கலைஞர், தளபதிக்கு எத்தனையோ சவால்களை தந்து அவர் எப்படி செயலாற்றுகிறார் என்று பார்த்திருக்கலாம்.
அன்பகம் கட்டிடம் தர 10 லட்சம் நிதி திரட்டி தரவேண்டும் என்று சொல்லி, அதை தளபதி சாதித்து காட்டியதாக இருக்கட்டும்,
மேயர் என்பது பதவியல்ல.. பொறுப்பு என்று சொல்லி, அதை தளபதி நிறைவேற்றி,
சிறந்த மேயராக பேர் வாங்கியதாக இருக்கட்டும்,
அவர் துணை முதல்வர் என்றால், எனக்கு துணையாக இருந்து செயல்படுகிறார் என்று பாராட்டியதாக இருக்கட்டும்,
ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று பாராட்டியதாக இருக்கட்டும்.
தளபதிக்கான உயர்வை சாதாரணமாக தந்துவிடவில்லை கலைஞர்.
ஏனெனில் கலைஞருக்கு தெரியும், அவர் தாங்கியது தங்கக்கிரீடமல்ல, முள் கிரீடம் என்று.
இனக்காவலன் என்கிற பட்டம் சாதாரணமாய் கிடைக்கக்கூடியதல்ல. இங்கே நன்றியுடையுடைய நாய்களை விட, நன்றிகெட்ட ஓநாய்களே அதிகம் என்பதும் அவருக்கு தெரியும்.
கலைஞரின் பெயருக்கு பின்னாலும், வாழ்விற்கு பின்னாலும் இருப்பது பெருமை மட்டுமல்ல.. அதற்கு பின்னால் மிகப்பெரிய வலியும் இருக்கிறது.
இதனால் தான் கலைஞர் எளிமையாக சொன்னார்..
“தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி எரிந்தாலும் கட்டுமரமாக தான் மிதப்பேன் அதில் ஏறி நீங்கள்
பயணம் செய்யலாம் கவிழ்ந்து விட மாட்டேன்”
இதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. இதை தான் இன்றைய தலைவருக்கு உணர்த்திச்சென்று இருக்கிறார் தலைவர் கலைஞர்.
அவரின் கடைசி நாள் "இடப்போராட்டம்" தளபதி ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட கடைசி தேர்வு. தலைவர் ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட முதல் தேர்வு.
தேர்வில் வெற்றிபெற்று தளபதி தலைவரானார் என்பது வரலாறு!
தலைவர் கலைஞருக்கு தளபதி ஸ்டாலின் இரத்த வாரிசு மட்டுமல்ல.. கொள்கை வாரிசு என்பதை நாம் அவர்கள் சொற்களில் இருந்தே உணரலாம்:
முதல் கேள்வி தலைவர் கலைஞரிடம் கேட்கப்பட்டது..
உங்கள் அரசியல் வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று நெருக்கடிநிலைக் காலகட்டத்தைச் சொல்லலாமா?
தலைவர் கலைஞர் பதில்: நெருக்கடிகள் நிறைய இருந்தன என்றாலும், வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று நெருக்கடிநிலைக் காலகட்டத்தைக் குறிப்பிட முடியாது.
அண்ணா மறைந்தபோது உருவானதுதான் பெரும் நெருக்கடி அண்ணாவால் சில லட்சியங்களை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி, முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு என் மீது விழுந்ததைவிடவும் பெரிய நெருக்கடி ஏதும் இல்லை.
கீழ்காணும் கேள்வி தலைவர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது..
கேள்வி : திரும்பிப் பார்க்கையில் இந்த 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் எதை முக்கியமானது என்று சொல்வீர்கள்?
தலைவர் மு.க. ஸ்டாலின் பதில்: அரசியல் குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்தவன். இந்த 50 வருஷங்களைத்
தனிச்சுப்பார்க்க முடியுமான்னு தெரியலை. ஆனா, தனியா ஒரு தொடக்கம்னு வரையறுக்கணும்னா, கோபாலபுரம் சண்முகம் அண்ணன் சலூன்ல உருவாக்கின இளைஞர் தி.முக.
