புதுடில்லி: காங்., மூத் தலைவரான குலாம் நபி ஆசாத், கட்சிக்காக மட்டும் அல்லாமல் நாட்டிற்காக கவலைப்பட்டவர் என அவரது பிரிவு உபசார விழாவில் ராஜ்யசபாவில் நடந்த உரையில் பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.
காஷ்மீரை சேர்ந்த காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 15ல் முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர், சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.
எனவே குலாம் நபி சுாத் மீண்டும் ராஜ்யபசா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை.
இந்நிலையில், ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது.
ஆசாத்துக்கு சல்யூட் அடித்த மோடி
அப்போது, அவர்களை பாராட்டி மோடி உருக்கமாக பேசியதாவது:
குலாம் நபி ஆசாத்தை உண்மையான நண்பனாக கருதுகிறேன். அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் கவலைப்பட்டவர்.
அவரது இடத்திற்கு வரும் புதிய தலைவரால், குலாம் நபியின் பணியை நிரப்ப முடியாது. இவர் அவையை விட்டு போனாலும் அவரது அறிவுரகைள் , கருத்துக்கள் என்றும் தேவைப்படும். அவருக்கு நான் தலைவணங்குகிறேன், என கண்கலங்கியவாரே பேசினார்.
மேலும் " ஆசாத் சல்யூட் " என நெற்றியில் கை வைத்து அடித்து காட்டினார். இந்நேரத்தில் அவையில் உறுப்பினர்கள் பலரும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டனர்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த "சாமியார்" என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.
தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர்
பெரியார் பற்றிப் பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரிய வழக்கு: பாடநூல் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பெரியார் பற்றிப் பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரிய வழக்கில் பாடநூல் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்புப் பாடநூலிலும், கல்லூரிப் பாடத் திட்டத்திலும் பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் "தெற்காசிய சாக்ரடீஸ்" என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தவறான தகவலை நீக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு உண்மை தெரிந்து விடுமோ என எதிர்க்கட்சிகளுக்கு அச்சம்: மோடி
புதுடில்லி: வேளாண் சட்டங்கள் குறித்து காங்., பொய்களை பரப்புவதாகவும், சட்டங்களுக்கு வர்ணம் பூசி விமர்சனம் செய்வதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும்.
சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில் இந்தியாவை எங்கு அழைத்து செல்ல விரும்புகிறோம் என்ற புதிய தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். தன்னிறைவு பெற்ற இந்தியாவை முன்னெடுத்து செல்வதை நாம் யோசிக்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியுள்ளது
*நாம் வைக்கும் வணக்கத்தில் எத்தனை வகைகள் உள்ளன? அவற்றின் பயன்கள் என்ன?*
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்...
பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் (Namaskar) செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் 'பிரணாமங்கள்' அல்லது 'வணக்கங்கள்' (Namaste) என்றழைக்கப்படுகின்றன.
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன.
அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
1) அஷ்டாங்கணம்
- உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
கடந்த 2020-ம் ஆண்டில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல்: மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
கடந்த 2020-ம் ஆண்டில் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் கடந்த 2020-ம்ஆண்டில் 5,133 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 46 பேர் இறந்தனர்.