மணமுறிவு மனமுறிவு அல்ல!
*
எனக்கு தெரிந்த நண்பனின் அக்கா அவர். திருமணம் ஆகி சில மாதங்களில் கணவர் இன்னொரு உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறார் என்று தெரிந்து விவாகரத்து வாங்கினார். என் உறவுக்கார பெண் இதே போன்றொரு காரணத்திற்காக உயிரையே விட்டார்.
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், தனது ஒரே மகளுக்கு மிக ஆடம்பரமாக செய்துவைக்கப்பட்ட திருமணம் தோல்வியுற்று, திருமணம் ஆன சில வருடங்களிலேயே பெண் தனியாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இன்னொரு பெண் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் குழந்தை இருக்கிறது. ஆனால், விவாகரத்து ஆகி விட்டது
மேற்கூறிய உதாரணங்கள் போல பல பெண்களின் வாழ்க்கையை நீங்களும் பார்த்திருக்கலாம். திருமணம் என்பது இன்னமும் நம் ஊரில் ஒரு மிகப்பெரிய நிகழ்வு. 25 வயதை கடந்துவிட்டால் பெண்ணுக்கும், 30 ஐ நெருங்கிவிட்டால் ஆணுக்கும் திருமணம் முடிக்கவேண்டுமே என்ற பாரம் பெற்றோர்களை நெருக்குகிறது.
நவீன யுகத்தில், காதல் திருமணங்கள் அதிகரித்து இருக்கவேண்டும் என்று பார்த்தால், இன்னமும் இங்கே பெற்றோர்கள் பார்த்துவைக்கும் "நிச்சயித்த திருமணம்" தான் அதிகமாக இருக்கிறது.
காதல் என்பது இயல்பாக எல்லோருக்கும் தோன்றினாலும், திருமணம் என்று வரும்போது பல்வேறு காரணங்களால் அது கைக்கூடாமல் போய்விடுகிறது. பெண்களை இன்னமும் "குடும்ப கவுரமாக" பார்க்கும் பார்வையும் இருக்கிறது. நீ சாதி/மதம் மாறி அல்லது தகுதி குறைந்த இடத்தில் திருமணம் செய்துக்கொண்டால்
நம் குடும்ப கவுரவம் என்னாவது? உன் தம்பி தங்கை வாழ்க்கை என்னாவது? என இன்னமும் நாம் பெண்களை எமோஷனல் பிளாக்மெயில் செய்து "குடும்ப சொத்தாக" தான் வைத்திருக்கிறோம். பெண்களை பொறுத்தவரை, திருமணம் என்ற விஷயத்தில் ஆண்களை விட அவர்களுக்கு நிறைய கெடுபிடிகள் இருக்கிறது.
மேற்சொன்ன, வயதை கடந்தவுடன், “உடனே திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற உந்துதலில், படித்த, நல்ல வேலையில் இருக்கும், அதே சாதியை சேர்ந்த பையனை பார்த்து, கூடவே ஜாதகம் பொருந்தி வந்தால் உடனே பேசி முடித்து விடவேண்டும்”. இந்த வரையறைக்குள் மாப்பிள்ளையை பார்த்து கட்டி வைத்துவிடவேண்டும்.
இது தான் பல பெற்றோர்களின் கனவாக இருக்கிறது. இப்போது, மேற்சொன்ன விவாகரத்தான பெண்கள் பெரும்பாலும் இப்படிப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துவைத்தவர்கள் தான் என்பது கசப்பான உண்மை. இதில் உள்ள பெண்கள் யாருமே, திருமண உறவு முடிந்துவிட்டது, வாழ்க்கையே போய்விட்டது என்று சுணங்கவில்லை.
மாறாக, தங்களுக்கான ஒரு சுய வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். மீண்டும் படித்தார்கள், வேலையில் சேர்ந்தார்கள், சுயதொழில் புரிந்தார்கள். தங்களது குழந்தைகளை சுயமாகவோ, பெற்றோர்களின் துணைக்கொண்டோ வளர்த்து வருகிறார்கள். நம் ஊரில், இம்மாதிரி பல பெண்கள் இருக்கிறார்கள்.
