campaign against the Centre’s agri-marketing
ordinances early as the three bills cleared by Parliament will adversely affect their business. There are over 30,000 registered Arhtiyas in Punjab and Haryana who are deeply entrenched in the system. They exercise a strong influence on agricultural activities and the politics of
both states. These 30,000 employ another 300,000 sub agents or sidekicks or people who would not have made it into doing anything anyplace were it not for the patronage network of these 30,000. But there are only 1500 farming villages in Punjab. 330,000 / 1500 is about 220 people
Read 23 tweets
2 Nov
#அஷ்டாட்சரமந்திரம் #எட்டெழுத்துமந்திரம் #விசிஷ்டாத்வைதம்
ஓம் நமோ நாராயணாய என்பது அட்டாட்சரம். இதில் ஓம் என்பது ப்ரணவம். நமோ என்பது பல்லாண்டு. மேலும் நான் உட்பட எல்லாமே அவனுடையது என்னும் பொருள். நாராயணாய என்பது பகவானின் திருநாமம். இந்த அட்டாட்சரம் வேண்டியன அனைத்தையும் தரவல்லது.
வேண்டுதலின்றியும் அன்றாடம் நாம் இந்த மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இந்த மூன்று சொற்களின் பொருளினை விளக்குவதற்கும் நினைவில் நிறுத்துவதற்கும் இராமாயணத்தின் மூன்று கதாபாத்திரங்களை உதாரணமாக கூறலாம்.
லக்ஷ்மணன்.
பரதன்.
சத்ருக்கனன்.
அவர்களின் செயல்களை புரிந்து கொண்டாலே ஓம் நமோ நாராயணாய
மந்திரத்தின் பொருளை புரிந்து கொள்ளலாம். இதில் முக்கியமாக மூன்று அங்கங்கள் உள்ளன.
சேஷத்வம்
பாரதந்த்ரியம்
கைங்கர்யருசி
#சேஷத்வம்
பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தல். ஆதிசேஷன் என்று கூறுகிறோமே. நான் எல்லா வகையிலும் பெருமானுக்கு அடிமை என்று அவனை சேஷியாக அதாவது ஆண்டானாகவும் நாம் சேஷனாக
Read 11 tweets
1 Nov
யுவன் சங்கர் ராஜா தற்போது அப்துல் கலிக் தனது உண்மையான இஸ்லாமிய முகத்தைக் காட்டியுள்ளார்! தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் முகத்தை சிதைக்க அழைப்பு விடுத்து எழுதியுள்ளார். என்ன ஒரு கயமைத்தனம்! thecommunemag.com/abdul-khaliq-a…
“பேச்சு சுதந்திரம் என்ற முழக்கத்தின் கீழ், ஒன்றரை பில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம் விசுவாசிகளின் உணர்வுகளை புண்படுத்தும் இந்த ஜந்துவின் முகத்தையும் அவரை பின்பற்றுபவர்களையும் முகங்களையும் சர்வவல்லமையுள்ளவர் சிதைக்கட்டும். இந்த வாழ்க்கையிலும், அடுத்த வாழ்க்கையிலும் அவர்களை
அவமானப்படுத்தட்டும். அல்லாஹ் விரைவாகக் கணக்கிடுவான், அதை நீங்கள் காண்பீர்கள்.
நாங்கள் முஸ்லிம்கள், எங்கள் தாய்மார்கள், தந்தைகள், குழந்தைகள், மனைவிகள் மற்றும் எங்கள் இதயங்களுக்கு நெருக்கமான மற்ற அனைவரையும் விட எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறோம். என்னை நம்புங்கள்,
Read 5 tweets
31 Oct
இன்று #வால்மீகிஜெயந்தி #valmikijayanti
ஆதி கவி என்றும் அழைக்கப்படும் வால்மீகி முனிவர் இந்து சந்திர நாட்காட்டியின்படி அஸ்வினி பௌர்ணமியில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. சமஸ்கிருத இலக்கியத்தின் முதல் கவிஞராக மதிக்கப்படுகிறார். இராமாயணத்தை 7 காண்டங்களில் 24,000 ஸ்லோகங்களில் Image
காவியமாக வடித்தார். பிரம்மாவே இவர் நாவில் சரவஸ்தி தேவியை ஆவாகனம் செய்து இவரை எழுத வைத்தார். அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நாரத முனிவர். அவர் தான் வால்மீகிக்கு இராமாயண கதையை முதலில் சொன்னவர். வால்மீகிக்கான கோவில்களில் இவரை இன்று வணங்குவதன் மூலமும், இராமாயண ஸ்லோகங்களை படிப்பதன்
மூலமும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்று சென்னை திருவன்மியூரில் உள்ள 1,300 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இராமாயணம் எழுதிய பின் வால்மீகி ஓய்வெடுத்த இடம் இது என்றும் நம்பப்படுகிறது. சீதையின் தூய்மையை மக்கள்
Read 4 tweets
24 Oct
#Manusmriti
agniveer.com/manu-smriti-an…
#மனுஸ்ம்ரிதி இந்துப் பெண்களை இழிவு படுத்துவதாக கூறும் நயவஞ்சக #திருமாவளவன் அதுக்கு ஒத்து ஊதும் #ஸ்டாலின் உண்மையில் மனு ஸ்ம்ரிதி என்ன சொல்கிறது என்று நமக்குத் தெரியாது என்ற நம்பிக்கையில் விளையாடுகிறார்கள். அதுவே அவர்களுக்கு வினையாகப் போகிறது!
அசல் மனு ஸ்மிருதியை நாம் மதிப்பாய்வு செய்தால், பெண்களுக்கு இதை விட உயரிய மரியாதை மற்றும் உரிமைகளை அளிக்கும் வேறு எந்த உரையும் (வேதங்களைத் தவிர) உலகில் இல்லை என்பது தெரியவரும். நவீன பெண்ணிய புத்தகங்கள் கூட மனு ஸ்மிருதிக்கு இணையாக வர மேலும் திருத்தங்களை செய்யவேண்டியிருக்கும். மனு
ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் கூறப்பட்டிருக்கிறது.

மனு ஸ்மிருதி 3-56
யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா

பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!