வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவவேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான். பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு, தாமோதரன் எனும் பெயரும் உண்டு.
தாம்புக் கயிற்றால் ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பில் கட்டிய கதையைத் தான் நாம் அறிவோமே. இந்த உலகையே கட்டியாள்கிற கிருஷ்ண பரமாத்மா, ஒரு சிறிய தாம்புகயிற்றுக்குக் கட்டுண்டு கிடந்தான்.
அவனின் விஷமத்தனத்திற்கு தண்டனையாக யசோதை, தாம்புக்கயிற்றை எடுத்து அவனது இடுப்பில் சுற்றிக் கட்டலாம் என்றால், லேசாகப் பெருத்தான் கண்ணபிரான். கயிற்று முனைகளைக் கட்டுவதற்கு இரண்டு அங்குல இடைவெளி இருந்தது. இன்னொரு கயிற்றைச் சேர்த்து, முடிச்சுப் போட்டுக் கட்ட முனைந்தார்கள்.
இன்னும் சற்றுப் பெருத்தான். இப்போதும் இரண்டு அங்குல இடைவெளி இருந்தது. இன்னொரு கயிறு, இன்னொரு இரண்டு அங்குல பருமன்... என்றே இந்த விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருக்க... அவன் அம்மா சோர்ந்து போனாள். ஆனால், கண்ணன் களைப்படையவில்லை.
அந்தத் தருணத்தில்தான் பகவான் யோசித்தான். "அடேடே..! இப்போது நாம் யாரிடம் நம் வீரத்தை காட்டிக் கொண்டிருக்கிறோம்? இதோ... தோல்வியைக் கண்டு அம்மா துவண்டுவிட்டாளே. பாவம் அவள்"என்று எண்ணியவன், "இந்த என்னுடைய திமிர்த்தனத்தை உன்னிடம் காட்டியது தவறுதான் தாயே!
இந்தாம்மா என்னைக் கயிற்றில் கட்டிக்கொள்"என்பதுபோல், பருமனை குறைத்துக்கொண்டு நின்றான். உடனே, குறும்புக் கண்ணனை கயிற்றில் கட்டிப்போட்டாள் தாய் யசோதா. நம்முடைய தாய் - தந்தையிடம் தோற்றுப் போவதில் தப்பே இல்லை என்பதை எவ்வளவு சூசகமாக, அழகாக, தெளிவாகச் சொல்லியிருக்கிறான் ஸ்ரீகண்ணபிரான்.
பகவான் கயிற்றுக்கெல்லாம் கட்டுப்படாதவர். பிறகு..?
அவர் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்படுபவர். காதலுக்கும் பிரேமைக்கும் கட்டுண்டு கிடப்பவர்.
இதனை, "கண்ணிநுண் சிறுத்தாம்புடன் கட்டுண்டப் பண்ணிய பெரு மாயன்..."எனும் அழகிய பாடல் அற்புதமாக விளக்குகிறது.
ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பிலே அந்த கயிற்றுத்தழும்பைக் காணலாம். அது தழும்பு அல்ல; பட்டம். நெற்றியில் கிரீடம் சூட்டிக்கொண்டால், திருமண் இட்டுக் கொண்டால் அந்த இடத்தில் தழும்பேறிக் கிடக்கும், அல்லவா... அப்படித்தான் இது!
அந்தப் பட்டம் எதை உணர்த்துகிறது தெரியுமா? "அடியவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு நான் கட்டுண்டு கிடப்பேன்"என்பதைத்தான் அந்தத்தழும்பின் மூலம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார், பகவான் ஸ்ரீகிருஷ்ணர்!
ஆகவே, தாய்-தந்தையிடம் தர்க்கம் வேண்டாம்.சண்டையும் பூசலும் அவசியமில்லை.
வெற்றி - தோல்வி என்பதெல்லாம் முக்கியமில்லை. அவர்கள் வெற்றி பெற்றால், அதற்காக மகிழ்வது நீங்கள்தான். பூரிப்பது நீங்கள்தான்.ஆக பெற்றோர்களுக்குக் கட்டுப்படுவதை ஸ்ரீகண்ணன்
நமக்கு மிகத்தெளிவாக உணர்த்தியிருக்கிறார்.
