பேரூர்:கோவை அருகே, பழங்குடியினருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி, மதமாற்ற முயற்சிப்பதாக, 'காருண்யா' மீது புகார் எழுந்துள்ளது.
'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில், மத பிரசார நிகழ்ச்சிகளை நடத்துபவர், மத போதகர் பால் தினகரன். அவர், கோவை, நல்லுார்வயல் கிராமத்தில், காருண்யா நிகர்நிலை பல்கலை, பள்ளிகள் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்துகிறார்.
இவருக்கு சொந்தமான காருண்யா 'சீஷா' நடமாடும் மருத்துவமனை, ஆம்புலன்ஸ் வாயிலாக, பழங்குடியினருக்கு பரிசு பொருட்களை கொடுத்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக புகார்எழுந்துள்ளது.
ஆலாந்துறையை சேர்ந்த சதீஷ்குமார் கூறியதாவது:கடந்த, டிச., மாதம் பழங்குடியினர்
கிராமங்களில், காருண்யா நிறுவனத்தின் சீஷா நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ்சை வெள்ளப்பதியில் நிறுத்தி விசாரித்தோம்.பழங்குடியினருக்கு வழங்குவதற்கான பலவிதமான பொருட்கள்இருந்தன.
வனத்துறை ஊழியர்கள் விசாரித்துவிட்டு, அனுமதியில்லாமல் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
பழங்குடியினர் வீட்டில், காருண்யா சீஷா ஆம்புலன்சில் கொண்டு வந்த, புத்தாடைகள், பெட்ஷீட், குழந்தைகளுக்கான பரிசு பொருட்கள், பேனர் இருந்தன; இது, பழங்குடியினரை மத மாற்ற செய்யும் முயற்சி.
இது குறித்து, வனத்துறை, காவல் துறை, மத்வராயபுரம் ஊராட்சி
நிர்வாகத்திடம் புகார்தெரிவித்தோம். சாதாரண வாகனங்களில் பொருட்களை எடுத்து
வந்திருந்தால் எந்த கேள்வியும் இல்லை.
ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாக பயன்படுத்தியது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மத மாற்றும் முயற்சியை அதிகாரிகள் தடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
பசுமை வீடுகளில் பால் தினகரன் பெயர்
கடந்த ஆண்டு, நல்லுார்வயல்பதி பழங்குடியினர் கிராமத்தில், அரசு சார்பில், ஏழு பசுமை
வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகள் கட்டுவதற்கு, 'காருண்யா சீஷா' சார்பில், ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதை பயன்படுத்தி, கட்டி முடிக்கப்பட்ட அரசின் பசுமை
வீடுகளில், 'பால் தினகரன் சீஷா காருண்யா சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் உதவியோடு தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு' என்ற பெயர் பலகையை பொருத்தியுள்ளனர்.
அதை, பால் தினகரனின் பிறந்த நாளில் திறக்க முடிவு செய்தனர். நல்லுார் வயல் மக்களின் எதிர்ப்பு காரணமாக, பெயர் பலகை சுவரில் இருந்து அகற்றப்பட்டது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*நாம் வைக்கும் வணக்கத்தில் எத்தனை வகைகள் உள்ளன? அவற்றின் பயன்கள் என்ன?*
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்...
பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் (Namaskar) செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் 'பிரணாமங்கள்' அல்லது 'வணக்கங்கள்' (Namaste) என்றழைக்கப்படுகின்றன.
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன.
அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
1) அஷ்டாங்கணம்
- உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
கடந்த 2020-ம் ஆண்டில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல்: மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
கடந்த 2020-ம் ஆண்டில் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் கடந்த 2020-ம்ஆண்டில் 5,133 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 46 பேர் இறந்தனர்.
டெல்லி வன்முறை : தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது
டெல்லியில் டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில், தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த மோதல், செங்கோட்டையில் சீக்கிய மத கொடியை ஏற்றியது போன்ற சம்பவங்களில் தீப் சித்து இடம்பெற்றிருந்தது வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
தீப் சித்து உள்பட 8 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று டெல்லி காவல்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.
புதுடில்லி: காங்., மூத் தலைவரான குலாம் நபி ஆசாத், கட்சிக்காக மட்டும் அல்லாமல் நாட்டிற்காக கவலைப்பட்டவர் என அவரது பிரிவு உபசார விழாவில் ராஜ்யசபாவில் நடந்த உரையில் பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.
காஷ்மீரை சேர்ந்த காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 15ல் முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர், சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.
எனவே குலாம் நபி சுாத் மீண்டும் ராஜ்யபசா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை.
இந்நிலையில், ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது.
இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம்.
எனவே நம்மேல் கருணைகொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு மற்றோர் உருவம் எடுத்துக் கொண்டது.
அவ்வுருவத்தின் தலையாக வேதத்திலுள்ள திரிவ்ருத் மந்திரமும், கண்களாக காயத்திரி மந்திரமும், உடலாக வாமதேவ்யம் எனும் வேதப்பகுதியும், இரு இறக்கைகளாக பிருகத்-ரதந்தரம் ஆகிய வேதப்பகுதிகளும், கால்களாக வேதத்தின் சந்தங்களும், நகங்களாக திஷ்ண்யம் எனும் வேதப்பகுதியும்,