"ஒரு தாய் தன் குழந்தையின் தலையை வருடுவது போல, ஒரு தந்தை வாஞ்சையுடன் தன் குழந்தையை அணைப்பது போல கதைகளால் அரவணைக்கிறார் பவா. கதைகளையும் சுமக்கிறார்.
 பவா செல்லதுரை அவர்கள் கதை சொல்லும் போது மட்டும் ஒருசேர அனைத்து இதயங்களையும் கசிய வைக்க முடிகிறது "
நன்றி: jeyamohan.in
அவ்வாறாக இதயம் கசிந்த ஒரு
நிகழ்வாக திண்டுக்கல் துளிர் நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த எண்ணமும் எழுத்தும் நிகழ்வு -5-ல்,
ஐயா திருமிகு.பவாசெல்லத்துரை
அவர்களின் பெருங்கதையாடல் நிகழ்வில் பங்குபெறும் நற்பேறமைந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக துளிர்
நண்பர்கள் குழுவினர்,இயக்குநர் திரு.மிஷ்கின் மற்றும் விருந்தினர்களின் வாழ்த்துரை தெரிவித்தனர்..
புத்தகங்கள் இல்லாத வீடுகளுக்கு
விருந்தினராகத்தான் செல்வது இல்லை என்றும்,ஆடம்பர வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை விட வரவேற்பறையில் அடுக்கி வைக்கப்பட்ட
புத்தகங்கள்தான் தன்னை வெகுவாக ஈர்க்கிறது என்றும்,தன் பெயர் "மிஷ்கின்" என்பதுகூட ஒரு புதினத்தின் கதாப்பாத்திரமே என்று புத்தக வாசிப்பின் நேசிப்பை இயக்குநர் மிஷ்கின் பகிர்ந்தது சிறப்பாக இருந்தது.
நிகழ்ச்சியில் பங்குபெற பேரார்வத்தோடு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வாசகர்கள்பலர் முந்திய நாளிலேயே வந்து தங்கி பங்கேற்க
வந்ததாக அறிந்து கொண்டேன்..
வாகனம் நிறுத்தும் இடம் முழுதும்
ஒரு மாநாடு அல்லது திருவிழாவிற்கு வந்ததுபோல வாகனங்களால் நிறைந்து காணப்பட்டது.
ஐயா அவர்களின் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் தான் மேடையில் அமர விரும்பாது வாசகர்களின் முகங்களையும்,கண்களையும் பார்த்தே கதை சொல்ல வேண்டும் என்று தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை ஒருங்கிணைக்கும்
ஒரு நல்லாசிரியர் தோரணையோடு அனைவரையும்
தமக்கு மிக நெருக்கமாக வந்தமரச்சொன்னார்
இதற்கிடையில் மழை வந்தாலும் காத்திருந்து மழையைப்போற்றி மழைதொடர்பான தன் நினைவுகளைப்பகிர்ந்து கதையை ஆரம்பித்தார்.பகிர்ந்த கதை;
எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் "வெள்ளையானை" புதினம்
வெள்ளை யானை நூல் குறிப்பு:

உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப் பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அனைவரும் ஏதோ ஒரு
வகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாக வேண்டும். 

இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது. எங்கே நம் நீதியுணர்ச்சியை நாம் இழந்தோம் என இன்றாவது மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.

