தலைமைப் பண்புடன் இந்தியா முக்கியத்துவத்தை இழந்த சீனா
புதுடில்லி : கொரோனா நெருக்கடி காலத்தில், பிற நாடுகளுக்கு உதவிகளை செய்து, தலைமைப் பண்புடன் விளங்கும் இந்தியாவால், சர்வதேச அரங்கில், சீனா, தன் முக்கியத்துவத்தை இழந்துள்ளது.
கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதும், சில அமெரிக்க பத்திரிகைகள், 'இந்தியாவில் கொரோனாவால் பேரழிவு ஏற்படும்' என்ற செய்திகளை வெளியிட்டன. எனினும், அந்த செய்திகள் பொய்யாகின. நம் நாட்டில், வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள் குறைந்து வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.இதற்கிடையே, நம் நாட்டில், கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்துகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதுமட்டுமல்லாமல், இதர நாடுகளுக்கும் இலவசமாக தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பிரேசிலுக்கு, 20 லட்சம்; மொரோக்கோவுக்கு, 20 லட்சம்; வங்கதேசத்துக்கு, 20 லட்சம்; மியான்மருக்கு, 15 லட்சம்; நேபாளத்திற்கு, 10 லட்சம் டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதைத்தவிர, ஏற்கனவே, 'ஹைட்ராக்சிக் குளோரோக்வின், ரெம்டெசிவிர்' உள்ளிட்ட மருந்துகளையும், பரிசோதனை உபகரணங்கள், முக கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவற்றையும், வெளிநாடுகளுக்கு வழங்கி, இந்தியா உதவி செய்தது.
உலகத்தை ஒரே குடும்பமாக கருதும் இந்தியாவின் இந்த உதவிகளை, சர்வதேச தலைவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையே, நம் அண்டை நாடான சீனா, கொரோனா நெருக்கடியில், பிறருக்கு உதவாமல் இருந்து வருகிறது.
வங்கதேசத்திற்கு, 1.10 லட்சம் டோஸ்கள் மருந்து வழங்க முன்வந்த சீனா, பரிசோதனைக்கான செலவை பகிர்ந்துகொள்ள, வங்கதேச அரசுக்கு நிபந்தனை விதித்தது.
எனினும், அந்த நிபந்தனையை புறக்கணித்த வங்கதேசம், இந்தியாவிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நெருக்கடி காலத்தில், தலைமைப் பண்புடன் விளங்கி வரும் இந்தியாவுக்கு, பெரும்பாலான நாடுகள் ஆதரவாக இருப்பதால், சர்வதேச அரங்கில், சீனா, தன் முக்கியத்துவத்தை இழந்துள்ளதாக கருதப்படுகிறது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திமுக ஆட்சியில் 1060 விவசாயிகள் தற்கொலை: பா.ஜ., துணை தலைவர் காட்டம்
நாகர்கோவில் : தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1060 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர், என பா.ஜ., துணைத்தலைவர் அண்ணாமலை பேசினார்.
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மள்ளங்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் அவர் பேசியதாவது: ஈ.வெ.ரா., பிறந்தபின்னரே தமிழகம் உருவானது போல பாடத்திட்டங்களில் உள்ளது. நாயன்மார்கள், ராஜராஜ சோழன், பாண்டியர்கள் பற்றி இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் மட்டும் 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் 2009-ல் மட்டும் 1060 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். நரேந்திரமோடி விவசாயிகளை தலைநிமிர வைத்திருக்கிறார்.
500 கிலோ நகை மோசடி கும்பல் சொத்து வாங்கி குவித்தது அம்பலம்
சென்னை : 'முஸ்லிம்களுக்கு வட்டியில்லா நகை கடன் வழங்கப்படும்' என, 500 கிலோ தங்க நகைகள் சுருட்டிய வழக்கில் கைதாகியுள்ள கும்பல், பல இடங்களில் சொத்து வாங்கி குவித்து இருப்பதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், சையது ரகுமான். இவரது சகோதரர், அனிசூர் ரகுமான். இவர்களுக்கு, வேலுார் மாவட்டம் ஆம்பூரிலும் வீடு உள்ளது. இவர்கள், சென்னை, மேற்கு மாம்பலம், ஈஸ்வரன் கோவில் தெருவில், 'ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் அண்டு பேங்கர்ஸ்' என்ற, கடையை நடத்தி வந்தனர்.
🙏🇮🇳திருப்பதி_பற்றிப்பலரும்_அறிந்திராத_செய்திகள்*
கண்டிப்பாக குடும்பம் முழுவதும் ஒன்றாக இருந்து படித்து காட்டுங்கள் வந்த அருமையான தகவல்
🙏🇮🇳1
*திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.*
🙏🇮🇳2
*1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.*
குடியரசு தினவிழாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ராமர் கோயிலின் மாதிரி; மத்திய அமைச்சர்கள் உட்பட பெரும்பாலானோர் எழுந்து நின்று கைத்தட்டினர்
டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ராமர் கோயிலின் மாதிரி அணிவகுத்து வந்த போது மத்திய அமைச்சர்கள் உட்பட பெரும்பாலோனோர் எழுந்து நின்று கைத்தட்டினர்.
நாட்டின் 72-வது குடியரசு தின விழாவில் மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பாரியரியம், தனித்துவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
பிழைப்புக்காக சென்னையிலிருந்து தென்காசி பட்டணம் சென்றவர்.. ஸ்ரீதர் வேம்புவுக்கு கிடைத்த அங்கீகாரம்!
நகரங்களில் மட்டும்தான் ஐ.டி நிறுவனங்கள் செயல்பட வேண்டுமா... ஏன் கிராமங்களில் செயல் பட முடியாதா... அதற்கு விடையளித்த தமிழகத்து பில்கேட்ஸ் ஸ்ரீதர் வேம்வுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரம் உள்ள திருப்பனந்தாள் அருகேயுள்ள சிதம்பரநாதபுரம் கிராமம் தான் ஸ்ரீதர் வேம்புவின் சொந்த ஊர். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிதான் இவர்.
உஷாரய்யா உஷாரு! பணப்பரிவர்த்தனையின் போது போலி விளம்பரங்கள்அலட்சியமாக இருந்தால் காலியாகும் வங்கிக்கணக்கு
கோவை:'வாழ்த்துக்கள்! நீங்கள், ரூ.499 பணத்தை வென்றுள்ளீர்கள். இலவச ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டி பரிசை பெறுங்கள். பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு எடுத்துச் செல்ல, கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்'- இப்படித்தான் அந்த விளம்பரம், அந்த தொழிலதிபருக்கு பரிச்சயமானது.
யாராக இருந்தாலும், போட்டியில் வெற்றி பெற்று பணம் வருகிறது என்றால், சபலம் ஏற்படத்தானே செய்யும். விளம்பரத்தில் குறிப்பிட்டது போல் ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டியவருக்கு, 499 ரூபாய் வென்றதாக செய்தி வந்தது.
அதில் குறிப்பிட்டது போல், பட்டனை அழுத்திய பின் எந்த ஒரு தகவலும் வரவில்லை.