இது ஒரு நீள் பதிவு. தொடராக எழுத விழைகிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை whatsappல் பதிவு செய்த போது எனது நண்பர்களையும் அது எவ்வாறு பாதித்து இருந்தது என்பதை அவர்கள் அனுபவங்களையும் பகிர உள்ளேன்.
இவற்றை படித்ததும் வெறுமனே 👌🙏👏 என்று சொல்லாமல் உங்கள் மனதில் தோன்றுவதை வார்த்தைகளில் தெரிவியுங்கள்
(உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் இருந்தால் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்)
பாதி இரவும் கடந்துவிட்டது. ஆனால் நித்ராதேவி என்னிடம் வர மறுக்கிறாள்.
தூங்குவதற்காக நான் எடுத்த முயற்சிகள் எதுவுமே பலன் அளிக்கவில்லை. தூக்கம் இல்லாத இது போன்ற இரவுகள் மிக நீளமானது.
இரவில் தூங்குவதற்காக படுக்கும் போது ஏதோவொரு சிறு நினைவால் பற்ற வைக்கப்படும் நெருப்பு அந்த இரவு முழுவதும் எரித்து விடுகிறது
ஒடுங்கிய தேகம்... தேங்காய் நார் போல பின்னிப் பிணைந்த செம்பட்டை தலைமுடி... ஏறிய நெற்றி... கோழிமுட்டை கண்கள்... நீளமான மூக்கு... ஒட்டிய கன்னங்களை மறைத்து இருக்கும் தாடி...
உதடுகளை மறைத்த மீசை... நீண்ட கழுத்து... உள்வாங்கிய வயிறு... கிட்டத்தட்ட கேலிச் சித்திரங்களில் வரும் ஓவியத்தை போல இருந்தார்....
அவரின் உடையின் உண்மையான நிறங்கள்... என்ன என்பதை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அழுக்கேறி நைந்து போயிருக்கும்... சட்டையில் பட்டன்கள் இல்லாததால்...
எலும்பும் தோலுமான மார்பும்... முதுகெலும்பு காட்டும் ஒட்டிய வயிறும்... பார்ப்பவர்கள் மனதை உலுக்கி விடும்.
வலது கால் pant முட்டி வரைக்கும்... இடது காலில் pant.. தொடையில் இருந்து கிழிந்து தொங்கி இருக்கும்....
உள்ளங்கைகள் இரண்டையும் pant pocketல் விட்டு தூக்கி பிடித்தபடியே தான் ... நிற்கையில்.. நடக்கையில்... எப்போதும் இருப்பார். யாராவது சாப்பாடு வாங்கி கொடுத்தால் கூட தனது வலது கையை வெளியே எடுத்து சாப்பிடுவார். அப்போதும் இடது கை pant pocketல் தான் இருக்கும்....
ஒருவேளை... இரண்டு கைகளையும் வெளியே எடுத்து விட்டால்... அந்த pant கழன்று விழுந்து விடும் என்ற நிலை தான் காரணம் என்று நான் நினைப்பதுண்டு.
நான் சிறுவனாக இருந்தபோது மெட்ராஸ் தண்டையார் பேட்டையில் இரண்டு மூன்று பிச்சைக்காரர்களை பார்த்து இருக்கிறேன்.
என்னைப் போன்ற பெரும்பாலான சிறுவர்களுக்கு #பூச்சாண்டி என்றே சொல்லி இருந்தார்கள்.
ஒவ்வொரு பிச்சைக்காரர் பின்னாலும் ஒரு கதை பின்னப் பட்டு இருக்கும்.
*ஒரு காலத்துல பெரிய கோடீஸ்வரனாம்... சொந்தக்காரங்க எல்லாரும் இவனை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கிட்டு இவனை தெருவில் தள்ளிட்டாங்க...*
*ஒரு காலத்துல பெரிய படிப்பாளி இவன்... பெரிய பெரிய படிப்பு எல்லாம் படிச்சு இருக்கான்... நிறைய படிச்சு படிச்சு மூளை குழம்பிடுத்தாம்...*
இப்படி பல்வேறு வகையான கதைகளை கேட்டு இருக்கிறேன்.
இப்போது நான் சொல்லும் இந்த பெங்களூர் பிச்சைக்காரருக்கு அந்த மாதிரி எந்த பின்கதைகளும் கிடையாது.
நான்கு வருஷங்களுக்கு முன்பு.. நான் பெங்களூர் கொடிகேஹள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து வந்ததில் இருந்து இந்த பிச்சைக்காரரை பார்த்து வருகிறேன்.