திருமணம் ஆகி சில ஆண்டுகளில் கணவனை இழந்த பெண்கள் சிலரை நான் என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். கையில், சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு..அப்பெண்கள் தங்கள் வாழ்க்கையை அந்த குழந்தைகளுக்காக அர்ப்பணித்துக்கொள்வார்கள்.
எனக்கு தெரிந்த சில பெண்கள், தங்கள் குழந்தைகளை அருமையாக வளர்த்து, படிக்கவைத்து, பெரிய வேலைகளில் உட்கார வைத்து, கல்யாணம் செய்து, பேரன் பேத்திகளை பார்த்துக்கொண்டு வாழ்கிறார்கள். தங்கள் குடும்பம் மட்டுமே உலகம். அல்லது, அப்படி அவர்கள் தங்கள் உலகத்தை மாற்றிக்கொள்கிறார்கள்.
விதவை மறுமணம் என்பது இங்கே நடக்கிறது. இந்த வகையில் ஆண்களும் குழந்தைக்காக திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லவேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு இல்லை.
திருமணத்திற்கு முன்பே, பெண்ணுக்கு தன் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை இன்னும் நாம் வழங்காத போது, மறுமணம் என்பது மேலும் சிக்கலாக இருக்கிறது. அதுவும் முதல் திருமணம் காதல் திருமணமாக இருந்து தோற்றுவிட்டால், அதையே சொல்லிக்காட்டி,
அடுத்த திருமணம் நாங்கள் சொன்னபடி தான் நடக்கவேண்டுமென்றும்.. சாதியை விட்டு சாதி மாறிவிடக்கூடாது என்றும் நிபந்தனை போடும் பெற்றோர்கள் இன்னமும் இருப்பது வேதனையான உண்மை. ஒரு ஆணுக்கோ, ஒரு பெண்ணுக்கோ தன் பிள்ளைகளை தாண்டி, தன் அப்பா அம்மாவை தாண்டி, ஒரு துணை எக்காலத்திலும் தேவைப்படுகிறது.
இது தான் இயற்கை. அது உடல் சார்ந்தது மட்டுமல்ல. மனம் சார்ந்தது கூட.
இந்த விஷயத்தில் நாம் மேற்குலக நாடுகளை எடுத்துக்காட்டாக கொள்ளவேண்டும். அங்கே திருமணத்திற்கு வயது ஒரு தடை அல்ல. திருமணம் (Companionship) என்பதே ஒரு "Mutual Respect" என்பதாக அங்கே இருக்கிறது.
ஒரு பெண் தனது துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அங்கே இருக்கிறது. அது திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்கு பின்பும் சரி. கணவன் இறந்துவிட்டாலோ, கைவிட்டுவிட்டாலோ ஒரு பெண் அங்கே துவண்டு போய்விடுவதில்லை. அதற்கு என்னென்ன காரணம் என்று பார்த்தால்..
அங்கே, நம் ஊரை போன்ற குடும்பம் என்று பிடிமானம் கிடையாது. உடனே, அவர்கள் பாசமற்றவர்கள் என்றோ, இரக்கமில்லாதவர்கள் என்றோ அர்த்தமில்லை. நம் ஊரை விட, தங்களது வயதான பெற்றோர்களை பார்த்துக்கொள்ளும் பிள்ளைகள் அங்கே இருக்கிறார்கள்.
ஆனால், நம் ஊருக்கும் அந்த நாடுகளுக்கும் இருக்கும் வித்தியாசம்.. "Respect for Individual Freedom" என்று சொல்லலாம். அதாவது, தனி நபர் சுதந்திரம். ஒருவனது வாழ்க்கைக்கு அவன் மட்டுமே பொறுப்பாகிறான். ஒரு மனிதன் தன்னை தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் பண்பாடாக இருக்கிறது.
இதனால், பள்ளிப்படிப்பு முடியும் தருவாயிலேயே பெற்றோரை சாராமல் பிள்ளைகள் வாழ்கிறார்கள். பெற்றோர்களுக்கும் அவர்களுக்கான வாழ்க்கை வாழ ஒரு வெளி கிடைக்கிறது. இந்த வெளி நம் ஊர் பெற்றோர்களுக்கு கிடையாது.
