இன்னைக்கு ஏற்கனவே நிறைய கிண்டில் பதிவு வந்துட்டதுனால நானும் போட்டு வைக்கிறேன்.
‘ எப்படிங்க இவ்வளவு நூல் வாசிக்கிறீங்க?’ அப்படினு நிறைய பேர் கேட்டுருக்காங்க. அதுக்கு முக்கிய காரணம் diverse medium தான். அதாவது நான் கிண்டில், ஒலி நூல், அப்பப்ப அச்சு நூல்னு எல்லாமே படிப்பேன்.
அதுனால தான் நிறைய படிக்க முடியுது. அதே அச்சு நூல் மட்டும் தான் படிப்பேன்னு படிச்சா இப்ப படிக்கிறதுல கால்வாசி கூட என்னால படிக்க முடியாது.
அடுத்து, நான் தூங்கறதுக்கு முன்னாடி சில பக்கங்களாவது படிச்சிட்டு தான் தூங்குவேன்.
வீட்டுல இருக்க யாரையும் தொந்தரவு செய்யாம படிக்க கிண்டில் தான் நல்ல வழி. தூக்கம் வர வரைக்கும் படிச்சிட்டு தூங்கலாம். அதுவும் வீட்டுல சின்னக் குழந்தைங்க இருக்காங்கனா கண்டிப்பா அச்சு நூல் படிக்கிறத விட நாம கிண்டில் நூல் படிக்கிறது எளிதா இருக்கும்.
அடுத்து, நூலோட எடை. சில தமிழ் நூல்கள் எல்லாம் படுத்துட்டு படிச்சா கை வலிக்கும். பக்கத்துல வச்சு மட்டும் தான் படிக்கவே முடியும். அதுனாலயே இப்ப எல்லாம் அச்சு நூல் படிக்கிறது இல்ல. உடல் சோர்வடையும் போது படிக்கிறதுல மனசு நிக்காது.
அதே கிண்டில் கருவில படிக்கும் போது வேற எந்த இடையூறும் இல்லாததுனால ரொம்ப நேரம் தொடர்ந்து படிக்க முடியும்.
நிறைய தமிழ் நூல்களோடு அச்சு வடிவம் ரொம்ப மோசமான காகிதத்துல நெருக்க நெருக்கமா அச்சடிக்கப்பட்டிருக்கு. அதெல்லாம் படிக்கிறதா விட கிண்டில்ல படிச்சா படிக்கிறது நல்லா இருக்கு.
எனக்கு நாய்க்காது வைக்கறது, நூல்ல கிறுக்கறது, நூலை மடக்கறதுனு எதுவும் செய்யப்பிடிக்காது. நூல் கசங்காம படிப்பேன். கிண்டில்ல அந்தப் பிரச்சனையே இல்லை. நூலை கசக்காமலே எங்க வேணாலும் எடுத்துட்டு போய் படிக்கலாம். நூலோட பக்கங்கள மடக்காமலோ, இடையில Bookmark வைக்காமலோ
பக்கங்களை highlight செஞ்சு வைக்கலாம். அதே மாதிரி வரிகளையும் மேற்கோள் காட்டி வைக்கலாம்.
பயணம் செய்யும் போது தூக்கிட்டு போறதுக்கு படிக்கிறதுக்கு எல்லாம் கிண்டில் ரொம்ப நல்லா இருக்கு.
இவ்வளவு விலை கொடுத்து கிண்டில் கருவி வாங்கலாமா அப்படினு யோசிக்காதீங்க.
வருசம் 20 நூல் படிப்பீங்கனாலே தைரியமா வாங்கலாம். முன்னாடி எல்லாம் தமிழ் நூல்கள் கிண்டில்ல இல்ல. இப்போ மெதுவா எல்லா நூலும் வந்துட்டு இருக்கு. அதுனால அந்தப் பிரச்சனையும் இல்லை.
கிண்டில் கருவியைப் பயன்படுத்தாமலே, ‘ காகித நூல் தான் நல்லது. வாசமா இருக்கும்’. அப்படினு எல்லாம் சிந்திக்காம கிண்டில வாங்கிப் பாருங்க.
- சுபாஷிணி சிவா
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மணமுறிவு மனமுறிவு அல்ல!
*
எனக்கு தெரிந்த நண்பனின் அக்கா அவர். திருமணம் ஆகி சில மாதங்களில் கணவர் இன்னொரு உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறார் என்று தெரிந்து விவாகரத்து வாங்கினார். என் உறவுக்கார பெண் இதே போன்றொரு காரணத்திற்காக உயிரையே விட்டார்.
