Zombie apocalypse கதைகளை வச்சு வந்த Korean படங்கள்/சீரிஸ் பற்றி இந்த threadல பார்க்கலாம். Image
"பொன்னியின் செல்வன்" நாவல் வாசிக்காதவர்கள் ரொம்ப குறைவு. வீரம், அரியணை போட்டி, வஞ்சம், சூழ்ச்சி,காதல் போன்றவற்ற வைத்து கதை பின்னப்பட்டிருக்கும். இவற்றுடன் Zombiesம் இணைந்தால் எப்படி இருக்கும். ஒரு பக்கம் அரியணைக்காக சூழ்ச்சிகள், இன்னொரு பக்கம் Zombies. கேட்கவே நல்லா இருக்குல்ல. Image
இது தாங்க Kingdom (2019) கொரியன் seriesஇன் கதை. திரைக்கதை, makingல Game of Thronesஐயே தூக்கி சாப்பிடுற அளவுக்கு worthஆன series. ஒவ்வொரு கதாபாத்திரமும், அங்கங்கே வரும் திருப்பங்கள்னு செதுக்கியிருக்காங்க. Image
2020ல இதோட இரண்டாவது சீசன் வந்திச்சு. ஆரம்பத்துல பகல்ல மட்டுமே வரும் zombies இதுல இரவுலேயும் வர ஆரம்பிக்குது. அப்போ முதலாவது seasonஐ விட இதுல double action. அதோட கதையும் நச்சுன்னு இருக்கும். Highly recommended series. ImageImage
Rampant (2018)
Kingdom seriesஇன் கதையை சுருக்கி ஒரே படமா எடுத்தா எப்டி இருக்குமோ அதுதான் Rampant. Image
Train To Busan(2016)
ஒரு zombie apocalypse படத்துல sentimentsலாம் கலந்து எடுத்ததுதான் Train To Busan. முக்கால்வாசி படம் trainக்கு உள்ளதான் கதை. உலக லெவல்ல அதிரி புதிரி வசூல் சாதனை செய்த படம். Image
Peninsula (2020)
Train to Busan படத்தோட இரண்டாம் பாகம் மாதிரி. Zombie apocalypse நடந்து 4 வருடங்களுக்கு பிறகு அதே ஊருக்குள்ள சில பேர் திரும்பி போறாங்க. "ஏன் போறாங்க?அவங்களுக்கு அங்கே என்னென்ன அதிர்ச்சிகள் கிடைக்குது?" என்பதை படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க. Image
Seoul Station (2016)
இது ஒரு animation படம். Train to Busan படத்தோட prequel. Image
#Alive (2020)
Gaming, Internetக்கு அடிமையான ஒருத்தன் தூங்கி எழுந்திருக்கும் போது வீட்டில் யாருமில்லை. வீட்டின் வெளியே சத்தம் கேட்டு என்னவென்று பார்த்தால் மக்கள் zombies ஆக மாறி ஒருவரை ஒருவர் கடித்துக்கொண்டிருப்பார். எப்படி தப்பிக்கிறான் என்பதை படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. Image
The Odd Family: Zombie on Sale (2019)
அப்பா, 2 மகன்கள், மகள், மூத்த பையனின் மனைவி இருக்கிற ஒரு குடும்பத்துல, அவங்க ரோட்ல spikes போட்டு காரை பஞ்சராக்கி தங்களோட setக்கு கொண்டுபோய் repair செய்து குடுத்து பணம் சம்பாதிக்கிறாங்க. அப்பாக்கு ஒரு zombie கடிச்சிருது. Image
ஆனாலும் அவர் zombieயா மாறாமல் கொஞ்சம் energiticஆ மாறிடுவார். அப்புறம் என்ன நடந்துச்சு என்றதை படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
Zombie படங்களிலே நிறைய horror filmsதான் பார்த்திருப்பீங்க. ஆனால் இது செம ஜாலியான zombie comedy படம். Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மாஸ்டர்🍥