அப்போது நான் தனியாக இருந்ததால் (என் மனைவி சென்னையில் வேலை பார்த்து கொண்டு இருந்தாள்)...
அடிக்கடி நான் செல்லும் ஒரு restaurant வாசலில் எப்போதும் நின்று கொண்டு இருப்பார் இந்த பிச்சைக்காரர்.
நானும் பலமுறை அவருக்கு பணம் தர முயற்சி செய்து இருக்கிறேன். ஆனால் அவர் வேண்டாம் என்று தலை ஆட்டி விடுவார். எவ்வளவு force பண்ணினாலும் பணம் வாங்க மாட்டார்.
எதாவது சாப்பிடுகிறீர்களா என்று கேட்டால்... மேலும் கீழும் தலையை ஆட்டுவார். வாய் திறந்து பேசியதில்லை.... இப்படியாக அவருக்கு பல தடவை சாப்பிட ஏதாவது வாங்கி தந்து இருக்கேன்.
2019 ஜனவரி மாதத்தில் ஒருநாள்... எனக்கு வேலை ஜாஸ்தி இருந்ததால் முடித்துவிட்டு...
இரவு 9.45 மணி நேரத்தில்... வீட்டுக்கு திரும்பி வரும் போது... சாலையில் இருந்த ஒரு தள்ளுவண்டி சிற்றுண்டி கடையின் பக்கத்தில் அந்த பிச்சைக்காரர் நின்று கொண்டு இருப்பதை பார்த்தேன்.
நான் அவரை பார்த்ததும் அவர் தன் இடது கையால் தன் வயிற்றில் தட்டி... சாப்பிட ஏதாவது வாங்கி கொடு.. என்பது போல்... அழுதுகொண்டே சைகை காட்டினார்.
நான் அந்த தள்ளுவண்டிகாரரை கேட்பதற்கு முன்பே... அந்த வண்டிக்காரன் தன்னிடம் இருந்த ஒரு கம்பினை எடுத்து அந்த பிச்சைக்காரரை அடித்து விரட்டினான்.
என்ன செய்வது என்று நான் முடிவு செய்வதற்கு முன்பே அந்த பிச்சைக்காரர்... அடியால் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் ஓடி விட்டார்.
நான் வீட்டுக்கு வந்து படுக்கைக்கு போகும் வரையில் மனதில் எந்தவித உறுத்தலும் இல்லை... ஆனால் படுத்ததில் இருந்து...
அந்த பிச்சைக்காரர் தன் வயிற்றில் அடித்து கொண்டு அழுத காட்சி மனதை விட்டு போக மாட்டேன் என்று அடம் பிடித்தது.
அந்த ஹோட்டல் கல்லாவில் இருந்தவரிடம் அந்த பிச்சைக்காரரை பற்றி கேட்டேன். அவரின் பதில் எனக்கு அதிர்ச்சியை தந்தது.
*"சார்... அந்த பிச்சைக்காரன் பைத்தியம் முத்தி போய்... நேத்திக்கு ராத்திரி... ஒரு தெரு நாயை அடித்து கொலை செய்து எரித்து இருக்கிறான் சார்... ஏதோ கெட்ட வாடை வருதேன்னு பார்த்த அக்கம்பக்கத்தினர் அவன் செய்த செய்கையை பார்த்து அவனை நல்லா அடிச்சு விரட்டிட்டாங்க சார்...
அவன் இனிமே இந்தபக்கம் வரவே மாட்டான் சார்... நீங்க வந்து சாப்பிடுங்க சார்..."*
எனக்கு பயங்கர ஷாக்... சாப்பிட பிடிக்காமல்... மெதுவாக நடந்தேன்... மனதின் கனம் தாங்க முடியவில்லை...
மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்... ஆனால் எனக்கு நன்றாக தெரியும்... பசி தாங்க முடியாமல் போய் தான்... அந்த பிச்சைக்காரர் ஒரு தெருநாயை சாப்பிட முயற்சி செய்து இருக்கிறார் என்று...
அன்றிலிருந்து இன்றுவரை பெங்களூரில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கே ஒரு பகுதி விடாமல் தேடி வருகிறேன்... என் கண்களில் அவர் படவே இல்லை..
இதோ தூங்குவதற்காக படுக்கைக்கு போகிறேன்.. இன்றைய இரவும் மிக நீண்டதாக இருக்கப்போகிறது. என் மனசாட்சியை எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை.