- ஜெயமோகன்
ஒரு ஐரிஷ் அதிகாரி பிரிட்டிஷ் அரசில் காவல் அதிகாரியாகச் சென்னை வருகிறான். அவன் பார்வையில் பஞ்சம் விரிகிறது. மக்கள் துயர் அவன் பார்வையில் எழுதப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து ஐஸ் கட்டி வரவழைக்கப்பட்டு இந்தியாவின் கனவான்களுக்கு மது அருந்த வழங்கப்படுவது ஒரு தொழில். அதற்கு அந்தப்
பஞ்ச காலத்தில் மக்கள் எப்படிப் பட்டினியால் அவதிப்படுகின்றனர், சாதி அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்று அந்த அதிகாரியின் பார்வையில் விரிவதாக நாவல் பயணிக்கிறது.
ஐஸ் ஹவுஸ் என்பது மதராஸபட்டினத்தில் ஃபிரடெரிக் டியுடர் அண்ட் கம்பெனி இயங்கிய இடம். வெள்ளை ஆட்சியாளர்களின் விருந்தறைகளில், அவர்கள் அருந்தும் மதுவோடு கலப்பதற்காக லண்டன் நகரத்திலிருந்தே பனிப்பாளங்கள் கப்பல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டது. ஆறுமாத பயணத்திலும் கரைந்துவிடாதபடி,
உயர் குளிர்நிலையில் பக்குவப்படுத்தப்பட்ட அந்தப் பாளங்கள் ஐஸ் ஹவுஸில்தான் இருட்டறைகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்தன. மாபெரும் அவ்வெள்ளைப் பாறைகளை உடைத்துத் துண்டுகளாக்கி மரப்பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பும் வேலையைச் செய்ய, பஞ்சத்துக்காக ஊரைவிட்டு வந்த
தலித் தொழிலாளிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். எந்த விதமான பாதுகாப்புக்கருவிகளும் அவர்களிடம் இல்லை. சாதாரண கடப்பாறைகளாலும் மண்வெட்டியாலும் வெட்டியெடுத்துத் துண்டுகளாக்கினார்கள். மரணத்துக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்த அத்தருணத்தில் அவர்களிடயே அசாதாரணமான ஓர் எழுச்சி உருவானது.
முதல் உரிமைக்குரல் அந்தத் தொழிலாளர்களிடையே எழுந்தது
என்று தன் கம்பீரமான,மனதிற்கு நட்பான குரலால் பவா ஐயா அவர்கள் கதையோடு நம்மைக் கட்டிப்போட்டுப் பயணிக்க வைத்தார்கள்.
இங்கிலாந்தில் இருந்து பாறைபாரையாக வரும் ஐஸ்கட்டிகளை பதபடுத்தி வைக்கும் இடமான ஐஸ் ஹவுஸ்’இல் நிகழும் தொழிலாள
விரோதபோக்கு நடவடிக்கையும் அதையொட்டிய ஒரு கணவன்,மனைவியின் மரணத்தினால் ஏற்படும் 300மேற்பட்ட தலித்களை மட்டுமே கொண்டு இந்திய அளவில் நடைபெறும் முதல் தொழிலாள போராட்டம் என்ற புதினத்தின் கருவை விளக்கியவிதம் மனதை மிக நெகிழ வைத்தது.
1878 காலகட்டத்துச் செயற்கை பஞ்சசூழலின்போது தமிழ்மண்ணில் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தை உயிர்ப்புத்தன்மை மிகுந்த ஐயா ஜெயமோகன் அவர்களின் சித்தரிப்புமொழியை தன் உடல்மொழியாலும்,
வாய்மொழியாலும் ஐயா பவா அவர்கள் கண்முன்னே நிகழ்வதுபோல விவரித்தார்.
எழுத்தாளர் அவர்களே ஐஸ்கட்டியை ‘வெள்ளை யானை’ என்று ஒரு படிமமாகச் சொல்வது அருமை.ஏய்டன், ட்யூக், ஃபாதர் ப்ரெண்ணன், மரிஸா, மக்கின்ஸி, துரை சாமி, சாமி, ஜோசப், காத்தவராயன், நாராயணன், பார்மர், ரஸ்ஸல், சவுரி ராயன், கருப்பன், மாக், ஆண்ட்ரூஸ் என்று அவர் புனைந்த
அத்தனை கதாபாத்திரங்களையும்
கண்முன்னே உயிப்பித்துக்காட்டினார் பவா ஐயா.
அவரது குரல் ஒவ்வொரு கதாபாத்திரமாகவே மாறியது
என்றே சொல்லலாம்.
மாபெரும் தலித் சிந்தனையாளராக பிற்காலத்தில் மலர்ந்த அயோத்திதாசரின் இளமைப்பருவத் தோற்றம்பற்றிக்
குறிப்பிடும்போது குரலில் மிடுக்கும்,

மாபெரும் உணர்ச்சிக்கவிஞனான ஷெல்லியின் வரிகளை மனத்தில் ஏந்தி வளர்ந்த,அயர்லாந்து
பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆளாக இந்தியமண்ணில் காலடி எடுத்துவைக்கும்
வாய்ப்பு கிடைக்கும் ஏய்டன் பற்றிக் குறிப்பிடும்போது மனசாட்சி உள்ளவரின் குரலாகவும்,

