தளபதி விஜய் ❤️
நான்லாம் சின்ன வயசுல இருந்தே புதுசா யாரோடையாச்சும் friend ஆகி பேசுறதுக்கு எல்லாம் ரொம்ப கஷ்டப்படுவேன், வீட்ல என் comfort zoneல இருக்கிற மாதிரி என்னால வெளி இடங்களில இருக்க முடியிறதில்லை. வீட்ல எவ்ளோ ஜாலியா இருப்பேனோ அதுக்கு oppositeஆ வெளிய ரொம்ப அமைதி.
நம்மளை மாதிரியே ஒருத்தர் இருந்தா டக்குன்னு அவரை புடிச்சிரும்ல. அப்பிடித்தான் எனக்கு தளபதியை புடிக்கும் என்றதுக்கு ஒரு காரணம். எங்க வீட்ல எல்லாருமே விஜய் fanதான். மற்ற நடிகர்கள் படங்களை விட விஜய் படத்துக்கு தியேட்டர் போறதுனா மட்டும் வீட்ல no சொல்ல மாட்டாங்க.
சன் TVல எத்தனை தடவை சுறா, வேட்டைக்காரன் படம் போட்டாலும் அம்மாவும் அப்பாவும் பார்ப்பாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு விஜய் புடிக்கும். அவங்களுக்கு விஜயும் ஒரு புள்ளை மாதிரித்தான்.
ஜில்லா படத்துல காஜல் பிருஷ்டத்தை அமுக்குறது, புலி படத்துல double meaning dialoges எல்லாம் வந்தப்போ, வீட்ல நான் தப்பு பண்ணா எப்டி திட்டுவிழுமோ அதே அளவுக்கு விஜய்க்கு திட்டு விழுந்திச்சு. மாஸ்டர்ல தண்ணி அடிக்கிற scene வந்தப்போ, 'அந்த தம்பி இப்டி எல்லாம் பண்ண மாட்டுதே'னு சொன்னாங்க.
அப்புறம் 'குடிக்காதீங்கடானு' advice பண்ணுற scene வந்தப்போதான் அவங்களுக்கு நிம்மதி. விஜய் political correctnessல ரொம்ப conciousஆ இருக்கணும், இருப்பாருன்னுதான் நினைக்கிறேன். அவருக்குன்னு moral responsibility நிறைய இருக்கு
இதெல்லாம் ஒரு நடிகனிடம் ஏன் எதிர்பார்க்கணும்னு நீங்க கேட்கலாம். ஆனா விஜயை அதையெல்லாம் தாண்டி குடும்பத்துல ஒருத்தனா நினைக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. அண்ணா தப்பு பண்ணுறதை பார்த்து கெட்டுப்போற தம்பிங்க ஒவ்வொரு குடும்பத்துலேயும் இருப்பாங்க.
ஒவ்வொரு படங்களினதும் இசை வெளியீட்டு விழாக்களில விஜய் பேசியவற்றின் links இதுல இணைச்சிருக்கேன். ஒவ்வொன்னா பாருங்க விஜய் என்ற தனி மனுசனோட transformation புரியும். "ஒண்ணுமே இல்ல நீ" என்றதுல இருந்து ஒரு brandஆ எப்டி வளர்ந்திருக்காருன்னு. Introvert to extrovert
▪️Master
▪️பிகில்
▪️சர்கார்
▪️மெர்சல்
▪️தெறி
▪️புலி
▪️கத்தி
▪️ஜில்லா
▪️தலைவா
▪️துப்பாக்கி
▪️நண்பன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இயக்குனர் ராம் படங்களோட posters ஒவ்வொன்னையும் சேர்த்து வைக்கணும்னு நினைச்சேன். ஒவ்வொன்னுலேயும் ரொம்ப cute ஆன, யோசிக்கவைக்கிற விசயங்கள்னு பார்த்து பார்த்து செஞ்சிருப்பாங்க. அப்டியான எல்லாத்தையும் இந்த threadல சேர்த்துருக்கேன். படிச்சு பாருங்க நல்லா இருக்கும்.
கற்றது தமிழ் படத்தோட இசை வெளியீட்டு விழா அழைப்பிதழின் முன் அட்டை.
முதலாம் பக்கம்
போஸ்ட் ஆபிஸை பார்த்த உடனேதான்
எனக்கு லெட்டர் எழுதணும்னு தோணிச்சு!
இந்த உலகத்துல எனக்கு
உன்னை விட்டா
லெட்டர் எழுத வேற யாரு இருக்கா?
Chola (2019)
இந்த படம் நீங்க இன்னும் பார்க்கலனா இந்த threadஐ skip பண்ணிடுங்க. Chola படத்தில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் இருந்ததால் யாராச்சும் விரிவான விமர்சனம் எழுதி இருக்காங்களானு தேடி பார்த்ததில் Vengadesh Srinivasagamன் முகநூல் விமர்சனம் கண்ணில்பட்டது.
பின் இரண்டாம் தடவை Chola படத்தை பார்த்த போது, அதில் இன்னொரு கோணமும் இருப்பதாக தோன்றியது. வெங்கடேஷ் எழுதியதையும், நான் புரிந்து கொண்டதையும் சேர்த்து எழுதியிருக்கிறேன். பிழை இருந்தால் பொறுத்தருள்க. உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.
படம் துவங்கும்போது திரையில் இருட்டில் ஒரு விளக்கின் சுடர். பின்னணியில் ஒரு பாட்டி, தன் பேத்தி சிறுமி “உம்” கொட்ட கதை ஒன்று சொல்லிக் கொண்டிருக்கிறார். குரல்கள் மட்டும். கதையின் அந்த இரண்டரை நிமிடங்கள் திரையில் இருளில் சுடரின் ஒளி மட்டும்தான்.
