மிசா காலத்தில் பத்திரிக்கைகள் கடுமையான தணிக்கைக்கு ஆளாக்கப்பட்டது. குறிப்பாக விடுதலை, முரசொலி ஆகிய பத்திரிக்கைகள் குறிவைக்கப்பட்டது. கலைஞரை வெகுண்டெழ செய்த சம்பவம் ஒன்று இருக்கிறது.. கலைஞர் சொல்கிறார் கீழே..
ஜூன் மாதம் மூன்றாம் நாள் எனது பிறந்தநாளையொட்டி நிகழ்ச்சியொன்றை நான் நினைவுபடுத்தியாக வேண்டும். பிறந்தநாள் செய்தி என்ற நிலையில் முரசொலியில் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக்கடிதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. "என் அன்னையைவிட அதிக அன்பை அண்ணா என் மீது பொழிந்தார்" என்று
அந்த கட்டுரையில் இருந்த வாசகத்தை வெட்டிட வேண்டுமென தணிக்கை அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காரணம் கேட்டேன். அவர் காரணம் கூற மறுத்துவிட்டார். கடிதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஜூன் முதல் நாள்இரவு, அன்றிரவு தான் அதிகாரிகளிடம் பேசினேன்.
காட்டுதர்பார் நடப்பதை நிரூபிக்கிற வகையில் அவர் பதில் அளித்ததும் அதனை எதிர்த்தே தீருவது என்ற முடிவுக்கு வந்தேன்.
ஜூனல 2-ம் தேதி காலையில் சென்னை, அண்ணா சாலையிலிருந்து கிளம்பி, தணிக்கை அதிகாரி அலுவலகம் சென்று அவர்கள் உண்ணாநோம்பு மேற்கொள்ளப்படுமென்றும்,
எழுத்துச் சுதந்திரம் பெற நடைபெறும் ஜனநாயகப் போர் அஅது என்றும் என் கைப்படவே எழுதினேன். அப்படி எழுதப்பட்டதை இரகசியமாக “பிளாக்” செய்து கொண்டு வரச்சொன்னேன்.
அதனை முரசொலியில் அச்சேற்றினால் கூட மறுநாள் போராட்ட ரகசியம் வெளிப்பட்டுவிடக்கூடும் என்பதற்காக இரவோடு இரவாக நானும் என்னுடைய
மகன்கள் அழகிரி, தமிழரசன் ஆகியோரும் அந்த பிளாக்கை ஒவ்வொரு தாளாக ஒற்றியொற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்டத் துண்டுப் பிரசுரங்களாக ஆக்கினோம்.
ஜூன் 2 -ம் நாள் அதற்கு மறுநாள் என் பிறந்தநாள் காலை 10 மணியளவில் என் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டேன். அப்பொழுது கழகத்தில் உறுதி மாறாத
பற்றுக்கொண்ட இளமுருகு பொற்செல்வி அவர்கள் வந்தார். அவர் செய்தி அறிந்துக்கொண்டு "உங்களைத் தனியாக அனுப்பமாட்டேன். எங்குச் சென்றாலும் நானும் வருவேன்" என்றுரைத்து என்னுடன் காரில் ஏறிக்கொண்டார். எனது காரைத் தொடர்ந்து செல்வமும், அழகிரி, தமிழரசு ஆகியோரும் வேறொரு காரில் வந்தனர்.எனது காரை
அண்ணாசாலை பக்கம் போகச் சொன்னேன். ஆயிரம் விளக்குப் பகுதியை தாண்டியதும் காரிலிருந்து இறங்கிவிட்டோம். நானே எனது கையில் அறப்போர் விளக்கத் துண்டு பிரசுரங்களை எடுத்துக்கொண்டு அதனை அண்ணாசாலையில் செல்வோர் அனைவரிடமும் விநியோகிக்கத் தொடங்கினேன். மக்கள் ஆவலுடன் வியப்புடன் என்னைப் பின்
தொடர்ந்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய்விட்டது. அப்படியே நடந்துக்கொண்டே அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையின் அடிபீடத்துக்கு வந்து சேர்ந்தேன். கழகக் காளை ஜெகதீசன் உள்பட நூற்றுக்கணக்கானத் தொண்டர்கள் எங்கிருந்தோ வந்து சேர்ந்துவிட்டனர்.
