இப்படியும் கூட ஒருவனால் பாடல் எழுத முடியுமா என்று எண்ணி எண்ணி வியக்கவைக்கும் பாடல்களைக் கொண்டது, இரணியன் வத படலத்தில் உள்ள பாடல்கள். இரணியன் கேட்கிறான் அவன் மகன் பிரகலாதனிடம், "நீ சொன்ன அந்த நாராயணன் இந்த தூணில் இருக்கிறானா" என்று.
கம்பன் ஏதோ அருள்வந்தவன் போல ஆக்ரோஷமாக எழுதுகிறான். "தூண் என்னடா தூண், நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான் அவன்" என்று பிரகலாதன் வாயிலாகச் சொல்கிறான்.
பிரகலாதன்-ஒரு சாண் அளவிலும் இருக்கிறான்.அணுவை நூறாகப் பிளந்தால்,அந்தத் தூளிலும் அவன் குணம் இருக்கும்.மேரு மலையிலும் அவன் இருக்கிறான்.
இந்தத் தூணிலும் இருக்கிறான்.நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான்.நீ இதை விரைவில் காண்பாய்.
பாடல்:
"சாணினும் உளன். ஓர் தன்மை,அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன். மா மேருக் குன்றினும் உளன். இந் நின்ற
தூணினும் உளன். நீ சொன்ன சொல்லினும் உளன்.இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான். "நன்று" எனக் கனகன் சொன்னான்.
பொருள்:
சாணினும் உளன்-சாண் என்பது ஒருஅங்குலத்தின் ஒரு பகுதி. அதிலும் இருக்கிறான்.
ஓர் தன்மை அணுவினை-ஒரே தன்மை கொண்ட அணுவினை.ஒரு பொருளை பிரித்துத்கொண்டே போனால்,அந்தப்பொருளின் தன்மை மாறாத,அதேச்சமயம் மேற்கொண்டு பிரிக்கமுடியாத ஒரு சின்ன துகள் வரும்.அது அந்த பொருளின் அணு.
வேறு விதமாக சொல்லப் போனால்,ஒரே தன்மையுள்ள அணுக்களின் தொகுதிதான் இந்த உலகில் உள்ள அனைத்து பொருள்களும். அணுவை பிளக்க முடியும்.ஆனால்,பிளந்த பின் உள்ள துகள்கள், மூலப்பொருளின் தன்மை கொண்டு இருக்காது.ப்ரோடானும், எலெக்ட்ரானும் எல்லா பொருளுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
ஓர் தன்மை அணு என்பது ஆச்சரியமான பிரயோகம்.
சத கூறு இட்ட கோணினும் உளன்-அந்த அணுவை,நூறுப்பகுதியாக பிரித்தால் அதற்கு,கோண் என்று பெயர்.அந்த கோணிலும் இருக்கிறான்.அணுவை கூறுப் போடமுடியும் என்று கம்பன் பேசுகிறான்.
மா மேருக் குன்றினும் உளன்-அவ்வளவு சின்ன அணுவில் மட்டும் அல்ல,உலகின் மிகப்பெரிய பொருளான மேரு மலை,அதிலும் அவன் இருக்கிறான் என்கிறான்.
இந் நின்ற தூணினும் உளன்-இங்கே நிற்கின்ற தூணிலும் இருக்கிறான்.
நீ சொன்ன சொல்லினும் உளன்-நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான்.
இத் தன்மை-இந்த தன்மையை
காணுதி விரைவின் என்றான்-நீ விரைவில் காண்பாய் என்றான்
நன்று எனக் கனகன் சொன்னான்-நல்லது என்று இரணியன் சொன்னான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான். அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா நடந்துக்கொண்டிருந்தது. பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள். வேலையில்லாத இளைஞனுக்கு அந்த நாமத்தைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
"கிருஷ்ணா"என்ற இந்த வார்த்தையில் என்னதான் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான். விடை தெரியவில்லை. அங்கிருந்த பெரியவரிடம்,"கிருஷ்ணா!கிருஷ்ணா!”என்று கூச்சல் போடுகிறீர்களே.அதனால் என்ன கிடைத்து விடும்?எனக்குப் பசிக்கிறது?உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறு போட முடியுமா?” என்று கத்தினான்
பெரியவர் அந்த இளைஞனிடம்,"கிருஷ்ண நாமத்தைச் சொன்னால் சோறு மட்டுமல்ல, நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்" என்றார்.இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும்,அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ண நாமத்தைச் சொல்ல முடிவெடுத்தான்.
யமுனை நதியில் வெள்ளம் கரைப் புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
அங்கே வந்த கோபிகைகள் ஆற்றைக் கடந்து செல்ல வகையறியாது
திகைத்து நின்று கொண்டிருந்தனர்.எப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.
