Genre : Sci-fi, Suspence Thriller
IMDb Rating : 7.2/10
Episodes : 8
Available in : Netflix
ஜப்பானிய மொழியில் வெளியான Alice in Borderland என்ற Manga comics பின்னர் Anime series ஆகவும் வெளிவந்தது. அதையே இப்பொழுது TV series ஆக வெளியிட்டுள்ளார்கள்.
கொரியன், மலையாளம் படங்கள் உயிரோட்டமா இருக்கிறதுக்கு காரணம் கதையோடு பின்னி பிணைந்திருக்கும் emotionsதான்.
ரத்தம் தெறிக்கிற action காட்சிகள் உள்ள கொரியன் படம் எல்லாம் பார்த்தீங்கன்னா அதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் emotions காட்சிகள் இருக்கும்.
இதுவும் அதே மாதிரியான கதைதான்.
The Hunger Games triology, Maze Runner Triology போன்ற படங்கள் பார்த்திருக்குறீர்களா? அவற்றை போன்ற ஒரு survival விளையாட்டுத்தான் இந்த series.
ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. இரண்டாம் பாகத்துக்கு தரமான lead உடன் முடிவடைகிறது.
கதை : டோக்கியோவில் மூன்று நண்பர்கள் சந்தித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். நடு ரோட்டில் நின்று அவர்கள் செய்த சேட்டையில் விபத்து நடக்கிறது. போலீசுக்கு பயந்து ஒரு டாய்லெட்டினுள் சென்று ஒளித்துக்கொள்கின்றனர். சிறிது நேரத்தில் வெளியே வந்து பார்த்தால் அவர்களை தவிர அங்கு யாருமே இல்லை.
எல்லோரும் மாயமாக மறைந்து விடுகிறார்கள். கார்கள் எல்லாம் ரோட்டில் அங்கங்கே நிற்கின்றன, மின்சாரம் இல்லை, எந்த எலெக்ரோனிக்ஸ் பொருட்களும் வேலை செய்யவில்லை. திடீரென திரையில் Game ஆரம்பிக்கும் இடத்திற்கு செல்லும்படி குறிப்பிடப்படுகிறது. இவர்களும் அங்கு செல்கின்றனர்.
போன இடத்தில் சில போன்கள் இருக்கும். ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொள்ளும்படி எழுதி இருக்கும். போனை கையில் எடுத்ததும், "Welcome to Game" என்று மெசேஜ் வருகிறது. இவர்களுடன் புதிதாக இரண்டு பெண்களும் கேமில் இணைகின்றனர். ஆட்டம் சூடு பிடிக்கிறது. அவர்களின் பரபரப்பும் நம்மை தொற்றிகொள்கிறது.
Diamond, Clubs, Spades, Heartsனு ஒவ்வொரு வகை cards ஐயும் சேர்க்க வேண்டும். ஒரு கேமில் வெற்றி பெற்றால் ஒரு card கிடைக்கும். ஒவ்வொறு கேமும் ஆளைக்கொள்ளும் விளையாட்டுக்கள். மூளையை, பலத்தை உபயோகித்து என்று விதம் விதமான விளையாட வேண்டும். புது விளையாட்டில் வேறு சிலரும் இணைவார்கள்.
Heart card games இல் அவங்களுக்கு பிரியமானவங்களையே கொல்ல வேண்டி வரலாம். கடைசியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் கதை. முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு முன் கதை, அதையும் சரியான இடங்களில் சொல்லி நம்மை அசரடிக்கிறார்கள். எங்குமே அலுப்படிக்கவில்லை.
Seriesல காந்தியின் பொன்மொழி ஒன்றை முக்கிய கதாபாத்திரம் சொல்லும் காட்சி ஒன்று இருக்கும்.
காந்தி தேசத்தவரை தவிர மற்ற எல்லா நாடுகளிலும் காந்தியின் தாக்கம் அளப்பரியதுனு புரிஞ்சுக்கிட்டேன். கண்டிப்பா பாருங்க.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன் 2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன். 3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம். 4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி 5) மோகமுள் – தி.ஜானகிராமன். 6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.
7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி 8) தலைமுறைகள் – நீல பத்மநாபன் 9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன் 10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
சிறந்த தமிழ் நாவல்கள்
1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.
