திமுகவை ஆதரிப்பது என்பது பதவிக்காகவோ, பணத்துக்காகவோ அல்ல. அது ஒரு நன்றிக்கடன்!
திமுக மீது எவ்வளவு அவதூறை, வன்மத்தை இன்றைய இளைஞர்களிடம் பரப்பி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தம்பியின் புரிதல் ஒரு உதாரணம்!
பெரியார் ஏன் சிறந்தவர், காமராசர் ஏன் சிறந்தவர் என்பது மக்களுக்கு எளிதில்
புரிந்து விடும். ஏனெனில், அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் என்பதை திரும்பத்திரும்ப பேசியும், சொல்லியும், எழுதியும் வருகிறோம்.
ஆனால், அண்ணா ஏன் சிறந்தவர்? கலைஞர் ஏன் சிறந்தவர்?என அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால்,அவர்கள் மக்களை அதிகாரம் பக்கம் திருப்பினார்கள். பொருளாதார சுதந்திரம்
தந்தார்கள். ஆகையால், திமுக என்றால் பணம், பதவி, அதிகாரம் தான் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது. அதை தவிர்க்கவும் முடியாது. திமுக என்றால் வெறும் ஊழல் கட்சி மட்டும் தான் என்ற சங்கிகளின் தொடர் பரப்புரை வென்றதும் இப்படித்தான்!
இங்கே இன்னொரு முரண் என்னவென்றால்,
சங்கிகள் எந்தளவுக்கு திமுகவை வெறுக்கிறார்களோ, அதே அளவுக்கு தங்களை புரட்சியாளர்கள் என்று கருதிக்கொள்ளும் தோழர்கள் சிலரும் வெறுப்பது தான்!
சங்கிகள் திமுகவை எதிர்ப்பது மிக சிப்பிள் லாஜிக். சங்கிகள் திமுகவை தங்கள் கொள்கையின் நேரடி எதிரியாக பார்க்கிறார்கள்.
இயற்கையை காப்போம் என ஒரு பக்கம் நம்மை பேசவிட்டு அவர்கள் நீட், ஐஏஎஸ் என நம் மக்களின் உயர்வை அழிக்க வருகிறார்கள்.
இதில், தோழர்கள் திமுகவிடம் முரண்படுவதை புரிந்துக்கொள்வது கொஞ்சம் சிக்கலானது.
சில பெரியாரியர்கள், திமுக பெரியாரியத்தை நீர்த்துப்போகச் செய்கிறது என குற்றம் சாட்டுவார்கள்.
சில தமிழ்தேசியர்கள், அண்ணா, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது கொள்கை சமரசம் என்பார்கள்.
சில தலித்தியவாதிகள் திமுக சூத்திரர்களின் கட்சி என சொல்லுவார்கள்.
சில பொதுவுடமை தோழர்கள், திமுக முதலாளிகளின் கட்சி என்பார்கள்.
மேலோட்டமாக பார்த்தால், இதில் எல்லாமே உண்மை இருப்பது போலத்தான் இருக்கும். உண்மை இல்லாமலும் இல்லை.
ஆனால், திமுக திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, மாநில சுயாட்சியை கையில் எடுத்தது.
திமுக பெரியாரின் இயக்க அரசியல் பாதையை கைவிட்டு, தேர்தல் அரசியலை கையில் எடுத்தது. புரட்சிப்பாதையை கைவிட்டு மக்களாட்சி பாதையை தொடர்ந்தது.
சூத்திரர்களின் ஆட்சி என சொல்லப்படும் ஆட்சியில் தான் இந்தியாவிலேயே அதிகமான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.
கட்சியிலும் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது திமுக. இசைவேளாளர் எனும் மிகவும். ஒடுக்கப்பட்ட ஆள் பலமில்லாத சாதியை சேர்ந்த கலைஞர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்ததே சமூகநீதியின் வெற்றி தான். பறையர்களின் கட்சி என்று பேர் வாங்கிய கட்சியான திமுக, இன்று பறையர்களுக்கு கருணாநிதியின்
துரோகம் என்று புத்தகம் வெளியிடும் கட்டத்தில் இருப்பதன் பின்னனியை ஆராயவேண்டும்!
ஐடி கம்பெனிகள், கார்ப்பரெட் கம்பெனிகளை கொண்டு வந்த அதே திமுக தான், ஒரு ரூபாய் அரிசியில் இருந்து இலவச மருத்துவ காப்பீடு வரை சோசியலிச பாதையில் பயணித்ததும் திமுக தான்!