"சர்வாதிகாரம்" என்று முழுங்கினேன்! இளமுருகு அவர்களும் மற்றவர்களும் "வீழ்க" என்று விண்முட்ட முழங்கினார்கள். "ஜனநாயகம்" என்று ஒலித்தேன்! "வாழ்க" என இடியொலி எழுப்பினார்கள்.
- கலைஞர் கருணாநிதி
தோழர் பொற்செல்வி இளமுருகு அவர்களுக்கு வீரவணக்கங்கள்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வேதத்தை, நால்வர்ணத்தை, பார்ப்பன மதத்தை எதிர்த்து ஒரு பகுத்தறிவு மார்க்கத்தை இந்தியாவில் உருவாக்கிய புத்தரின் பௌத்தத்தை இந்தியாவில் இருந்து விரட்டிவிட்டு, புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று பொய்யும், புரட்டுமாக பரப்பினார்கள்.
அந்த பொய்யை நாம் இன்னமும் மறுத்துக்கொண்டு இருக்கிறோம்.
எங்குமே பிறக்காத ராமரை அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் பிறந்தார் என சொல்லி பாபர் மசூதியை இடித்தார்கள். மதக்கலவரம் மூண்டது. நாம் ராமன் பிறந்தானா என்பதை கேட்க முடியவில்லை.
கலவரத்தை எப்படி தடுப்பது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறோம்.
குரங்குகளை வைத்து ஒரு பாலம் கட்டினான் ராமன் என ஒரு புராணக்கதை. அதை நாசவே ஒத்துக்கொண்டது என ஒரு புருடா. நாசா வந்து நாங்கள் அப்படி சொல்லவில்லை என்று மறுப்பு தெரிவிக்க வேண்டிய அளவுக்கு பார்பனீயத்தின் வலிமை இருக்கிறது.
சமீபத்தில் நான் ரசித்து பார்க்கும் இணையதளம் Liberty Tamil. பல்வேறு ஆளுமைகளை, கட்சிகள் வித்தியாசமின்றி பேட்டி காண்கிறார். அதிக நேரம் பிடிக்காமல், சிறிய காணொளிகளாக இருந்தாலும் கருத்துக்களை தெள்ளத்தெளிவாக உள்வாங்கிக்கொள்ள உதவும் விவாதங்களாக இருக்கிறது.
திருமுருகன் காந்தியை எடுத்த பேட்டி முக்கியமானது. நமக்கிருக்கும் கேள்விகளை வெளிப்படையாக கேட்டார். ஆனால், பதில் வழக்கம் போல தெளிவாக வரவில்லை. 2021 தேர்தல் கருத்துக்கணிப்புகளும் களத்தை அப்படியே பிரதிபலிப்பது போல இருக்கிறது.
எடுத்துக்காட்டாக தியாகராய நகரில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், பாஜக சார்ப்பாக தியாகராய நகரில் பாஜகவின் எச்.ராஜா நின்றால் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு,
கலைஞர் இல்லாததை இவர்கள் வெற்றிடமாக நினைத்துக்கொள்கிறார்கள். அல்லது அப்படி கட்டமைக்க பார்க்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு புரியாத ஒன்று. கலைஞர் என்பது ஒரு பிம்பம் அல்ல. அதாவது எம்ஜிஆரை போல அல்ல.
கலைஞர் என்பது கொள்கை.
கலைஞர் என்பது திராவிட இயக்கம்.
கலைஞர் என்பது உழைப்பு!
அதாவது, யாரெல்லாம் கொள்கையை முன்னெடுக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கலைஞர் தான்.
யாரெல்லாம், திராவிட இயக்கத்தை முன்னெடுத்து செல்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.
யாரெல்லாம், திமுகவில் உழைக்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.
புத்தரின் கொள்கையான “மாற்றம் ஒன்றே மாறாதது” எனும் இயங்கியல் விதியின் நவீன எடுத்துக்காட்டு திராவிட முன்னேற்ற கழகம். இந்த இயக்கம், ஆதிக்கவாதிகள் இருக்கும் வரை இயங்கிக்கொண்டே தான் இருக்கும். தலைவர்கள் மாறுவார்கள். இயக்கம் அப்படியே இருக்கும்!
