Chola (2019)
இந்த படம் நீங்க இன்னும் பார்க்கலனா இந்த threadஐ skip பண்ணிடுங்க. Chola படத்தில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் இருந்ததால் யாராச்சும் விரிவான விமர்சனம் எழுதி இருக்காங்களானு தேடி பார்த்ததில் Vengadesh Srinivasagamன் முகநூல் விமர்சனம் கண்ணில்பட்டது.
பின் இரண்டாம் தடவை Chola படத்தை பார்த்த போது, அதில் இன்னொரு கோணமும் இருப்பதாக தோன்றியது. வெங்கடேஷ் எழுதியதையும், நான் புரிந்து கொண்டதையும் சேர்த்து எழுதியிருக்கிறேன். பிழை இருந்தால் பொறுத்தருள்க. உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.
படம் துவங்கும்போது திரையில் இருட்டில் ஒரு விளக்கின் சுடர். பின்னணியில் ஒரு பாட்டி, தன் பேத்தி சிறுமி “உம்” கொட்ட கதை ஒன்று சொல்லிக் கொண்டிருக்கிறார். குரல்கள் மட்டும். கதையின் அந்த இரண்டரை நிமிடங்கள் திரையில் இருளில் சுடரின் ஒளி மட்டும்தான்.
படத்தின் இறுதிக் காட்சியில் மீண்டும் பின்னணியில் சிறுமியின் குரல் “அப்புறம்?” என்று கேட்க,
“அப்புறம், அந்த கன்னி, பூமி கிட்ட “நான் யாரு? நான் யாருக்குச் சொந்தம்?” என்று கேட்க, பூமி கன்னியோட அந்தக் கேள்வியைக் கேட்டதும் பதில் சொல்லமுடியாம நடுங்கிப் போச்சு”
இதில் இருந்து அந்த கன்னியிடம் இருக்கும் யாரும் தொடாத போக்கிஷம் கற்பு என்று கொள்வோம். இப்போ கதையை மீண்டும் படித்தால் அதன் சாரம் புரியும். Virginityயை பொக்கிஷமா/புனிதமா romanticise செய்திருக்கிறது புரியும். பூமி ஏன் பதில் சொல்ல முடியாமல் போனது என்று புரியும்.
அதன் பிறகு படம் ஆரம்பிக்கிறது.
படத்தில் 3 கதாபாத்திரங்கள் 1. சின்ன சின்ன விசயங்களுக்கும் பயப்படும் பாடசாலைக்கு செல்லும் பெண். 2. தன்னிச்சையாக செயல்பட திராணி இல்லாத அப்பெண்ணின் காதலன். 3. தன்னிச்சையாக செயல்படக்கூடிய, ஆண்மை பொருந்திய ஆண் (காதலனின் Boss)
காதலன் திரும்பி வந்த போது கட்டிலில் ரத்தக்கறை இருப்பதை பார்க்கிறான். ரத்தக்கறைக்கான காரணங்களாக, 1. ஜானு முதலாளியால் பலாத்காரத்திற்க்கு ஆளாகியிருகிறாள். 2. ஜானுவிற்க்கு மாதவிடாய்/
இரத்தக்கறை முன்னரே இருந்திருக்கலாம்.
முதலாவது perspectiveல் கதை சொல்படுகிறது என்றால் இந்தப்படம் ஆணாதிக்க சமூகத்தின் கோர முகத்தை காட்டுகிறது எனலாம். ஆரம்பம் முதல் அதற்கான குறியீடுகளை காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
காதலினால் ஒருத்தியை கவர நினைக்கும் ஒரு ஆண், தன் பலம் கொண்டு ஒருத்தியை தன் வசப்படுத்திய இன்னொரு ஆண்.
கழிப்பறை கிறுக்கல்கள், கவர்ச்சி நடனம், விலைமகள் என ஆணாதிக்கத்தின் எச்சங்களை ஆங்காங்கே காட்டியிருப்பார்கள். இதன் பிறகு நிகழும் அனைத்தும் நம் சமுதாயத்தின் பிரதிபலிப்பு.
பெண்களை அன்பினால் அடிமைப்படுத்தல், அதிகாரத்தினால்/ பலத்தினால் அடிமைப்படுத்தல். இந்த அடிமைப்படுத்தல்களை புரிந்துகொள்ளாமல் அதற்கு பணிந்து போகிறார்கள். அடிமை படுத்தியவனிடமே மீண்டும் சரணடைகிறார்கள். Stockholm syndrome (கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்/கணவனே கண்கண்ட தெய்வம்/af)
அதைத்தான் இந்த படம் sympolise செய்திருக்கிறது. ஏற்கனவே உள்ளதை extreme level இல் மனதை உலுக்குவது போல இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இனி இரண்டாவது perspective. எல்லோருக்கும் தெரிந்த கதை.