கல்யாணம் ஆகி, குழந்தைப்பேறில் ஆரம்பித்து குழந்தை படிப்பு, வேலை, கல்யாணம், பேரன், பேத்தி என எல்லாவற்றையும் சுமக்கும் பொறுப்பு அவர்களிடம் வந்துவிடுகிறது. அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் இதனூடே தான் வாழவேண்டி இருக்கிறது. இதில், இருவர் ஒருவர் ஆகும்போது பிரச்சனை இன்னும் பெரிதாகுகிறது
இதெல்லாம் நம்ம ஊருக்கு ஒத்துவராதுங்க.. நம்ம கலாச்சாரம் என்னாவது, நம் பண்பாடு என்னாவது என்று கேள்விகள் எழும்.
ஒரு சமூகத்தை அடிமைப்படுத்தி கலாச்சாரத்தை காப்பதற்கு, மேற்கு நாடுகளில் இருக்கும் தனி நபர் சுதந்திரம் எவ்வளவோ மேல்.
"ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்." என்கிறார் பெரியார்.
இளவயதில் கணவனை இழந்தாலோ அல்லது ஒரு கசப்பான திருமண முறிவோ ஏற்பட்டால் பல பெண்கள் தங்களது வாழ்க்கையை சுருக்கிக்கொள்கிறார்கள். இனி இந்த வாழ்க்கை எனக்கானது அல்ல, என் பிள்ளைக்கானதும், என் குடும்பத்துக்கானதும் என்று மாற்றிக்கொள்கிறார்கள்.
தங்கள் குடும்பத்தை தாண்டியும் "தங்களுக்கான" ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று இவர்கள் யோசிப்பதில்லை. தங்களது கூட்டை விட்டு இவர்கள் வெளியே வர விரும்புவதில்லை.
நம் ஆணாதிக்க சமூகமும் இதற்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. சமூகம் மாற காலம் ஆகலாம்.
ஆனால், பெண்கள் தங்களது வாழ்க்கையை தாங்களே பார்த்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் தடைகளை உடைத்து பெண்கள் வளர வேண்டும்.
என்றைக்கு பெண்கள் ஒரு ஆணை சாராமல் தன் வாழ்க்கையை தானே பார்த்துக்கொள்ள/ அமைத்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்களோ
அன்று தான் ஒரு சமூகம் வளர்ந்த சமூகம் ஆகிறது. பெண்கள் வளர்ந்த ஒரு சமூகம், நிச்சயமாக சிறந்த சமூகமாக தான் இருக்கும்.
- ராஜராஜன் ராஜமகேந்திரன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்னைக்கு ஏற்கனவே நிறைய கிண்டில் பதிவு வந்துட்டதுனால நானும் போட்டு வைக்கிறேன்.
‘ எப்படிங்க இவ்வளவு நூல் வாசிக்கிறீங்க?’ அப்படினு நிறைய பேர் கேட்டுருக்காங்க. அதுக்கு முக்கிய காரணம் diverse medium தான். அதாவது நான் கிண்டில், ஒலி நூல், அப்பப்ப அச்சு நூல்னு எல்லாமே படிப்பேன்.
அதுனால தான் நிறைய படிக்க முடியுது. அதே அச்சு நூல் மட்டும் தான் படிப்பேன்னு படிச்சா இப்ப படிக்கிறதுல கால்வாசி கூட என்னால படிக்க முடியாது.
அடுத்து, நான் தூங்கறதுக்கு முன்னாடி சில பக்கங்களாவது படிச்சிட்டு தான் தூங்குவேன்.
வீட்டுல இருக்க யாரையும் தொந்தரவு செய்யாம படிக்க கிண்டில் தான் நல்ல வழி. தூக்கம் வர வரைக்கும் படிச்சிட்டு தூங்கலாம். அதுவும் வீட்டுல சின்னக் குழந்தைங்க இருக்காங்கனா கண்டிப்பா அச்சு நூல் படிக்கிறத விட நாம கிண்டில் நூல் படிக்கிறது எளிதா இருக்கும்.
