Kettyolaanu Ente Malakha  (2019)
'மனைவிதான் என் தேவதை'
இதுதான் இந்த படத்தோட தமிழ் பெயர். So called arranged marriageகளினால் (அதில் மட்டும்தானா?) புரிதல் இல்லாமல் நடக்கும் marital rapeஐ ஆணின் கண்ணோட்டத்தில் அணுகியிருக்கிறது. Image
அன்பற்ற பரஸ்பர புரிதலற்ற இணைதல் என்பது எப்போதுமே சேராக்கூடுதானே. காதல் திருமணத்தில் கூட புரிதலுக்கும் அனுபவத்திற்குமான வாய்ப்புகள் அதிகம். ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் அது மிகவும் கேள்விக்குறிதான்.வாழ்தல் என்பது மனமொன்றி சேர்தல்தானே. இந்த படத்தின் கரு இதுதான். Image
படத்தின் கதை ஒருபுறம் இருக்கட்டும். படத்தில் ஏராளமான விசயம் கொட்டிக்கிடக்கு. குடும்பங்களின் அந்நியோன்யம், இயற்கை, இயல்பான நடிப்பு. 'சிலீவச்சன் பெண் பார்க்க போகும்போது நடக்கும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சி' அதுதான் உண்மையான மாஸ். அப்டியே கேரளாக்கு போயிற்று வந்த மாதிரி இருக்கு. Image
The Great Indian Kitchen படத்தின் தாக்கம் நீங்குவதற்கு முன்பே இன்னுமொரு யதார்த்த சினிமா. ரொம்ப நாள் கிடப்பில் இருந்ததை இன்றுதான் பார்க்க முடிந்தது. மலையாள படங்களில் பின்னணி இசைகள் இல்லாமல் இயற்கை ஒலிகளுடனேயே பல படங்கள் வருது. காட்சிகளோட பார்க்கும் போது ரம்மியமாக இருக்கு. Image
சேட்டன்களை கண்டா கட்டி புடிச்சு முத்தம் குடுக்கணும். 'இந்த மாதிரியான கதைகளை எப்பிடித்தான் தேடிப்பிடிச்சு எடுகிறாங்களோ?'னு நினைக்கிறப்போதான், அவங்க தங்களோட அன்றாட வாழ்வியல்களில் இருந்து கதைகளை எடுக்கிறாங்கனு தோணிச்சு. தமிழிலும் இப்படியான படங்கள் நிறைய வரணும். Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மாஸ்டர்🍥

மாஸ்டர்🍥 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @peru_vaikkala

24 Jan
இயக்குனர் ராம் படங்களோட posters ஒவ்வொன்னையும் சேர்த்து வைக்கணும்னு நினைச்சேன். ஒவ்வொன்னுலேயும் ரொம்ப cute ஆன, யோசிக்கவைக்கிற விசயங்கள்னு பார்த்து பார்த்து செஞ்சிருப்பாங்க. அப்டியான எல்லாத்தையும் இந்த threadல சேர்த்துருக்கேன். படிச்சு பாருங்க நல்லா இருக்கும். Image
கற்றது தமிழ் படத்தோட இசை வெளியீட்டு விழா அழைப்பிதழின் முன் அட்டை. ImageImage
முதலாம் பக்கம்

போஸ்ட் ஆபிஸை பார்த்த உடனேதான்
எனக்கு லெட்டர் எழுதணும்னு தோணிச்சு!
இந்த உலகத்துல எனக்கு
உன்னை விட்டா
லெட்டர் எழுத வேற யாரு இருக்கா?