பார்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்தில் பார்பனிய ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு எதிரான பண்பாட்டை நிறுவியவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களின் பெயர் சிரமணர்கள். அதாவது, சிரமமான பாதையான கடும்தவம், புலால் மறுப்பு, துறவு வாழ்க்கை என்று வாழ்ந்தார்கள். கௌத்தம புத்தர் தனது ஆரம்ப
காலத்தில் இந்த கடுந்தவ வாழ்க்கையை தான் வாழ்ந்தார். பிறகு, தன்னை உணர்ந்த போதி நிலையை அடைந்த பின், புத்தர் தனது பாதையை “மஜ்ஜிம பதிபாதம்” என்ற நடுநிலை பாதைக்கு மாறினார். அதாவது, கடும் தவம் தேவையில்லை. ஒரு எளிய மனிதனும் பின்பற்றும் வகையில் பௌத்தத்தை உருவாக்கினார். அதே வேளையில், தனது
அடிப்படை கொள்கையான பகுத்தறிவு, உயிர் நேயம், அறம் சார்ந்த வாழ்வியல் என்பதிலும்..மானுட வாழ்வில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பரப்புவதிலும் எவ்வித சமரசமும் செய்யவில்லை. இன்று உலகெங்கும் பௌத்தம் பரவி வாழ்வதற்கு இந்த நடுநிலை பாதையும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.
திமுகவின் பாதையும் ஒரு வகையில் இந்த நடுநிலைபாதை தான். அது தான் தேர்தல் பாதை. மக்களாட்சி என்கிற ஜனநாயக பாதை. ஆனால், அது சென்று சேரும் இடம் புத்தம் - பெரியாரியம்- அம்பேத்கரியம் காட்டிய சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவமாக தான் இருக்கும்!
கேள்வி: உங்கள் மூளைக்குள் இந்துத்துவம் இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது?
பதில்: இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று ஒரு மீம் பார்க்கிறீர்கள். நீங்கள், அதை பார்த்ததும் , "ஆகா சூப்பர்" என்று அதை ஷேர் செய்கிறீர்கள்.
உங்கள் பதிவில், உங்கள் நட்பு பட்டியலில் உள்ள ஒருவர் வந்து இடஒதுக்கீடு ஏன் தேவை என்று விளக்கம் தருகிறார். நீங்களும் அவர் என்ன சாதியாக இருப்பார் என்று யோசித்துக்கொண்டே இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
அந்த நேரத்தில், உங்கள் நட்பு பட்டியலில் இல்லாத ஒரு வேற்று மத பெயர் கொண்ட நபர் உங்கள் பதிவுக்கு எதிர்வினை ஆற்றுகிறார். உடனே, அவர் பெயரை பார்த்தவுடனேயே அவர் எதிர்வினைக்கு பதில் சொல்லாமல், அவர்கள் மதத்தில் உள்ள பிரச்சனையை பேச ஆரம்பித்தால்..
திமுக வை ஏன் பாஜக ஒண்ணுமே செய்யல. ஆனா, சசிகலா, அதிமுகவை படுத்தி எடுக்குது! இதுல இருந்து என்ன தெரியுது? திமுக - பாஜக கள்ளக்கூட்டணின்னு தெரியுது!
- பெரியாரிய உணர்வாளர்கள், அதிமுக ஒன்றிய கிளை, சின்னம்மா பேரவை
1976 ல் கலைஞர் “எமர்ஜென்சி” சர்வாதிகாரத்துக்கு அடிபணிந்திருந்தால்,
ஆட்சியிலேயே இருந்திருப்பார். சர்வாதிகாரத்தை எதிர்த்ததால், ஆட்சி கலைக்கப்பட்டது.
இந்திராகாந்தி, உம்மென்றதும் குடுகுடுன்னு ஒடிப்போய் எம்ஜிஆர், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்ன்னு மாத்தினார்.
1989ல் கலைஞர் சிறந்த ஒரு ஆட்சியை தருகிறார். விடுதலை புலிகள் ஆதரவுன்னு சொல்லி ஆட்சி கலைக்கப்படுகிறது.
1991ல் ராஜீவ் காந்தி கொலைப்பழி திமுக மீது வஞ்சமாக சுமத்தப்பட்டு,ஊழல் ராணி தமிழகத்தின் முதல்வர் ஆகிறார்.
1996-2001,கலைஞரின் பொற்கால ஆட்சி. இருப்பினும், 2001 ல் ஜெயா ஜெயிக்கிறார்.