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், தனது ஒரே மகளுக்கு மிக ஆடம்பரமாக செய்துவைக்கப்பட்ட திருமணம் தோல்வியுற்று, திருமணம் ஆன சில வருடங்களிலேயே பெண் தனியாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இன்னொரு பெண் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் குழந்தை இருக்கிறது. ஆனால், விவாகரத்து ஆகி விட்டது
மேற்கூறிய உதாரணங்கள் போல பல பெண்களின் வாழ்க்கையை நீங்களும் பார்த்திருக்கலாம். திருமணம் என்பது இன்னமும் நம் ஊரில் ஒரு மிகப்பெரிய நிகழ்வு. 25 வயதை கடந்துவிட்டால் பெண்ணுக்கும், 30 ஐ நெருங்கிவிட்டால் ஆணுக்கும் திருமணம் முடிக்கவேண்டுமே என்ற பாரம் பெற்றோர்களை நெருக்குகிறது.
இந்த வாழ்க்கையில் இருப்பதிலேயே ஆக விருப்பமானதென்றால் சினிமா பார்ப்பது மட்டுந்தான். பள்ளிக்கூட நாட்களில் இருந்தே தினமும் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவன் நான். ஒரு சிறுநகர இளைஞனுக்கு சினிமா கொடுக்கும் கனவுகள் அசாதாரணமானவை.
அந்தக் கனவுகள் தான் சினிமாவைத் தேடி இத்தனை தூரம் ஓடிவர வைத்துள்ளது. சினிமாவை ஒரு பார்வையாளனாக இருந்து அணுகுவதற்கும் எழுத்தாளனாய் அணுகுவதற்குமான வேறுபாடுகள் உள்ளன. ஒரு வயதில் எதையெல்லாம் ரசிகனாய் ரசித்துக் கொண்டாடினேனோ அதையெல்லாம் மறுதலிக்க வேண்டிய யதார்த்தம் உரைத்தது.
வெகுஜன ரசனையின் வாயிலாகத்தான் தமிழ் சமூகம் பெரும்பாலான விஷயங்களை கண்மூடித்தனமாக நம்புக்கிறது. தமிழ் சமூகத்திலிருந்து தமிழ் சினிமாவை ஒருபோதும் நம்மால் பிரித்தெடுக்க முடியாது.
இந்நிலை எந்தக் குடும்ப ஆண்களுக்கும் நேர்வதில்லை. வீட்டில் வெளியில் பேரண்டிங் பொறுப்பு பெண்கள் டிப்பார்ட்மெண்ட் என்று விருந்தாளி மாதிரி வசிப்பவர்கள் ஆண்கள்.
படி இறங்குனா ஆல்வேஸ் அவைலபிள் பேச்சிலர்ஸ். இலக்கியக் கூட்டம் புத்தகச் சந்தைக்குத் தன் பிள்ளைகளை அழைத்துவரும் ஆண் இலக்கியவாதிகளை நான் பார்த்ததில்லை. நண்பர்களுடன் உல்லாசப் பயணத்தை 200% உல்லாசப் பயணமாய் அனுபவிப்பர்.
குடும்பம், குழந்தை நினைப்பு எல்லாம் வீட்டு வாசலை மிதிக்கும் போதுதான் வரும்.
நண்பர்களுடன் உல்லாசப் பயணத்திலும் பெண்கள் குழந்தைகளைக் காலில் கட்டிக் கொண்டு போனால் அது உல்லாசப் பயணமாகுமா? குழந்தைகள் இல்லாமல் போனால் ஆண்களுக்கு இல்லாத கில்ட்டி பெண்களுக்கு ஏன் வருகிறது?
சோழர்களை பற்றி அதிகம் படித்து சேரர்களை பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் படிக்கவேண்டியது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய 'சாகித்திய அகாடமி'விருது பெற்ற நூல் 'சேரமான் காதலி'.
இந்நாவல் மூன்றாம் சேரமான் பெருமாள்(கிபி 798- 838 )என்ற பாஸ்கர ரவிவர்மன் மன்னை பற்றியதே.
இவர் இரண்டாம் சேரமான் பெருமாளின் மைத்துனன் மகன் மற்றும் தளபதியாக இருந்தவன். 2ம் சேரமான் பெருமாள் 47 ஆண்டுகள் ஆட்சி செய்து பின்னர் முடி துறந்து சென்ற இவர் தான் பன்னிரு ஆழ்வார்களில் ஓருவரான 'குலசேகர ஆழ்வார்' இவரே,
இவருக்கு பிறகு இவரது மகன் மார்த்தாண்டவர்மன் ஆட்சிக்கு வந்ததும் அவரை உள்நாட்டு கலகப் போரில் வீழ்த்தி சேர நாட்டை இரண்டாக பிரித்து ஆண்டவர் தான் 3ம் சேரமான்.இக்கதை முக்கியமாக தமிழக மூவேந்தர்களில் ஒருவர் தனது காதலிக்காக இஸ்லாம் மதத்தை தழுவி இறுதி காலகட்டத்தில் உயிர் நீத்தவர்.