உணர்ந்து, தெளிந்து, செயல்படுபவர்கள் பாக்கியவான்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"என் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் எனது சமாதி உயிர்ப்புடன் விளங்கும்.தேவையானவருக்கு,தேவையான சமயத்தில் தக்க வழி காட்டும்” என்றவர் மகான் ஸ்ரீராகவேந்திரர். வாழும் காலத்தில் பல்வேறு அற்புதங்கள் புரிந்த அம்மகான்,இறந்த பின்னரும், ஏன் இன்றும் கூட பல அற்புதங்கள் செய்து வருகிறார்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த இடம் மாஞ்சாலி கிராமம் எனப்படும் மந்த்ராலயம்.இது ஆந்திராவில்,துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. 1671ம் ஆண்டில் ஜீவன் தன்னுடலில் இருக்கும் போதே, பிருந்தாவனத்தில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார்.
கி.பி.1812ம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அந்த சட்டத்தின் மூலம்,கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால்,அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தது.
ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்,
"ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன.
கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை" என்று முறையிட்டனர்.
இதைக்கேட்ட பரமஹம்சர்,"இன்றைக்குக் கோவில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள்.அப்புறம் எறும்புகள் உள்ளே வராது" என்று கூறினார்.அதேபோல கோவில் வாசலிலே சர்க்கரையைப் போட்டதும், எறும்புகளெல்லாம் அந்த சர்க்கரையை மொய்த்து விட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.
"உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன.ஆனால் இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டனவே" என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டபோது, பரமஹம்சர் சொன்னார்,"எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான்.
அதிர்ந்து நின்றார் யுதிஷ்டிரர். மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்தகூபம்,கிருமி போஜனம் முதலான நரகக் காட்சிகளைக் கண்டு உறைந்து போனார் அவர்.
"அவலக் குரல்கள்,அதிபயங்கர தண்டனைகள்,சித்ரவதைகள் என்று நரகத்தின் கொடுமையைக் காணும் துர்பாக்கியம் எனக்கு வாய்த்தது எப்படி?
அதுவும் சொர்க்கம் செல்லும் வழியிலா இந்த அனுபவம் நேர வேண்டும்", மனம் வேதனையில் வாட, நரகத்தின் கொடுமையைக் காணமுடியாமல் கண்களை மூடிக்கொண்டார் யுதிஷ்டிரர்.
அப்போது "தருமபுத்திரா!" என்று எவரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டுக் கண்விழித்தார். எதிரில் எமதருமன்!
"தருமா! நீ செய்த பாவத்தின் காரணமாகவே நரகக் காட்சிகளை காண நேரிட்டது." எமதருமன் கூறியது கேட்டு ஆடிப்போனார் தர்மர். "கிருஷ்ணரின் வழியி்ல் தர்மத்தை சிரமேற்கொண்டு வாழ்ந்த நானா பாவம் செய்தேன்?” என்று கேட்டார். "ஆமாம்.உனது ஒரு வார்த்தையால் விளைந்த பாவம்" என்ற எமதருமர் தொடர்ந்தார்.
ஒரு ஊரில் அநாதை ஏழைப்பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலைக்கறந்து, அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள்தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை.
அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட அவர், அந்த பெண்ணிடம், “ஏன்மா!ஒழுங்கான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா, உன்னால எனக்கு எல்லாமே தாமதமாகுது” என்று கடிந்து கொண்டார்.“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்?
ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார். அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். "அர்ஜுனா,அது புறா தானே?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்"என்றான் அர்ஜுனன். சில விநாடிகளுக்குப் பிறகு, "பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது" என்றார் கிருஷ்ணர். அடுத்த விநாடியே, "ஆமாம்...ஆமாம்...அது பருந்து தான்" என்று சொன்னான் அர்ஜுனன்.
மேலும் சில விநாடிகள் கழித்து, "அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது" என்று
கிருஷ்ணர் சொல்ல, கொஞ்சமும் தாமதிக்காமல், "தாங்கள் சொல்வது சரிதான், அது கிளி தான்" என பதிலளித்தான் அர்ஜுனன்.
கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் ஏற்படும் அற்புத பலன்கள்:
செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
காப்பர்
தாமிரம் என்று அழைக்கப்படும் செம்பானது, உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நட்ஸ், மீன் போன்ற உணவுகளில் தாமிரம் இயற்கையாகவே உள்ளது. அதிகளவு ஜிங்க் மற்றும் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும்.
அதிகளவு மது அருந்துவதும் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். செம்பு காப்பு அணிவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ஆர்திரிடிஸ் :
ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவது உங்கள் சருமம், தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது.