கேள்வி: உங்கள் மூளைக்குள் இந்துத்துவம் இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது?
பதில்: இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று ஒரு மீம் பார்க்கிறீர்கள். நீங்கள், அதை பார்த்ததும் , "ஆகா சூப்பர்" என்று அதை ஷேர் செய்கிறீர்கள்.
உங்கள் பதிவில், உங்கள் நட்பு பட்டியலில் உள்ள ஒருவர் வந்து இடஒதுக்கீடு ஏன் தேவை என்று விளக்கம் தருகிறார். நீங்களும் அவர் என்ன சாதியாக இருப்பார் என்று யோசித்துக்கொண்டே இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
அந்த நேரத்தில், உங்கள் நட்பு பட்டியலில் இல்லாத ஒரு வேற்று மத பெயர் கொண்ட நபர் உங்கள் பதிவுக்கு எதிர்வினை ஆற்றுகிறார். உடனே, அவர் பெயரை பார்த்தவுடனேயே அவர் எதிர்வினைக்கு பதில் சொல்லாமல், அவர்கள் மதத்தில் உள்ள பிரச்சனையை பேச ஆரம்பித்தால்..
உங்கள் மூளைக்குள் இந்துத்துவம் குடிக்கொண்டுள்ளது என்று அர்த்தம். Take care!
திமுகவை ஆதரிப்பது என்பது பதவிக்காகவோ, பணத்துக்காகவோ அல்ல. அது ஒரு நன்றிக்கடன்!
திமுக மீது எவ்வளவு அவதூறை, வன்மத்தை இன்றைய இளைஞர்களிடம் பரப்பி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தம்பியின் புரிதல் ஒரு உதாரணம்!
பெரியார் ஏன் சிறந்தவர், காமராசர் ஏன் சிறந்தவர் என்பது மக்களுக்கு எளிதில்
புரிந்து விடும். ஏனெனில், அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் என்பதை திரும்பத்திரும்ப பேசியும், சொல்லியும், எழுதியும் வருகிறோம்.
ஆனால், அண்ணா ஏன் சிறந்தவர்? கலைஞர் ஏன் சிறந்தவர்?என அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால்,அவர்கள் மக்களை அதிகாரம் பக்கம் திருப்பினார்கள். பொருளாதார சுதந்திரம்
தந்தார்கள். ஆகையால், திமுக என்றால் பணம், பதவி, அதிகாரம் தான் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது. அதை தவிர்க்கவும் முடியாது. திமுக என்றால் வெறும் ஊழல் கட்சி மட்டும் தான் என்ற சங்கிகளின் தொடர் பரப்புரை வென்றதும் இப்படித்தான்!
திமுக வை ஏன் பாஜக ஒண்ணுமே செய்யல. ஆனா, சசிகலா, அதிமுகவை படுத்தி எடுக்குது! இதுல இருந்து என்ன தெரியுது? திமுக - பாஜக கள்ளக்கூட்டணின்னு தெரியுது!
- பெரியாரிய உணர்வாளர்கள், அதிமுக ஒன்றிய கிளை, சின்னம்மா பேரவை
1976 ல் கலைஞர் “எமர்ஜென்சி” சர்வாதிகாரத்துக்கு அடிபணிந்திருந்தால்,
ஆட்சியிலேயே இருந்திருப்பார். சர்வாதிகாரத்தை எதிர்த்ததால், ஆட்சி கலைக்கப்பட்டது.
இந்திராகாந்தி, உம்மென்றதும் குடுகுடுன்னு ஒடிப்போய் எம்ஜிஆர், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்ன்னு மாத்தினார்.
1989ல் கலைஞர் சிறந்த ஒரு ஆட்சியை தருகிறார். விடுதலை புலிகள் ஆதரவுன்னு சொல்லி ஆட்சி கலைக்கப்படுகிறது.
1991ல் ராஜீவ் காந்தி கொலைப்பழி திமுக மீது வஞ்சமாக சுமத்தப்பட்டு,ஊழல் ராணி தமிழகத்தின் முதல்வர் ஆகிறார்.
1996-2001,கலைஞரின் பொற்கால ஆட்சி. இருப்பினும், 2001 ல் ஜெயா ஜெயிக்கிறார்.
