வேதத்தை, நால்வர்ணத்தை, பார்ப்பன மதத்தை எதிர்த்து ஒரு பகுத்தறிவு மார்க்கத்தை இந்தியாவில் உருவாக்கிய புத்தரின் பௌத்தத்தை இந்தியாவில் இருந்து விரட்டிவிட்டு, புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று பொய்யும், புரட்டுமாக பரப்பினார்கள்.
அந்த பொய்யை நாம் இன்னமும் மறுத்துக்கொண்டு இருக்கிறோம்.
எங்குமே பிறக்காத ராமரை அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் பிறந்தார் என சொல்லி பாபர் மசூதியை இடித்தார்கள். மதக்கலவரம் மூண்டது. நாம் ராமன் பிறந்தானா என்பதை கேட்க முடியவில்லை.
கலவரத்தை எப்படி தடுப்பது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறோம்.
குரங்குகளை வைத்து ஒரு பாலம் கட்டினான் ராமன் என ஒரு புராணக்கதை. அதை நாசவே ஒத்துக்கொண்டது என ஒரு புருடா. நாசா வந்து நாங்கள் அப்படி சொல்லவில்லை என்று மறுப்பு தெரிவிக்க வேண்டிய அளவுக்கு பார்பனீயத்தின் வலிமை இருக்கிறது.
இந்த புருடா பாலத்தை வைத்தே நாட்டுக்கு வருவாய் ஈட்டுதர வேண்டிய சேது சமுத்திர திட்டத்தை வரவிடாமல் செய்தார்கள். நாம் ராமாயணமும், ஜெய் அனுமானும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
வேதகாலத்தில் நெய்யில் மாட்டுக்கறியை வறுத்து தின்றவர்கள் இப்போது மாட்டுக்கறி வைத்து இருக்கிறார் என
ஒரு வயதான முதியவரை கொல்கிறார்கள். அப்பாவி தலித் இளைஞர்களை அடிக்கிறார்கள். நீயும் தானடா நாயே தின்ன என்று நாம் அவர்களை கேட்பதில்லை. மாறாக, மனித உரிமை பேசிக்கொண்டு இருக்கிறோம்.
இந்து என்ற ஒரு வார்த்தை எந்த ஒரு இந்திய, தமிழ் இலக்கியங்களிலும், வரலாற்று ஆவணங்களில் இல்லை.
ஆனால், நாமெல்லாம் இந்து என்று அவன் சொல்கிறான். நாம் எப்படி இந்து என்று யாரும் கேட்பதில்லை. மத நல்லிணக்கத்தை பற்றி மட்டும் கவலை பட்டுக்கொண்டு இருக்கிறோம்.
176 லட்சம் கோடி ஊழல் என ஒரு பொய்யான பரப்புரை. இதை மக்களின் ஆழ்மனதில் பதிய வைக்கும் அளவுக்கு உளவியல் ரீதியாக பரப்பினார்கள்.
இரண்டு முறை தமிழகத்தில் ஆட்சியை இழந்தது திமுக. மோடி அபாரமாக வெற்றிபெற்று பார்பனீயத்தின் பொற்கால ஆட்சியை இந்தியாவில் தந்துக்கொண்டு இருக்கிறார்.
வெறும் பொய்யையும் புரட்டையும் வைத்து வாழ்வதே பார்ப்பனீயம். அவர்கள் ஒரு பொய்யை ஆழமாக மக்கள் மனதில் விதைப்பார்கள்.
மனிதனில் நீ உயர் பிறவி. உயர் சாதி என்று. அதை அந்த மனிதனையே நம்ப வைப்பார்கள். உனக்கு கீழ் ஒருவன் இருக்கிறான். உனக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்பார்கள். அதை நம்பி மனிதனும் சாதியின், மதத்தின் அடிமையாகிவிடுவான்.
நம் பிறப்பில் இருந்து பொய்யை விதைப்பதில் ஆரம்பிக்கிறது பார்ப்பனீயத்தின் வெற்றி. அது நம் இறப்பு வரை நம்மை விடுவதில்லை. தொடர்ந்து தொற்றிக்கொண்டே வருகிறது நோயை போல.
