போன வாரம் என்கள் வீட்டுக்கு போயிருந்தேன். என்னோட mobile phoneல battery lowவாக இருந்ததால் chargeல் போட்டு விட்டு பேரன் ஶ்ரீராமை அழைச்சுண்டு அவாத்து basementக்கு போய் அவன் செய்யும் குறும்புகளுக்கு ஈடு செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டு இருந்தேன்.
அப்போது அந்த apartmentல இருக்கற liftல வராமல், படபடவென மாடிப்படி வழியாக முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு கோபத்துடன் வேர்த்து விறுவிறுக்க வந்தாள் என் மகள்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க... வரும்போதே, "ஏம்பா... senior citizen ஆன பிறகும் உனக்கு இதெல்லாம் தேவையா???
அம்மாவுக்கு துரோகம் செஞ்சா நீ நன்னாவே இருக்க மாட்டேபா!!!!" - படபடன்னு கோபத்தின் உச்சத்தில் என்னென்னவோ சொல்லிண்டே இருந்தாள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வழக்கம் போல திருதிருவென முழித்தேன்.
ஜெயாங்கறது யாருப்பா? ஒனக்கும் அவளுக்கும் எவ்வளவு நாளா பழக்கம்?
ஜெ....யாவா?.............
என்னோட சித்தி பேரு ஜெயம். அவ இப்போ Canadaல அவ புள்ள சுரேஷோட இருக்கா.... ம்ம்ம்... வேற யாரும் இல்லையே!!!... ஹாங்.. நம்ப ராகவன் இல்ல... அவனோட அம்மாவும் ஜெயா தான்... ஜெயாத்தை.. இவாளைத் தவிர எனக்கு வேற எந்த ஜெயாவும் தெரியாதே?....
சரி... எதுக்கு கேக்கற வைஷாலி... சரி...
அப்படியே வேற யாராச்சும் இருந்தாலும்.... நீ ஏன் இவ்வளவு படபடப்போட கோபத்துல பேசற?
பின்ன என்னப்பா... உன்னை #அத்தான் னு கூப்பிட்டு message அனுப்பி இருக்கா?
என்ன...து? என்னை #அத்தான் னு அழைச்சு ஒரு messageஆ? ஒரே கிளுகிளுப்பா இருக்கே வைஷாலி
இந்த சீனியை #அத்தான் னு கூப்பிடறவா... யாரா இருக்கும்? .... இப்போ அமெரிக்கால இருக்கற... (சுந்தரமூர்த்தி மாமா பொண்ணு) தீபாவோ அல்லது (தத்து மாமாவோட) பொண்ணு வித்யாவோ தான் என்னை உறவு முறைப்படி #அத்தான் னு கூப்பிடணும். ஏன்னா.. அவங்க ரெண்டு பேருக்கும் நான் அத்தை புள்ள...அதனால் #அத்தான்.
ஆனா எனக்கும் அவங்களுக்கும் இருக்கும் வயசு வித்தியாசத்தை பார்த்தா அவங்க ரெண்டு பேரும் என்னை #அத்தான் னு கூப்பிட கூடாது.. #தாத்தா னுதான் கூப்பிடணும். So அவா ரெண்டு பேரும் ruled out. வேற யாரா இருக்கும் வைஷாலி!!!
அப்பா... படுத்தாத பா... யார் இந்த ஜெயான்னு எதையும் மறைக்காம சொல்லுப்பா... அம்மாக்கு தெரிஞ்சதுன்னா... அவ்வளவு தான்... உன்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவா.. பா!!!!
இரு... இரு... இரு... ஏன் இப்படி படபடக்கறே? என்ன message அது? என்னோட mobileஅ தா.. பாக்கறேன்
அதெல்லாம் முடியாது பா... உங்கிட்ட கொடுத்தா... அந்த messageஐ delete பண்ணிட்டா? அதனால தரமாட்டேன்.
