*திருக்கண்ணங்குடி*

கிருஷ்ண பரமாத்மாவுக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. கிருஷ்ணரின் நாமம் கொண்டு திகழும் இந்த தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன.

🇮🇳🙏1
அவற்றுள் *திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, கபிஸ்தலம் ஆகிய 5 தலங்களும் “பஞ்ச கிருஷ்ண தலங்கள்”* என்ற சிறப்புப் பெற்றவை.

இந்த பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கையில் கருடன் உற்சவர் பெருமாளுடன் ஏகாசனத்தில் சேவை சாதிக்கின்றார். 🇮🇳🙏2
ஆனால் இங்கு சாதாரணமாக உள்ளது போல் அஞ்சலி ஹஸ்தத்துடன் இல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு, பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்கு தயாராக எப்போதும் திருவைகுண்டத்தில் இருப்பது போல நியம கருடனாக சேவை சாதிக்கின்றார்.

இத்தலம் பஞ்ச நாராயணத்தலங்களில் ஒன்றாகும் மற்ற தலங்கள்

🇮🇳🙏3
1. தெற்கில் – ஆபரணதாரி என்ற பதியில் ஆனந்த நாராயணன்

2. தென்மேற்கில் – பெரிய ஆலத்தூர் வரத நாராயணன்

3. தென்மேற்கில் – தேவூர் என்ற பதியில் தேவ நாராயணன்

4. தென்மேற்கில் – கீவளுர் என்ற பகுதியில் யாதவ நாராயணன்

🇮🇳🙏4
இந்த ஐந்து தலங்களும் சுமார் 6 கி.மீ சுற்று வட்டாரத்திற்குள்ளாகவே அமைந்துள்ளன. வாருங்கள் திருமங்கை மன்னரின் தீரா வழக்கு ஒன்று உள்ள இந்த திவ்ய தேசத்தை சேவிக்கலாம்.

ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் இவை ஐந்தினாலும் புகழ்பெற்ற இத்தலம் பஞ்ச பத்ரா என்று புகழ் பெற்றது.

🇮🇳🙏5
*மூலவர்*

லோகநாதப் பெருமாள். சியாமளமேனிப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார்.

🇮🇳🙏6
உற்சவர் : தாமோதர நாராயணன்.

தாயார்: லோகநாயகி அரவிந்தநாயகி தாயார்.

விமானம்: உத்பலாவதக விமானம்

தல விருட்சம்: மகிழம்

தீர்த்தம்: சிரவண புஷ்கரணி தீர்த்தம்.

🇮🇳🙏7
*தல வரலாறு*

கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீது பக்தி கொண்ட வசிஷ்ட முனிவர் அந்த கண்ணனுக்கு மிகவும் பிரியமான வெண்ணையால் கிருஷ்ண விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார்.

🇮🇳🙏8
அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த விக்கிரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள் அவரது பக்தியை உலகத்தினத்தினர்களுக்கு உணர்த்த கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து வெண்ணைய் விக்கிரகத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார்.

🇮🇳🙏9
ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்றார் வசிஷ்டர். சிறுவன் ஓடிய வழியில் ஒரு மகிழ மரத்தடியில் சில முனிவர்கள் அமர்ந்து கிருஷ்ணரைத் தியானம் செய்து கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவன் கிருஷ்ணரே என அவர்கள் புரிந்து கொண்டனர்.

🇮🇳🙏10
தங்கள் பாசக் கயிற்றால் அவனைக் கட்டிப் போட்டனர். கண்ணன் சொன்னான், சீக்கிரம் என்ன வேண்டுமோ கேளுங்கள், வசிஷ்டர் துரத்திக் கொண்டு வருகிறார்.

🇮🇳🙏11
அவர்களோ, “கண்ணா உன் தரிசனத்துக்காகத்தானே நாங்கள் தவமிருந்தோம். எங்களுக்குக் காட்சியளித்தது போல் நீ, இங்கே வரும் பக்தர்கள் எல்லோருக்கும் காட்சி தந்து அருள வேண்டும்”. அதே நேரம் வசிஷ்டரும் வந்தார்.

🇮🇳🙏12
கண்ணன் காலைப் பிடித்துக் கட்டிக் கொண்டார். இப்படி கண்ணன் தாம்புக் கயிறால் கட்டுண்டதால் தாமோதரன் ஆனான்.

வசிஷ்டரின் பிடிக்குள் கட்டுண்டு நின்றதால் ஊர் கண்ணன்குடியானது. அவ்விடத்தில் லோகநாதப் பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது. 🇮🇳🙏13
பரந்த வளாகத்தில் 5 அடுக்கு இராஜ கோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் பக்த உலா மண்டபம், சோபன மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கொண்டு இக்கோவில் அமைந்துள்ளது.