பார்ப்பனீயத்தை பற்றி ஏன் நாம் பொழுதுக்கும் பேச வேண்டி இருக்கிறது? ஏனென்றால், நம்மை அதை தாண்டி வேறெதையும் ஆக்கபூர்வமாக சிந்திக்க விடாமல் வைத்து இருப்பதே பார்ப்பனீயம் தான்!
- Rajarajan RJ (2017 ல் எழுதிய பதிவு)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சமீபத்தில் நான் ரசித்து பார்க்கும் இணையதளம் Liberty Tamil. பல்வேறு ஆளுமைகளை, கட்சிகள் வித்தியாசமின்றி பேட்டி காண்கிறார். அதிக நேரம் பிடிக்காமல், சிறிய காணொளிகளாக இருந்தாலும் கருத்துக்களை தெள்ளத்தெளிவாக உள்வாங்கிக்கொள்ள உதவும் விவாதங்களாக இருக்கிறது.
திருமுருகன் காந்தியை எடுத்த பேட்டி முக்கியமானது. நமக்கிருக்கும் கேள்விகளை வெளிப்படையாக கேட்டார். ஆனால், பதில் வழக்கம் போல தெளிவாக வரவில்லை. 2021 தேர்தல் கருத்துக்கணிப்புகளும் களத்தை அப்படியே பிரதிபலிப்பது போல இருக்கிறது.
எடுத்துக்காட்டாக தியாகராய நகரில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், பாஜக சார்ப்பாக தியாகராய நகரில் பாஜகவின் எச்.ராஜா நின்றால் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு,
கலைஞர் இல்லாததை இவர்கள் வெற்றிடமாக நினைத்துக்கொள்கிறார்கள். அல்லது அப்படி கட்டமைக்க பார்க்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு புரியாத ஒன்று. கலைஞர் என்பது ஒரு பிம்பம் அல்ல. அதாவது எம்ஜிஆரை போல அல்ல.
கலைஞர் என்பது கொள்கை.
கலைஞர் என்பது திராவிட இயக்கம்.
கலைஞர் என்பது உழைப்பு!
அதாவது, யாரெல்லாம் கொள்கையை முன்னெடுக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கலைஞர் தான்.
யாரெல்லாம், திராவிட இயக்கத்தை முன்னெடுத்து செல்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.
யாரெல்லாம், திமுகவில் உழைக்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.
புத்தரின் கொள்கையான “மாற்றம் ஒன்றே மாறாதது” எனும் இயங்கியல் விதியின் நவீன எடுத்துக்காட்டு திராவிட முன்னேற்ற கழகம். இந்த இயக்கம், ஆதிக்கவாதிகள் இருக்கும் வரை இயங்கிக்கொண்டே தான் இருக்கும். தலைவர்கள் மாறுவார்கள். இயக்கம் அப்படியே இருக்கும்!
புதிதாக அரசியல்வாதி வேடம் போட்டவர்களுக்கு கொள்கையை கேட்டால் பதட்டம் வருகிறது. கொள்கையே இல்லாமல் கட்சியை ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், நாம் அவர்களை உடனடியாக முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிட வேண்டுமாம்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் திமுக, தேர்தல் அறி்க்கை தயாரிப்பதற்காக ஒரு குழுவை ஆரம்பிக்கும். அந்தக்குழுவிற்கு தலைவர் இருப்பார். தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சனைகளையும், ஊர் வாரியாக அலசி, அந்த அறிக்கையை தயாரிப்பார்கள். அதுமட்டுமல்லாது, முத்தாய்ப்பான சில அறிவிப்புகளை திமுக வெளியிடும்.
அந்த அறிவிப்புகள், தேர்தலின் போக்கையே மாற்றும். ஏனெனில், திமுக இன்று அறிவித்தால், நாளை அது அரசாணையாகும் என்பதை மக்கள் அறிவார்கள்.
இந்த வரிகட்டாத, வாடகை தராத நடிகர்கள் இலவசத்திட்டம் என எள்ளி நகையாடும்,மக்கள் நல சமூகநீதி திட்டங்களை திமுக இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் அறிவிக்கும்.