இராமாயணக்கதை. "ஏன் ஜானகி என்று அந்த பெண்ணுக்கு பெயர் வைத்திருக்கிறார்?"
3 கதாபாத்திரங்களையும் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.
1.ஜானகி(சீதை)
2.இராமன்
3.இராவணன்
இப்போ பாத்திர வடிவமைப்பு புரிந்திருக்கும். இராமாயணத்தில் கற்பு தொடர்பான பிம்பத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
இரத்தக்கறையை பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்கும் காதலன், தீர விசாரிக்காமல் முதலாளியிடம் ஏன் இப்படி நடந்துகொண்டாய் என்று கேள்வி எழுப்புகிறான். அவளை ஊருக்கு அழைத்து செல்ல கேட்கிறான். சந்தேகத்தோடு இருப்பவனோடு எப்படி செல்வது. அவன் ஊரில் என்ன சொல்வானோ?
ஜானகி இராவணனோடே வீடு செல்ல நினைக்கிறாள். சந்தேக இராமனோடு அல்ல. (இராமாயணத்தில் சீதை தன்னை நிரூபிக்க நெருப்பில் இறங்குகிறாள்) மீண்டும் பாட்டியின் கதையை படித்து பாருங்கள். படம் சொல்வது புரியும். கற்பு என்று எதுவுமே இல்லை. அது யாருக்கும் சொந்தமும் இல்லை.
இது என் புரிதல், தவறா இருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏. உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இயக்குனர் ராம் படங்களோட posters ஒவ்வொன்னையும் சேர்த்து வைக்கணும்னு நினைச்சேன். ஒவ்வொன்னுலேயும் ரொம்ப cute ஆன, யோசிக்கவைக்கிற விசயங்கள்னு பார்த்து பார்த்து செஞ்சிருப்பாங்க. அப்டியான எல்லாத்தையும் இந்த threadல சேர்த்துருக்கேன். படிச்சு பாருங்க நல்லா இருக்கும்.
கற்றது தமிழ் படத்தோட இசை வெளியீட்டு விழா அழைப்பிதழின் முன் அட்டை.
முதலாம் பக்கம்
போஸ்ட் ஆபிஸை பார்த்த உடனேதான்
எனக்கு லெட்டர் எழுதணும்னு தோணிச்சு!
இந்த உலகத்துல எனக்கு
உன்னை விட்டா
லெட்டர் எழுத வேற யாரு இருக்கா?
தளபதி விஜய் ❤️
நான்லாம் சின்ன வயசுல இருந்தே புதுசா யாரோடையாச்சும் friend ஆகி பேசுறதுக்கு எல்லாம் ரொம்ப கஷ்டப்படுவேன், வீட்ல என் comfort zoneல இருக்கிற மாதிரி என்னால வெளி இடங்களில இருக்க முடியிறதில்லை. வீட்ல எவ்ளோ ஜாலியா இருப்பேனோ அதுக்கு oppositeஆ வெளிய ரொம்ப அமைதி.
நம்மளை மாதிரியே ஒருத்தர் இருந்தா டக்குன்னு அவரை புடிச்சிரும்ல. அப்பிடித்தான் எனக்கு தளபதியை புடிக்கும் என்றதுக்கு ஒரு காரணம். எங்க வீட்ல எல்லாருமே விஜய் fanதான். மற்ற நடிகர்கள் படங்களை விட விஜய் படத்துக்கு தியேட்டர் போறதுனா மட்டும் வீட்ல no சொல்ல மாட்டாங்க.
சன் TVல எத்தனை தடவை சுறா, வேட்டைக்காரன் படம் போட்டாலும் அம்மாவும் அப்பாவும் பார்ப்பாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு விஜய் புடிக்கும். அவங்களுக்கு விஜயும் ஒரு புள்ளை மாதிரித்தான்.
Chola (2019)
மூன்றே மூன்று கதாபாத்திரத்தை மட்டும் வச்சு மிரட்டிட்டானுங்க. Joseph (2018) புகழ் Joju George மற்றும் Nimisha Sajayan உம் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்காங்க. Locationsலாம் என்னமா இருக்கு. பச்சைப்பசேல் என்று மலையும், பனிக்காற்றும், சாரல் மழையும் ரொம்ப அழகா இருக்கு.
இதை பார்த்தப்போ Kim Ki-dukஇன் படங்களின் loctions உம் கதைகளும்தான் ஞாபகம் வருது.
Psychological thriller. Kim Ki-duk இன் படங்கள் மாதிரியே மனசை உலுக்கும் கதைக்களம். மலையாள சினிமா என்ற தளத்தில் இருந்து உலக சினிமாவாக உயர்ந்து நிற்கிறது. Highly recommended.