புதிதாக அரசியல்வாதி வேடம் போட்டவர்களுக்கு கொள்கையை கேட்டால் பதட்டம் வருகிறது. கொள்கையே இல்லாமல் கட்சியை ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், நாம் அவர்களை உடனடியாக முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிட வேண்டுமாம்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் திமுக, தேர்தல் அறி்க்கை தயாரிப்பதற்காக ஒரு குழுவை ஆரம்பிக்கும். அந்தக்குழுவிற்கு தலைவர் இருப்பார். தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சனைகளையும், ஊர் வாரியாக அலசி, அந்த அறிக்கையை தயாரிப்பார்கள். அதுமட்டுமல்லாது, முத்தாய்ப்பான சில அறிவிப்புகளை திமுக வெளியிடும்.
அந்த அறிவிப்புகள், தேர்தலின் போக்கையே மாற்றும். ஏனெனில், திமுக இன்று அறிவித்தால், நாளை அது அரசாணையாகும் என்பதை மக்கள் அறிவார்கள்.
இந்த வரிகட்டாத, வாடகை தராத நடிகர்கள் இலவசத்திட்டம் என எள்ளி நகையாடும்,மக்கள் நல சமூகநீதி திட்டங்களை திமுக இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் அறிவிக்கும்.
2021 தேர்தலின் ஜெயசூர்யாவாக அண்ணன் ஆ.ராசா களமிறங்கிவிட்டார். சும்மா இருந்த அவரை முதலமைச்சர் பழனிச்சாமி தொட்டு விட்டார். தப்பு பண்ணிட்ட சிங்காரம்,தப்பு பண்ணிட்ட என வேட்டையாட கிளம்பிட்டார் அண்ணன் ஆ.ராசா.இதுவரை திமுக தலைவர் கூட ஜெயலலிதா மரணத்திற்கான நீதியை திமுக ஆட்சி பெற்றுத்தரும்
என்று தான் சொல்லியிருந்தார். அவரது டார்கெட் ஜெயலலிதா பெயரை சொல்லி தமிழ்நாட்டை நாசம் செய்யும் இந்த அடிமை கூட்டத்தை ஒழிப்பதாகவே இருந்தது. இன்னொன்று, திமுக தலைவர், தொடர்ச்சியாக இந்த அடிமை அதிமுக அரசின் ஊழல்களை வெளிக்கொணர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதற்கு வெகுநாளாக பதில் சொல்லமுடியாமல் இருந்த பழனிசாமிக்கு யாரோ, வாட்சாப் பார்வெர்டில் சர்காரியா, 2ஜி என அனுப்ப, அதையே அவர் பேச... ஆ.ராசா வாடா வா, இதுக்கு தான் காத்திருக்கிறேன் என தனது ஜெயசூரியா மட்டையை சுழற்ற ஆரம்பித்து இருக்கிறார்.
திமுகவில் ஏன் அனைவரும் நாத்திகர்களாக இல்லை?
திமுகவில் ஏன் அனைவரும் சாதி,மத மறுப்பாளர்களாக இல்லை?
கொள்கையை திணிக்க முடியாது. உண்மையை சொல்லப்போனால் பலதரப்பட்ட மக்களுக்குமான கட்சியாக தான் திமுக இருக்கிறது. அதில் சாதி வெறியனும் இருக்கிறான், சாதி மறுப்பாளனும் இருக்கிறான்.
மத வெறியனும் இருக்கிறான். மத மறுப்பாளனும் இருக்கிறான். கடவுள் நம்பிக்கையாளனும் இருக்கிறான். கடவுள் மறுப்பாளனும் இருக்கிறான். இந்த பன்மைத்துவம் தான் கட்சியின் பலம், பலவீனம் இரண்டுமே!
திமுகவை நாத்திக கட்சி என்று சொல்வோர் உண்டு. ஆனால், எல்லா திமுக காரணும் நாத்திகன் இல்லை.
கலைஞர் நாத்திகராக இருந்ததால் அப்படி பெயர் வந்து இருக்கலாம்.
திமுகவை பள்ளர் பறையர் கட்சி என்பார்கள். இன்றோ, அதையும் உடைக்க தலித் இயக்கங்கள் பாடுப்பட்டு கொண்டு இருக்கிறது!
திமுகவின் பாதை.. நீண்ட பாதை.. மக்களாட்சி பாதை... அனைத்து மக்களையும் ஒருங்கிணைந்து...