திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் அருகேயுள்ள கொத்தப்புள்ளி “கதிர் நரசிங்கப் பெருமாள்’’ பக்தனுக்கு நலமும் சுகமும் அருளும் வழங்கிக்கொண்டிருப்பவர்.
பலர் சேர்ந்து வாழும் இடத்தினை பள்ளி என அழைப்பார்கள். கொத்த என்றால் புதிய என்பது பொருளாகும். 🙏🇮🇳3
புதியதாக பலர் சேர்ந்து வாழும் இடம் கொத்தப்பள்ளி என வழங்கப்பட்டது. ரெட்டியர் சத்திரம், கோபிநாதசாமி கோவில் அமையக் காரணமாயிருந்த கோபிநாதனும் ஆந்திரத்து பெல்லாரி பகுதியிலிருந்து முதன் முதலாக வந்து குடியேறியது இவ்வூருக்கு அருகில் உள்ள மலைப்பகுதி அடிவாரமாகும். 🙏🇮🇳4
அவர்களைக் காப்பாற்றியது அவர்களால் நரசிம்மர் என அழைக்கப்பட்ட திருமால் ஆகும். பெல்லாரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த திருமால் வழிபாடும் நரசிம்மர் வழிபாடும் பேரளவில் இங்கு பதிந்து கதிர் நரசிங்கப் பெருமாள் கோவில் என அழைக்கப்பட்டது.
🙏🇮🇳5
கோவில் கருவறையில் கதிர்நரசிங்க பெருமாள், கமலவல்லி தாயார் லட்சுமியுடன் நின்றவாறு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு துணையாக சிவன் சுயம்பு லிங்கமாக உடனிருக்கிறார். 🙏🇮🇳6
சிவனும், பெருமாளும் ஒரே இடத்தில் காட்சி தரும் தலம் கொத்தப்புள்ளி கதிர் நரசிங்கப் பெருமாள் திருக்கோவிலாகும்.
கருவறைக்கு முன் அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்ளன. கருவறையைச்சுற்றி சிறிய உள் பிரகாரம் உள்ளது. 🙏🇮🇳7
கருவறை சுவற்றுக்கும் வெளியே உள்ள சுவற்றையும் இணைக்கும் கூடு போன்ற தளஅமைப்பு உள்ளது. வெளி வரும்போது மணி மண்டபம், உள்ளே முன்பக்கத்தில் இரண்டு துவார பாலகர்கள் உள்ளனர். இந்தக் கட்டிடக்கலை நாயக்கர் காலத்து கட்டுமான அமைப்புபோல் உள்ளது.
🙏🇮🇳8
சந்நதிக்கு நேர் எதிரில் கருடாழ்வார் காட்சி தருகிறார். வெளிப்பிராகாரத்தில் கோயிலின் முன்புறத்தில், பிரமாண்டமான நீள்சாலை வடிவ ராஜகோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறத்தில் அனுக்கிரக பைரவர், இடதுபுறம் வீரமகா ஆஞ்சநேயர், யோக ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், 🙏🇮🇳9
தனிக்கோவில் தாயார் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் சந்நதிகள் வடக்குப்புற மதில் சுவரில் சொர்க்கவாசல் ஆகியவை அமைந்துள்ளன. ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் “வாக்தேவி” யான சரஸ்வதி தேவிக்கே குரு என அழைக்கப்படும் லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. 🙏🇮🇳10
வடக்கு நோக்கி காட்சி தரும் இவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபட்டால், கல்விச் செல்வம் பெருகும். ஆவணி திருவோணத்தன்று, ஹயக்ரீவருக்கு சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. 🙏🇮🇳11
படிப்பை முதலில் துவங்கும் குழந்தைகளும், கலைகளிலும், கல்வியிலும் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களும் அதிக அளவில் இவரை வழிபடுகின்றனர்.
தனிக்கோவில் தாயார் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் என்ற பெயரோடு கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள் வழங்குகிறாள். 🙏🇮🇳12
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஆடி, தை மாத வெள்ளிக் கிழமைகள் சிறப்பு வழிபாட்டு நாட்களாக உள்ளன. சக்தி பொருந்தியவராக விளங்கும் ஸ்ரீ சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வார், கிழக்கு நோக்கி சதுர சிலா பலகையில் தேவர்களுடன் எழுந்தருளி அருள்வழங்குகிறார்.