Part 3
வருண் எலும்புகளை மாத்தி வைக்க இன்னொரு பையனோட எலும்புகள் தேவை. அதுக்காக இன்னொரு கொலை செய்திருக்கார் ஜோர்ஜ் குட்டி. அந்த கொலைய பார்த்த ஒரு சாட்சியிடம் இருந்து கதை ஆரம்பிக்குது. தன்னோட குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கு போவார் ஜோ.குட்டினு போலீசே பதறுது. #SuspectX
Part 4
பதினான்கு வருடங்களுக்கு பிறகு முதலாவது பொண்ணோட வாழ்க்கைல நடந்த மாதிரியே சம்பவங்கள் இரண்டாவது பொண்ணு அனு வாழ்க்கைலேயும் நடக்குது. ஜோர்ஜ் குட்டிக்கு அது Groundhog dayயா மாறிடுது. இப்போ இரண்டு பையன்களின் குடும்பமும் ஜோர்ஜ் குட்டி குடும்பத்தை பழிவாங்க நினைக்கிறாங்க.
Part 5
ராகவா கேரளாக்கு பிக்னிக் போய் வருண் எலும்பை புதைச்ச இடத்துல சுச்சூ போறான். வருண் ஆவி ராகவா உடம்புல புகுந்திடுது. அப்புறம் வருண் சொன்ன கதையை வச்சு ஜோர்ஜ் குட்டியை பழிவாங்க போய் , அங்க அவர் பொண்ணு அனு மேல காதலாகி, ராகவா எப்டி ஜோ. குட்டி குடும்பத்தை காப்பாத்தினார். #Muni10
'அச்சு மையோட Nitrous Oxide (Laughing gas) ஐயும் கலந்து அச்சடிச்சு, ஒவ்வொரு பக்கத்தையும் சாராயத்தில் ஊறவச்சு, காயவச்சு ஒட்டி புத்தகமாக மாத்தி கொடுத்திருக்கிறார்' என்ற விமர்சனம்தான் பிரபு தர்மராஜ் எழுதிய "ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும்" என்ற சிறுகதை தொகுப்பினை வாசிக்க தூண்டியது.
புத்தகத்தில் பூனை கிடக்குதா என்று வாசிக்க ஆரம்பித்தால் பெரிய சாராயப்பானையே கிடக்கு.
அல்கஹாலிசம் நிறைந்த பன்னிரண்டு சிறுகதைகள். ஒவொன்றிலும் மதுப்பிரியர்கள்/ பான முற்றோர்/ மதுமக்களினதும் அட்டகாசங்கள். (குடிகாரர்களை எங்கும் இல்லாத வகையில் மிகவும் கண்ணியமாக குறிப்பிடுகிறார்)
முதல் கதையான "புடுக்குநாதபுரத்து புண்ணியாளன்கள்" தலைப்பிலிருந்து சிரிக்க ஆரம்பித்து கடைசி பக்கம் வரை சிரித்துக்கொண்டே இருந்தேன். அம்மா பார்த்துவிட்டு தம்பி புத்தகம் படிக்கேக்க சிரிச்சுக்கொண்டே இருக்கிறான் யாரையும் லவ் பண்ணுறானோ என்று கேளுங்கப்பா என்று அப்பாவிடம் சொன்னது தனிக்கதை.
கல்கியில் வெளியான 'கல்லுக்குள் ஈரம்' தொடர் கதையின் பைண்டிங்கின் pdf கிடைத்தது. வாசிப்பதற்க்கு தெளிவில்லாமல் இருந்தது. இருந்தாலும் 1967 காலகட்டத்தில் வெளியான தொடரில் இடையிடையே இருந்த விளம்பரங்கள் ரொம்ப ஈர்த்திச்சு. எல்லாத்தையும் snip பண்ணினேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.
"ஆன்ட்.... ஆன்ட்ரியா கண்ணை கசக்கிட்டு அழுறதை முதல்ல நிறுத்து, நாளைக்கு பொண்ணு பார்க்க தானே வாறாங்க, கையோட கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போக இல்லையே. 1/6
நான் நம்ம காதலை பத்தி எங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டு, உங்க வீட்ட பொண்ணு கேட்க சொல்றேன். நீயும் உங்க வீட்ல சொல்லு." என்று நூறாவது முறையாக கணேசன் சொன்ன சமாதானம் கொஞ்சம் வேலை செய்தது. கணேசன் சொன்னது போலவே வீட்டில் பேசி அம்மா அப்பாவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்துவிட்டான். 2/6
அது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவள் வீட்டில் எப்படி சொல்வது என்ற பயம் நெஞ்சை அடைத்தது. அப்பா சும்மாவே நெருப்பெறும்பு, காதல் என்றால் கொள்ளியெறும்பு ஆகிவிடுவார்.
எப்படியோ மனதை திடப்படுத்திக்கொண்டு விஷயத்தை சொன்னாள்.
வீடே அல்லோகலப்பட்டது. 3/6