பிழைப்புக்காக சென்னையிலிருந்து தென்காசி பட்டணம் சென்றவர்.. ஸ்ரீதர் வேம்புவுக்கு கிடைத்த அங்கீகாரம்!
நகரங்களில் மட்டும்தான் ஐ.டி நிறுவனங்கள் செயல்பட வேண்டுமா... ஏன் கிராமங்களில் செயல் பட முடியாதா... அதற்கு விடையளித்த தமிழகத்து பில்கேட்ஸ் ஸ்ரீதர் வேம்வுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரம் உள்ள திருப்பனந்தாள் அருகேயுள்ள சிதம்பரநாதபுரம் கிராமம் தான் ஸ்ரீதர் வேம்புவின் சொந்த ஊர். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிதான் இவர்.
1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இப்போது 9,000 க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு குடியறுவதை விரும்பாத . ஸ்ரீதர் வேம்பு தன் பணியிடத்தை தென்காசிக்கு அருகேயுள்ள மத்தளம்பாறை கிராமத்துக்கு மாற்றிக் கொண்டார்.
பிழைப்பு தேடி நகரங்களுக்கு சென்று மக்கள் குடியேறுவது குறைய வேண்டும். அதிக மக்கள் தொகையால்தான் நகரங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை கட்டமைத்தாலும் பிரச்னைகள் தீர்வதில்லை என்பது இவரின் வாதம்.
இதனால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நகரத்திலிருந்து கிராமத்தில் சென்று குடியேறினார் ஸ்ரீதர் வேம்பு.
கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்காசி ஸோஹோ நிறுவனத்தின் ஊரக கிளை அலுவலகத்தில் இன்று சுமார் 500 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்கள், அனைவருமே தென்காசியை சுற்றி 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிப்பவர்கள். இந்த நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக ஸோஹோ டெஸ்க், வாடிக்கையாளர் சேவை மென்பொருள் உள்ளிட்ட சில தயாரிப்புகளை மத்தளம்பாறை கிராமத்தின் அலுவலகத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
அதே போல, ஆந்திராவின் ரேணிகுண்டாவிலும் ஸோகோவின் மற்றோரு கிராமப்புற அலுவலகம் இயங்கி வருகிறது.
உலகின் பல நாடுகளில் செயல்படும் ஸோஹோ செயல்படுகிறது. இதனால், வேம்புவின் ஒரு நாள் வாழ்க்கை அதிகாலை 3 மணிக்கே தொடங்கி விடும். பல நாடுகளில் இருந்து வரும் போன் அழைப்புகளுக்கு பதில் பேச தொடங்கும் வேம்பு விடிந்ததும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வார்.
நீச்சல் பயிற்சிதான் அவரை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுவதாக ஸ்ரீதர் வேம்பு கூறுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் இவரின் ஸோஹோ நிறுவனம் ரூ. 3,410 கோடி வருவாய் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தளம்பாறை கிராமத்தில் ஜோஹோ பள்ளியையும் ஸ்ரீதர் வேம்பு தொடங்கியுள்ளார். முன்னர் வீட்டில் வைத்து குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்பு எடுத்து வந்த இவர், தற்போது இந்தப் பள்ளியைத் தொடங்கி அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகிறார்.
இப்படி, சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் துரை வேம்புவை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பாலிமர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திமுக ஆட்சியில் 1060 விவசாயிகள் தற்கொலை: பா.ஜ., துணை தலைவர் காட்டம்
நாகர்கோவில் : தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1060 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர், என பா.ஜ., துணைத்தலைவர் அண்ணாமலை பேசினார்.
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மள்ளங்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் அவர் பேசியதாவது: ஈ.வெ.ரா., பிறந்தபின்னரே தமிழகம் உருவானது போல பாடத்திட்டங்களில் உள்ளது. நாயன்மார்கள், ராஜராஜ சோழன், பாண்டியர்கள் பற்றி இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் மட்டும் 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் 2009-ல் மட்டும் 1060 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். நரேந்திரமோடி விவசாயிகளை தலைநிமிர வைத்திருக்கிறார்.