🙏🇮🇳13
சுதர்சனரின் மேல்புறம் இரண்ய சம்ஹார நரசிம்மரும், கீழ்புறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரும் சுற்றிலும் எட்டு திக்குகளையும் காவல் காக்கும் வகையில் கருடன் பெருமாள் உபய நாச்சிமாரோடும் தேவதா சக்தி புருஷர்களும் எழுந்தருளியுள்ளனர். 🙏🇮🇳14
கோர்ட்டு, வழக்கு, வாகனத் தினால் வரும் விபத்து ஆகியவற்றில் இருந்து இவரை வணங்கி சாதகமான பலன் பெறுகின்றனர். தீராத வழக்குகள் கூட தீர்ந்து சாதகமாக முடிவதாகச் சொல்லப்படுகிறது. 🙏🇮🇳15
பலன் பெற்றவர்களும், பலன் வேண்டுபவர்களும் ஒவ்வொரு சித்திரை நட்சத்திர நாளில், விசேஷ திருமஞ்சனம் செய்கின்றனர்.
மேற்கு நோக்கிய சக்கரத்தாழ்வார் பின்புறத்தில் நான்கு வேதங்களே தேவர்களாக இருந்து நரசிம்மரை வழிபடுகின்றனர். 🙏🇮🇳16
நரசிம்மரை வழிபடு
வதால் எதிரியின் ஆக்ரோஷம் குறையும். செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் பொடி, சந்தனம், இளநீர், பால் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்து காரியத் தடைகள் நீங்கி பலன் பெறுகின்றனர்.
🙏🇮🇳17
திருக்கோவிலின் க்ஷேத்திர பாலகர் என்ற அந்தஸ்தில் தெற்கு நோக்கி அனுக்ரக பைரவராக நின்ற கோலத்தில் அருளுகிறார், பொதுவாக, அவருக்குப் பின்னால் ஒரு நாய் இருந்தாலும் இருக்கும். இல்லாமலும் போகலாம். 🙏🇮🇳18
ஆனால், தீயதை அழித்து நல்லதை அருளுவதற்காக அவருக்கு பின்புறம் இரட்டை நாய்கள் துணையாகயுள்ளன.
இரட்டை நாய்களும் கிழக்கு - மேற்கு திசைகளை நோக்கி இருக்கின்றன. பைரவருக்கே உரியது எனச் சொல்லப்படும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிறப்பாகக் நடத்தப்படுகிறது. 🙏🇮🇳19
தங்கள் தொழில்ரீதியான பலன்களைப் பெற்று வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் அதிகஅளவில் வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலத்திலும், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை 12 விளக்குகள் ஏற்றி வழிபடுவது, 🙏🇮🇳20
இந்தச் சந்நதியின் வழிபாட்டு முறையாகக் கொள்ளப்பட்டுள்ளது.
