ஒரு நிமிடத்தில் இத்தனை பொய்கள் சொல்வதில் இவர்களை மிஞ்ச முடியாது. முதலில் திருமுருகாற்றுப்படை 11வது திருமுறையில் 9வது என்கிறார். 11வது திருமுறையில் 16வது இடத்தில் இருப்பது திருமுருகாற்றுப்படை. சரி கணக்கில் வீக் என்று விட்டுவிட்டு மேலே கவனித்தால், உவேசா மீது சேற்றை வீசுகிறார்
அதாவது பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையை உவேசா சேர்த்துவிட்டாராம்.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நச்சினார்கினியர் முருகாற்றுப்படை உட்பட பத்துப்பாட்டுத் தொகைக்கு உரை எழுதியதும்,தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் போன்றோர் பத்துப்பாட்டு பாடல்களை மேற்கோள்காட்டியதும் இவருக்கு
தெரியாது போலும். நச்சினார்க்கினியர் உரை எழுதியவைகளைப் பட்டியலிடும் பாடல் பத்துப்பாட்டைக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்

பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட்டும் கலியும்
ஆரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்கும்-சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே.
சரி பத்துப்பாட்டில் உள்ள நூல்கள் என்னென்ன என்பதை பட்டியலிடும் பழம்பாடலைப் பாருங்கள்

முருகு பொருநாறு பாண் இரண்டு, முல்லை,
பெருகு வள மதுரைக் காஞ்சி, - மருவினிய
கோல நெடுநல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும், பத்து.

முதலிலேயே முருகாற்றுப்படை வந்துவிடுகிறது.
இதை உவேசா சேர்த்தார் என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். சரி,பத்துப்பாடல் தொகுப்பின் அடிப்படை என்ன. நீண்ட அகவற்பாடல்களைக் கொண்ட சங்க இலக்கியம் பத்துப்பாட்டு.அதன் இலக்கணம்

நூறு அடிச் சிறுமை, நூற்றுப்பத்து அளவே
ஏறிய அடியின் ஈர் ஐம்பாட்டுத்
தொகுப்பது பத்துப்பாட்டு எனப்படுமே
திருமுருகாற்றுப்படை உள்பட அந்தப் பத்துப்பாடல்களுக்குத்தான் இந்த இலக்கணம் பொருந்தி வரும் என்கிறார் இளம்பூரணர்.இதை எழுதிய மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இதே தொகுப்பில் உள்ள நெடுநல்வாடையையும் எழுதியிருக்கிறார்.இவை இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்
சங்க இலக்கியமான இது ஏன் பின் திருமுறையில் தொகுக்கப்பட்டது என்றால் முருகனுக்கான துதிகளில் சிறப்பு மிக்கதாக இந்நூல் இருந்தது என்பதே அதற்கான காரணம். இரண்டு விநாயகர் துதிப்பாடல்களும் இதே 11ம் திருமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பியாண்டார் நம்பி ஏழு திருமுறைகளைத்தான்
தொகுத்தாரம். தான் எழுதிய பாடல்களையும் சேர்த்து நம்பி தொகுத்தது 11 திருமுறைகள். பின்னால் பெரிய புராணம் 12வது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது. இப்படி பொய் மேல் பொய்யாக அடுக்கிக்கொண்டுபோவதன் காரணம் இந்து மதத்தின் மீதான துவேஷமும் ஒரு சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியும் தவிர வேறென்ன?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆

𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tskrishnan

2 Jan
மதுரை நாயக்க அரசரான சொக்கநாத நாயக்கருக்கு ‘முற்போக்கு சிக்குலர்’ வியாதி இருந்தது.தனது படைத்தலைவனாக ருஸ்தம்கான் என்பவனை நியமித்தார். அவன் சும்மா இருப்பானா.சமயம் பார்த்து சொக்கநாதரை சிறையில் தள்ளி மதுரையைக் கைப்பற்றிவிட்டான். நம்பிக்கைக்குரிய சிலர் மூலம் தன்னுடைய பரம எதிரியான
கிழவன் சேதுபதிக்குத் தூதனுப்பினார் நாயக்கர்.என்னதான் சண்டைக்காரராக இருந்தாலும் அவரும் மதுரையும் அந்நியனிடம் அடிமைப்பட்டு இருப்பதை விரும்பாத கிழவன் சேதுபதி ஒரு படையோடு மதுரை புறப்பட்டார்.மதுரை முற்றுகைக்கு உள்ளானது. கடும் நெருக்கடியில் ஆழ்ந்த ருஸ்தம்கான் சொக்கநாதரையும்
அவர் குடும்பத்தினரையும் கொல்லும்படி தன் ஆட்களிடம் சொன்னான். விஷயத்தைக் கேள்விப்பட்ட சேதுபதி உடனடியாக கோட்டையைக் கடுமையான தாக்கினார். அவரது வெடிமருந்துகள் இப்போரில் அதிகமாகப் பயன்பட்டன. தெற்கு வாயிலைக் கொளுத்தி அழித்துவிட்டு ராமநாதபுரம் படைகள் உள்ளே புகுந்தன.
Read 4 tweets
28 Oct 20
இந்த யுகத்தின் ஆதி மனு யார் என்பதற்கான ஆதாரம் மச்ச புராணம், பாகவதம் ஆகியவற்றில் உள்ளது. ஹா புராணமா என்று சொல்லவேண்டாம். மனுவே புராண கால ஆள்தான். இனி .