2021 தேர்தலின் ஜெயசூர்யாவாக அண்ணன் ஆ.ராசா களமிறங்கிவிட்டார். சும்மா இருந்த அவரை முதலமைச்சர் பழனிச்சாமி தொட்டு விட்டார். தப்பு பண்ணிட்ட சிங்காரம்,தப்பு பண்ணிட்ட என வேட்டையாட கிளம்பிட்டார் அண்ணன் ஆ.ராசா.இதுவரை திமுக தலைவர் கூட ஜெயலலிதா மரணத்திற்கான நீதியை திமுக ஆட்சி பெற்றுத்தரும்
என்று தான் சொல்லியிருந்தார். அவரது டார்கெட் ஜெயலலிதா பெயரை சொல்லி தமிழ்நாட்டை நாசம் செய்யும் இந்த அடிமை கூட்டத்தை ஒழிப்பதாகவே இருந்தது. இன்னொன்று, திமுக தலைவர், தொடர்ச்சியாக இந்த அடிமை அதிமுக அரசின் ஊழல்களை வெளிக்கொணர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதற்கு வெகுநாளாக பதில் சொல்லமுடியாமல் இருந்த பழனிசாமிக்கு யாரோ, வாட்சாப் பார்வெர்டில் சர்காரியா, 2ஜி என அனுப்ப, அதையே அவர் பேச... ஆ.ராசா வாடா வா, இதுக்கு தான் காத்திருக்கிறேன் என தனது ஜெயசூரியா மட்டையை சுழற்ற ஆரம்பித்து இருக்கிறார்.
திமுகவில் ஏன் அனைவரும் நாத்திகர்களாக இல்லை?
திமுகவில் ஏன் அனைவரும் சாதி,மத மறுப்பாளர்களாக இல்லை?
கொள்கையை திணிக்க முடியாது. உண்மையை சொல்லப்போனால் பலதரப்பட்ட மக்களுக்குமான கட்சியாக தான் திமுக இருக்கிறது. அதில் சாதி வெறியனும் இருக்கிறான், சாதி மறுப்பாளனும் இருக்கிறான்.
மத வெறியனும் இருக்கிறான். மத மறுப்பாளனும் இருக்கிறான். கடவுள் நம்பிக்கையாளனும் இருக்கிறான். கடவுள் மறுப்பாளனும் இருக்கிறான். இந்த பன்மைத்துவம் தான் கட்சியின் பலம், பலவீனம் இரண்டுமே!
திமுகவை நாத்திக கட்சி என்று சொல்வோர் உண்டு. ஆனால், எல்லா திமுக காரணும் நாத்திகன் இல்லை.
கலைஞர் நாத்திகராக இருந்ததால் அப்படி பெயர் வந்து இருக்கலாம்.
திமுகவை பள்ளர் பறையர் கட்சி என்பார்கள். இன்றோ, அதையும் உடைக்க தலித் இயக்கங்கள் பாடுப்பட்டு கொண்டு இருக்கிறது!
திமுகவின் பாதை.. நீண்ட பாதை.. மக்களாட்சி பாதை... அனைத்து மக்களையும் ஒருங்கிணைந்து...
ஏன் கமல், ரஜினி, சீமானை பி டீம் என்று சொல்லுகிறோம்?
தமிழ்நாட்டில் அதிகமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் இரு கட்சிகள் அதிமுகவும் திமுகவும் தான். 2016 சட்டசபை தேர்தலில், அதிமுக 40 சதவிகிதமும், திமுக 31 சதவிகிதமும் வாக்குகளாக பெற்றது. அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டதும்,
திமுக கூட்டணிகளுக்கு இடங்களை பகிர்ந்தளித்து போட்டியிட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த தேர்தலில் மாற்று அரசியல் என்று சொல்லி போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் நாம் தமிழர் கட்சி (1.09), தேசிய முற்போக்கு திராவிட கழகம் (2.41), பாமக (5). இதில் பாமகவின் வாக்கு வங்கி
எது என்று தெரியும். இவர்கள் மாற்று என்று சொல்லிக்கொண்டாலும், அவற்றில் பெரும்பான்மை வன்னியர் சாதி ஓட்டுகள் மட்டும் தான். அதுவும் 2019 தேர்தலில், பாமகவுக்கு கிடைக்கவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. மாற்று அரசியல் பேசிய மற்ற கட்சிகள் இன்று திமுக கூட்டணியில் இருப்பதால்