பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தகால வழக்கப்படி,போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை-மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும்.போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும்.தேரோட்டிகள் கீழே இறங்கி,மண்டியிட்டு நிற்பார்கள்.மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும்,
தேர்ப்பாகன் மன்னனை வணங்கி,மாலையிட்டு,வெற்றிக்கோஷம் முழங்குவான்.அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு,மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின்,வெற்றிகண்ட பாண்டவ சகோதரர்களுக்காக,
இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.தர்மன்,பீமன்,அர்ஜுனன்,நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச்சடங்குகள் ஆரம்பமாயின.தர்மரின் தேரின் முறை முடிந்தபின்,பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான்.பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான்
பீமன். மேலும்,பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான். வெற்றி கோஷங்கள் வானைப்பிளந்தன. அடுத்தது அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன். "யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது. பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாராட்டப் போகிறான்" என்று எண்ணி,
ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன். ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை. அர்ஜுனன் திகைத்தான்.
'பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய
கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன். அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார்."அர்ஜுனா! இந்தத்தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. முதலில் நீ இறங்கு!” என்று கட்டளையிட்டார். கண்ணனின் வார்த்தையை மீறி அறியாத அர்ஜுனன்,
அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான். அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே’ என ஒரு கணம் ஏங்கினான். 'கர்மயோகம்’ என்ற பகுதியாக, கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன்,ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்?
இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை? நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது?’ என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன். அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார்
ஸ்ரீகண்ணன். அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார். அதே விநாடியில், தேர்க்கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார்.கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது. எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும்
பார்த்தனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை."அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன. அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி,
யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். நான் சாரதியாக அமர்ந்துகொண்டிருந்ததால்தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன. படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு.
இந்தத் தேருக்கு முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன். நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்தேன். இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால்,
நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய். இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கி, உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்! தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய்.
என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்-காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன். இருந்தாலும்,உன்னுடைய சுயகௌரவத்தால் உன் சிந்தனை சற்றுநேரம் கலங்கி இருந்தது. அது தவறு. இதோ உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன்” என்று விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன்.
அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம் அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம்போல விழுந்துகிடந்தான். வாழ்க்கை எனும் ரதத்தினில், கடவுளைச் சரணடைந்தால், இறுதிவரை துன்பத்தையும் தடைகளையும் களைந்து, பிறவிப்பிணியினை கடந்தேற, சாரதி போல் நம்மை நடத்திச்செல்வார்.
எனவே அவனை கேள்வியேயில்லாமல் சரணடைவோம்.
ஶ்ரீக்ருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"கண்ணதாசன் தான் வேண்டும் அழைத்து வாருங்கள்" எம்ஜிஆர் போட்ட கட்டளை. நடுங்கியது படக்குழு. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும்,கவியரசர் கண்ணதாசனுக்கும் சில ஊடல்கள் இருந்தது.இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாகச் சொன்னார்.
“இந்தப் பாடலை கண்ணதாசன்தான் எழுதவேண்டும்.அவரால் மட்டுமே நான் நினைப்பதை,வரிகளாகக் கொண்டு வர முடியும்.”எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கண்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள்."சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல்.அதை,மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு,எழுதச்சொன்னால் எப்படி? சரி எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்.வேறு வழி இல்லை. படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள்.சிரித்தார் கண்ணதாசன்.
மரணத்துக்குப் பின்,தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,"தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்கு,செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் அவன்பக்கம் போர்ப்புரிந்தேன்.ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான், "இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்துவிட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட, உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன்.
"க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால்தான் சொல்கிறோம்.
அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும், முரண்பாடு வருகையில், விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும்.
நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு,
புத்த குருமார்களை வாதத்தில் வென்று சைவத்தை நிலைநாட்டி, தில்லையிலேயே சிவதொண்டு புரிந்து சிவனையே நினைந்துருகி வாழ்ந்து வந்தார் திருவாதவூரார் எனும் மாணிக்கவாசகர். வழக்கம்போல் தில்லைநாதனை ஆலயத்தினுள் வேண்டிவிட்டு, திருக்கோவிலின் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது முப்புரிநூல் தரித்த உடல்,முகம் முழுக்க பிரகாசமளிக்கும் திருநீறு என வேதியர் வடிவில் அந்தணர் ஒருவர்,
மாணிக்கவாசகரிடம் தன் வணக்கத்தைச் செலுத்தி, "ஐயா!நான் இந்த ஊரைச் சார்ந்த அந்தணன்.தங்களின் பாடலைப் பலமுறை கேட்டுள்ளேன்.அதை நானும் பாராயணம் செய்ய விரும்புகிறேன்.
அதற்காக உங்களின் பாடலைக் குறிப்பாய்,எழுதிக்கொள்ள விருப்பம் கொண்டு இங்கு வந்துள்ளேன்.தாங்கள் எழுதிய 'திருவாசகத்தை',நீங்களே ஒருமுறை சொன்னால்,அப்படியே ஓலைச்சுவடிகளில் நான் எழுதிக் கொள்கிறேன்"என்று அந்தணர் அன்புடன் கேட்டார்.
ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்குத் தமிழில் அர்த்தம் சொல்வதென்றால்,"ஒரு மனிதரைப் பற்றியோ,ஒரு பொருளைப் பற்றியோ,ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம் அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், "கருத்து" எனலாம்.
அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியாகத்தான் இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமில்லை.கண்ணால் காண்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை,அதற்குரிய தெளிவான அறிவு இல்லையென்றால். ஸ்டீவன் கோவி என்பவர் எழுதிய நூலில்,
ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காட்டி இதை விளக்குகிறார்.
ஒரு ஞாயிறு காலை வேளையில் அவர் நியூயார்க் நகர சுரங்க ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.பயணிகளில் சிலர் செய்தித்தாள்களை புரட்டிக்கொண்டிருந்தனர்.சிலர் ஏதோ சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தனர்.சிலர் கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுத்தனர்.
சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்.அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்."மகனே, உனக்கு ஒரு பெரிய சவால்.அதில் வெற்றி பெற்றால்,நீ தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகிவிடுவாய்.இன்று இரவு முழுவதும் நீ தனியாக,இந்தக் காட்டிலேயே இருக்கவேண்டும்.
உன் கண்கள் கட்டப்படும்.ஆனாலும் நீ பயப்படக்கூடாது.வீட்டிற்கு ஓடிவந்து விடவும் கூடாது" என்றார்.சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.அவனது கண்களை தந்தைத் துணியால் இறுகக் கட்டினார்.பிறகு,தந்தை திரும்பிச்செல்லும் காலடி ஓசை, மெல்ல,மெல்ல மறைந்தது.
அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு,தூரத்தில் ஆந்தை கத்துவதும்,நரி ஊளையிடுவதும், நடுக்கத்தைக் கொடுத்தது.காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ,என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.மரங்கள் பேயாட்டம் ஆடின.
"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை"என்றான் ஒரு அரசன்,ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?" என்று ஞானி கேட்டார். "என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை.முறையாக நீதி செலுத்தப்படுகிறது.நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை"என்றான்."அப்படியானால் ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு"என்றார் ஞானி. "எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான் மன்னன்."நீ என்ன செய்வாய்" என்றார் ஞானி."நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து,
பிழைத்துக் கொள்கிறேன்"என்றான் அரசன்."எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட,என்னிடமே வேலை செய்.உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.அதையே செய்.என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.நான் பிறகு வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன்."என்றார். சரி என்றான் மன்னன்.