500 கிலோ நகை மோசடி கும்பல் சொத்து வாங்கி குவித்தது அம்பலம்
சென்னை : 'முஸ்லிம்களுக்கு வட்டியில்லா நகை கடன் வழங்கப்படும்' என, 500 கிலோ தங்க நகைகள் சுருட்டிய வழக்கில் கைதாகியுள்ள கும்பல், பல இடங்களில் சொத்து வாங்கி குவித்து இருப்பதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், சையது ரகுமான். இவரது சகோதரர், அனிசூர் ரகுமான். இவர்களுக்கு, வேலுார் மாவட்டம் ஆம்பூரிலும் வீடு உள்ளது. இவர்கள், சென்னை, மேற்கு மாம்பலம், ஈஸ்வரன் கோவில் தெருவில், 'ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் அண்டு பேங்கர்ஸ்' என்ற, கடையை நடத்தி வந்தனர்.
நஷ்டம்
இவர்களது கடையில் ரிகானா, சஜிதா, ஷகினா மற்றும் ரவி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.இவர்கள், 2010ல், முஸ்லிம்களுக்கு மட்டும், வட்டியில்லா தங்க நகை கடன் வழங்கப்படும் என, அறிவித்தனர்.
அதை நம்பி, எழும்பூர், புதுப்பேட்டை, மண்ணடி என, தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள், சையது ரகுமான் நடத்தி வந்த கடையில், 500 கிலோ தங்க நகைகள் வரை அடகு வைத்தனர்.
இந்நிலையில், 2019ல், தங்க நகை கடன் வழங்கியதில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. கடை திவாலாகி விட்டது என, அறிவித்தனர். 500 கிலோ தங்க நகைகளுடன், சையது ரகுமானும் மற்றவர்களும் தலைமறைவாகினர். இதனால், பாதிக்கப்பட்ட, 3,380க்கும் மேற்பட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின், இந்த வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
கைதுஅவர்கள், கூடுதல் டி.ஜி.பி., ஆபாஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து, தெலுங்கானா மாநிலத்தில் பதுங்கி இருந்த, சையது ரகுமான், அனிசூர் ரகுமான், ரிகானா, சஜிதா, ஷகினா ஆகியோரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
மோசடி கும்பல், முஸ்லிம்களிடம் சுருட்டிய, 500 கிலோ தங்க நகைகளில், 350 கிலோவை, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்துள்ளனர். அந்த தொகையில், தமிழகத்தின் பல இடங்களில், 17 வகையான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.மீதமுள்ள, 150 கிலோ தங்க நகைகளை என்ன செய்தனர் என்று, தெரியவில்லை.
இதுபற்றி விசாரிக்க, ஐந்து பேரையும் காவலில் எடுக்க, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருந்த, மேலும் சிலரை தேடி வருகிறோம். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர்' என்றனர்
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திமுக ஆட்சியில் 1060 விவசாயிகள் தற்கொலை: பா.ஜ., துணை தலைவர் காட்டம்
நாகர்கோவில் : தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1060 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர், என பா.ஜ., துணைத்தலைவர் அண்ணாமலை பேசினார்.
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மள்ளங்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் அவர் பேசியதாவது: ஈ.வெ.ரா., பிறந்தபின்னரே தமிழகம் உருவானது போல பாடத்திட்டங்களில் உள்ளது. நாயன்மார்கள், ராஜராஜ சோழன், பாண்டியர்கள் பற்றி இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் மட்டும் 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் 2009-ல் மட்டும் 1060 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். நரேந்திரமோடி விவசாயிகளை தலைநிமிர வைத்திருக்கிறார்.
🙏🇮🇳திருப்பதி_பற்றிப்பலரும்_அறிந்திராத_செய்திகள்*
கண்டிப்பாக குடும்பம் முழுவதும் ஒன்றாக இருந்து படித்து காட்டுங்கள் வந்த அருமையான தகவல்
🙏🇮🇳1
*திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.*
🙏🇮🇳2
*1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.*
குடியரசு தினவிழாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ராமர் கோயிலின் மாதிரி; மத்திய அமைச்சர்கள் உட்பட பெரும்பாலானோர் எழுந்து நின்று கைத்தட்டினர்
டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ராமர் கோயிலின் மாதிரி அணிவகுத்து வந்த போது மத்திய அமைச்சர்கள் உட்பட பெரும்பாலோனோர் எழுந்து நின்று கைத்தட்டினர்.
நாட்டின் 72-வது குடியரசு தின விழாவில் மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பாரியரியம், தனித்துவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
பிழைப்புக்காக சென்னையிலிருந்து தென்காசி பட்டணம் சென்றவர்.. ஸ்ரீதர் வேம்புவுக்கு கிடைத்த அங்கீகாரம்!
நகரங்களில் மட்டும்தான் ஐ.டி நிறுவனங்கள் செயல்பட வேண்டுமா... ஏன் கிராமங்களில் செயல் பட முடியாதா... அதற்கு விடையளித்த தமிழகத்து பில்கேட்ஸ் ஸ்ரீதர் வேம்வுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரம் உள்ள திருப்பனந்தாள் அருகேயுள்ள சிதம்பரநாதபுரம் கிராமம் தான் ஸ்ரீதர் வேம்புவின் சொந்த ஊர். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிதான் இவர்.
உஷாரய்யா உஷாரு! பணப்பரிவர்த்தனையின் போது போலி விளம்பரங்கள்அலட்சியமாக இருந்தால் காலியாகும் வங்கிக்கணக்கு
கோவை:'வாழ்த்துக்கள்! நீங்கள், ரூ.499 பணத்தை வென்றுள்ளீர்கள். இலவச ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டி பரிசை பெறுங்கள். பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு எடுத்துச் செல்ல, கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்'- இப்படித்தான் அந்த விளம்பரம், அந்த தொழிலதிபருக்கு பரிச்சயமானது.
யாராக இருந்தாலும், போட்டியில் வெற்றி பெற்று பணம் வருகிறது என்றால், சபலம் ஏற்படத்தானே செய்யும். விளம்பரத்தில் குறிப்பிட்டது போல் ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டியவருக்கு, 499 ரூபாய் வென்றதாக செய்தி வந்தது.
அதில் குறிப்பிட்டது போல், பட்டனை அழுத்திய பின் எந்த ஒரு தகவலும் வரவில்லை.
தலைமைப் பண்புடன் இந்தியா முக்கியத்துவத்தை இழந்த சீனா
புதுடில்லி : கொரோனா நெருக்கடி காலத்தில், பிற நாடுகளுக்கு உதவிகளை செய்து, தலைமைப் பண்புடன் விளங்கும் இந்தியாவால், சர்வதேச அரங்கில், சீனா, தன் முக்கியத்துவத்தை இழந்துள்ளது.
கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதும், சில அமெரிக்க பத்திரிகைகள், 'இந்தியாவில் கொரோனாவால் பேரழிவு ஏற்படும்' என்ற செய்திகளை வெளியிட்டன. எனினும், அந்த செய்திகள் பொய்யாகின. நம் நாட்டில், வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள் குறைந்து வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.இதற்கிடையே, நம் நாட்டில், கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்துகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.