இந்தியாவில் உள்ள 18 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் 17 அரசு வசமும், ஒரு ஆலை அம்பானி வசமும் உள்ளன. இந்தியாவின் ஒட்டு மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 74 சதவீதம் அரசு நிறுவனங்களிடமும், 26 சதவீதம் அம்பானியிடம் இருக்கிறது.
இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் அம்பானி நிறுவனம்தான் (60%) முன்னணியில் இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசு அம்பானிக்கு சுங்க வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது.
நாடாளுமன்ற நிலைக்குழு, சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை என அறிவுறுத்தியது
அம்பானிக்கு பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் கிடைக்கும் வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்க விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சுங்கவரிச் சலுகைகளை அளித்து வருகிறோம். எனவே, இச்சலுகைகளைத் திரும்பப் பெற முடியாது” எனக் கூறி, அம்பானிக்கு உதவி செய்தது
பெட்ரோல், டீசல், கேஸ் உள்நாட்டு மக்களுக்கு விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பது பற்றி அக்கறை கொள்ளாத அரசாங்கம், இந்தியப் பெட்ரோலியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் விலை மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்பானி அனுபவித்து வரும் ஏற்றுமதி வரிச் சலுகைகளை நிறுத்த மறுக்கிறது
இந்தியாவில் இருந்து பெட்ரோல் டீசலை இறக்குமதி செய்யும் நேபாள், இலங்கை & பங்களாதேஷில் பெட்ரோல் & டீசல் விலை குறைவாக இருக்க காரணம் மோடியரசு பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதிக்கு அளிக்கும் வரிச்சலுகையும் ஒருவகையில் காரணம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தண்ணீர் தீண்டாமை:
சென்னையில், 80களின் ஆரம்பத்தில் சரியான தண்ணீர் பஞ்சம். திருவல்லிக்கேணியில், வெங்கட்ரங்கம் தெருக்கு கிழக்கில் சேரி, மாட்டாங் குப்பம் & அயோத்தி குப்பம். வெங்கட்ரங்கம் தெருக்கு மேற்கில் TP கோயில் தெரு, பார்த்தசாரதி குளம் & கோவில், பெரிய தெரு – பார்ப்பனர்கள் ஏரியா
பெரிய தெருக்கு மேற்கில் பாய்ங்க ஏரியா.
திகேணியில் pumping station ஐஸ்அவுசில் உள்ளது. அங்கிருந்து தண்ணீர் பைப் லைன், TP கோவில், ஈஸ்வரதாஸ் லாலா தெரு வழியாக கோஷாஸ்பத்திரி (கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை)க்கு போகும். இது மருத்துவமனை தண்ணிர் லைன் என்பதால் எப்போது தண்ணீர் வரும்.
தண்ணீ பஞ்சம் காலத்தில் இந்த இரண்டு தெருக்கள் (TP கோவில், ஈஸ்வரதாஸ் லாலா தெரு) தவிர்த்து வேறு எங்கும் குடிநீர் வராது. அந்த காலத்தில் RO & கேன் நீர் கிடையாது. இந்த தெருவில் இருப்பவர்கள் ஜாதி/ வர்ணம் பார்த்து தான் தங்கள் வீட்டின் அடி பம்பில் தண்ணீர் எடுக்க அனுமதிப்பார்கள்.
Pre-Owned Car
புதுக்கார் வாங்கினால் அதிக செலவாகும், எனவே இருக்கும் பணத்திற்கேட்ப Pre-Owned Car/ Used Car வாங்க நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ்.
பெட்ரோல் கார்கள் எளிமையானவை, பராமரிப்பு செலவு டீசல் கார்களை விட குறைவாக இருக்கும்.
Used car யில் மாருதி சுசூகி, ஹோண்டா, டோயாடா கார்கள் வாங்கவும். Ford, ஸ்கோடா, VW கார்கள் மலிவு விலையில் கிடைத்தாலும் பராமரிப்பது சிரமம். Used காரை தெரிந்தவர்களிடம் வாங்க வேண்டும். பொதுவாக மருத்துவர்கள், அரசு உயர் அலுவலர்கள் கார்கள் நல்ல நிலையில் இருக்கும்.
Used car dealers, இணையம், Authorised car dealers (True Value) etc., வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களிடம் எப்படி கார் வாங்குவது என்பதை பார்ப்போம்.