இணைய உபிக்கள், அவர்களது Attitude ஐ மாத்தினால் திமுக நிச்சயம் வெற்றி பெறும்! - நடுநிலை கருத்தாளர்கள்
1996 ல் கலைஞரோட பொற்கால ஆட்சியில பள்ளிப்படிப்பை இலவச பஸ் பாசில் சென்று படிச்சு, அத்தோட தமிழ், தமிழன், தமிழ்நாடுங்கிற அரசியலை கலைஞரிடமிருந்து உள்வாங்கி,
2000 ல் கலைஞர் கொண்டு வந்த Single window System ல என்ஜினியர் ஆகி,
2004ல் கலைஞர் உருவாக்கின டைடல் பார்க்ல பிராஜக்ட் பண்ணி,
2005ல் சென்னைலயே ஒரு ஐடி வேலைல சேர்ந்து, பல பெரிய நிறுவனங்கள்ல, பல நாடுகள்ல வேலைப்பார்த்து,
2007ல் கலைஞரின் உதவியால் கொண்டுவரப்பட்ட தமிழ் எழுத்துருவால்
தமிழை இணையத்தில் எழுத ஆரம்பித்து,
2009 ல் அதே தமிழில் கலைஞரை திட்ட ஆரம்பித்து,
2013ல் மோடின்னு ஒரு கேடியை மேலே கொண்டுவரும் போது, என்னவோ தப்பாகுதேன்னு யோசிச்சு,
2014ல் மோடி ஜெயித்த இரவு, லண்டனில் தூக்கமில்லாமல் தவித்து,
முன்னாள் முதல்வர் கலைஞரை நள்ளிரவில் கைது செய்து, அவமதித்து, இழுத்து வந்து காட்சியை நாம் எளிதில் மறக்க முடியாது. ஒரு 77 வயது முதியவர் என்ற அடிப்படை இரக்கம் கூட இல்லாத வரலாற்று கொடும் அரசியல் பழிவாங்கல் சம்பவத்தில் அதுவும் ஒன்று. கலைஞரை கைது செய்து, அலைக்கழித்து,
சிறையில் அடைக்க முற்படுகின்றனர். 77 வயது கலைஞர், சிறையின் வாசலிலேயே உட்கார்ந்து தர்ணா செய்கிறார்.
அப்போது, அவரிடம் கருத்துக்கேட்க ஒரு துண்டுச்சீட்டு நீட்டப்படுகிறது. கலைஞர் எழுதித்தருகிறார் “அநீதி வீழும், அறம் வெல்லும்” என்று.
கலைஞரை அன்று அவமதித்த, ஜெயலலிதா அப்பல்லோவில்
75 நாட்கள் இருந்து இறக்கிறார். அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது என அதிமுகவின் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கூறுகிறார். அந்த இறப்பிற்கான நீதியை “மு.க. ஸ்டாலின் எனும் நான்” பெற்றுத்தருவேன் என திமுக தலைவர் சொல்லியிருக்கிறார்.
திராவிட வாசிப்பு “மு.க. ஸ்டாலின் எனும் நான்” கட்டுரைகளுக்கான நினைவூட்டல்.
திராவிட வாசிப்பு "மு.க.ஸ்டாலின் எனும் நான்" கட்டுரைக்கான நினைவூட்டல். அனைவரையும் எழுத ஆவலுடன் அழைக்கிறோம்.
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். ஒரு முக்கிய அறிவிப்பு.
அண்ணா, கலைஞர் சிறப்பிதழ்களை தொடர்ந்து பிப்ரவரி மாத “திராவிட வாசிப்பு” மின்னிதழை, இன்றைய திமுக தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களின் அரசியலையும், ஆளுமையையும், ஆட்சித்திறனையும் பறைசாற்றும் வகையில் “மு.க. ஸ்டாலின் எனும் நான்” என்கிற தலைப்பில் சிறப்பிதழாக கொண்டு வர இருக்கிறோம்.
மு.க ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழில் கீழ்காணும் தலைப்புகளில் உங்கள் கட்டுரைகளை தரலாம்.
மிசா நாயகன் ஸ்டாலின்,
இளைஞர் அணி தலைவர் ஸ்டாலின்,
சென்னை மேயர் ஸ்டாலின்,
உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின்,
துணை முதலமைச்சர் ஸ்டாலின்,
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்,
செயல் தலைவர் ஸ்டாலின்,