மன்றம் 1967 செப்டம்பர் 15 அன்னைக்கு நடத்தின் அண்ணா பிறந்த நாள் கூட்டமும் தான் தொடக்கம்.
அங்கிருந்து பார்த்தா கட்சி கூடவே
உயரங்கள்லேயும் பள்ளங்கள்லேயும் மாத்தி மாத்திப் பயணிக்கிறதாலே என் வாழ்க்கையும் இருந்திருக்கு.
கொஞ்சக் காலம் முன்னாடி இதே கேள்வியைக் கேட்டிருந்தீங்கன்னா நெருக்கடி நிலை காலகட்டத்தை
முக்கியமானதாகச் சொல்லியிருப்பேன்.
அப்போதான் கல்யாணம் ஆகிருந்துச்சு. ஒரு புது வாழ்க்கையில
நுழைஞ்சிருந்தோம். கைது நடந்துச்சு, துர்கா மிரண்டுட்டாங்க. சிறைக்குள் எப்பவும் ஒழிச்சுக் கட்டப்படலாம்கிற நிலமை. ஒவ்வொரு நாளும், அடிச்சு நொறுக்கப்படுற கட்சித் தோழர்களோட மரண ஓலம் அறையிலே கேட்டுக்கிட்டே இருக்கும்.
வெளியே தி.மு.க வை நிர்மூலமாக்குற முயற்சிகள். எல்லா
அடக்குமுறைகளையும் எதிர்த்துப்போராடிக்கொண்டிருந்தார் தலைவர். மறக்கவே முடியாத நாட்கள்.
ஆனா, அதையெல்லாம் பின்னுக்கு தள்ளிடுச்சி, தலைவர் உடல்நலம் குறைஞ்சு வீட்டோட முடங்கின பிறகான இந்த ஒரு வருஷம்.
"களத்துல எவ்வளவு சுமையையும் சுமந்துடலாம். முடிவு எடுக்குறது எவ்வளவு
பெரிய சுமைன்னு, கிட்டத்தட்ட ஐம்பது வருஷம் இந்தச் சுமையை அவர் சுமந்திருக்கிறது எவ்வளவுப் பெரிய வலிங்கிறதும் இப்போதான் புரியுது"
நீங்கள் கலைஞரின் பதிலையும், ஸ்டாலின் பதிலையும் ஒப்பிட்டு பார்த்தால், அவர்கள் வாழ்வின் நெருக்கடியான காலக்கட்டம் என்பதை வேறெந்த காலத்தையும் சொல்லாமல்,
தலைவர் இல்லாத காலகட்டம் என்பதை சொல்கிறார்கள். இதன் மூலம், அண்ணா மீது கலைஞர் கொண்ட பற்றும், கலைஞர் மீது தளபதி கொண்ட பற்றும் தெளிவாகும். அதைத்தாண்டி, கொள்கையை முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பும், இயக்கத்தை வழிநடத்த வேண்டிய கடமையும் தான் இதில் தெரியும்.
இதனால் தான் இவர்கள் தலைவர்கள் ஆகிறார்கள்.
அண்ணா வழியில் கலைஞரும்
கலைஞர் வழியில் தளபதியும் பயணிக்கிறார் என்பது தெளிவாகும்.
இதையே தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களாக கலைஞரும் கொடுத்தார், தளபதியும் கொடுத்தார்.
அதிலும் நாம் "திராவிட இயக்கத்தின்" தொடர்ச்சியாய்.. "திராவிட நம்பிக்கையாய்" மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்பது புரியும்..
1970ஆம் ஆண்டு திமுக மாநில மாநாட்டில் கலைஞர் கருணாநிதி முன்வைத்த ஐம்பெரும் முழக்கங்கள்
அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி.
மார்ச் 25 2018 நடந்த ஈரோடு மண்டல மாநாட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட ஐம்பெரும் முழக்கங்கள்
திராவிட வாசிப்பு “மு.க. ஸ்டாலின் எனும் நான்” கட்டுரைகளுக்கான நினைவூட்டல்.
திராவிட வாசிப்பு "மு.க.ஸ்டாலின் எனும் நான்" கட்டுரைக்கான நினைவூட்டல். அனைவரையும் எழுத ஆவலுடன் அழைக்கிறோம்.
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். ஒரு முக்கிய அறிவிப்பு.
அண்ணா, கலைஞர் சிறப்பிதழ்களை தொடர்ந்து பிப்ரவரி மாத “திராவிட வாசிப்பு” மின்னிதழை, இன்றைய திமுக தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களின் அரசியலையும், ஆளுமையையும், ஆட்சித்திறனையும் பறைசாற்றும் வகையில் “மு.க. ஸ்டாலின் எனும் நான்” என்கிற தலைப்பில் சிறப்பிதழாக கொண்டு வர இருக்கிறோம்.
மு.க ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழில் கீழ்காணும் தலைப்புகளில் உங்கள் கட்டுரைகளை தரலாம்.
மிசா நாயகன் ஸ்டாலின்,
இளைஞர் அணி தலைவர் ஸ்டாலின்,
சென்னை மேயர் ஸ்டாலின்,
உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின்,
துணை முதலமைச்சர் ஸ்டாலின்,
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்,
செயல் தலைவர் ஸ்டாலின்,
மிசா காலத்தில் பத்திரிக்கைகள் கடுமையான தணிக்கைக்கு ஆளாக்கப்பட்டது. குறிப்பாக விடுதலை, முரசொலி ஆகிய பத்திரிக்கைகள் குறிவைக்கப்பட்டது. கலைஞரை வெகுண்டெழ செய்த சம்பவம் ஒன்று இருக்கிறது.. கலைஞர் சொல்கிறார் கீழே..
ஜூன் மாதம் மூன்றாம் நாள் எனது பிறந்தநாளையொட்டி நிகழ்ச்சியொன்றை நான் நினைவுபடுத்தியாக வேண்டும். பிறந்தநாள் செய்தி என்ற நிலையில் முரசொலியில் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக்கடிதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. "என் அன்னையைவிட அதிக அன்பை அண்ணா என் மீது பொழிந்தார்" என்று
அந்த கட்டுரையில் இருந்த வாசகத்தை வெட்டிட வேண்டுமென தணிக்கை அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காரணம் கேட்டேன். அவர் காரணம் கூற மறுத்துவிட்டார். கடிதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஜூன் முதல் நாள்இரவு, அன்றிரவு தான் அதிகாரிகளிடம் பேசினேன்.
வேதத்தை, நால்வர்ணத்தை, பார்ப்பன மதத்தை எதிர்த்து ஒரு பகுத்தறிவு மார்க்கத்தை இந்தியாவில் உருவாக்கிய புத்தரின் பௌத்தத்தை இந்தியாவில் இருந்து விரட்டிவிட்டு, புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று பொய்யும், புரட்டுமாக பரப்பினார்கள்.
அந்த பொய்யை நாம் இன்னமும் மறுத்துக்கொண்டு இருக்கிறோம்.
எங்குமே பிறக்காத ராமரை அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் பிறந்தார் என சொல்லி பாபர் மசூதியை இடித்தார்கள். மதக்கலவரம் மூண்டது. நாம் ராமன் பிறந்தானா என்பதை கேட்க முடியவில்லை.
கலவரத்தை எப்படி தடுப்பது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறோம்.
குரங்குகளை வைத்து ஒரு பாலம் கட்டினான் ராமன் என ஒரு புராணக்கதை. அதை நாசவே ஒத்துக்கொண்டது என ஒரு புருடா. நாசா வந்து நாங்கள் அப்படி சொல்லவில்லை என்று மறுப்பு தெரிவிக்க வேண்டிய அளவுக்கு பார்பனீயத்தின் வலிமை இருக்கிறது.
