*மிகவும் புகழ்பெற்ற குருவாயூரப்பன் கோவில். - கேரளா மாநிலம்.*
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, குருவாயூர் திருத்தலம். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
🇮🇳🙏1
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, குருவாயூர் திருத்தலம். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். இந்த ஆலயத்தை 'பூலோக வைகுண்டம்' என்றும் அழைப்பார்கள். இந்தக் கோவிலில் உள்ள மூலவரான குருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்🇮🇳🙏2
ஏனெனில் இந்த விக்கிரகம், மிகவும் புனிதத்துவம் பெற்றதான 'பாதாள அஞ்சனம்' என்னும் கல்லில் வடிக்கப்பட்டது என்கிறார்கள்.
குருவாயூரப்பன் கோவிலில் உள்ள மூலவர் விக்கிரகத்தை, வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணு உருவாக்கினார். பின்னர் அதனை பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார். 🇮🇳🙏3
அதை வைத்து சில காலம் பூஜை செய்து வந்த பிரம்மன், அந்த விக்கிரகத்தை தேவர்களின் குருவான பிரஜாபதியிடம் வழங்கினார். அவரிடம் இருந்த அந்த விக்கிரகம், கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரிடம் போய் சேர்ந்தது. 🇮🇳🙏4
அதன் மூலம், அந்த விக்கிரகம் மீண்டும் மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரிடமே வந்தடைந்தது. அதனை தான் ஆட்சி செய்த துவாரகையில் வைத்து வணங்கி வந்தார், கிருஷ்ணர்.
🇮🇳🙏5
கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாகும் தருணம் வந்தபோது, தன் சிறுவயது முதலே தன்னுடன் இருந்தவரும், தன் தேரோட்டியுமான உத்தவரை அழைத்தார், கிருஷ்ணர். அவரிடம், "இன்னும் சில நாட்களில் துவாரகையை கடல் சூழ்ந்துகொள்ளப் போகிறது. அந்த பெருவெள்ளத்தில், நான் வழிபடும் விக்கிரகம் மிதக்கும். 🇮🇳🙏6
அதனை தேவர்களின் குருவான, பிரஜாபதியின் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்" என்று கூறினார்.
கிருஷ்ணர் சொன்னபடியே, அடுத்த சில நாட்களில், பெரிய பிரளயம் ஒன்று உண்டானது. அந்த பிரளயத்தில் துவாரகை நகரம் தாக்கப்பட்டது. 🇮🇳🙏7
அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விக்கிரகம், குரு பகவானிடம் போய் சேர்ந்தது. அதை தன்வசப்படுத்திய குருபகவான், அவரது முதன்மை சீடரான வாயு தேவனுடன் சேர்ந்து விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டிய சிறப்பான ஒரு இடத்தைத் தேடி அலைந்தார். 🇮🇳🙏8
இறுதியில் அவர்கள் பரசுராமரால் உருவாக்கப்பட்ட, அந்த பசுமை போர்த்திய தேசத்தை அடைந்தார்கள். அதுவே கேரளம்.
அங்கே மகாவிஷ்ணுவின் மற்றொரு அம்சமாக கருதப்படும் பரசுராமரை, குரு பகவானும், வாயு பகவானும் சந்தித்தனர். 🇮🇳🙏9
பின்னர் அவரிடம், தங்களிடம் இருக்கும் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கான இடத்தை காண்பித்தருளும்படி வேண்டினர். அதைக் கேட்டு பரவசம் அடைந்த பரசுராமர், 'அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கான சிறப்புமிக்க இடம் இதுதான்' என்று, இருவரையும் அழைத்துப் போய் ஒரு இடத்தைக் காண்பித்தார்.🇮🇳🙏10
பன்னெடுங்காலமாக அந்த இடத்தின் அருகில்தான் சிவபெருமான், தவம் இருந்து வந்தார் என்பதை அதன் பிறகே குரு பகவானும், வாயு பகவானும் அறிந்து கொண்டனர்.
பரசுராமர் கை காட்டிய இடத்தில், விக்கிரகத்தை குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்தனர். 🇮🇳🙏11
அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த காரியத்தைச் செய்ததால், இந்த தலம் 'குருவாயூர்' என்று ஆனது. இத்தல இறைவனும் 'குருவாயூரப்பன்' ஆனார். 🇮🇳🙏12
கிருஷ்ண பகவானால், துவாரகையில் வைத்து பூஜிக்கப்பட்ட விக்கிரகம் என்பதால், இந்த ஆலயம் 'தென் துவாரகை' என்றும் போற்றப்படுகிறது.
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருநெல்வேலி பாபநாசம் அம்பாளின் சேலையில் எச்சில்…!
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர்.
பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு.
நமச்சிவாயர் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது வழக்கம்.
ஒரு நாள் இரவு, வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு இல்லத்திற்குத் திரும்பும்போது, உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார்.
நந்தி என்ற சொல்லுக்கு 'ஆனந்தமாக இருப்பவன்' என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் கொள்ளலாம்.நந்திக்கு அதிகார நந்தி என்ற பெயரும் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான், நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார்.
நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக் கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும் இரு புஜங்களிலும் மானும், மழுவும் உண்டு.
நந்தி தேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம்; ரன் என்பது ஓட்டுபவன்; துக்கத்தை ஓட்டுபவன் என்பது பொருள். நந்தி தேவரே உலகின் முதல் குரு. அவரிடம் அனங்கன், இந்திரன், சோமன், கந்தர்வர்கள் போன்ற தேவர்கள் வேதங்களைக் கற்றார்கள்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு முயற்சி: பிரதமர் மோடி
புதுடில்லி: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பா.ஜ., அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) திட்டம், நாடு முழுவதும் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடக்கூடிய நிலங்களைக் கொண்ட அனைத்து சிறு மற்றும் குறு நில உரிமையாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வருமான ஆதரவை வழங்கும் ஆகும்.
இத்திட்டம் துவங்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தொடர்ச்சியான டுவீட்டுகளில், 'விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பா.ஜ., அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது,' என தெரிவித்துள்ளார்.
நமது எதிரி நாடுகளின் டிஜிட்டல் தாக்குதலை தடுத்தாளும் தீரத்துடன் இந்தியா.!
எதிரி நாடுகளின் செயற்கைக்கோள் தாக்குதலை தடுப்பதற்கான தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் பணியை, இந்திய விண்வெளி பாதுகாப்பு முகமை தொடங்கியுள்ளது.
விண்வெளியில் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்படும் செயற்கைக்கோள்களை சில நாடுகள் தவறாக பயன்படுத்தி, டிஜிட்டல் தாக்குதல் நடத்துகின்றன.
இவ்வாறு,தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களைக் கண்டறிந்து, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம், தாக்கி அழிக்கும் திட்டத்தை, "மிஷன் சக்தி" என்ற தலைப்பில், இந்தியாவும் முன்னெடுத்துள்ளது.
வருகிற 25-ம் தேதி பிரதமர் வருகையை ஒட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
வருகிற 25-ந் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக மாலை 3.30 மணிக்கு கோவைக்கு வருகிறார். பின்னர் கோவையில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதனைதொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கொடிசியா வளாகத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு சென்று சிறப்புரையாற்றுகிறார்.
பிரதமர் வருகையையொட்டி கோவையில் தமிழக போலீசார் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவு போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.
பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
🕉️மரகத கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி உள்ளது. 🇮🇳🙏1
முருகனைத் தவிர அனைத்து தெய்வச் சிலைகளும் மரகதக் கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு வலது பக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. 🇮🇳🙏2
இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது. இந்த வள்ளி மணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. 🇮🇳🙏3