மாஸ்டர்🍥 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @peru_vaikkala

16 Jan
B612 என்ற mobile application பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Android mobile பாவிக்கும் எல்லோருக்கும் பிடித்தமான selfie camera applicationதான் அது. B612 என்ற பெயர் ஏன் வைத்திருப்பார்கள்? அதில் போட்டோ எடுக்கும் போது அதன் அடியில் சில குறியீடுகள் விழுவதை கவனித்திருக்கிறீர்களா? Image
குட்டி இளவரசன் வசிக்கும் சிறுகோளின் பெயர்தான் B612. அதில் ஒரு நாளில் நாற்பத்து நான்கு முறை சூரிய அஸ்தமனங்களை காண முடியும்.
குட்டி இளவரசனின் inspiration வெறும் selfie app மட்டுமில்லை.
பிரான்சில் அதை கொண்டாடுகிறார்கள் Image
பிரான்சின் பிராங் நாணயங்களில் குட்டி இளவரசன் ஓவியங்கள் காணப்படுகின்றன, halloweenல் குட்டி இளவரசன் சார்ந்த உருவங்களும் வலம் வருகின்றன, Exupéryன் நினைவு நாள் அங்கு ஒரு பெரிய கொண்டாட்டம். 46610 Bésixdouze என்று ஒரு சிறுகோளுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். (46610ன் Hexadecimal B612) Image
Read 14 tweets
16 Jan
'The God and Delusion' என்ற புத்தகத்தில் Richard Dawkins பகுத்த, கடவுளின் இருப்பைப் பற்றிய மனிதர்களின் வெவ்வேறு அளவான நிலைப்பாடுகள்.
1.உறுதியான இறை நம்பிக்கையாளர் (theist).கடவுள் உண்டு என்பதற்கான சாத்தியக்கூறு 100 %.
கடவுளை நம்புகிறவன் அல்ல நான், அவரைத் தெரிந்தவன் - சி.ஜி.ஜங். ImageImage
2.மிக அதிக சாத்தியக்கூறு, ஆனால் 100 வீதத்திலும் குறைவு. இவர்கள் மெய்ம்மையில்(De facto) இறைநம்பிக்கையாளர்கள். 'என்னால் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் கடவுளை உறுதியாக நம்புகிறேன், அவர் இருக்கிறார் எனும் அனுமானத்தின் அடிப்படையில் வாழ்கிறேன்.' Image
3.50%ற்கும் அதிகம், ஆனால் மிக அதிகம் இல்லை. சொல்லுக்குரிய பொருளின்படி (technically) அறிய முடியாக் கொள்கையர், ஆனால் கடவுள் நம்பிக்கையின் பக்கம் சாய்கிறவர்.

4.சரியாக 50% முற்றிலும் நடுநிலமையான அறிய முடியாக் கொள்கையர். 'கடவுள் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் சம அளவு வாய்ப்புடையவை.' Image
Read 8 tweets
15 Jan
பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்களிடத்திலும் நேர்மையே உருவானவர்களிடத்திலும் இருந்து கேட்க்கப்படும் கேள்விகளை பல சமயங்களில் மௌனமே ஆட்சி செய்யும்❤️.
(A Good writing is not only about Powerful Dialogs. It's also About Powerful Silence)
சூர்யா : ஒரு பையனும் பொண்ணும் friendsஆ மட்டும் இருக்க முடியாதுல?
பிரியா :

குமார் : பணம் ஏதாவது?
கிருஷ்ணவேணி :

ஜானி : ஆரம்பத்துல படபடன்னு பேசிட்டிங்களே. நான் அப்படியெல்லாம் நெனைக்கிறவனா? ஏன் அப்டி பேசுனீங்க?
அர்ச்சனா : நா அப்படி தான் பேசுவேன்.
ஜானி : ஏன்? ஏன்?
அர்ச்சனா : Image
கிருஷ்ணவேணி : நா மாசமா இல்லனா என்ன கல்யாணம் பண்ணிருப்பியா?
குமார் :

