Corporate workshopல் சொல்லப்படும் அம்மாளு அத்தைபாட்டியின் கதை
என்னுடைய சிறு பிராயத்தில் மெட்ராஸ் மைலாப்பூர் ஹாமில்டன் பிரிட்ஜ் அருகில் குடியிருந்த அம்மாளுவின் ஆத்துல ஒரு முறை சென்றிருந்த போது அவரிடம் "எப்படி அத்தை! இவ்ளோ பெரிய சமையலை சொடக்கு போடற நேரத்துல
எவ்வளவு பெரிய வேலையா இருந்தாலும்... பார்ட் பார்ட்டா பிரிச்சுட்டோம்னா... ரொம்ப ஈசியா ஆயிடும்.... முடிச்ச வேலையும் ப்ரமாதமா இருக்கும்!".
அதுக்காக ஒரு குட்டி கதைய சொல்லட்டுமானு கேட்டா...
கரும்பு தின்ன கூலியா!!! அம்மாளு அத்தை பாட்டி சொல்ற கதைனா... அப்படி ஒரு impact இருக்கும்....
சொல்லு அத்தை சொல்லு.....
அப்போது அவள் சொன்ன கதை இப்போது social mediaவில் "சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்" படிக்க வேண்டிய கதை என்ற பெயரில் உலா வருகிறது.
அந்த கதை இதுதான்:
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான். ஒரு நாளைக்கு அந்த ராஜாவுக்கு தன்னோட பட்டத்து யானை
எவ்வளவு எடை இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசை வந்தது.....
அந்தக் காலத்தில் இப்போ கட்டதொட்டில இருக்கற மாதிரி எடை போடற மிஷின்லாம் கிடையாது. ஆனால் தராசு இருக்கும்.. ஆனால் யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.
யானையின் எடையை எப்படி தெரிஞ்சுக்கறது....?னு தன்னோட மந்திரி கிட்ட ராஜா கேட்டான். யானையை எப்படி எடை போடறதுன்னு யாருக்கும் தெரியவில்லை.
அப்போது மந்திரியோட பத்து வயசு மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான்.
அதைக் கேட்டு எல்லாரும் சிரிச்சாங்க...ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் ராஜா.
அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு.
உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான்.
பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன.
பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான்.
அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.
எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள்.
ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்க முடியும் எனும் நம்பிக்கை வரவில்லை.
ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.
இந்த பாட்டி கதைதான் .... இப்போதெல்லாம்.... இங்கிலீஷில் translate செய்யப்பட்டு... ₹5000-10000 fees கட்டி சேர்ந்த personality development/soft skills workshop என்ற பெயரில் ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் நடத்தி சொல்கிறார்கள்..
ஆனால் எனக்கு 55 வருஷம் முன்பு இலவசமாக.... பாட்டியின் அன்பான அனுசரணையோடு கெடச்சது
போன வாரம் என்கள் வீட்டுக்கு போயிருந்தேன். என்னோட mobile phoneல battery lowவாக இருந்ததால் chargeல் போட்டு விட்டு பேரன் ஶ்ரீராமை அழைச்சுண்டு அவாத்து basementக்கு போய் அவன் செய்யும் குறும்புகளுக்கு ஈடு செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டு இருந்தேன்.
அப்போது அந்த apartmentல இருக்கற liftல வராமல், படபடவென மாடிப்படி வழியாக முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு கோபத்துடன் வேர்த்து விறுவிறுக்க வந்தாள் என் மகள்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க... வரும்போதே, "ஏம்பா... senior citizen ஆன பிறகும் உனக்கு இதெல்லாம் தேவையா???
அம்மாவுக்கு துரோகம் செஞ்சா நீ நன்னாவே இருக்க மாட்டேபா!!!!" - படபடன்னு கோபத்தின் உச்சத்தில் என்னென்னவோ சொல்லிண்டே இருந்தாள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வழக்கம் போல திருதிருவென முழித்தேன்.
ஜெயாங்கறது யாருப்பா? ஒனக்கும் அவளுக்கும் எவ்வளவு நாளா பழக்கம்?
"இவ்வளவு வருஷமா இல்லாம இப்போ ஏன் திடீரென எழுதறீங்க?"
"சில சமயங்களில் ஒரே பாடல்களா share பண்றீங்க... ஆனால் திடீரென அமைதியாக இருக்கீங்க"
(whatsappல் என்னிடம் இருக்கும் பழைய தமிழ்/தெலுங்கு/இந்தி திரைப்பட பாடல்களை பகிர்வது வழக்கம்)
"ஒரு நாள் தமிழ் இலக்கியம் என்று சொல்லி எதையோ கதைக்கிறீர்கள். மறுநாள் பார்த்தால் ஜோக்ஸ் என்று உங்களையும் உங்கள் பாரியாளையும் பற்றி சொல்றீங்கள்" - இது ஒரு #சிரிலங்கா_தமிழ்_நண்பரின் வினா.
தனியாக கதை சொல்லி கொஞ்ச நாள் ஆகிவிட்டதோ? இதோ ஒரு கதை... அந்த கதை ஞாபகம் வந்ததன் பின்னணி....
போனவாரம் என் மனைவி எங்கள் பேரனிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். என் பேரனும் போய் குடிதண்ணீர் எடுத்து வராமல்
டம்ளரில் குழாய் தண்ணீரை பிடித்து கொண்டு வந்தான். அதை அப்படியே குடித்து விட்டு "சமத்துடா கொழந்த... அடுத்த வாட்டி யாராவது குடிக்க தண்ணீர் கேட்டால் அதோ அந்த குடத்தில் இருந்து தான் எடுத்து கொடுக்கணும். சரியா?" என்று சொன்னாள்.
இதைப் பார்த்து என் மகள், "ஏம்மா... அந்த தண்ணிய குடிச்ச?" என்று கொஞ்சம் கடிந்து கொண்டாள்.
"கொழந்த ஶ்ரீராம் எவ்வளவு பாசமா... ஆசையா கொண்டு வந்தான் தெரியுமா? அவனை disappoint பண்ணக்கூடாது. அதுக்கு தான் ஒண்ணும் சொல்லாமல் குடிச்சேன்" என்றாள்.