அறிக்கை:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் – #சீமான்_வலியுறுத்தல்

bit.ly/3s13UuD

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து நீண்ட காலமாகப் - 1/14
பணியமர்த்தப்படாமல் காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு உடனடியாகப் பணியானை வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

பெருந்தமிழர் ஜம்புலிங்கனாரின் பெருங்கொடையாலும், பெருந்தலைவர் காமராசரின் - 2/14
சீரிய முயற்சியாலும் 1956 ஆம் ஆண்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதற்காகவும் தமிழகத்தின் வளத்தை மூலதனமாகக்கொண்டு தமிழர்களின் கடுமையான உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகத்தாலும் உருவானதே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் - 3/14
இந்நிறுவனமானது தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கும் நிறுவனமாக, கடந்த 65 வருடங்களுக்கு மேலாகத் திகழ்ந்து வருகிறது. 5192 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்நிறுவனத்தின் ஆண்டு நிகர இலாபம் 2378 கோடியாக உள்ளது - 4/14
இந்நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்ட மேற்பார்வைப் பொறியாளர்களும், 12000க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும், 13000க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலைசெய்து வருகின்றனர். இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்காகவே நெய்வேலியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் - 5/14
வசித்து வந்த பூர்வகுடித் தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்தை முழுவதுமாக விட்டுக்கொடுத்தனர். ஆனால், இன்று அதே நிறுவனத்தில் அப்பகுதி மக்கள் அடிமாட்டுக்கூலிகளாக வேலைசெய்யக்கூடிய அவலநிலைதான் உள்ளது. அந்தளவுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் - 6/14
மேலோங்கி, அவர்கள் அதிகாரம் செலுத்துகின்ற இடமாக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் தமிழர் அல்லாதவர்களே நியமிக்கப்பட்டு மண்ணின் மைந்தர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் சூழல் நிலவுவதும் கண்கூடாகத் தெரிகிறது. இன்றளவும் இந்நிறுவனத்தில் - 7/14
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வெறும் ஒப்பந்தத்தொழிலாளர்களாகவே பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்தப்படி, நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்கே பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், நிறுவனத்தில் தொழிற்பழகுநர் - 8/14
பயிற்சி முடித்தவர்களுக்குப் பணி வழங்கப்படாமலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கும் அந்நிர்வாகத்தின் செயல்பாடானது அந்நிலத்தில் வாழும் மக்களுக்குச் செய்யப்படும் பச்சைத்துரோகமாகும்.

இவ்வாண்டில் மட்டும் அந்நிறுவனத்தில் இரண்டு பெரும் விபத்துகள் ஏற்பட்டு பதினைந்திற்கும் மேற்பட்ட - 9/14
தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். முறையாகப் பயிற்சி பெற்ற தொழிலாளர்களைப் பணியமர்த்தப்படாததால்தான் அவ்விபத்துகள் நேரிட்டது என தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இனிமேலாவது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் முறையாகத் - 10/14
தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்களை உடனடியாகப் பணிக்கு அமர்த்த வேண்டும் என்பது அம்மண்ணின் மக்களின் நீண்ட நெடுநாள் கோரிக்கையாகும். அதனை வலியுறுத்தி தற்போது நடைபெறும் போராட்டங்களங்களில் - 11/14
நாம் தமிழர் கட்சி பங்கேற்று, அவர்களின் கோரிக்கைக்கு வலிமைசேர்க்கும் என இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்

ஆகவே, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரைவார்க்க மத்திய அரசு முயன்றபோது, அதனைத் தடுத்து 5 விழுக்காடு பங்குகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்ட - 12/14
தமிழக அரசு, இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு தொழிற் பழகுநர் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக நிரந்தரப் பணி வழங்க நிறுவனத்திடமும், மத்திய அரசிடமும் பேசி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் - 13/14
“Un roll”@threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

9 Jan
நீ எவனுக்கும் ரசிகனா இருந்து பால் ஊத்திக்கிட்டுப் போ
உன் நிலம் ஆக்கிரமிக்கப் படுகிறது!
உன் வளங்கள் கொள்ளை போகிறது!
உன் உரிமை பறிபோகிறது!
உன் வேளாண்மை தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது!
உன் கல்வி மறுக்கப்படுகிறது!
2 கோடி வட இந்தியன் உன் நிலத்தில் வாக்குரிமை பெற்று விட்டான் - 1/5 Image
இனி அரசியலை அவன் தீர்மானிப்பான்!
சொந்த நிலத்தில் நீ அகதியாக அடித்து விரட்டப் படும் காலம் நெருங்கிவிட்டது!
இனியும் விழித்துக் கொள்ளாமல் நடிகனே நாடாள வா..
காத்துக் கிடக்கிறது தமிழகம் என்று
திரைக் கவர்ச்சியில் மயங்கி கிடந்தால் உன்னை போன்றவர்களால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் - 2/5 Image
அழிந்து போவார்கள்!!
அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தைக் காக்க தெளிவு பெறு..!! சிந்திக்கத் தொடங்கு..!!🙏🙏🙏
"நான் மக்களுக்கானவன்னு நினைச்சா,என் கொள்கை பிடிச்சா வோட்டு போடு.."
"மத்தவன் மாதிரி விஜய் ரசிகர்கள் வோட்டு போயிருமோ,கமல், ரசினி வோட்டு - 3/5 Image
Read 6 tweets
8 Jan
யாழ். பல்கலை. பெருமளவானோர் திரள்வு ; பொலிஸாரும் இரானுவமும் குவிப்பு... - 1/5
யாழ். பல்கலை. பெருமளவானோர் திரள்வு ; பொலிஸாரும் இரானுவமும் குவிப்பு... - 2/5
யாழ். பல்கலை. பெருமளவானோர் திரள்வு ; பொலிஸாரும் இரானுவமும் குவிப்பு... - 3/5
Read 6 tweets
7 Jan
#அடங்கொப்பராணை...

