2011 ல் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் அமைச்சராக இருந்த போதுதான் காளைகள் காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் சேர்க்கபட்டது.அது நாடாளுமன்றத்தில் தாக்கலாகி சட்டமானதால்தான் ஜல்லிகட்டிற்கு நிரந்தர தடையே வந்தது..(1)
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுதான் என 2011 - 2013 அதே துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனே ஏற்றுக்கொள்கிறார்..(2)
வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களாக 2009-2011 வரை ஜெய்ராம் ரமேஷ்,2011 - 2013 வரை தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன்,2013-2014 வரை வீரப்ப மொய்லி ஆகியோர் காங்கிரஸில் இருந்தனர்..(3)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தனி நீதிபதியான ஆர்.பானுமதி ஜல்லிக்கட்டு,ரேக்ளா ரேஸ்,எருது ஓட்டம் மற்றும் பிராணிகளை வதைப்படுத்தும் அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கும் தடை விதித்து 29.3.2006-ல் ஒரு உத்தரவை கொடுத்தார்.பின் ஒரு மேல்முறையீட்டில் இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வந்தது.(1)
அதன் பிறகு 9.3.2007 ல் ஜல்லிக்கட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜல்லிக்கட்டு தடை என்ற பானுமதியின் தீர்ப்பே ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது நீதிமன்றத்தால்.(2)
இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக் கொண்டு பிராணிகள் நலவாரியம் உச்சநீதிமன்ற அமர்வுக்கு சென்றது.அங்கே ஜல்லிக்கட்டு தடை ரத்து என்ற தீர்ப்புக்கு இடைக்காலத்தடை வாங்கினார்கள்.(3)
"உடம்பில் எவனுக்கு ஐரோப்பியனின் ரத்தம் ஓடாதோ? அவர்கள் அனைவரும் ஒன்று சேருங்கள்" என்று தென்னிந்தியாவின் சுதந்திர வேள்வியின் அறைகூவலான ஜம்புத்தீவு பிரகடனத்தை சின்னமருது 1801 ஜுன் மாதம் ஸ்ரீரங்கத்தில் வெளியிட்டார். (1)
வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாக 1801 மே மாதம் தொடங்கி 150 நாள் கடும் போர் நடந்தது மருது பாண்டியருக்கு எதிராக.ஆங்கிலேயருடன் உச்சகட்ட மோதல் நடந்து கொண்டிருந்தது.(2)
மருது சகோதர்கள் சரணடையவில்லை என்றால் காளையார்கோவிலை பீரங்கி வைத்து பிளந்துவிடுவோம் என்ற ஆங்கிலேயரின் எச்சரிக்கைக்கு பிறகு தங்கள் உயிரை விட இறைவனின் வீடே பெரிது என்றெண்ணி சரணடைந்து வீரமரணம் அடைந்த தினம் அக்டோபர் 24. (3)
மரியாதைக்குரிய தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்💐
ஒரு பெண்ணாக அவர் அனுபவிக்கக்கூடாத வசைகளை,அவமானங்களை,
எதிர்ப்புகளை சந்தித்து வந்திருந்தும் அவர் அரசியல் களத்தில் துணிச்சலாக நின்றிருக்கிறார்.(1)
"நம்பினார் கெடுவதில்லை இது நான்மறை தீர்ப்பு" என்பதற்கு இணங்க பிரதமர் மோடி அவர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்.சரணம் என்று வந்தவரை தன் உயிரைக் கொடுத்தாவது காக்க வேண்டும் என்ற ராஜன்ய மாண்பை காத்து வந்திருக்கிறார்.(2)
தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்களாலும்,பாஜக எதிர்பாளர்களாலும் வீசப்பட்ட அமிலங்களை உண்டு செரித்துதான் இந்த உயரிய பதவிக்கு செல்கிறார்.(3)
நாடு முழுக்க அமுல்படுத்தப்பட்ட "ஜல்சக்தி அபியான்" திட்டம் தமிழக மாவட்டங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளதை பார்க்கிறேன்.அதாவது ஆற்றில் வருகிற நீர்,மழை நீர் என எல்லாவற்றையும் முடிந்த வரை சேமித்து பூமிக்குள் கொண்டு செல்லும் முயற்சியை எடுத்துள்ளது மத்திய அரசு(1)
மழைநீர் சேகரிப்பு என்று அன்றைய முதல்வர் செல்வி.ஜெ கொண்டு வந்த திட்டம்தான் ஆனால் அது தேங்கிப் போய்விட்டது.இப்போது அதனை முறையாக அரசு முடுக்கிவிட்டுள்ளது.களிப்புகள் அதிகமாக குளங்களிலும்,வாய்க்கால்,
குட்டைகளிலும் இருக்கும் எனவே இதைத் தாண்டி நீர் கீழே இறங்குவது கடினம்(2)
நிறைய குளங்களை சுத்தப்படுத்தி அதில் உறைகிணறுகளை புதைத்து.வரும் காலங்களில் மழை நீரும்,வருகிற ஆற்று நீரும் பூமிக்கு செல்லும் வண்ணம் செய்திருக்கிறார்கள்.(3)
#தமிழ்ஹிந்து#இலக்கியம்#திருமால்
எதையெடுத்தாலும் சமணம்,பெளத்தம்,ஆஜீவகம் என்று அடித்துவிடும் கும்பலுக்கு எந்த ஆய்வு முறையை பற்றியும் கவலையில்லை.கண்ணை மூடிக் கொண்டு இந்து மத வெறுப்பை கொடுவதற்கு அந்த வார்த்தைகள் பயன்படும் கருவி அவ்வளவுதான்.(1)
பெளத்தம்,சமணத்தை பற்றி இவர்களுக்கு எள் முனையளவு கூட தெரியாது.
அத்திவரதர் புத்தர் சிலையாம் ஏனென்றால் படுத்திருக்கிறாராம் இப்படியெல்லாம் மல்லாந்து படுத்துக் கொண்டு சிந்திக்க நம்மவர்களால்தான் முடியும்.(2)
இனிமேல் காற்று வரவில்லை என்று திண்ணையில் படுத்திருப்பவரை புத்தர் என்று சொற்பொழிவு கேட்காமல் இருந்தால் சரி.சிலப்பதிகாரம் ஒரு சமண நூல் ஆனால் அது தமிழகத்தின் இந்து மத தொன்மத்தையும்,சான்றுகளையும் மிக நேர்மையாக பதிய வைக்கிறது.ஆயர்களிடம் மகாபாரதம் இருந்ததை சொல்கிறது.(3)
தமிழகத்தை Natural hindutuva state என்று சொல்லும் போதெல்லாம் என்றுமே அதை நான் நம்பியதில்லை.இப்போது கூட அத்திவரதர்,ஆனி திருமஞ்சனம் என மக்கள் லட்சக்கணக்கில் திரளுகிறார்கள் ஆனால் ஹிந்து விரோத பேச்சுகளுக்கு வாக்களிக்கிறார்கள் என்ற வருந்துகிறார்கள்.#தமிழகம்#ஹிந்துமதம்#அரசியல்.(1)
தமிழகம் ஹிந்துக்கள் பெரும்பான்மை என்பது ஒரு மேம்போக்கான பார்வை.அது வெறும் கூடு இங்கே எத்தனை இந்துக்கள் தன்னை இந்து என்றும்,பாரதத்தின் புதல்வர்கள் என்று நினைக்கிறார்கள்? என்பதை கவனிக்க வேண்டும்.(2)
அந்த கோவிலுக்கு செல்லும் கூட்டத்திடம் மெல்ல பிராமண வெறுப்பை பேசுங்கள் கூட்டம் உங்களோடு சேர்ந்து ஆர்ப்பரிக்கும்.அந்த கூட்டத்திலேயே பெரியார் சொன்னது சரிதான் என்று சொல்லிப் பாருங்கள் ஆமாம் என்று ஒத்து ஊதும்.(3)