தலித்தின ஆண்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதில் தலித் பெண்களுக்கு வரலாறுதொட்டே எப்பொழுதும் பெரும்பங்கு இருந்திருக்கிறது. சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, பவ்யமாக கைகட்டி, கணவன் பின்னால் நிற்கும் பெண்களல்ல அவர்கள்.
எசிலிக்கு எசிலியாக, ராட்சசர்களுக்கு ராட்சசிகளாக, அன்புக்கு அன்பாக, முகத்துக்கு நேராக ஊடகை, காதலை, கூடலைக் கொட்டித்தரும் அசுரச்சிகள்.
கருத்த, கம்பீரமான தன் ஆண் இதர சமூக ஆண்களின் முன்பு அடிமையாய் தலைகுனிவதை அவர்கள் எப்பொழுதும் விரும்பியதில்லை.
பெரும்பான்மை கிராமிய சாதிக்கொடுமைகளிலிருந்து ஆண்களை நகரங்களுக்கு நகர்த்தி கல்வியில்,வேலையில், சமூகத்தில் ஆண்களை ஆளாக்குகிறவர்களாக அவர்களே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு பாடலிலும் தனிக்கதை சொல்லும் அதே நேர்த்தியில் @mari_selvaraj இம்முறை அப்படியொரு தலித் பெண்ணான பண்டாரத்தி புராணத்துடன் வந்திருக்கிறார்.
"எங் கக்கத்துல வச்ச துண்டை தோளு மேல போட்டுவிட்டா.., தோரணயா நான் நடக்க வாலிபத்த ஏத்திவிட்டா" எனும் யுகபாரதியின் வார்த்தைகள் வெறுமனே வார்த்தைகள் மட்டுமல்ல நிஜ வரலாறும் அதுதான்.
ஒவ்வொரு தலித் ஆடவரையும் ஆளாக்கிய அத்தனை பண்டாரத்திகளுக்கும் சேர்த்து மாரி இப்பாடலை சமர்ப்பணம் செய்திருக்கிறார். காலரா கொண்டு போன பண்டாரத்தியை நினைத்து மைக்கில் உருகும் லாலைப் பார்க்கையில் நம் கண்களும் குளமாக ஆகிறது.
தமிழ்சினிமா பாடல்களுக்கு "Pure Art" என எதேனும் பட்டம் இருந்தால் தாரளமாக #KandaaVaraSollunga#PandarathiPuranam என இருபாடல்களுக்கும் அதைத் தந்துவிடலாம். ❤
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சென்னையின் மேயராக தலைவர் @mkstalin இருந்த காலத்தில்தான் நகரத்தின் முக்கியமான 9 மேம்பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டன; மேம்பாலங்களுக்கு ஒதுக்கிய 95கோடியில் 30 சதவீதத்தை மிச்சம் செய்து கட்டி முடித்ததுதான் தலைவரின் நிர்வாகத் திறனுக்கு சான்று.
தலைவர் @mkstalin செய்து தந்த சென்னையின் அசாத்திய வளர்ச்சித்திட்டங்களைப் பார்த்து வியந்த வியந்த ஹட்கோ நிறுவனம் சென்னைக்கு 'தூய்மையான நகரம்' என்ற விருது வழங்கி சிறப்பித்தது வரலாறு.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் தாத்தா H.M .ஜெகநாதன் அவர்களின நிளைவு தினம்- ஜீலை 25.
தாத்தா HM.ஜெகநாதன், சென்னையில் 1894 ல் அக்டோபர் 25ம் நாள் முனுசாமி என்பவரவது மகனாக பிறந்தார்.
தந்தையார் பிரிட்டிஸ் இந்திய அரசின் ராணுவத்திற்கான கருவிகளைச் செய்யும் தோல் ஒப்பந்ததாராக இருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்ததால் ஜெகநாதன் கல்வி கற்று பட்டம் பெற்றார். ஆங்கில மொழிப்புலமை மிக்கவவராகவும், சிறந்த ஆளுமைப்பண்புள்ளவராகவும் வளர்ந்தார்.
.
கல்லூரி முடித்தவுடன், 1914ல் துவங்கப்பட்ட நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஒடுக்கப்பட்டமக்களின் விடுதலையின் பால் ஆர்வம் காரணமாக ராவ் சாகிப் எல்சி குருசாமி அவர்களுடன் இணைந்து சென்னை மாகாண அருந்ததியர் சங்கத்தை நிறுவி, அதன் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று களப்பணியாற்றினார்.
யார் பெரியார்? #Thread
--
சமீபத்திய பொள்ளாச்சி விவகாரத்தில் கூட பெண்களின் ஒழுக்கம் பற்றி கேள்வியெழுப்பிய சனாதன மதவாத ஆண்களை செருப்பால் அடித்தவர்தான் பெரியார்.
நவீனத்தின் வளர்ச்சியடைந்திருந்தாலும் சுயசாதி உணர்வு பேசி வலம் வரும் ஆப்பாயில் இளைஞர்களை செருப்பால் அடித்து சமத்துவம் போதிக்கும் கருத்தியலின் தந்தைதான் பெரியார்.
தமிழ், தமிழன் என்று பேசும் மேடைப் பொய்யர்களின் தம்பிகளுக்கும் சேர்த்து தமிழை எளிமையாக்கி மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தவர் பெரியார்.
ஹாய் தோழர்.. நேற்றும் இன்றும் கடினமான வேலைப்பளுவில் இருந்ததால் உடனடியாக விவாதத்திற்கு வர இயலவில்லை. அபயங்கரிடம் வாள் இருந்தும், வெட்டவில்லை என்பதில் ஆரம்பித்து, எனக்கு அருகில் இருக்கும் கலைகளின் "வெறுப்பை உமிழ்பவன்" பட்டம் தந்து...
என் கமல் மேலான விமர்சனத்திற்கு பதிலடியாக காலாவை பகுதிபகுதியாக போஸ்ட்மார்ட்டம் செய்வோம் எனச்சொல்லி "அன்பே சிவம் என் மனதுக்கு நெருக்கமான சினிமா கூட கிடையாது. அதன் பாதி எழுத்து ஏற்கெனவே வெற்றி பெற்ற படம். ஆனால், எங்கள் படைப்பு எவ்வளவு உயர்வு தெரியுமா? என்றால்,
நொண்டிக் காலாவின் உண்மையை சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. என்றவாறு எனக்கு மென்சனிட்டு கேள்வி எழுப்பியிருந்தீங்க. ஒரு ஊடகவியலாளராக பரந்துபட்ட பார்வையோடு ஒரு சர்ச்சையை அணுகாமல், சராசரி ட்விட்டாளர் மனநிலையில் நான் கமல் மேல் சாதிய வன்மம் கொண்டவன்