இணைய உபிக்கள், அவர்களது Attitude ஐ மாத்தினால் திமுக நிச்சயம் வெற்றி பெறும்! - நடுநிலை கருத்தாளர்கள்
1996 ல் கலைஞரோட பொற்கால ஆட்சியில பள்ளிப்படிப்பை இலவச பஸ் பாசில் சென்று படிச்சு, அத்தோட தமிழ், தமிழன், தமிழ்நாடுங்கிற அரசியலை கலைஞரிடமிருந்து உள்வாங்கி,
2000 ல் கலைஞர் கொண்டு வந்த Single window System ல என்ஜினியர் ஆகி,
2004ல் கலைஞர் உருவாக்கின டைடல் பார்க்ல பிராஜக்ட் பண்ணி,
2005ல் சென்னைலயே ஒரு ஐடி வேலைல சேர்ந்து, பல பெரிய நிறுவனங்கள்ல, பல நாடுகள்ல வேலைப்பார்த்து,
2007ல் கலைஞரின் உதவியால் கொண்டுவரப்பட்ட தமிழ் எழுத்துருவால்
தமிழை இணையத்தில் எழுத ஆரம்பித்து,
2009 ல் அதே தமிழில் கலைஞரை திட்ட ஆரம்பித்து,
2013ல் மோடின்னு ஒரு கேடியை மேலே கொண்டுவரும் போது, என்னவோ தப்பாகுதேன்னு யோசிச்சு,
2014ல் மோடி ஜெயித்த இரவு, லண்டனில் தூக்கமில்லாமல் தவித்து,
முன்னாள் முதல்வர் கலைஞரை நள்ளிரவில் கைது செய்து, அவமதித்து, இழுத்து வந்து காட்சியை நாம் எளிதில் மறக்க முடியாது. ஒரு 77 வயது முதியவர் என்ற அடிப்படை இரக்கம் கூட இல்லாத வரலாற்று கொடும் அரசியல் பழிவாங்கல் சம்பவத்தில் அதுவும் ஒன்று. கலைஞரை கைது செய்து, அலைக்கழித்து,
சிறையில் அடைக்க முற்படுகின்றனர். 77 வயது கலைஞர், சிறையின் வாசலிலேயே உட்கார்ந்து தர்ணா செய்கிறார்.
அப்போது, அவரிடம் கருத்துக்கேட்க ஒரு துண்டுச்சீட்டு நீட்டப்படுகிறது. கலைஞர் எழுதித்தருகிறார் “அநீதி வீழும், அறம் வெல்லும்” என்று.
கலைஞரை அன்று அவமதித்த, ஜெயலலிதா அப்பல்லோவில்
75 நாட்கள் இருந்து இறக்கிறார். அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது என அதிமுகவின் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கூறுகிறார். அந்த இறப்பிற்கான நீதியை “மு.க. ஸ்டாலின் எனும் நான்” பெற்றுத்தருவேன் என திமுக தலைவர் சொல்லியிருக்கிறார்.
திராவிட வாசிப்பு “மு.க. ஸ்டாலின் எனும் நான்” கட்டுரைகளுக்கான நினைவூட்டல்.
திராவிட வாசிப்பு "மு.க.ஸ்டாலின் எனும் நான்" கட்டுரைக்கான நினைவூட்டல். அனைவரையும் எழுத ஆவலுடன் அழைக்கிறோம்.
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். ஒரு முக்கிய அறிவிப்பு.
அண்ணா, கலைஞர் சிறப்பிதழ்களை தொடர்ந்து பிப்ரவரி மாத “திராவிட வாசிப்பு” மின்னிதழை, இன்றைய திமுக தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களின் அரசியலையும், ஆளுமையையும், ஆட்சித்திறனையும் பறைசாற்றும் வகையில் “மு.க. ஸ்டாலின் எனும் நான்” என்கிற தலைப்பில் சிறப்பிதழாக கொண்டு வர இருக்கிறோம்.
மு.க ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழில் கீழ்காணும் தலைப்புகளில் உங்கள் கட்டுரைகளை தரலாம்.
மிசா நாயகன் ஸ்டாலின்,
இளைஞர் அணி தலைவர் ஸ்டாலின்,
சென்னை மேயர் ஸ்டாலின்,
உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின்,
துணை முதலமைச்சர் ஸ்டாலின்,
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்,
செயல் தலைவர் ஸ்டாலின்,