#குபேரன் நான்முகனின் மகன் புலஸ்திய முனிவருக்கு பிறந்தவர் விச்ரவசு. அவருக்கு இரண்டு மனைவிகள், அதில் மூத்த மனைவிக்குப் பிறந்தவர்தான் குபேரன். அப்போது அவரின் பெயர் வைஸ்ரவணன். இளையவளான கேகசிக்கு பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை. ஆரம்பத்தில் இலங்கையை வைஸ்ரவணன்
ஆண்டு வந்தார். ராவணன் தவம் இயற்றி வரங்கள் பல பெற்றதும், வைஸ்ரவணனைத் தோற்கடித்துவிட்டு, ஆட்சியை அபகரித்துக் கொண்டான். நாடிழந்த வைஸ்ரவணன் ஒரு தவசியாக நாடு தோறும் அலைந்து கொண்டிருந்தார். அவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் தாய், தந்தையர் விரும்பினார்கள். அதன்படி பெண் தேடவும்
தொடங்கினார்கள். ஆனால், எந்தப் பெண்ணையும் வைஸ்ரவணனுக்கு பிடிக்கவில்லை. பேரழகாகவும் குணவதியாகவும் இருக்கும் பெண்ணைத் தேடி நாடெங்கும் சுற்றிவரத் தொடங்கினார். சிவபெருமானின் மீது மாளாத பக்திகொண்ட குபேரன், சிவாலயம் தோறும் சென்று அழகிய பெண் வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். நாளடைவில் பல
தலங்களில் தங்கியிருந்து தவம் இயற்றவும் செய்தார். இப்படி ஊர் ஊராகச் சுற்றிவரும் வேளையில், இறுதியாக காசி மாநகருக்கு வந்து சேர்ந்தார் வைஸ்ரவணன். அந்த நகரின் அமைதியையும் பெருமையையும் கண்ட அவர் அங்கேயே தங்கிவிட்டார். அகில உலகத்துக்கும் நாயகனான விஸ்வநாதரைக் கண்டதும் தனது வாழ்வின்
அர்த்தமே விஸ்வநாதரை துதிப்பதுதான் என முடிவெடுத்து பெண் தேடி வந்த நோக்கத்தையும் மறந்து சிவ தியானத்தில் மூழ்கினார். எண்ணூறு ஆண்டுகளைக் கடந்த தவம் என்கிறது புராணம். அத்தனை ஆண்டுகளாக, எந்த நோக்கமும் இன்றி, பல இடையூறுகளைத் தாண்டி வைஸ்ரவணனின் தவம் தொடர்ந்தது. எதற்காகத் தவம் செய்கிறார்
என்ற காரணமே தெரியாமல் தேவர்களும் குழம்பினர். ஆனாலும் அவருக்கு இடையூறு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டனர். காலம் செல்லச் செல்ல அவரின் தவத்தின் பயனாக எழுந்த அக்னிச் சூடு கயிலாயத்தையும் தொட்டது. பரம்பொருளான ஈசன் இனியும் தாமதிக்கக் கூடாது என வைஸ்ரவணனுக்கு அருள்புரியக் கிளம்பினார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தவசியைக் காண விரும்புகிறேன் என்று கூறி அன்னை உமாதேவியும் சிவனோடு கிளம்பினார். கடும் தவம் இயற்றிய வைஸ்ரவணன் முன்பு தோன்றிய சிவனும் பார்வதியும் அவரை அன்பு கனிய அழைத்தனர். அம்மையப்பரின் குரல் கேட்டு தவத்தில் இருந்து விடுபட்டார். இழந்துபோன இலங்கைக்கு
பதிலாக அவருக்கு அழகாபுரி பட்டணத்தையே சிவன் உருவாக்கித் தந்தார். உலகத்து நிதிகளை எல்லாம் அவரிடம் ஒப்படைத்து, அவரை `குபேரன்’ என்ற பெயரோடு விளங்கச் செய்தார். வடக்கு திசைக்கு அவரை அதிபதியாக்கி, அஷ்ட திக் பாலகர்களில் ஒருவராக்கினார். செல்வத்தின் அதிபதியான திருமகளுக்கு துணையாக குபேரனை
நியமித்தார் சிவன். சித்திரரேகை எனும் மங்கையை மணமுடித்துத் தந்து அவரை ஆசீர்வதித்தார். சிவபெருமானுக்குப் பிரியமான நண்பனாக குபேரன் மாறினார். இதனால் `சிவசகா’ என்ற பெயரையும் கொண்டார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி தவமியற்றி, சிவனை தரிசித்த காரணத்தால்தான் உலகத்து நிதிகளை எல்லாம் குபேரன்
பெற்றார். தனக்கென ஒன்றையுமே எதிர்பாராத குபேரனின் செயலைப் போற்றியே அவர் தேவருலகின் நிதி அமைச்சர் பொறுப்பைப் பெற்றார். நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள் குபேரனுக்கு இருக்கிறார்கள். பத்ம நிதி, மஹாபத்ம நிதி, மகர நிதி, கச்சப நிதி, குமுத நிதி, நந்த நிதி, சங்க நிதி, நீலம நிதி,