சரி... அதனை பார்த்து கொள்கிறேன்... இதனைப் படிக்கும் உங்களை மிகவும் வேண்டி கேட்பது என்னவென்றால்...
நான் மேலே சொன்ன அடையாளங்களோடு நீங்கள் இருக்கும் பகுதியில்... தெருவில்... யாரையாவது பார்த்தீர்கள் என்றால்... இந்த சீனியின் சார்பில் அவருக்கு ஏதாவது சாப்பிட வாங்கி தாருங்கள்... ப்ளீஸ் 🙏🙏🙏
Corporate workshopல் சொல்லப்படும் அம்மாளு அத்தைபாட்டியின் கதை
என்னுடைய சிறு பிராயத்தில் மெட்ராஸ் மைலாப்பூர் ஹாமில்டன் பிரிட்ஜ் அருகில் குடியிருந்த அம்மாளுவின் ஆத்துல ஒரு முறை சென்றிருந்த போது அவரிடம் "எப்படி அத்தை! இவ்ளோ பெரிய சமையலை சொடக்கு போடற நேரத்துல
போன வாரம் என்கள் வீட்டுக்கு போயிருந்தேன். என்னோட mobile phoneல battery lowவாக இருந்ததால் chargeல் போட்டு விட்டு பேரன் ஶ்ரீராமை அழைச்சுண்டு அவாத்து basementக்கு போய் அவன் செய்யும் குறும்புகளுக்கு ஈடு செய்ய முடியாமல் திண்டாடிக் கொண்டு இருந்தேன்.
அப்போது அந்த apartmentல இருக்கற liftல வராமல், படபடவென மாடிப்படி வழியாக முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு கோபத்துடன் வேர்த்து விறுவிறுக்க வந்தாள் என் மகள்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க... வரும்போதே, "ஏம்பா... senior citizen ஆன பிறகும் உனக்கு இதெல்லாம் தேவையா???
அம்மாவுக்கு துரோகம் செஞ்சா நீ நன்னாவே இருக்க மாட்டேபா!!!!" - படபடன்னு கோபத்தின் உச்சத்தில் என்னென்னவோ சொல்லிண்டே இருந்தாள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வழக்கம் போல திருதிருவென முழித்தேன்.
ஜெயாங்கறது யாருப்பா? ஒனக்கும் அவளுக்கும் எவ்வளவு நாளா பழக்கம்?
"இவ்வளவு வருஷமா இல்லாம இப்போ ஏன் திடீரென எழுதறீங்க?"
"சில சமயங்களில் ஒரே பாடல்களா share பண்றீங்க... ஆனால் திடீரென அமைதியாக இருக்கீங்க"
(whatsappல் என்னிடம் இருக்கும் பழைய தமிழ்/தெலுங்கு/இந்தி திரைப்பட பாடல்களை பகிர்வது வழக்கம்)
"ஒரு நாள் தமிழ் இலக்கியம் என்று சொல்லி எதையோ கதைக்கிறீர்கள். மறுநாள் பார்த்தால் ஜோக்ஸ் என்று உங்களையும் உங்கள் பாரியாளையும் பற்றி சொல்றீங்கள்" - இது ஒரு #சிரிலங்கா_தமிழ்_நண்பரின் வினா.
தனியாக கதை சொல்லி கொஞ்ச நாள் ஆகிவிட்டதோ? இதோ ஒரு கதை... அந்த கதை ஞாபகம் வந்ததன் பின்னணி....
போனவாரம் என் மனைவி எங்கள் பேரனிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். என் பேரனும் போய் குடிதண்ணீர் எடுத்து வராமல்
டம்ளரில் குழாய் தண்ணீரை பிடித்து கொண்டு வந்தான். அதை அப்படியே குடித்து விட்டு "சமத்துடா கொழந்த... அடுத்த வாட்டி யாராவது குடிக்க தண்ணீர் கேட்டால் அதோ அந்த குடத்தில் இருந்து தான் எடுத்து கொடுக்கணும். சரியா?" என்று சொன்னாள்.
இதைப் பார்த்து என் மகள், "ஏம்மா... அந்த தண்ணிய குடிச்ச?" என்று கொஞ்சம் கடிந்து கொண்டாள்.
"கொழந்த ஶ்ரீராம் எவ்வளவு பாசமா... ஆசையா கொண்டு வந்தான் தெரியுமா? அவனை disappoint பண்ணக்கூடாது. அதுக்கு தான் ஒண்ணும் சொல்லாமல் குடிச்சேன்" என்றாள்.