Chola (2019)
மூன்றே மூன்று கதாபாத்திரத்தை மட்டும் வச்சு மிரட்டிட்டானுங்க. Joseph (2018) புகழ் Joju George மற்றும் Nimisha Sajayan உம் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்காங்க. Locationsலாம் என்னமா இருக்கு. பச்சைப்பசேல் என்று மலையும், பனிக்காற்றும், சாரல் மழையும் ரொம்ப அழகா இருக்கு.
இதை பார்த்தப்போ Kim Ki-dukஇன் படங்களின் loctions உம் கதைகளும்தான் ஞாபகம் வருது.
Psychological thriller. Kim Ki-duk இன் படங்கள் மாதிரியே மனசை உலுக்கும் கதைக்களம். மலையாள சினிமா என்ற தளத்தில் இருந்து உலக சினிமாவாக உயர்ந்து நிற்கிறது. Highly recommended.
SPOILERS ALERT🔥.
"வீரமும் அழகும் உள்ள ஒரு ராஜகுமாரனுக்கு ரத்தத்தை பார்த்தால் பயம். 'யாரும் போகாத காட்டிலே யாரும் காணாத கன்னியின் கையிலே புதையல் இருக்கும். அதை எடுத்தால் பயம் போய்விடும்' என்று ராஜகுரு சொல்ல ராஜகுமாரன் அந்த பெண்ணை தேடி கண்டுபிடிக்கிறான்.
Kettyolaanu Ente Malakha (2019)
'மனைவிதான் என் தேவதை'
இதுதான் இந்த படத்தோட தமிழ் பெயர். So called arranged marriageகளினால் (அதில் மட்டும்தானா?) புரிதல் இல்லாமல் நடக்கும் marital rapeஐ ஆணின் கண்ணோட்டத்தில் அணுகியிருக்கிறது.
அன்பற்ற பரஸ்பர புரிதலற்ற இணைதல் என்பது எப்போதுமே சேராக்கூடுதானே. காதல் திருமணத்தில் கூட புரிதலுக்கும் அனுபவத்திற்குமான வாய்ப்புகள் அதிகம். ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் அது மிகவும் கேள்விக்குறிதான்.வாழ்தல் என்பது மனமொன்றி சேர்தல்தானே. இந்த படத்தின் கரு இதுதான்.
படத்தின் கதை ஒருபுறம் இருக்கட்டும். படத்தில் ஏராளமான விசயம் கொட்டிக்கிடக்கு. குடும்பங்களின் அந்நியோன்யம், இயற்கை, இயல்பான நடிப்பு. 'சிலீவச்சன் பெண் பார்க்க போகும்போது நடக்கும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சி' அதுதான் உண்மையான மாஸ். அப்டியே கேரளாக்கு போயிற்று வந்த மாதிரி இருக்கு.
மயிலன் ஜி சின்னப்பனின் "பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத மருத்துவ உலகம் குறித்த வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறது.
ஒரு தற்கொலையில் தொடங்கும் கதை, அந்த தற்கொலைப் பற்றியும் அதற்கு காரணம் என்ன என்பதையும் தேடும் நண்பன் என்று கதை நகர்கிறது.
'பிரபாகர் சூசைட் பண்ணிக்கிட்டான்டா' என ஆரம்பிக்கும் நாவல், பிரபாகரனின் தற்கொலைக்கான காரணத்தை அவனின் நண்பன் துப்பறிவது போல கதை செல்கிறது. Rashomon effect போல சதாசிவம், நாஸியா, மணி,பாஸ்கர், பிரபாகரனின் அப்பா, அன்வர், லீமா, மயில்சாமி என ஒவ்வொருவர் பார்வையிலும் கதை நகர்கிறது.
கதை மேலோட்டமாக இல்லாமல் தத்துவார்த்தமான விசயங்களையும் அலசுகிறது. உண்மையில், ஒரு தற்கொலை என்பது மரணிப்பவர்களுக்குப் பூரண விடுதலையைத் தந்து விடுவது இல்லை. மரணித்தவனை அதுவரைத் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் தங்கள் நினைவுகளின் வழியாக ஏதோ ஒருவிதத்தில் அவனைப் பின்தொடரவே செய்கிறார்கள்.
Paatal Lok (2020)
சாதாரண காவல் அதிகாரி ஹதிராம் சௌத்ரிக்கு அவர் கனவிலும் எதிர்பார்த்திராத ஒரு வழக்கு விசாரணை செய்வதற்கு வழங்கப்படுகிறது. அதில் வெற்றிபெற்றால், வீட்டிலும் வேலை இடத்திலும் மற்றவர்களின் ஏளனப்பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். பதவி உயர்வும் கிடைக்கும்.
சஞ்சீவ் மெஹ்ரா நியூஸ் சேனல் ஒன்றில் ப்ரைம் டைம் ஷோ நடத்துகிறார் . அவரைக் கொல்ல நான்கு நபர்கள் திட்டமிடுகிறார்கள். இதைப் பற்றி விசாரிக்கும் அதிகாரிதான் ஹதிராம் சௌத்ரி. இவர்களையும், இவர் சார்ந்த அந்த சிஸ்டத்தையும் அலசுகிறது `Paatal Lok'.
இந்தச் சமூக அடுக்கில் வெவ்வேறு நிலையில் இருக்கும் வெவ்வேறு மனிதர்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிய அவர்களது வாழ்க்கைச் சூழல் என ஒவ்வொரு எபிசோட்டிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஹதிராம் சௌத்ரியாக ஜெய்தீப் நடித்திருக்கிறார். விஸ்வரூபம் படத்தில் சலீமா வருபவர்.