பத்மினி நிதி என நவநிதிகளையும் பாதுகாத்து அருளுபவர். மீன ஆசனத்தில் அமர்ந்து வெண் குதிரை வாகனத்தைக் கொண்ட, தாமரை மலர் ஏந்தி, வரத முத்திரை காட்டி, வருபவர்களை செல்வச் செழிப்பாக மாற்றும் குபேரனை ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை குபேர காலம் என வழங்கப்படும் நேரத்தில்
வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும். மனைவி சித்திரரேகையோடு இணைந்து அன்பர்களுக்கு அருளாசி வழங்குவார். மிகவும் சக்தி வாய்ந்தது பதஞ்சலி முனிவர் அருளிய சிந்தாமணி மந்திரம். இந்த மந்திரத்தை தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலை ஜெபம் செய்து வந்தால் சிந்தாமணி
மகா பெரியவா அருளிய தெய்வத்தின் குரலில் இருந்து-
*ஹிந்து மதமும் மதமாற்றமும்; முதல் மாற்றத்தைச் சரி செய்யும் மறுமாற்றம்*
பிறரைத் தம் மதத்திற்கு மாற்றும் கொள்கையை அடியோடு கைக்கொள்ளாத ஒரே பெருமதமான ஹிந்து மதத்திற்கு இவ்வாறு அதன் கொள்கைகளில் சுய விருப்பம் ஏற்பட்டதன் மீதேதான் பிற
நாட்டு நல்லறிஞர், அநுபவிகள் ஆகியோர் ஈர்க்கப் பெற்று அதனைத் தழுவியிருக்கின்றனர் என்பது கவனத்திற்குரியது. ஹிந்து மதத் தலைவர்களும் பழங்காலங்களில் பவுத்த - சமண மதத்தினரை ஹிந்து மதத்திற்கு மாற்றியுள்ளனரே என எதிர்க் கேள்வி விடுக்கலாம். இதற்கு நமது விடை, அதற்கு முற்காலங்களில்
ஹிந்துக்களாகவே இருந்து அப்புறச்சமயிகளின் பிரசாரத்தால் அச்சமயம்களுக்கு மாறியோரைத்தான் அத் தலைவர்கள் மீண்டும் தாய்ச் சமயத்திற்கு மாற்றினர் என்பதேயாம்.
கவனத்திற்குரிய ஒன்றுண்டு, யாதெனில், இந்நாட்டிலேயே தோன்றிய பவுத்த - சமண சமயங்களுக்கு வேறாகப் பிறநாட்டுச் சமயத்தினருக்கும் கிறிஸ்து
"முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்ய வேண்டிய தர்மங்களை எண்-நான்கு — அதாவது முப்பத்திரண்டு -– அறங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள்
என்றும் சொல்வதுண்டு. அவற்றில் ஒன்றாக ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ என்பதைச் சொல்லியிருக்கிறது. அது என்ன? ஒரு கோவுக்கு உடம்பிலே அரிக்கிறது. நமக்கு எங்கே அரித்தாலும் நாம் கையை வளைத்துச் சொறிந்து கொள்கிறோம். கோவோ பின்னங்காலைக் கொண்டுதான் சொறிந்து கொள்வது. அப்போது சில இடங்களில்
அரித்தால் அதற்கு ஸரியாக சொறிந்து கொள்ள வராது. அந்த மாதிரி ஏற்படும்போது அது அரிப்பெடுக்கிற பாகத்தை நேரே வைத்துத் தேய்த்துச் சொறிந்து கொள்வதற்கு வாகாகக் கல்லை நட்டு வைப்பதுதான் ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’. ஆங்காங்கே இந்த மாதிரி நட்டு வைத்தார்கள். அந்த வழியில் போகிற மாடுகள் அவற்றில்
#DrShanta சென்னை மயிலாப்பூரில் (1927) பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா. சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் MBBS 1955-ல் MD பட்டம் பெற்றார். நாட்டின் முதல் பெண்
மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் எம்.டி. பட்டம் பெற்ற உடனே பணியில் சேர்ந்தார். கொள்கைப் பிடிப்பும், தொலைநோக்கும், கண்டிப்பும் கொண்ட டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை தனது குருவாகப் பெற்றார். 12 படுக்கைகளுடன் இயங்கி வந்த
அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து உலகத் தரம்வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றினார். இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 63ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக்கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக
#திருவள்ளுவர்தினம் 13-14ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட மயிலை திருவள்ளுவர் கோவிலில் ஆரம்பம் முதல் வைகாசி-அனுஷ தினத்தன்றுதான் திருவள்ளுவர் அவதாரதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில்தான் திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் அதே தினத்தன்று 18 மே-1935) மாநாட்டை ஏற்பாடு செய்தனர்
மறைமலை அடிகளும் அதே வைகாசி அனுஷ தினத்தைத்தான் தன்னுடைய ஆராய்ச்சி முடிவாக அம்மாநாட்டில் அறிவித்தார். அம்மாநாட்டின் முக்கிய நோக்கமே திருவள்ளுவர் பிறந்த தினத்தை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒரே தினத்தில் கொண்டாட வேண்டும் என்பதும் அத்தினத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்
என்பதும்தான். அம்மாநாட்டில் பங்கு பெற்ற நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களும் ஒரே மனதாக வைகாசி அனுஷமே திருவள்ளுவர் அவதார தினம் என்று முடிவு செய்தனர். ஆனால் கருணாநிதி பொய்யாக அந்த மாநாட்டில், அதுவும் பொய்யாக நடக்கவே நடக்காத தேதியில் -1921-ல் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன்
கோவை திமுக ஹோட்டல் நடத்துநரின் வாட்ஸ் ஆப் பதிவின் சுருக்கம். #திருட்டு_திமுக
சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் மலிவு விலை சமூக உணவகத்தை ஆரம்பித்து மற்ற ஹோட்டல்கள் உணவை விட தரமான உணவை அவர்கள் விற்கும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு கொடுக்க ஆரம்பித்தவுடன் பல ஹோட்டல்கள் அதனால்
பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இவரும் அவரை சந்தித்து இது எப்படி முடிகிறது என்று கேட்டபோது அவர் சொன்னது, பெரிய முதலீடு செய்து ஆடம்பரமாக கடையை கட்டவில்லை, குறைந்த முதலீடு அதிக வியாபாரம், இரண்டாவது அனைத்து பொருட்களையும் விவசாயிகளிடமே நேரடியாக வாங்குவதால் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு
கொடுக்கமுடிகிறது என்று கூறியிருக்கிறார்.
சில நாட்களில் அந்த ஏரியா திமுக செயலர் அப்பகுதி அனைத்து ஹோட்டல்காரர்களையும் திரட்டி சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க அழைத்து சென்று விலையை ஏற்ற வேண்டும் என்று அவர்கள் முன்னிலையில் மிரட்டியிருக்கிறார். அசராத சுப்ரமணியம் இன்னும் விலையை
#Pongal#MakaraSankaranthi#பொங்கல்#அர்த்தமுள்ளஇந்துமதம்
இன்று தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் மகரசங்கராந்தி என்று பாரதம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது! இது அறுவடை திருநாளாகும்! விவசாயத்திற்கு உதவியாக உள்ள ஏர், சூரியன், பசு காளைகளுக்கு நன்றி கூறும் விழா! சுருக்கமாக
முல்லை நில மக்களது விழாவாகும்! முல்லை நிலத் தெய்வம் கிருஷ்ணர் கையில் ஏரை உடைய அவரது அண்ணன் விவசாய தெய்வம் பலராமர். எனவே இது கிருஷ்ணர் பலராமன் விழாவாகும்! பொங்கலுக்கு முதல்நாள் போகி -பலராமனை 'புஜங்கம புரஸ்ஸர போகி' எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய
மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது எனவே போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே! போகி இந்திர விழாவா? இல்லை. போகி பலராமன் விழாவே! இந்திரவிழா சித்திரை மாதம் நடந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது! பூம்புகாரில் இந்திர விழாவின்போது
"சித்திரைச்