அதுசமயம் தற்செயலாக வந்த வசிஷ்ட முனிவர் கோபிகைகள்
கூட்டமாக நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்ததும்
அவர்களைப் பார்த்து அன்புடன் புன்னகை செய்தார்.அன்று அவர் தன்னுடைய மனம் கவர்ந்த கண்ண பெருமானுக்காக
உபவாசம் இருக்கின்ற தினம்.கடும் உபவாசத்தால் சற்றுச் சோர்வுற்றிருந்தார்.
அவரும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியவர்தான்.அது தெரிந்த கோபிகைகள் "ஸ்வாமீஜி, நீங்கள்தான் ஆற்றை கடந்துச்
செல்ல எங்களுக்கு உதவ வேண்டும்"என்றார்கள்."சரி"என்று சொன்ன அவர், கோபிகைகளின் கைகளில் இருந்த
பானைகளைப் பார்த்தார்.உடனே, அவர்கள், "ஸ்வாமீஜி பால், தயிரெல்லாம் விற்றுப்போய் விட்டது.
"மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே!"
என்று திருப்பாவையில் அழகாகப் பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.
இந்தப் பாடலில், கண்ணனின் புகழை பறைசாற்றிக் கொண்டே வந்த அவள், ஒரு இடத்தில் மட்டும்,"ஏலாப்பொய்கள் உரைப்பானை...'' என்று சாடி விட்டாள்.ஆம் இந்தக் கண்ணன் எண்ணிக்கையில் அடங்காத, நம்பமுடியாத பொய்களை எல்லாம் சொல்வான்.இதை விளக்க அழகான கதை ஒன்றைச் சொல்வார்கள்.
கோகுலத்தில் கண்ணன் ஆய்ச்சியர் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடச் செல்வான்.ஒருநாள், ஒரு ஆய்ச்சி வீட்டில் வசமாக சிக்கிக் கொண்டான். கண்ணனின் காதைத் திருகிய அவள்,"ஏனடா, பானையில் கையை விட்டாய், வெண்ணெய் இருக்கிறதா
என பார்க்கத்தானே!உனக்குப் பிடித்த நெய்ச்சீடை இருக்கிறதா என தேடத்தானே!
பால்யப் பருவத்திலிருந்தே உத்தவர் கிருஷ்ணருக்கு தேரோட்டியாகவும்,மற்றும் பல சேவைகளையும் செய்து வந்தார். அவர் கிருஷ்ணரிடம் யாதொரு வரமும் கேட்டதில்லை. தன் அவதாரத்தின் நோக்கம் முடிவடையும் சமயத்தில்,கிருஷ்ணர் உத்தவரை அழைத்து
"உத்தவா,இந்த அவதாரத்தில் பலரும் பலவித ஆசைகளை பூர்த்தி செய்துகொண்டு,வரங்களையும் என்னிடம் பெற்றுள்ளனர்.ஆனால் நீ என்னிடம் எதுவுமே கேட்டதில்லை.இப்பொழுதாவது உனக்கு என்ன வேண்டுமோ கேள்,நான் தருகிறேன்.உனக்கும் ஏதேனும் செய்த திருப்தியுடன் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்கிறேன்.” என்றார்.
உத்தவர் தனக்காக எதுவும் கேட்காவிட்டாலும்,சிறுவயது முதல் கிருஷ்ணரை கவனித்து வந்தவர்.கிருஷ்ணரின் சொற்களுக்கும், செயல்களுக்கும் சம்பந்தம் இல்லாததைக் கண்டு,உத்தவர் பல முறை ஆச்சரியப்பட்டிருக்கிறார்.இதற்கான காரணத்தை அறிய விரும்பினார்.ஆதலால் அவர் கிருஷ்ணரிடம்,
பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்குக் கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்.பீட்டர் துரை பதினாறு நீண்ட வருடங்கள் அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர்.அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார்.
கோயில் தக்கார் என்றால் கோயிலுக்குத் தக்கவர், மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறிப் போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாகக் கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.
தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி,மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும், குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு,
பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும்,இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன்.கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிகா. மகனுக்கு தாயே பயிற்சி அளித்து,சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள். சிவ பெருமான் பார்பாரிகாவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார்.
முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும்.இரண்டாவது அம்பு,தான் காப்பாற்ற நினைக்கும் இலக்கை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி விடும்.மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்துவிடும்.மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்துவிட்டு திரும்பிவிடும்.
இதுதவிர அக்னிபகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு பரிசளித்திருந்தார்.இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக்காண ஆவலுற்றான்.