SPOILERS ALERT🔥.
"வீரமும் அழகும் உள்ள ஒரு ராஜகுமாரனுக்கு ரத்தத்தை பார்த்தால் பயம். 'யாரும் போகாத காட்டிலே யாரும் காணாத கன்னியின் கையிலே புதையல் இருக்கும். அதை எடுத்தால் பயம் போய்விடும்' என்று ராஜகுரு சொல்ல ராஜகுமாரன் அந்த பெண்ணை தேடி கண்டுபிடிக்கிறான்.
Kettyolaanu Ente Malakha (2019)
'மனைவிதான் என் தேவதை'
இதுதான் இந்த படத்தோட தமிழ் பெயர். So called arranged marriageகளினால் (அதில் மட்டும்தானா?) புரிதல் இல்லாமல் நடக்கும் marital rapeஐ ஆணின் கண்ணோட்டத்தில் அணுகியிருக்கிறது.
அன்பற்ற பரஸ்பர புரிதலற்ற இணைதல் என்பது எப்போதுமே சேராக்கூடுதானே. காதல் திருமணத்தில் கூட புரிதலுக்கும் அனுபவத்திற்குமான வாய்ப்புகள் அதிகம். ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் அது மிகவும் கேள்விக்குறிதான்.வாழ்தல் என்பது மனமொன்றி சேர்தல்தானே. இந்த படத்தின் கரு இதுதான்.
படத்தின் கதை ஒருபுறம் இருக்கட்டும். படத்தில் ஏராளமான விசயம் கொட்டிக்கிடக்கு. குடும்பங்களின் அந்நியோன்யம், இயற்கை, இயல்பான நடிப்பு. 'சிலீவச்சன் பெண் பார்க்க போகும்போது நடக்கும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சி' அதுதான் உண்மையான மாஸ். அப்டியே கேரளாக்கு போயிற்று வந்த மாதிரி இருக்கு.
மயிலன் ஜி சின்னப்பனின் "பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத மருத்துவ உலகம் குறித்த வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறது.
ஒரு தற்கொலையில் தொடங்கும் கதை, அந்த தற்கொலைப் பற்றியும் அதற்கு காரணம் என்ன என்பதையும் தேடும் நண்பன் என்று கதை நகர்கிறது.
'பிரபாகர் சூசைட் பண்ணிக்கிட்டான்டா' என ஆரம்பிக்கும் நாவல், பிரபாகரனின் தற்கொலைக்கான காரணத்தை அவனின் நண்பன் துப்பறிவது போல கதை செல்கிறது. Rashomon effect போல சதாசிவம், நாஸியா, மணி,பாஸ்கர், பிரபாகரனின் அப்பா, அன்வர், லீமா, மயில்சாமி என ஒவ்வொருவர் பார்வையிலும் கதை நகர்கிறது.
கதை மேலோட்டமாக இல்லாமல் தத்துவார்த்தமான விசயங்களையும் அலசுகிறது. உண்மையில், ஒரு தற்கொலை என்பது மரணிப்பவர்களுக்குப் பூரண விடுதலையைத் தந்து விடுவது இல்லை. மரணித்தவனை அதுவரைத் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் தங்கள் நினைவுகளின் வழியாக ஏதோ ஒருவிதத்தில் அவனைப் பின்தொடரவே செய்கிறார்கள்.
Paatal Lok (2020)
சாதாரண காவல் அதிகாரி ஹதிராம் சௌத்ரிக்கு அவர் கனவிலும் எதிர்பார்த்திராத ஒரு வழக்கு விசாரணை செய்வதற்கு வழங்கப்படுகிறது. அதில் வெற்றிபெற்றால், வீட்டிலும் வேலை இடத்திலும் மற்றவர்களின் ஏளனப்பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். பதவி உயர்வும் கிடைக்கும்.
சஞ்சீவ் மெஹ்ரா நியூஸ் சேனல் ஒன்றில் ப்ரைம் டைம் ஷோ நடத்துகிறார் . அவரைக் கொல்ல நான்கு நபர்கள் திட்டமிடுகிறார்கள். இதைப் பற்றி விசாரிக்கும் அதிகாரிதான் ஹதிராம் சௌத்ரி. இவர்களையும், இவர் சார்ந்த அந்த சிஸ்டத்தையும் அலசுகிறது `Paatal Lok'.
இந்தச் சமூக அடுக்கில் வெவ்வேறு நிலையில் இருக்கும் வெவ்வேறு மனிதர்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிய அவர்களது வாழ்க்கைச் சூழல் என ஒவ்வொரு எபிசோட்டிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஹதிராம் சௌத்ரியாக ஜெய்தீப் நடித்திருக்கிறார். விஸ்வரூபம் படத்தில் சலீமா வருபவர்.