You are a divine piece of god, ஆனந்தி Image
Read 24 tweets
24 Jan
தளபதி விஜய் ❤️
நான்லாம் சின்ன வயசுல இருந்தே புதுசா யாரோடையாச்சும் friend ஆகி பேசுறதுக்கு எல்லாம் ரொம்ப கஷ்டப்படுவேன், வீட்ல என் comfort zoneல இருக்கிற மாதிரி என்னால வெளி இடங்களில இருக்க முடியிறதில்லை. வீட்ல எவ்ளோ ஜாலியா இருப்பேனோ அதுக்கு oppositeஆ வெளிய ரொம்ப அமைதி. Image
நம்மளை மாதிரியே ஒருத்தர் இருந்தா டக்குன்னு அவரை புடிச்சிரும்ல. அப்பிடித்தான் எனக்கு தளபதியை புடிக்கும் என்றதுக்கு ஒரு காரணம். எங்க வீட்ல எல்லாருமே விஜய் fanதான். மற்ற நடிகர்கள் படங்களை விட விஜய் படத்துக்கு தியேட்டர் போறதுனா மட்டும் வீட்ல no சொல்ல மாட்டாங்க. Image
சன் TVல எத்தனை தடவை சுறா, வேட்டைக்காரன் படம் போட்டாலும் அம்மாவும் அப்பாவும் பார்ப்பாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு விஜய் புடிக்கும். அவங்களுக்கு விஜயும் ஒரு புள்ளை மாதிரித்தான். Image
Read 9 tweets
23 Jan
Chola (2019)
இந்த படம் நீங்க இன்னும் பார்க்கலனா இந்த threadஐ skip பண்ணிடுங்க. Chola படத்தில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் இருந்ததால் யாராச்சும் விரிவான விமர்சனம் எழுதி இருக்காங்களானு தேடி பார்த்ததில் Vengadesh Srinivasagamன் முகநூல் விமர்சனம் கண்ணில்பட்டது. Image
பின் இரண்டாம் தடவை Chola படத்தை பார்த்த போது, அதில் இன்னொரு கோணமும் இருப்பதாக தோன்றியது. வெங்கடேஷ் எழுதியதையும், நான் புரிந்து கொண்டதையும் சேர்த்து எழுதியிருக்கிறேன். பிழை இருந்தால் பொறுத்தருள்க. உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.
படம் துவங்கும்போது திரையில் இருட்டில் ஒரு விளக்கின் சுடர். பின்னணியில் ஒரு பாட்டி, தன் பேத்தி சிறுமி “உம்” கொட்ட கதை ஒன்று சொல்லிக் கொண்டிருக்கிறார். குரல்கள் மட்டும். கதையின் அந்த இரண்டரை நிமிடங்கள் திரையில் இருளில் சுடரின் ஒளி மட்டும்தான். Image
Read 15 tweets
22 Jan
Chola (2019)
மூன்றே மூன்று கதாபாத்திரத்தை மட்டும் வச்சு மிரட்டிட்டானுங்க. Joseph (2018) புகழ் Joju George மற்றும் Nimisha Sajayan உம் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்காங்க. Locationsலாம் என்னமா இருக்கு. பச்சைப்பசேல் என்று மலையும், பனிக்காற்றும், சாரல் மழையும் ரொம்ப அழகா இருக்கு. Image
இதை பார்த்தப்போ Kim Ki-dukஇன் படங்களின் loctions உம் கதைகளும்தான் ஞாபகம் வருது.
Psychological thriller. Kim Ki-duk இன் படங்கள் மாதிரியே மனசை உலுக்கும் கதைக்களம். மலையாள சினிமா என்ற தளத்தில் இருந்து உலக சினிமாவாக உயர்ந்து நிற்கிறது. Highly recommended.
SPOILERS ALERT🔥. Image
"வீரமும் அழகும் உள்ள ஒரு ராஜகுமாரனுக்கு ரத்தத்தை பார்த்தால் பயம். 'யாரும் போகாத காட்டிலே யாரும் காணாத கன்னியின் கையிலே புதையல் இருக்கும். அதை எடுத்தால் பயம் போய்விடும்' என்று ராஜகுரு சொல்ல ராஜகுமாரன் அந்த பெண்ணை தேடி கண்டுபிடிக்கிறான். Image
Read 7 tweets
21 Jan
மயிலன் ஜி சின்னப்பனின் "பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத மருத்துவ உலகம் குறித்த வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறது.
ஒரு தற்கொலையில் தொடங்கும் கதை, அந்த தற்கொலைப் பற்றியும் அதற்கு காரணம் என்ன என்பதையும் தேடும் நண்பன் என்று கதை நகர்கிறது.
'பிரபாகர் சூசைட் பண்ணிக்கிட்டான்டா' என ஆரம்பிக்கும் நாவல், பிரபாகரனின் தற்கொலைக்கான காரணத்தை அவனின் நண்பன் துப்பறிவது போல கதை செல்கிறது. Rashomon effect போல சதாசிவம், நாஸியா, மணி,பாஸ்கர், பிரபாகரனின் அப்பா, அன்வர், லீமா, மயில்சாமி என ஒவ்வொருவர் பார்வையிலும் கதை நகர்கிறது.
கதை மேலோட்டமாக இல்லாமல் தத்துவார்த்தமான விசயங்களையும் அலசுகிறது. உண்மையில், ஒரு தற்கொலை என்பது மரணிப்பவர்களுக்குப் பூரண விடுதலையைத் தந்து விடுவது இல்லை. மரணித்தவனை அதுவரைத் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் தங்கள் நினைவுகளின் வழியாக ஏதோ ஒருவிதத்தில் அவனைப் பின்தொடரவே செய்கிறார்கள்.
Read 4 tweets
21 Jan
Paatal Lok (2020)
சாதாரண காவல் அதிகாரி ஹதிராம் சௌத்ரிக்கு அவர் கனவிலும் எதிர்பார்த்திராத ஒரு வழக்கு விசாரணை செய்வதற்கு வழங்கப்படுகிறது. அதில் வெற்றிபெற்றால், வீட்டிலும் வேலை இடத்திலும் மற்றவர்களின் ஏளனப்பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். பதவி உயர்வும் கிடைக்கும்.
சஞ்சீவ் மெஹ்ரா நியூஸ் சேனல் ஒன்றில் ப்ரைம் டைம் ஷோ நடத்துகிறார் . அவரைக் கொல்ல நான்கு நபர்கள் திட்டமிடுகிறார்கள். இதைப் பற்றி விசாரிக்கும் அதிகாரிதான் ஹதிராம் சௌத்ரி. இவர்களையும், இவர் சார்ந்த அந்த சிஸ்டத்தையும் அலசுகிறது `Paatal Lok'.
இந்தச் சமூக அடுக்கில் வெவ்வேறு நிலையில் இருக்கும் வெவ்வேறு மனிதர்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிய அவர்களது வாழ்க்கைச் சூழல் என ஒவ்வொரு எபிசோட்டிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஹதிராம் சௌத்ரியாக ஜெய்தீப் நடித்திருக்கிறார். விஸ்வரூபம் படத்தில் சலீமா வருபவர்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!