விவசாயிகளுக்கு மோடி விளக்கம் : டுவிட்டரில் டிரெண்டிங்
புதுடில்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வரும் வேளையில் ராஜ்யசபாவில் பிரதம் மோடி இன்று அதுதொடர்பாக பேசினார். அவர் பேசிய விஷயங்கள் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாயிகளுக்கு 70 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசினார்.
அதில் கொரோனா, தடுப்பூசி, நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல விஷயங்களுடன் வேளாண் சட்டம் தொடர்பாக பேசினார்.
குறிப்பாக வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவர் பேசும்போது, ''புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறிபோகாது.
விவசாய பிரச்னைகள் குறித்து பேசுவோர் சிறு விவசாயிகளை மறந்து விடுகின்றனர். வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை தான் நாங்கள் செய்திருக்கிறோம். விவசாயிகளுடன் பேச தயார்.
பிரச்னைகளை கூட்டாக விவாதித்த தீர்வு காண வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்ப்போர்கள் கூறும் வாதங்களில் எந்த சாரமும் இல்லை'' என்றார்.
பிரதமரின் இந்த பேச்சு டுவிட்டரில் இன்று டிரெண்ட் ஆனது. ராஜ்சபாவில் அவர் பேசிய பல கருத்துக்களை குறிப்பிட்டு பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதிலும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவர்கள் பேச தயார் என அவர் அறிவித்திருப்பதை பலரும் வரவேற்றனர். இதன்காரணமாக டுவிட்டரில் #PMinRajyaSabha என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*நாம் வைக்கும் வணக்கத்தில் எத்தனை வகைகள் உள்ளன? அவற்றின் பயன்கள் என்ன?*
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்...
பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் (Namaskar) செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் 'பிரணாமங்கள்' அல்லது 'வணக்கங்கள்' (Namaste) என்றழைக்கப்படுகின்றன.
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன.
அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
1) அஷ்டாங்கணம்
- உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
கடந்த 2020-ம் ஆண்டில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல்: மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
கடந்த 2020-ம் ஆண்டில் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் கடந்த 2020-ம்ஆண்டில் 5,133 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 46 பேர் இறந்தனர்.
டெல்லி வன்முறை : தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது
டெல்லியில் டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில், தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த மோதல், செங்கோட்டையில் சீக்கிய மத கொடியை ஏற்றியது போன்ற சம்பவங்களில் தீப் சித்து இடம்பெற்றிருந்தது வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
தீப் சித்து உள்பட 8 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று டெல்லி காவல்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.
புதுடில்லி: காங்., மூத் தலைவரான குலாம் நபி ஆசாத், கட்சிக்காக மட்டும் அல்லாமல் நாட்டிற்காக கவலைப்பட்டவர் என அவரது பிரிவு உபசார விழாவில் ராஜ்யசபாவில் நடந்த உரையில் பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.
காஷ்மீரை சேர்ந்த காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 15ல் முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர், சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.
எனவே குலாம் நபி சுாத் மீண்டும் ராஜ்யபசா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை.
இந்நிலையில், ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது.
இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணைகொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.
அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும், கண்களாக காயத்திரி மந்திரமும், உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும், இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும், கால்களாக வேதத்தின் சந்தங்களும், நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும்,