பழைய தஞ்சை ஜில்லா வில் பெரு நிலக்கிழாராக இருந்தவர்கள் கருப்பையா மூப்பனார்: திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் பகுதியில் நிலங்கள் இருந்தன, துளசிய்யா வாண்டையார்: தஞ்சாவூர், பூண்டி பகுதியில் பகுதியில் நிலங்கள் இருந்தன
வலிவலம் தேசிகர்: நாகப்பட்டினம் கீவளூர் பகுதியில் பகுதியில் நிலங்கள் இருந்தன, குன்னியூர் சாம்பசிவ ஐயர்: மன்னார்குடி பகுதியில் பகுதியில் நிலங்கள் இருந்தன, உக்கடை தேவர், வடபாதி மங்கலத்தார் etc.,
இவர்களின் பண்ணையில் விவசாய கூலிகளுக்கு பல விதமான தண்டனைகள் அளிக்கப்படும் அதில் முதன்மையானது.
சாணிப்பால்: மாட்டுக்கு மருந்து புகட்டும் மூங்கில் குழலில், சாணத்தைக் கரைத்து குடிக்கச் செய்வார்கள்.
சவுக்கடி: சாட்டையின் பிரிகளுக்கு நடுவில் கூழாங்கல்லை வைத்து ரத்தம் சொட்ட அடிப்பார்கள்
கச்சா எண்ணெய் என்றவுடன் எல்லோரும் அமெரிக்கா, ஈராக், ஈரான், சவுதின்னு நினைக்கிற மாதிரி நமது மூளை டியூன் ஆகிவிட்டது. இந்தியாவில் எப்படி, எப்போது யாரால் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. ONGC, IOCL, BHEL, எப்படி உருவாக்கப்பட்டது என பார்ப்போம்.
1860 களில் அசாமில் உள்ள திப்ரூகாட் யில் இருந்து மார்கரீட்டா நிலக்கரி சுரங்கம் இடையே ரயில்பாதை அமைக்கும் போது நிலத்தின் மேற்பகுதியில் கச்சா எண்ணெய் ஊறுவதை அங்கு பணியில் இருந்த பொறியாளர்கள் பார்த்தனர்.
1867 யில் முதல் ஆயில் கிணறு மாக்கமில் தோண்டப்பட்டது. 1859 யில் LP டிரேக் முதல் ஆயில் கிணற்றை அமெரிக்காவில் நிறுவினார். சரியாக 7 ஆண்டுகளுக்கு பின் அசாமில் முதல் ஆயில் கிணறு தோண்டப்பட்டது குறிப்பிடதக்கது.
GST மாநிலரசின் வரிவருவாயை பாதித்துவிட்டது. GST யில் தமிழகத்தின் பங்கை மோடியரசு கொடுக்கவில்லை.
GST யால் மாநிலரசு வரிச்சலுகை கொடுத்து புதிய முதலீடு, தொழிற்சாலைகளை ஈர்க்க முடியாது
மின்கட்டணம் வசூலும் மத்தியரசின் கைகளுக்கு போகிறது.
சரக்கு வாகனங்களுக்கு மாநில அரசு வாங்கிக் கொண்டிருந்த சாலை வரியை இப்போது மத்தியரசு வசூல் செய்கிறது.
தனியார்(white board) வாகனங்களுக்கான சாலை வரியை one India one road tax என மத்தியரசு ஆட்டைய போடப்போகிறது.
நிலம்/கட்டிட பதிவு மூலம் மாநிலரசின் வருவாயை திருட புதியதிட்டம் போடுகிறார்கள்
புதிய மின் மசோதா பகுதி-2
புதிய மின் மசோதா மூலம் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள்.
உபி, தமிழ்நாட்டை விட 3 மடங்கு பெரிய மாநிலம். தமிழ்நாட்டின் installed power generation capacity 30,000 MW உபியை யின் 25,000MW விட அதிகம்.
தமிழ்நாட்டின் per capita electricity consumption 1350 யூனிட். உபியின் per capita electricity consumption 317 யூனிட். தமிழ்நாட்டை விட உபி 3 மடங்கு பெரிய மாநிலம், 4 மடங்கு அதிக மத்திய நிதியை பெற்றாலும் electricity consumption யில் தமிழகத்தை 4 மடங்கு பின்தங்கிய நிலையில் உபி உள்ளது