மதுரையில் சத்தியவிரதன் என்ற அரசன் இருந்தான். அவன் கிருதமால் நதிக்குச் சென்றிருந்தான்.இந்தக் கிருதமால் நதி எங்கே இருக்கிறது என்று Image
மதுரைக்காரர்கள் பலருக்கே தெரியாது. மதுரைக் கல்லூரிக்கு அருகில் இப்போது ஒரு சாக்கடை போல ஓடுவது ஒரு காலத்தில் ஆறாக இருந்தது.அந்த நதியில் சத்தியவிரதனுக்கு ஒரு மீன் அகப்பட்டது. வரப்போகிற பெரு ஊழையைப் பற்றி எச்சரிக்கை செய்த அது ஒரு ஓடத்தைத் தயார் செய்து உயிரினங்களை சேகரிக்கச் சொன்னது Image
அதன்படி நடந்து ஊழிக்காலத்தில் உயிர்களைக் காப்பாற்றி வைத்திருந்தான் சத்தியவிரதன். ஊழி முடிந்து உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கியவுடன் அவனே மனுவாக நியமிக்கப்பட்டான். இந்த இடத்தில் ஊழிகளைப் பற்றிய தொன்மங்களை தமிழ் இலக்கியங்கள் அதிகம் பேசுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் Image
Read 4 tweets
24 Oct 20
One could have heard British executing ‘Rebels’, the freedom fighters who challenged their rule. But it may be unique that they hanged not only Marudhu Pandiyar brothers but also 500 of their kinsman on this very day 219 years ago without any formal enquiry
Only Duraisamy, 15 year old son of Chinna Marudhu was spared & he was banished to imprisonment in Penang. Such was the vengeance they had on the brave brothers who fought the British gallantly. In fact,Chinna Marudhu was tortured in a ‘Parrot cage’ before being killed by them.
Even in the end, Marudhus surrendered only after British threatened that they will blew the Kalayar Koil temple tower. Strong Sanatani’s they were Marudhu’s couldn’t even take a small crack on the temple they had built & hence gave up their defence.
Read 5 tweets
30 Sep 20
Talking about debates, there is an interesting note shared by Kumar anna in FB. The debate was between Sari Buddha, a buddhist monk & Sambhanda Saranalayar, disciple of Thirugnanasambhandar. Sambhanda saranalayar asked Sari Buddha about the nature of the Moksha attained by Buddha
நாட்டுகின்ற முத்திதான் யாவ தென்றார்
.....
நேர்நின்ற ஞானமென நிகழ்ந்து ஐந்தும்
ஒன்றிய கந்தத்தழிவே முத்தி யென்ன
உரைசெய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான்

Saribuddha replied “The annihilation of the five gandhas-- rupa, vetana,Samagngnaa, samkaara and gnaana - is Moksha.
தாங்கியஞா னத்துடனாம் கந்தம் ஐந்தும்
தாம்வீந்து கெட்டனவேல் தலைவன் தானும்
ஈங்குளன் என்றவனுக்கு விடயமாக
யாவையுமுன் இயற்றுதற்கு விகாரமே செய்
தோங்குவடி வமைத்துவிழ வெடுக்கும் பூசை
கொள்வார்ஆர் உரைக்க

Sambhanda asked, if your Lord annihilated all five gandhas then who is present
Read 4 tweets
29 Sep 20
பின்னாளில் சோழப்பேரரசு உருவாவதற்கு அடித்தளம் அமைத்தவன் ஆதித்த சோழன். பெரும் சிவபக்தன். பல்லவ அரசை சோழநாட்டோடு இணைத்தவன்.தொண்டைநாடு சென்ற போது காளத்தி அருகிலுள்ள தொண்டைமானாற்றூர் என்ற இடத்தில் சிவபதவி அடைந்தான். அவன் மகனான பராந்தகன் அங்கே அவனுக்கு ஒரு பள்ளிப்படைக் கோவில் கட்டினான்
ஆதித்தனின் பிறந்ததினம் புரட்டாசி சதயம் (இன்று). இந்த விழாவை ஒவ்வொரு வருடமும் விமரிசையாகக் கொண்டாட உத்தரவிட்டான் பராந்தகன். புரட்டாசி கேட்டை தொடங்கி சதயம் வரை ஏழு நாட்கள் இந்த விழா நடைபெறும். இது ஒரு பள்ளிப்படைக் கோவில் என்பதால் மாவிரதிகளால் நிர்வகிக்கப்பட்டது (கிண்ணிமங்கலம் போல)
இவ்விழாவிற்காக 105 கழஞ்சு பொன் & 4000 காடி நெல் (1காடி-32படி) வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டு அதிலிருந்து வரும் வட்டியான 1000 காடி நெல்லைக் கொண்டு இந்த ஏழு நாளும் தினம் 1000 பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று ஏற்பாடு.யார் இந்த ஆயிரம் பேர்?மாவிரதிகள் உள்ளிட்ட ஆறு சமயத்தினர் 200 பேர்
Read 5 tweets
26 Sep 20
The King has come for Darshan. He is no ordinary King for he had rejuvenated the Pandya Kingdom & won territories up to Nellore. Besides, he is one of the richest kings at that time with Gold beads lying in Madurai streets like Marbles. No wonder Bhattars are running here & there ImageImage
to complete the Puja on time so that the King won’t be waiting for long. Suddenly they found the Theertha Pathiram(vessel with Holy water) missing. The Kaingaryaparar forgot to bring it. Understanding the situation, the King didn’t hesitate for a moment. Taking his Golden Kritam Image
he gave it to Bhattars to collect the Holy water. Everyone was stunned. He smilingly told them “I am blessed today to perform this Seva to Lord”. Besides that, he Gold plated the entire Pranavakara Vimana of Lord Sriranganatha. He performed Tulabhara standing in a moat Image
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!