#திரும்பி_முக்கும்_கழகத்தின் கட்சிக்கொடியான #உதயசூரியன் சின்னத்துக்கு சொந்தக்காரர் நம் பாட்டன் #ரெட்டமலைசீனாவாசன்!!!

ஆம், அப்போதே உதயசூரியன் என்ற நாளிதழை நடத்தியதோடு, சென்னை மாகாண செட்யூல்டு வகுப்பினர் ஃபெடரேஷன்’ என்ற அமைப்பை 1936-ல் இவர் தொடங்கினார் - 1/3
இது ஆதித்தமிழர்களின் ஒளி விளக்காய் அமைய நம் அய்யா உருவாக்கிய சின்னம்.

இதை இவரது இறப்பிற்க்கு பின் #திராவிடம் ஆதித்தமிழரை #ஆதிதிராவிடர் என்று மாற்றியதில் இருந்து சின்னத்தையும் சுட்டுவிட்டான் #தெலுங்குமுதலி அண்ணாதுரை - 2/3
அதை தக்கவைத்தவர் #தெலுங்குசின்னமேளம் தட்சிணாமூர்த்தி @ கருணாநிதி!!!

#அடங்கோ_இதுலயும்_போர்ஜெரியா!!!

இன்னும் என்னென்ன திருகுதாளங்கள் திருட்டு திராவிட தெலுங்கனுகள்😡

இந்த விடயத்தை பகிருங்கள் உறவுகளே 🙏🏻🙏🏻🙏🏻 - 3/3
Read 4 tweets
7 Jan
#விகடன்கேள்வி ;

“நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி என்பது கட்சிக்கு அங்கீகாரம் பெறும் முயற்சியா அல்லது தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற யுக்தியா?’’

#அண்ணன்சீமான்பதில்

“நாங்கள் ஆட்சி மாற்றத்துக்கு வரவில்லை... அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக வந்திருக்கிறோம் எனவே - 1/3
ஏற்கெனவே களத்தில் இருந்துவரக்கூடிய கட்சிகளோடே தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டு செல்வதென்பது, மாற்றம் அல்ல அது பெரிய ஏமாற்றம்.

ஒரு கட்சியோடு கூட்டணி சேர்ந்தால், 20 சீட் கொடுப்பார்கள்.
அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்துவிட முடியும்?

எங்கள் இலக்கு 10 சீட், 20 சீட்டை - 2/3
வெல்வது அல்ல...
இந்த நாட்டை வெல்ல வேண்டும். அப்போதுதான் நான் நினைக்கிற மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

மக்களை நம்பாதவர்கள்தான் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்.
நான் பெரிய வீரன்...
தனித்தே சண்டை செய்கிறேன்.’’ - 3/3
Read 4 tweets
7 Jan
மாற்றம் என்பது சொல் அல்ல
அது ஆகச் சிறந்த செயல்!!!

தமிழ் தேசிய கிறித்தவர் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களான அருட் பணியாளர்கள் இன்று அண்ணன் சீமானை நேரில் சந்தித்த ஒரு அழகிய நிகழ்வு

திராவிடமா???
தமிழ் தேசியமா???

திமுக வா??? அல்லது
நாம் தமிழர் கட்சியா??? - 1/3
தெலுங்கர் ஸ்டாலினா???
செந்தமிழன் சீமானா???

2021 தேர்தல் களம்
கதற விடுவோம் மேதகு வே பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள் தினம்

வென்றாக வேண்டும் தமிழ்
ஒன்றாக வேண்டும் தமிழர்

தமிழால் இணைந்து
நாம் தமிழராய் எழுவோம்

இலக்கு ஒன்றே
இனத்தின் விடுதலை

நாமே மாற்று
நாம் தமிழரே மாற்று - 2/3
Read 4 tweets
7 Jan
#விகடன்கேள்வி ;

“நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி என்பது கட்சிக்கு அங்கீகாரம் பெறும் முயற்சியா அல்லது தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற யுக்தியா?’’

#அண்ணன்சீமான்பதில்

“நாங்கள் ஆட்சி மாற்றத்துக்கு வரவில்லை... அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக வந்திருக்கிறோம். எனவே - 1/3
ஏற்கெனவே களத்தில் இருந்துவரக்கூடிய கட்சிகளோடே தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டு செல்வதென்பது, மாற்றம் அல்ல அது பெரிய ஏமாற்றம்.

ஒரு கட்சியோடு கூட்டணி சேர்ந்தால், 20 சீட் கொடுப்பார்கள்.
அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்துவிட முடியும்?

எங்கள் இலக்கு 10 சீட், 20 சீட்டை - 2/3
வெல்வது அல்ல...
இந்த நாட்டை வெல்ல வேண்டும். அப்போதுதான் நான் நினைக்கிற மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

மக்களை நம்பாதவர்கள்தான் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்.
நான் பெரிய வீரன்...
தனித்தே சண்டை செய்கிறேன்.’’ - 3/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!