தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிங்கம் வளர்ந்து.மிகப் பெரிய உருவம் கொள்கிறது.பெரியது என்றால் இப்படி அப்படி அல்ல.கம்பன் வருணிக்கிறான்.மிக பிரமாண்டமான வடிவம்.கற்பனைக்கு எட்டாத வடிவம்.
பாடல்
'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்துஅறையகிற்பார் ?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.
பொருள்:
பிளந்தது தூணும் = தூண் பிளந்தது
ஆங்கே பிறந்தது, சீயம் = அதிலிருந்து பிறந்தது சிங்கம்
பின்னை வளர்ந்தது = பின் அது வளர்ந்தது
திசைகள் எட்டும் = எட்டு திசையும் வளர்ந்தது
பகிரண்டம் முதல மற்றும் அளந்தது = எல்லா அண்டங்களையும் அளந்தது
அப் புறத்துச் செய்கை = இந்த உலகத்தை தாண்டி,அந்தப்பக்கம் அது வளர்ந்ததையும்,அங்கு என்ன செய்தது என்பதையும்
யார் அறிந்துஅறையகிற்பார் ? = யார் அறிந்து சொல்ல முடியும் ? கண்ணுக்கு எட்டும் வரை நாம் அறிந்து சொல்ல முடியும்?
அந்த நரசிங்கமோ மிக பிரமாண்டமாக வளர்ந்து இந்த உலகையும் தாண்டி அப்புறம் சென்றது.அங்கிருந்து யாராவது வந்து சொன்னால் தான் உண்டு,அது எவ்வளவு தூரம் சென்றது என்று.
கிளர்ந்தது = கிளர்ந்தது
ககன முட்டை கிழிந்தது = உலகம் என்ற முட்டை கிழிந்தது
கீழும் மேலும்.= மேலயும் கீழேயும். ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து நின்றது.
இதை படிக்கும் போது எனக்கு ஒன்று தோன்றும். இந்த நரசிங்கம் என்பது அணுசக்தி மாதிரி.சாணிலும் இருக்கும்,அணுவை சத கூறிட்ட கோனிலும் அணு இருக்கும்.அணுவை பிளந்தால் பெரிய சக்தி வெளிப்படும்.
அணுகுண்டு வெடித்தவுடன் Mushroom cloud என்று சொல்லுவார்கள்.அது வெடித்து அதன் வெப்பம் கிளர்ந்து மேல் எழும்பும்.அளவற்ற ஆற்றல்.அதன் வழியில் உள்ள எல்லாவற்றையும் எரித்து பொசுக்கும் சூடு.எல்லாம் சேர்த்து பார்க்கும்போது, நரசிங்கம் என்பது ஒரு nuclear force போல இருக்கிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சூதாட்டத்தில் தோற்றப் பாண்டவர்கள்,தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன்,"கர்ணா!இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம்.அக்னி பகவானின் பரிசாக,அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்"என்றான்.
ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்.
"நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை"என்று சொன்னான் கர்ணன்."ஆஹா!நீ அல்லவோ சுத்தவீரன்?அர்ஜுனன் வில்லை நம்புகிறான்.
நீ உன் திறமையை நம்புகிறாய்"என்று கர்ணனை துரியோதனன் பாராட்டினான்.அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்த சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான்.இதைக் கேட்டுச்சிரித்த வியாசர்,"கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது!அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை"என்றார்.
ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான். அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா நடந்துக்கொண்டிருந்தது. பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள். வேலையில்லாத இளைஞனுக்கு அந்த நாமத்தைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
"கிருஷ்ணா"என்ற இந்த வார்த்தையில் என்னதான் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான். விடை தெரியவில்லை. அங்கிருந்த பெரியவரிடம்,"கிருஷ்ணா!கிருஷ்ணா!”என்று கூச்சல் போடுகிறீர்களே.அதனால் என்ன கிடைத்து விடும்?எனக்குப் பசிக்கிறது?உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறு போட முடியுமா?” என்று கத்தினான்
பெரியவர் அந்த இளைஞனிடம்,"கிருஷ்ண நாமத்தைச் சொன்னால் சோறு மட்டுமல்ல, நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்" என்றார்.இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும்,அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ண நாமத்தைச் சொல்ல முடிவெடுத்தான்.
இப்படியும் கூட ஒருவனால் பாடல் எழுத முடியுமா என்று எண்ணி எண்ணி வியக்கவைக்கும் பாடல்களைக் கொண்டது, இரணியன் வத படலத்தில் உள்ள பாடல்கள். இரணியன் கேட்கிறான் அவன் மகன் பிரகலாதனிடம், "நீ சொன்ன அந்த நாராயணன் இந்த தூணில் இருக்கிறானா" என்று.