சமீபத்தில் நான் ரசித்து பார்க்கும் இணையதளம் Liberty Tamil. பல்வேறு ஆளுமைகளை, கட்சிகள் வித்தியாசமின்றி பேட்டி காண்கிறார். அதிக நேரம் பிடிக்காமல், சிறிய காணொளிகளாக இருந்தாலும் கருத்துக்களை தெள்ளத்தெளிவாக உள்வாங்கிக்கொள்ள உதவும் விவாதங்களாக இருக்கிறது.
திருமுருகன் காந்தியை எடுத்த பேட்டி முக்கியமானது. நமக்கிருக்கும் கேள்விகளை வெளிப்படையாக கேட்டார். ஆனால், பதில் வழக்கம் போல தெளிவாக வரவில்லை. 2021 தேர்தல் கருத்துக்கணிப்புகளும் களத்தை அப்படியே பிரதிபலிப்பது போல இருக்கிறது.
எடுத்துக்காட்டாக தியாகராய நகரில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், பாஜக சார்ப்பாக தியாகராய நகரில் பாஜகவின் எச்.ராஜா நின்றால் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு,
கலைஞர் இல்லாததை இவர்கள் வெற்றிடமாக நினைத்துக்கொள்கிறார்கள். அல்லது அப்படி கட்டமைக்க பார்க்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு புரியாத ஒன்று. கலைஞர் என்பது ஒரு பிம்பம் அல்ல. அதாவது எம்ஜிஆரை போல அல்ல.
கலைஞர் என்பது கொள்கை.
கலைஞர் என்பது திராவிட இயக்கம்.
கலைஞர் என்பது உழைப்பு!
அதாவது, யாரெல்லாம் கொள்கையை முன்னெடுக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கலைஞர் தான்.
யாரெல்லாம், திராவிட இயக்கத்தை முன்னெடுத்து செல்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.
யாரெல்லாம், திமுகவில் உழைக்கிறார்களோ, அவர்களெல்லாம் கலைஞர் தான்.
புத்தரின் கொள்கையான “மாற்றம் ஒன்றே மாறாதது” எனும் இயங்கியல் விதியின் நவீன எடுத்துக்காட்டு திராவிட முன்னேற்ற கழகம். இந்த இயக்கம், ஆதிக்கவாதிகள் இருக்கும் வரை இயங்கிக்கொண்டே தான் இருக்கும். தலைவர்கள் மாறுவார்கள். இயக்கம் அப்படியே இருக்கும்!
புதிதாக அரசியல்வாதி வேடம் போட்டவர்களுக்கு கொள்கையை கேட்டால் பதட்டம் வருகிறது. கொள்கையே இல்லாமல் கட்சியை ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், நாம் அவர்களை உடனடியாக முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிட வேண்டுமாம்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் திமுக, தேர்தல் அறி்க்கை தயாரிப்பதற்காக ஒரு குழுவை ஆரம்பிக்கும். அந்தக்குழுவிற்கு தலைவர் இருப்பார். தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சனைகளையும், ஊர் வாரியாக அலசி, அந்த அறிக்கையை தயாரிப்பார்கள். அதுமட்டுமல்லாது, முத்தாய்ப்பான சில அறிவிப்புகளை திமுக வெளியிடும்.
அந்த அறிவிப்புகள், தேர்தலின் போக்கையே மாற்றும். ஏனெனில், திமுக இன்று அறிவித்தால், நாளை அது அரசாணையாகும் என்பதை மக்கள் அறிவார்கள்.
இந்த வரிகட்டாத, வாடகை தராத நடிகர்கள் இலவசத்திட்டம் என எள்ளி நகையாடும்,மக்கள் நல சமூகநீதி திட்டங்களை திமுக இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் அறிவிக்கும்.