500 கிலோ நகை மோசடி கும்பல் சொத்து வாங்கி குவித்தது அம்பலம்
சென்னை : 'முஸ்லிம்களுக்கு வட்டியில்லா நகை கடன் வழங்கப்படும்' என, 500 கிலோ தங்க நகைகள் சுருட்டிய வழக்கில் கைதாகியுள்ள கும்பல், பல இடங்களில் சொத்து வாங்கி குவித்து இருப்பதால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், சையது ரகுமான். இவரது சகோதரர், அனிசூர் ரகுமான். இவர்களுக்கு, வேலுார் மாவட்டம் ஆம்பூரிலும் வீடு உள்ளது. இவர்கள், சென்னை, மேற்கு மாம்பலம், ஈஸ்வரன் கோவில் தெருவில், 'ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் அண்டு பேங்கர்ஸ்' என்ற, கடையை நடத்தி வந்தனர்.
🙏🇮🇳திருப்பதி_பற்றிப்பலரும்_அறிந்திராத_செய்திகள்*
கண்டிப்பாக குடும்பம் முழுவதும் ஒன்றாக இருந்து படித்து காட்டுங்கள் வந்த அருமையான தகவல்
🙏🇮🇳1
*திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.*
🙏🇮🇳2
*1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.*
குடியரசு தினவிழாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ராமர் கோயிலின் மாதிரி; மத்திய அமைச்சர்கள் உட்பட பெரும்பாலானோர் எழுந்து நின்று கைத்தட்டினர்
டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ராமர் கோயிலின் மாதிரி அணிவகுத்து வந்த போது மத்திய அமைச்சர்கள் உட்பட பெரும்பாலோனோர் எழுந்து நின்று கைத்தட்டினர்.
நாட்டின் 72-வது குடியரசு தின விழாவில் மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பாரியரியம், தனித்துவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
உஷாரய்யா உஷாரு! பணப்பரிவர்த்தனையின் போது போலி விளம்பரங்கள்அலட்சியமாக இருந்தால் காலியாகும் வங்கிக்கணக்கு
கோவை:'வாழ்த்துக்கள்! நீங்கள், ரூ.499 பணத்தை வென்றுள்ளீர்கள். இலவச ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டி பரிசை பெறுங்கள். பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு எடுத்துச் செல்ல, கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்'- இப்படித்தான் அந்த விளம்பரம், அந்த தொழிலதிபருக்கு பரிச்சயமானது.
யாராக இருந்தாலும், போட்டியில் வெற்றி பெற்று பணம் வருகிறது என்றால், சபலம் ஏற்படத்தானே செய்யும். விளம்பரத்தில் குறிப்பிட்டது போல் ஸ்க்ராட்ச் கார்டை சுரண்டியவருக்கு, 499 ரூபாய் வென்றதாக செய்தி வந்தது.
அதில் குறிப்பிட்டது போல், பட்டனை அழுத்திய பின் எந்த ஒரு தகவலும் வரவில்லை.
தலைமைப் பண்புடன் இந்தியா முக்கியத்துவத்தை இழந்த சீனா
புதுடில்லி : கொரோனா நெருக்கடி காலத்தில், பிற நாடுகளுக்கு உதவிகளை செய்து, தலைமைப் பண்புடன் விளங்கும் இந்தியாவால், சர்வதேச அரங்கில், சீனா, தன் முக்கியத்துவத்தை இழந்துள்ளது.
கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதும், சில அமெரிக்க பத்திரிகைகள், 'இந்தியாவில் கொரோனாவால் பேரழிவு ஏற்படும்' என்ற செய்திகளை வெளியிட்டன. எனினும், அந்த செய்திகள் பொய்யாகின. நம் நாட்டில், வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள் குறைந்து வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.இதற்கிடையே, நம் நாட்டில், கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்துகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.