இந்த வாழ்க்கையில் இருப்பதிலேயே ஆக விருப்பமானதென்றால் சினிமா பார்ப்பது மட்டுந்தான். பள்ளிக்கூட நாட்களில் இருந்தே தினமும் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவன் நான். ஒரு சிறுநகர இளைஞனுக்கு சினிமா கொடுக்கும் கனவுகள் அசாதாரணமானவை.
அந்தக் கனவுகள் தான் சினிமாவைத் தேடி இத்தனை தூரம் ஓடிவர வைத்துள்ளது. சினிமாவை ஒரு பார்வையாளனாக இருந்து அணுகுவதற்கும் எழுத்தாளனாய் அணுகுவதற்குமான வேறுபாடுகள் உள்ளன. ஒரு வயதில் எதையெல்லாம் ரசிகனாய் ரசித்துக் கொண்டாடினேனோ அதையெல்லாம் மறுதலிக்க வேண்டிய யதார்த்தம் உரைத்தது.
வெகுஜன ரசனையின் வாயிலாகத்தான் தமிழ் சமூகம் பெரும்பாலான விஷயங்களை கண்மூடித்தனமாக நம்புக்கிறது. தமிழ் சமூகத்திலிருந்து தமிழ் சினிமாவை ஒருபோதும் நம்மால் பிரித்தெடுக்க முடியாது.
இந்நிலை எந்தக் குடும்ப ஆண்களுக்கும் நேர்வதில்லை. வீட்டில் வெளியில் பேரண்டிங் பொறுப்பு பெண்கள் டிப்பார்ட்மெண்ட் என்று விருந்தாளி மாதிரி வசிப்பவர்கள் ஆண்கள்.
படி இறங்குனா ஆல்வேஸ் அவைலபிள் பேச்சிலர்ஸ். இலக்கியக் கூட்டம் புத்தகச் சந்தைக்குத் தன் பிள்ளைகளை அழைத்துவரும் ஆண் இலக்கியவாதிகளை நான் பார்த்ததில்லை. நண்பர்களுடன் உல்லாசப் பயணத்தை 200% உல்லாசப் பயணமாய் அனுபவிப்பர்.
குடும்பம், குழந்தை நினைப்பு எல்லாம் வீட்டு வாசலை மிதிக்கும் போதுதான் வரும்.
நண்பர்களுடன் உல்லாசப் பயணத்திலும் பெண்கள் குழந்தைகளைக் காலில் கட்டிக் கொண்டு போனால் அது உல்லாசப் பயணமாகுமா? குழந்தைகள் இல்லாமல் போனால் ஆண்களுக்கு இல்லாத கில்ட்டி பெண்களுக்கு ஏன் வருகிறது?
சோழர்களை பற்றி அதிகம் படித்து சேரர்களை பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் படிக்கவேண்டியது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய 'சாகித்திய அகாடமி'விருது பெற்ற நூல் 'சேரமான் காதலி'.
இந்நாவல் மூன்றாம் சேரமான் பெருமாள்(கிபி 798- 838 )என்ற பாஸ்கர ரவிவர்மன் மன்னை பற்றியதே.
இவர் இரண்டாம் சேரமான் பெருமாளின் மைத்துனன் மகன் மற்றும் தளபதியாக இருந்தவன். 2ம் சேரமான் பெருமாள் 47 ஆண்டுகள் ஆட்சி செய்து பின்னர் முடி துறந்து சென்ற இவர் தான் பன்னிரு ஆழ்வார்களில் ஓருவரான 'குலசேகர ஆழ்வார்' இவரே,
இவருக்கு பிறகு இவரது மகன் மார்த்தாண்டவர்மன் ஆட்சிக்கு வந்ததும் அவரை உள்நாட்டு கலகப் போரில் வீழ்த்தி சேர நாட்டை இரண்டாக பிரித்து ஆண்டவர் தான் 3ம் சேரமான்.இக்கதை முக்கியமாக தமிழக மூவேந்தர்களில் ஒருவர் தனது காதலிக்காக இஸ்லாம் மதத்தை தழுவி இறுதி காலகட்டத்தில் உயிர் நீத்தவர்.