சரி... வந்த messageஐ படி
வைஷாலி அந்த messageஐ படிக்க ஆரம்பித்தாள்:
போனவாட்டி நீங்க சென்னை வந்த போது என்னால் உங்களை பார்க்க முடியவில்லை...
காரணம் வீட்டில் என்னவர் தலைவலி என்று restல் இருந்தார் #அத்தான்
உங்களோட time spend பண்ண முடியலைன்னு ரொம்ப வருத்தமா இருக்கு #அத்தான். போன தடவை நான் பெங்களூர் வந்த போது உங்கள் வீட்டில், #மடியில் படுத்துக்கொண்டே பௌர்ணமி நிலவை பார்த்த படி கை கோர்த்து படுத்திருந்தோமே...
நம் இளமைக் கால நினைவுகள் மீண்டும் வந்ததே..ரொம்ப நாளைக்கு அப்புறம்.. எல்லா கவலைகளையும் மறந்து ரொம்ப ஏகாந்த இன்பம் அடைந்தோமே... என் மகிழ்ச்சிக்கு காரணம் அத்தான்.
அப்பா... இது போறுமா? என்னப்பா இது? பேரன் பொறந்ததுக்கு அப்புறம்... இந்த வயசுல... இது தேவையா?
இப்பவாவது சொல்லு... யார் இந்த ஜெயா?
பெங்களூர் குளிரிலும் எனக்கு உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்தது. நமக்கே தெரியாம... நாம ஜெயாங்கற பெண்ணுடன் தொடர்பு வந்துடுச்சா?... சேச்சே... இதுல ஏதோ விஷமம் இருக்கு...
வைஷாலி... அந்த mobileஐ தா. நான் அந்த messageஐ delete பண்ண மாட்டேன்.
சரி... இந்தாப்பா... நீ delete பண்ணினாலும்... நீ பண்ற தப்பு இல்லேன்னு ஆயிடுமா?... சரி சரி இந்தா...
என்னப்பா... செய்யற தப்பை எல்லாம் செஞ்சுட்டு... எதுக்கு இப்படி வில்லன் மாதிரி சிரிக்கறே? வந்த மெசேஜ் என்ன ஜோக்கா?? எனக்கு இங்கே அடிவயிறு பத்தி எரியுது... ஒனக்கு சிரிப்பா இருக்கா?
பின்ன... சிரிப்பு வராம... மக்களே...
அந்த மெசேஜை அப்படியே கீழே ஈயடிச்சான் காப்பி அடிச்சிருக்கேன்... நீங்களே படியுங்கள்:
Ponavatti neenga chennai vandha podhu ungalai parka mudiyalai.... Karanam Veetil ennaval thalaivali endru irundar #athan
Ungaloda time spend panna mudiyallanu romba varuthama iruku #athan.
Ponathadavai nan bangalore vanda podhu ungal veetil #madiyil paduthu konde pournami nilavai parthapadi kai korthu paduthu irundhome. Nam ilamai kala ninaivugal meendum vandhadhey. Ella kavalaigalayum marandhu romba egantha inbam adainthome.. en maghichikku karanam #athan
இதன் முறையான தமிழாக்கம் இதுதான்:
போனவாட்டி நீங்க சென்னை வந்த போது என்னால் உங்களை பார்க்க முடியவில்லை... காரணம் வீட்டில் என்னவர் தலைவலி என்று restல் இருந்தார் #அதான் .
உங்களோட time spend பண்ண முடியலைன்னு ரொம்ப வருத்தமா இருக்கு #அதான்.
போன தடவை நான் பெங்களூர் வந்த போது உங்கள் வீட்டில், #மாடியில் படுத்துக்கொண்டே பௌர்ணமி நிலவை பார்த்த படி கை கோர்த்து படுத்திருந்தோமே... நம் இளமைக் கால நினைவுகள் மீண்டும் வந்ததே.....
..ரொம்ப நாளைக்கு அப்புறம்.. எல்லா கவலைகளையும் மறந்து ரொம்ப ஏகாந்த இன்பம் அடைந்தோமே... என் மகிழ்ச்சிக்கு காரணம் #அதான்.