திருக்கோவிலின் வாயு மூலையில் இருப்பதற்கு பதிலாக அக்னி மூலைப் பகுதியில் வீரமகா ஆஞ்சநேயர் இருப்பது இங்கு சிறப்பாகும். பெருமாளின் பக்தர்களின் குறைதீர்க்க மிக்க ஆர்வம் கொண்டவராக ஆஞ்சநேயர் கருதப்படுகிறார். 🙏🇮🇳21
ஆஞ்சநேயரின் உடல்பகுதி கிழக்கு நோக்கியும், தலை வடக்கு நோக்கியும் உள்ளது. ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் எனப்படும் வீரநடை போட்டபடி ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.🙏🇮🇳22
பண்டைக்காலத்தில் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவில், காலப்போக்கில் கன்னிவாடி ஜமீந்தார்கள் பராமரிப்பில் இருந்தது. இந்த, கதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டால் ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
🙏🇮🇳23
கதிர்நரசிங்கப் பெருமாள் கோவிலின் சிறப்பாகக் கருதப்படுவது நெய்தீபம் ஏற்றுவதுதான். எண்ணெய் ஊற்றி இங்கு தீபம் ஏற்றுவதில்லை. திருமணத் தடை நீங்கவும், கணவர் பெற வேண்டியும் மன அழுத்தம் குறையவும், கவலைகள் நீங்கவும் ஏராளமான பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.🙏🇮🇳24
சித்திரைத் திருநாள் வருடப் பிறப்பு, நரசிம்ம ஜெயந்தி ஆடி மாதம் 18-ம் நாள் ஆஞ்சநேயர் சிறப்புத் திருமஞ்சனம், ஆவணி மூலம் ஹயக்ரீவர் திருமஞ்சனம், கோகுலாஷ்டமியன்று உறியடி உற்சவம், புரட்டாசி 3-வது சனிக்கிழமை பூஜை, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி பைரவருக்கான தேய்பிறை அஷ்டமி பூஜை, 🙏🇮🇳25
திருக்கல்யாண உற்சவம் ஆகியவை கோவிலின் முக்கிய திருநாட்கள் ஆகியவை நடைபெறுகிறது.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகள் மிகவும் முக்கியம் வாய்ந்தது. முதல் வாரம் பெருமாள், ஆஞ்சநேயருக்கு சந்தனக் காப்பு, 2-வது வாரம் வெண்ணெய் காப்பு, 3-வது வாரத்தில் பெருமாள் ஏகாந்த சேவை, 🙏🇮🇳26
ஆஞ்சநேயர் காய்கறி அலங்காரமும், பெருமாள் செங்கமலவல்லி தாயார்-திருக்கல்யாண உற்சவம், 4-வது வாரம் ஆஞ்சநேயர், பெருமாளுக்கு பழ அலங்காரம். 5-வது வாரத்தில் ஆஞ்சநேயர், பெருமாள்-புஷ்ப அலங்காரம் ஆக 5 புரட்டாசி சனிவார உற்சவம் நடத்தப்படுகிறது.
🙏🇮🇳27
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில், பழனி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கதிர் நரசிங்கப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழனி செல்லும் பொதுமக்கள், பக்தர்கள் கதிர் நரசிங்கப் பெருமாளை தரிசித்து வருகின்றனர். 🙏🇮🇳28
குறிப்பாக ஆஞ்சநேயரின் அருளைப் பெற சனிக்கிழமைதோறும் இங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. திருக்கோவிலில் தினமும் காலை 7 ½ மணி முதல் இரவு 7.00 மணிவரை தரிசன நேரங்களாகும்.
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த "சாமியார்" என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.
தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர்
பெரியார் பற்றிப் பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரிய வழக்கு: பாடநூல் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பெரியார் பற்றிப் பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரிய வழக்கில் பாடநூல் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்புப் பாடநூலிலும், கல்லூரிப் பாடத் திட்டத்திலும் பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் "தெற்காசிய சாக்ரடீஸ்" என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தவறான தகவலை நீக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு உண்மை தெரிந்து விடுமோ என எதிர்க்கட்சிகளுக்கு அச்சம்: மோடி
புதுடில்லி: வேளாண் சட்டங்கள் குறித்து காங்., பொய்களை பரப்புவதாகவும், சட்டங்களுக்கு வர்ணம் பூசி விமர்சனம் செய்வதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும்.
சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில் இந்தியாவை எங்கு அழைத்து செல்ல விரும்புகிறோம் என்ற புதிய தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். தன்னிறைவு பெற்ற இந்தியாவை முன்னெடுத்து செல்வதை நாம் யோசிக்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியுள்ளது
*நாம் வைக்கும் வணக்கத்தில் எத்தனை வகைகள் உள்ளன? அவற்றின் பயன்கள் என்ன?*
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்...
பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் (Namaskar) செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் 'பிரணாமங்கள்' அல்லது 'வணக்கங்கள்' (Namaste) என்றழைக்கப்படுகின்றன.
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன.
அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
1) அஷ்டாங்கணம்
- உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
கடந்த 2020-ம் ஆண்டில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல்: மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
கடந்த 2020-ம் ஆண்டில் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் கடந்த 2020-ம்ஆண்டில் 5,133 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 46 பேர் இறந்தனர்.