இராமருக்கு ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு தனி சன்னதி உள்ளது.

🇮🇳🙏14
திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்சவரும் ஒரே ஜாடையில் சேவை சாதிக்கின்றனர். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். மற்ற திவ்ய தேசங்களில் இரு கரம் குவித்த நிலையில் கருடாழ்வார் இருப்பார்.

🇮🇳🙏15
ஆனால் இங்கே உற்சவர் இரு கைகளையும் கட்டிக் கொண்டு நியம கருடனாக வைகுண்டத்தில் உள்ளது போல உற்சவர் கருவறையில் தாமோதரப் பெருமாளுடன் சேவை சாதிக்கின்றார். மூலவர் கருடன் சிறிதாக பெருமாளுக்கு எதிராக அஞ்சலி ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில்தான் சேவை சாதிக்கின்றார்.

🇮🇳🙏16
*உறங்காப்புளி*

திருமங்கையாழ்வார் அரங்கன் ஆலயத்தில் மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். கட்டடப் பணிக்கு வேண்டிய திரவியம் இல்லை. அப்போது “நாகப்பட்டினத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை உள்ளது.

🇮🇳🙏17
அதைக் கொண்டுவந்து மதில் கட்டலாம்’ என்று இவரது சீடர்கள் கூற, ஆழ்வாரும் நாகை வந்து அச்சிலையைக் கண்டு, உனக்கு ஈயம், இரும்பு, மரம், பித்தளை போன்றவற்றால் சிலை செய்தால் ஆகாதோ பொன்னும், 🇮🇳🙏18
வேண்டுமோ என்று அறம் பாடியவுடன் சிலையின் வடிவம் மட்டும் அவ்வாறேயிருக்க சுற்றி வேயப்பட்ட தங்கம் முழுவதும் அவர் கையில் வந்து விழுந்ததாம்.

🇮🇳🙏19
ஈயத்தாலாகாதோ இரும்பினாலாகோதோ
பூயத்தால் மிக்கதொரு பூதத்தலாகாதோ
பித்தளை நற்செம்புக லாகாதோ
மாய்ப்பொன்னும் வேண்டுமோ
மதித்துன்னைப் பண்ணுகைக்கே.

🇮🇳🙏20
அந்தப் பொன்னை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும்போது, இவ்வூரின் வழியாக வந்தவர் கால்கள் நோவு எடுக்க சாலையோர சேறு சகதி நிறைந்த நிலத்தில் அதைப் புதைத்துவிட்டு புளியமரத்தினடியில் படுத்துறங்க எண்ணினார்.

🇮🇳🙏21
புளிய மரத்தைப் பார்த்து “நான் அயர்ந்து தூங்கினாலும் நீ தூங்கக் கூடாது’ என்று கூறி கண்ணயர்ந்தார்.

மறுநாள் விடிந்தபொழுது, வயலுக்குச் சொந்தக்காரன் உழத் தொடங்க, புளிய மரம் இலைகளை உதிர்த்து ஆழ்வாரை எழுப்பியதாம். எனவே அவர் மரத்தைப் பார்த்து “உறங்காப்புளி வாழ்க’ என்றாராம்.

🇮🇳🙏22
இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் “திருநீறணி விழா” என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும்.

வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

15 Jan
சோதனை வேண்டும்!..

ஒரு ஆஸ்திகனும், நாஸ்திகனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கடவுளைப் பற்றி வாதம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒருவன் கடவுள் இருக்கிறார் என  ஆதாரங்களை எடுத்துக் கூற, இன்னொருவன் எதிர்க்கேள்வி கேட்டு அவனை மடக்குவான்.
ஒருநாள், நாஸ்திக  நண்பனை வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றான் ஆஸ்திகன். இருவரும் கோயிலுக்குள் சென்று விட்டு, பிரகாரம் வலம் வரும் போது, ஒரு தூணில் இடறி  விழுந்தான் ஆஸ்திகன். அவன் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
சற்று தூரத்தில், ஒரு நூறு ரூபாய் நோட்டு நாஸ்திகன் கண்ணில் பட்டது. அதை அவன் எடுத்துக் கொண்டான். நாஸ்திகன் நண்பனைப் பார்த்து சிரித்தான். டேய்! நீ கடவுளை வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வந்தாய்.
Read 6 tweets
15 Jan
நன்றி..

N S S Sankaran.

Watsup பகிர்வு

இந்திரா காந்தி 1969 ல் வங்கிகளை தேசியமயமாக்க சட்டம் பிறப்பித்த போது...

இந்திரா காந்தி மன்னர் மானிய ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்த போது...