நான் சத்தமாக படித்து முடித்ததும்... வைஷாலி முகத்தை பார்த்தேன்... வியர்வை வடிந்த முகத்தில் இப்போது... வண்டி வண்டியாக.. அசடு வழிந்தது.
அப்படின்னா... யார் அந்த ஜெயா..ப்பா..
அந்த பேரோட profile முழுசும் நீ பாக்கலை வைஷாலி.. அது #ஜெயா_அத்தை_பிள்ளை_ராகவன். இப்படித்தான் நான் அவன் பேரை save பண்ணியிருக்கேன். அதுல ஜெயா..ங்கற பேரு மட்டும் தான் displayல வருது.. மற்றதெல்லாம்.... வந்திருக்கு பார்..
ஆமாம்.. பா... Sorry பா
மக்களே!!! உங்களை எல்லாம் தாழ்மையோட கெஞ்சி கேட்டுக்கறேன்... தமிழை... தமிழிலேயே எழுதுங்க பா... நீங்க பாட்டுக்கு... #தமிழை_இங்லீஷ்ல_எழுதிடறீங்க... அதை receive பண்ற நாங்க படற பாடு இருக்கே...
Corporate workshopல் சொல்லப்படும் அம்மாளு அத்தைபாட்டியின் கதை
என்னுடைய சிறு பிராயத்தில் மெட்ராஸ் மைலாப்பூர் ஹாமில்டன் பிரிட்ஜ் அருகில் குடியிருந்த அம்மாளுவின் ஆத்துல ஒரு முறை சென்றிருந்த போது அவரிடம் "எப்படி அத்தை! இவ்ளோ பெரிய சமையலை சொடக்கு போடற நேரத்துல
"இவ்வளவு வருஷமா இல்லாம இப்போ ஏன் திடீரென எழுதறீங்க?"
"சில சமயங்களில் ஒரே பாடல்களா share பண்றீங்க... ஆனால் திடீரென அமைதியாக இருக்கீங்க"
(whatsappல் என்னிடம் இருக்கும் பழைய தமிழ்/தெலுங்கு/இந்தி திரைப்பட பாடல்களை பகிர்வது வழக்கம்)
"ஒரு நாள் தமிழ் இலக்கியம் என்று சொல்லி எதையோ கதைக்கிறீர்கள். மறுநாள் பார்த்தால் ஜோக்ஸ் என்று உங்களையும் உங்கள் பாரியாளையும் பற்றி சொல்றீங்கள்" - இது ஒரு #சிரிலங்கா_தமிழ்_நண்பரின் வினா.
தனியாக கதை சொல்லி கொஞ்ச நாள் ஆகிவிட்டதோ? இதோ ஒரு கதை... அந்த கதை ஞாபகம் வந்ததன் பின்னணி....
போனவாரம் என் மனைவி எங்கள் பேரனிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். என் பேரனும் போய் குடிதண்ணீர் எடுத்து வராமல்
டம்ளரில் குழாய் தண்ணீரை பிடித்து கொண்டு வந்தான். அதை அப்படியே குடித்து விட்டு "சமத்துடா கொழந்த... அடுத்த வாட்டி யாராவது குடிக்க தண்ணீர் கேட்டால் அதோ அந்த குடத்தில் இருந்து தான் எடுத்து கொடுக்கணும். சரியா?" என்று சொன்னாள்.
இதைப் பார்த்து என் மகள், "ஏம்மா... அந்த தண்ணிய குடிச்ச?" என்று கொஞ்சம் கடிந்து கொண்டாள்.
"கொழந்த ஶ்ரீராம் எவ்வளவு பாசமா... ஆசையா கொண்டு வந்தான் தெரியுமா? அவனை disappoint பண்ணக்கூடாது. அதுக்கு தான் ஒண்ணும் சொல்லாமல் குடிச்சேன்" என்றாள்.