மரிஸா;ஆங்கில இந்திய இளம்பெண், பாதிரியாரின் ஆதரவால் ஆங்கிலம் கற்றவள். சொந்த ஆர்வத்தின் காரணமாக இலக்கியமும் கற்றவள். அதிகாரிகளின் களைப்பை நீக்கி இரவுத்துணையாக வாழ்ந்து பிழைப்பவள் என்றாலும்
அவளுக்குள் பொங்கிப் பீறிடும் தன்மான உணர்ச்சியைப்பற்றிக் குறிப்பிடும்போது அவள் மீதான காதலை உணர வைக்கும் குரலாகவும் பவா ஐயாவின் குரல்
பிரமிக்கத்தக்க உருமாற்றம் பெறுகிறது.
மரிஸா வீட்டு வேட்டியைப் பரப்பிவைத்தாற்போன்ற பவளமல்லிப்பந்தலைப் பற்றிய
விவரிப்பில் பவளமல்லிவாசத்தையே உணரமுடியும்
சாலையோரங்களில் விலங்குகள்போலச் செத்துக்கொண்டிருக்கும் மக்களின் கோரமான குரல்களையும் எய்டனின் கண்கள் வழியாக நம்மைப் பார்க்கவும் வைத்த கதையோட்டத்தில் அவரது
குரல் உடைந்ததை உணர்ந்தேன்.
தொர தொர என்று குரலெழுப்பியபடி கைநீட்டும் கரிய உருவம். உட்குழிந்த கண்களால் வெறித்துப் பார்த்தபடி இறுதிமூச்சை விடும் எலும்பும் தோலுமான உருவம். குழந்தையின் பிணத்தை இழுத்துக் குதறித் தின்னும் நாய்களின் கூட்டம்
வீசப்படும் ஒரு ரொட்டித்துண்டை எடுக்க கூட்டம்கூட்டமாக முட்டிமோதி ஒருவரையொருவர் கடித்துக்கொள்ளும் மனிதர்கள் என்று அவர் கூறியபோது மனதின் ஓலமே பவா ஐயாவின் குரலாக வெளிப்பட்டது எனலாம்
“சாவதற்கு  நாங்கள்  எப்போது  வாழ்ந்தோம்?” என காத்தவராயன்  கேட்பதுபோல் ஐயா உருகிக்கூறியது செவிகளில் இன்னும் ஒலித்துக்  கொண்டே இருக்கிறது.
நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் உறுப்பினனாகிய நான் இதோ ஒடுக்குமுறையாளன் வேடமிட்டு வந்து அமர்ந்திருக்கிறேன். – அயர்லாந்தில் அடிமைப்பட்டு வளர்ந்த ஏய்டனின் மனநிலையை ஐயா அவர்கள் முழுமையாகக்கூறி கதையை நிறைவு செய்தபோது ஏதோவொரு குற்றவுணர்வினால் மனம் தடுமாறி அழுதது.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நின்றுகொண்டே நம்மை நகரவிடாமல் கட்டிப்போட்டுக் கதைசொல்லி வந்திருந்த அத்தனை பேருடனும் புன்முறுவலோடு புகைப்படம் எடுக்க இசைந்து,கையெழுத்து வழங்கி நள்ளிரவு நேரம் என்பதால் பயணத்தில் கவனம் என்று அறிவுறுத்தி விடைபெற்றார்.
என்னுடைய பேரன்பின் புரிதலை விளக்கிச்சொல்ல வார்த்தைகள் தடுமாறிப் பொய்த்துப்போகின்றன.
பிழைஇருப்பின் தயைகூர்ந்து மன்னிக்கவும்.நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பவா ஐயா அவர்களுக்கு பேரன்பும்,உளநிறை பெருநன்றியும்🙏🙏🙏💚