அவற்றை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய போது...
ஆஹா! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கொண்டு வந்த, மக்களுக்கான சட்டத்தை...

எப்படி நீதிமன்றம் தலையிட்டு தள்ளுபடி செய்யலாம்?

EXECUTIVE மற்றும் JUDICIARY க்கு இடையே 'எல்லைக் கோடு' வேண்டாமா?
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட (DEMOCRATICALLY ELECTED) அரசின் செயல்பாடுகளுக்கு நீதிபதிகள் நான்கு பேர் உட்கார்ந்து முட்டுக் கட்டை போடுவது எந்த வகையில் நியாயம்?

நாடாளுமன்றத்தின் உரிமையில் நீதி மன்றம் தலையிடலாமா?
Read 12 tweets
15 Jan
நெல்லை – பாளையங்கோட்டை பாலத்தின் கதை

அந்த ராமலிங்க முதலியார் செங்கல்பட்டு பக்கம் 17ம் நூற்றாண்டில் வசித்தவர், பெரும் வியாபாரி வெள்ளையனோடு வியாபாரம் செய்த காலத்தில் நன்றாக ஆங்கிலம் கற்று அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்.
இந்தியாவில் அவரை போன்ற ஆட்கள் அவசியம் என்பதால் தங்கமும் வெள்ளியும் கொட்டி தனக்கு சமமான அந்தஸ்தில் திவான் போல கிழக்கிந்திய கம்பெனி வைத்திருந்தது. பெரும் அரண்மனையும், குதிரை வண்டியும் வீடெல்லாம் தங்க பாளமும் வெள்ளி கட்டியுமாக பெரும் வாழ்வு வாழ்ந்தவர்.
அவர், அப்பொழுதே “அல்பேகா” எனும் கருப்பு கோட்டு அணிந்தவர். எப்பொழுதும் மூட்டை மூட்டையாக நாணயம் கொட்டப்படும் அள்ளப்படும் சத்தம் கேட்டு கொண்டே இருந்த வீடு அது. அவர் வியாபாரம் நடத்தியவர் என்றாலும் வெள்ளையனிடம் கவுரவ பதவியிலும் இருந்தார்.
Read 29 tweets
14 Jan
#நிதானம்"

ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன்,அவரைத் தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.

குரு சொன்னார்,
"அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.உணவை, நீரை அருகில் வையுங்கள்.ஆனால் உண்ணும் படிக் கூற வேண்டாம்.
பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்.அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்,நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்,"* என்றார்.

அவர் கத்துவார், கற்களை வீசுவார்.
ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.சீடர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்தனர்.
அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.
நாட்கள் நகர்ந்தன,

ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், "எனக்கும் தியானம் சொல்லித் தருவீர்களா..?" என்று கேட்டான்.

இது இன்றும் திபெத்திய புத்தமடலாயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.
Read 5 tweets
14 Jan
பொங்கல் ஸ்பெஷல் !!

இனிய பாெங்கல் நல்வாழ்த்துகள்!

பொங்கல் – மஞ்சள்_குலை வாங்குவது ஏன்?

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத்
திகழும் மஞ்சள் மகிமை மிக்கது.

மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள்_வாசம்_செய்கிறாள்.
அதனால் தான் சுமங்கலிப்பெண்கள்
மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள்.

புத்தாடை அணியும்போது, அதில் மஞ்சள்தடவிஅணிகிறோம்.

எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில்
மஞ்சள்தடவிக்கொடுக்கிறோம்.
திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட
ஒரு சடங்கு இருந்தது.
முனைமுறியாத_அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர்.

எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம்.

சுமங்கலிகள்_வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு
மஞ்சள்_குங்குமம்_கொடுத்து வழியனுப்புவதும்
மங்கலத்தின்அடையாளம்தான்.
Read 6 tweets
14 Jan
*ஆனைமுகனின் ஆறுபடை வீடுகள். ஒரு சிறப்பு பார்வை.*

1.திருவண்ணாமலை படைவீடு

திருவண்ணாமலை பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குரிய தலமான திருவண்ணாமலையில் விநாயகரின் முதல் படைவீடு இருக்கிறது. 🙏🇮🇳1
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ளே வடக்கு நோக்கிய சந்நதியில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் அல்லல்போம் விநாயகர் என்கிற வினை தீர்க்கும் விநாயகர்.

🙏🇮🇳2
இவ்வாலயத்தின் பிராகாரங்களில், ராஜ கோபுர விநாயகர், சிவகங்கைத் தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணை திறைகொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் எனப்பல விநாயகர் சந்நதிகள் இருப்பினும் 🙏🇮🇳3
Read 26 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!