கார்த்திக் : ஏங்க இப்படி கதவ தொறந்து போட்டு குளிக்கிறீங்க? ஒரு அவசரத்துல நான் வந்து பார்த்திருந்தேன்னா?
யாமினி : நீ பாப்பேன்னு நினைச்சேன்
கார்த்திக் : Image
Read 4 tweets
9 Jan
'தமிழ் பயங்கரவாதம்' என்று அரசியல் செய்யும் நிலை தற்போது இலங்கையில் இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அப்படியொரு பிம்பத்தை கட்டமைத்தால்தான், அவர்களின் கையாலாகாத்தனங்களை மூடி மறைக்க முடியும். யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தது சதுரங்கத்தின் முதல் நகர்வு
இனிமேல்தான் காய்கள் கவனமாக நகர்த்தப்படவேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறப்படாது நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபியை அகற்றியதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது.
ஆனால் இரவோடு இரவாக, ராணுவத்தினரின் பாதுகாப்போடு இடிக்க வேண்டிய தேவை என்ன?
அந்த தூபி அனுமதி பெறப்படாது கட்டப்பட்டது என்றால், முறையாக மாணவர் ஒன்றியத்துடன் பல்கலைக்கழக நிர்வாகம் கூட்டமொன்றில் அதற்கான தீர்வினை ஆலோசித்திருக்க வேண்டும்.
Read 6 tweets
9 Jan
Suspect X (2008/Japanese)

"Galileo" என்ற ஜப்பானிய துப்பறியும் தொடர் ஒன்றின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட படம். The Devotion of Suspect X என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. "ஒரு கொலையை மறைத்து குற்றவாளி தப்பிக்கிறதுதான்" படத்தோட கதை.
இதை adopt பண்ணி நிறைய படங்கள் வந்திருக்கு.
1. Perfect Number (2012/Korean)
2. Drishyam (2013/Malayalam)
3. பாபநாசம் (2015)
4. கொலைகாரன் (2019)
The Other Me (2016/Greek)
இதுவும் கொலைகளை துப்பறியும் படம்தான்.கொலைகளில் தடையங்களா 220 எண்ணை கொலையாளி விட்டுட்டு போறான். "ஏன் அப்டி செய்யிறான்? , யார் கொலையாளி?" என்று கண்டுபிடிக்கிறதுலாம் செமையா இருக்கும். முக்கியமா cinematograohy வேற லெவல்ல இருக்கும்.
Read 5 tweets
8 Jan
விக்ரம் ❤️

சியான் விக்ரம். இந்த மனுசனை புடிக்காதுன்னு சொல்லுறவங்க யாராச்சும் இருப்பாங்களா என்ன?
யாரையுமே கடிந்து பேசாம, fans கூட அவ்ளோ அன்பு, versatality acting, சக நடிகர்களோட ego இல்லாம பழகுறதுனு சொல்லிட்டே போகலாம்.
100 years of indian சினிமா விழாவில், 'தலைவா' பட பிரச்சனையால தளபதிக்கு கடைசி வரிசைல இருக்க இடம் குடுத்து ரொம்ப insult பண்ணாங்க. அப்போ தளபதி கூட இருந்து தன்னோட நட்பை காட்டியிருப்பார்.
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
இயக்குனர் பாலா எழுதின "இவன்தான் பாலா" biographyல விக்ரம் பற்றி நிறைய சொல்லி இருப்பார். சேது படத்திற்க்காக உடல் எடையை குறைச்சிட்டு இருக்கிறப்போ பாலா கேட்ட கேள்விக்கு விக்ரம் சொன்ன பதில், அந்த ஓர்மம். அதுதாங்க விக்ரம்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!