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஆனந்தி

ஆனந்தி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @gmuruganandi

4 Nov 20
எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே.
-(புறநானூறு 5,
பாடியவர்:நரிவெரூஉத்தலையார்)
அருஞ்சொற்பொருள்:
1. இடை = இடம். 2. பரத்தல் = பரவுதல். 4. ஓர் = ஒப்பற்ற. 6. நிரயம் = நரகம். 7. ஓம்பு = காப்பாற்றுவாயாக; மதி - அசைச் சொல். 8. அளிது = செய்யத் தக்கது.
உரை: எருமை போன்ற கருங்கற்கள் உள்ள இடங்களில் திரியும் பசுக்கூட்டம் போல யானைகள் திரியும் காடுகளுடைய நாட்டுக்குத் தலைவனே! நீ ஒப்பற்றவனாகையால் உனக்கு ஒன்று சொல்வேன். அருளையும் அன்பையும் நீக்கி, எப்பொழுதும் நரகத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ள விரும்புபவர்களோடு சேராமல்,
Read 4 tweets
3 Nov 20
#பத்துப்பாட்டு
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்
-(மதுரைக்காஞ்சி,
மாங்குடி மருதனார்)
அறம் கூறு அவையம் – நீதி மன்றம்  அறநூல் முறைப்படி அறம் கூறும் தருமாசனத்தார்
செற்றம்-பகை
ஞெமன்கோல்-துலாக்கோல்
நடுவு நிலையுடன் தீர்ப்புக் கூறுவாரோ, கூறாரோ என்று அஞ்சி வந்த அச்சத்தையும், அவர்க்குத் தோல்வியால்  நெஞ்சில் தோன்றும் வருத்தத்தையும், அவர்தம் நெஞ்சு கருதின பொருள் மேல் தோற்றிய பற்று உள்ளத்தையும் போக்கி (அவர்தம் உளம் கொள விளக்கிக் கூறி)
Read 4 tweets
2 Nov 20
#எட்டுத்தொகை
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே. 
-(குறுந்தொகை 146,
வெள்ளி வீதியார்) ImageImage
அருஞ்சொற்பொருள்: புணர்ப்போர் = சேர்த்துவைப்பவர்கள்; தண்டு = ஊன்றுகோல்; வெண்டலை = வெண்+தலை = நரைத்த முடி உடையவர்கள்; சிதவல் = கந்தைத் துணி (இங்கு தலைப்பாகையைக் குறிக்கிறது.); மாக்கள் = மக்கள்; ஆங்கண் = அங்கே; கொல் -  அசைச்சொல்.
உரை: தோழி! நான் சொல்லுவதைக் கேட்பாயாக! அங்கே, அந்தக் கூட்டத்தில், கையில் ஊன்றுகோல் உடையவர்களும்,  நரைத்த முடியையுடைய தலையில் தலைப்பாகை அணிந்தவர்களுமாகத் தலைவனது உறவினர்கள் வந்துள்ளார்கள். அவர்கள்  ”நன்று நன்று” என்று கூறுகிறார்கள். நம்மவர்கள்,  ”இன்று நீங்கள் வந்தது
Read 4 tweets
31 Aug 20
#சான்றோர்
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
-(புறநானூறு 218,
கண்ணகனார்)
அருஞ்சொற்பொருள்:
1. துகிர் = பவளம்; மன்னிய = நிலைபெற்ற. 2. பயந்த = தந்த; காமர் = விருப்பம். 3. தொடை = தொடுத்தல். 5. பால் = பக்கம்
உரை: பொன், பவளம், முத்து, நிலைபெற்றப் பெரிய மலையிலிருந்து பெற்ற விரும்பத்தக்க மாணிக்கம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் தோன்றியவையானாலும் பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, அவை ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன. அதுபோல, எந்நாளும் சான்றோர்கள் சான்றோர்களையே
Read 4 tweets
15 Aug 20
விடுதலைநாள்...
இத்தனை ஆண்டும்
வாயில் சிரிப்புதிர்த்து
களிப்போடுகூடிநின்று
தேசியக்கொடிவணங்கிய
இனிப்புடன் கூடிய விடுமுறைநாள்..
இன்றோ படிக்கும்பருவமதை தீநுண்மிதிருடிப்போனது
விஞ்ஞானம் கண்டறிந்து
விந்தைபல விளைவித்து
மெதுமெதுவாய்
இயற்கை மறந்து
விண்ணும் மண்ணும்
அடிமையென்ற இறுமாப்பில்
இயல்புநிலை மறந்ததால்
அடிவேரும் வலுவிழக்க
அல்லவைபலநாடியே இன்றுவேதனையின் பிடியினிலே
உயிரோட்டம்டம் விடும்மூச்சிலும் உறைந்ததே நம் விடுதலை..
ஒற்றுமையும் அன்புமேஉலகு
ஒருங்கிணைக்கும்
ஆகப்பெரும் சக்திஎன
துள்ளிவரும் பிள்ளைகள் மனத்திருத்தி
தாழ்ந்திடாத அன்பில்
மகிழ்ந்து இறகாய்அசைந்து  பறவையாய் விடுதலைச்சிறகுவிரித்து
மானிடம் பெருக
மனம்நிதம் மகிழ
போராடி வெல்வோம்!!
தீநுண்மியே வெளியேறு!
Read 6 tweets
10 Aug 20
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 
கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே
ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உலகத்தையே உலுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், இந்த வைரஸ் குழந்தைகளை பாதிக்காமல் இருப்பதற்காகத்தான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வீட்டுக்குள்ளே இருக்கும் சிறுவர், சிறுமிகள் எத்தனை பேர் ஊரடங்கை எவ்விதம் பயனுள்ளதாக
கழிக்கிறார்கள் என்ற வினா எழத்தானே செய்கிறது.
சில குழந்தைகள் கொரோனா குறித்த தகவலை சேகரிப்பதோடு, அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!