கம்பன் ஏதோ அருள்வந்தவன் போல ஆக்ரோஷமாக எழுதுகிறான். "தூண் என்னடா தூண், நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான் அவன்" என்று பிரகலாதன் வாயிலாகச் சொல்கிறான்.
பிரகலாதன்-ஒரு சாண் அளவிலும் இருக்கிறான்.அணுவை நூறாகப் பிளந்தால்,அந்தத் தூளிலும் அவன் குணம் இருக்கும்.மேரு மலையிலும் அவன் இருக்கிறான்.
இந்தத் தூணிலும் இருக்கிறான்.நீ சொன்ன சொல்லிலும் இருக்கிறான்.நீ இதை விரைவில் காண்பாய்.
யமுனை நதியில் வெள்ளம் கரைப் புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
அங்கே வந்த கோபிகைகள் ஆற்றைக் கடந்து செல்ல வகையறியாது
திகைத்து நின்று கொண்டிருந்தனர்.எப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.
அதுசமயம் தற்செயலாக வந்த வசிஷ்ட முனிவர் கோபிகைகள்
கூட்டமாக நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்ததும்
அவர்களைப் பார்த்து அன்புடன் புன்னகை செய்தார்.அன்று அவர் தன்னுடைய மனம் கவர்ந்த கண்ண பெருமானுக்காக
உபவாசம் இருக்கின்ற தினம்.கடும் உபவாசத்தால் சற்றுச் சோர்வுற்றிருந்தார்.
அவரும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியவர்தான்.அது தெரிந்த கோபிகைகள் "ஸ்வாமீஜி, நீங்கள்தான் ஆற்றை கடந்துச்
செல்ல எங்களுக்கு உதவ வேண்டும்"என்றார்கள்."சரி"என்று சொன்ன அவர், கோபிகைகளின் கைகளில் இருந்த
பானைகளைப் பார்த்தார்.உடனே, அவர்கள், "ஸ்வாமீஜி பால், தயிரெல்லாம் விற்றுப்போய் விட்டது.
"மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே!"
என்று திருப்பாவையில் அழகாகப் பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.
இந்தப் பாடலில், கண்ணனின் புகழை பறைசாற்றிக் கொண்டே வந்த அவள், ஒரு இடத்தில் மட்டும்,"ஏலாப்பொய்கள் உரைப்பானை...'' என்று சாடி விட்டாள்.ஆம் இந்தக் கண்ணன் எண்ணிக்கையில் அடங்காத, நம்பமுடியாத பொய்களை எல்லாம் சொல்வான்.இதை விளக்க அழகான கதை ஒன்றைச் சொல்வார்கள்.
கோகுலத்தில் கண்ணன் ஆய்ச்சியர் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடச் செல்வான்.ஒருநாள், ஒரு ஆய்ச்சி வீட்டில் வசமாக சிக்கிக் கொண்டான். கண்ணனின் காதைத் திருகிய அவள்,"ஏனடா, பானையில் கையை விட்டாய், வெண்ணெய் இருக்கிறதா
என பார்க்கத்தானே!உனக்குப் பிடித்த நெய்ச்சீடை இருக்கிறதா என தேடத்தானே!
பால்யப் பருவத்திலிருந்தே உத்தவர் கிருஷ்ணருக்கு தேரோட்டியாகவும்,மற்றும் பல சேவைகளையும் செய்து வந்தார். அவர் கிருஷ்ணரிடம் யாதொரு வரமும் கேட்டதில்லை. தன் அவதாரத்தின் நோக்கம் முடிவடையும் சமயத்தில்,கிருஷ்ணர் உத்தவரை அழைத்து
"உத்தவா,இந்த அவதாரத்தில் பலரும் பலவித ஆசைகளை பூர்த்தி செய்துகொண்டு,வரங்களையும் என்னிடம் பெற்றுள்ளனர்.ஆனால் நீ என்னிடம் எதுவுமே கேட்டதில்லை.இப்பொழுதாவது உனக்கு என்ன வேண்டுமோ கேள்,நான் தருகிறேன்.உனக்கும் ஏதேனும் செய்த திருப்தியுடன் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்கிறேன்.” என்றார்.
உத்தவர் தனக்காக எதுவும் கேட்காவிட்டாலும்,சிறுவயது முதல் கிருஷ்ணரை கவனித்து வந்தவர்.கிருஷ்ணரின் சொற்களுக்கும், செயல்களுக்கும் சம்பந்தம் இல்லாததைக் கண்டு,உத்தவர் பல முறை ஆச்சரியப்பட்டிருக்கிறார்.இதற்கான காரணத்தை அறிய விரும்பினார்.ஆதலால் அவர் கிருஷ்ணரிடம்,