🙊🙉🙈
200 ரூபாய் பணத்திற்கும்,
ஒரே ஒரு பிரியாணி பொட்டலத் திற்கும், வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில்
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?
1/
🙊🙉🙈அயோக்கியன் என்று தெரிந்த பின்னும்
அவனுக்கு ஆரத்தி எடுத்து
ஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லரை பணத்திற்காக
பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?
🙊🙉🙈
எத்தனை கொடுமைகள் இழைத்தாலும்
அதனையெல்லாம் மறந்துவிட்டு
மீண்டும் மீண்டும் ...2/
சின்னங்களை மட்டுமே பார்த்து
வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்?
🙊🙉🙈
படித்தவன் சூதும் பாவமும் செய்கிற சமூகத்தில் முன்னேற்றம் எந்த வழியில் வந்து சேரும்?
🙊🙉🙈
என் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா அந்தக் கட்சி ...
”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் ...3/
அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவோம்” என்று அப்பன் வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர் குடிக்கிற மகன்கள் இருக்கிற தேசத்தில் புதிய மலர்ச்சி எப்படி உருவாகும்?
🙊🙉🙈
கட்சி எது? சின்னம் எது? தலைவர் யார்?
எது சரியான பாதை?
என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத பொறியியல் ....4/
பட்டதாரிகள் மலிந்த இளைய தலைமுறையினால் மாற்றம் எப்படி வந்து சேரும்?
🙊🙉🙈
தேர்தல் என்றால் ஒரு நாள் விடுமுறை என்று வாக்குச்சாவடிக்கு செல்லாமல் விடுமுறை கொண்டாடுகிற தேசத்தில் நேர்மையான அரசு எப்படி சாத்தியம்?
5/
எமது மக்கள் எப்போதும் தற்காலிக சுகங்களிலே நிறைவடைந்து விடுபவர்களாய் இருக்கிற வரையிலும்
நிம்மதியான வாழ்க்கையை வாழப் போவதில்லை....
மக்களின் தரத்திற்குத் தக்கபடிதான் அரசு அமையும்.. 🙊🙉🙈
6/6
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தவளையும் ஓணானும் பிடித்து கொண்டு தன்னை மாவீரன் என கருதி கொண்டவன் சிங்கத்திடம் சிக்கினால் எப்படி இருக்கும்...
அப்படித்தான் மு.க.ஸ்டாலினையோ சீமானையோ பேட்டி எடுப்பது போல், மத்திய நிதியமைச்சர் ஶ்ரீமதி.நிர்மலா சீதாராமனிடம் பேட்டி எடுக்க சென்று கதற கதற .....1/
அடி வாங்குகின்றார் கார்த்திகை செல்வன்
நிதியமைச்சரின் செவிட்டில் அடிக்கும் பதிலுக்கு அவரிடம் பதில் இல்லை, அம்மையாரின் தீர்க்கமான பதிலில் இன்னொரு கன்னத்தையும் காட்டி கொண்டு அவர் நிற்பது பரிதாபமாக இருக்கின்றது
"ஊறுகாய் மாமி" என திராவிட கும்பலால் பட்டம் சூட்டபட்ட ....2/
மத்திய நிதியமைச்சர் கார்த்திகை செல்வனை ஊற போட்டு அடித்து துவைத்துவிட்டார் 👌👌
தமிழ்நாட்டில் இப்போதைக்கு அவரிடம் பேட்டி எடுத்து தப்பிவிட ஒரு பத்திரிகையாளனும் இல்லை,
ஆண்மை இருந்தால் எவனாவது முயற்சித்து பார்க்கட்டும்
மிக துல்லியமான தரவுகள், குழப்பமே இல்லாத பதில்கள்.....3/
சீனாவுக்கு எதிராக உலக நாடுகளுக்கு அழைப்பு! மோடியின் செயலால் பதற்றத்தில் சீனா!
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வேளையில் சீனா தார்மீக பொறுப்பேற்க மறுத்து வருகிறது. ஆனால் ...1/5
உலகின் பல நாடுகளும் உலக விநியோக சங்கிலிக்கு ஒரு ஆதாரத்தை மட்டுமே நம்பியிருக்கிறது என்பதை இந்திய பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையை சுட்டிக்காட்டி நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும், நமக்கு தேவையானவற்றை மற்றவர்களை சாராமல் நாமே உருவாக்கிக் கொள்ளவும்... 2/5
அவற்றை மற்ற நாடுகளுடன் இணைந்து பகிர்ந்தளிக்கவும் இந்திய உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடன் இணைந்து இந்த திட்டத்தில் இணைய பிற நாடுகளையும் வரவேற்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
இதனைப் பின்பற்றியே.... 3/5
காமராஜர் 1965ல் போர்முனைக்கு சென்றாரா என்றால் சென்றார்
அந்த போர் காஷ்மிரில்தான் தொடங்கியது, சீனாவுடன் 1962ல் தோற்ற இந்தியா துவண்டிருந்தது போதாகுறைக்கு நேரு அங்கிள் வேறு காலமாகியிருந்தார்
இந்நேரம் படையெடுத்தால் இந்தியா அவ்வளவுதான் என சீனா கொடுத்த ஆலோசனையிலே.... 1/
பாகிஸ்தான் படையெடுத்தது, நிச்சயம் பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஆதரவும் இருந்தது
ஆனால் சாஸ்திரியின் துணிச்சலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, இந்தியா எதிரியினை இருவழியில் பிரிக்க பஞ்சாபில் ஒரு போர்முனையினை திறந்து லாகூரை நோக்கி முன்னேறிற்று இதை பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை... 2/
இரு போர்முனை என்பதால் பாகிஸ்தான் திணறியது, இந்திய படைகள் பின்னி எடுத்தன
கண்ணதாசன் தன் பாணியில் "எல்லையில் வந்த எதிரிபடைகளை நம் படைகள் பந்து விளையாடுதம்மா" என அழகாக சொல்லிகொண்டிருந்தார்
பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் மரபு போர்முறையினை கைவிட்டு கொரில்லா தாக்குதலில் இறங்கியது....3/
இப்போது வந்து உள்ள (கொரோனா) போல காலரா,அம்மை நோய்கள் போன்ற நோய்கள் நம் கிராமத்தில் வந்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இறக்க நேரிட்டால், நம் முன்னோர்கள், "தெய்வ குற்றம்' ஏற்ப்பட்டுவிட்டது என்று உடனே கோயில் திருவிழா ஏற்பாடு செய்து "காப்பு" கட்டி விடுவார்கள்.
1/8
கிராமத்தில் நான்கு திசைகளிலும் நான்கு அம்மனுக்கு சிலைகள் வைத்து வேப்ப மரத்தை எல்லை காக்கும் எல்லையம்மனாக கருதி வழிப்பட்டனர்.
அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா வைப்பார்கள்.
இதனால் இந்த ஊர் மக்கள் வெளியூர் செல்ல மாட்டார்கள்.
வெளியூர் மக்கள் இந்த ஊருக்கு வர மாட்டார்கள்,
2/8
இதனால் நோய் பரவாமல் தடுக்கப்படும்.
மேலும் வீதியெங்கும் வேப்பிலை தோரணமும்,
வீட்டு வாசலில் வேப்பிலை,மாவிலை கொத்து சொருகி வைப்பதுடன், மாட்டுச் சாணம் தெளித்து மாவு அரிசி கோலம் போட்டு செம்மண் கரைத்து கோலத்தைச் சுற்றி வட்டமிடுவார்கள்.
3/8