நவம்பர் 7 2020 அன்று நானும் @praba_alagar அவர்களும் பேசினோம். அவரிடம் தலைவரின் நெஞ்சுக்கு நீதி தொகுதியும், தளபதி குறித்து வந்த அனைத்து புத்தகங்களும் வேண்டும் என்றேன். தளபதி குறித்து மார்ச் 1 க்குள் ஒரு புத்தகம் எழுத வேண்டும். திராவிட வாசிப்பில் ஒரு
சிறப்பிதழ் கொண்டு வரவேண்டும் என்றுச் சொன்னேன்.
பிரபா,புத்தகங்களை அனுப்பி வைத்தார். புத்தகங்கள் 15 டிசம்பர் 2020 அன்று சிங்கப்பூர் வந்து சேர்ந்தது.மார்சுக்கு இரண்டரை மாதம் இருந்தது.பல்வேறு சூழ்நிலைகளால் உடனே ஆரம்பிக்க முடியவில்லை.தளபதியின் வரலாறை படிக்க படிக்க அதில் கழக வரலாறும்
அடங்கி இருப்பது தெரிந்தது. என்னென்ன தலைப்புகளில் எழுத வேண்டும் என குறிப்பெடுத்துக்கொண்டேன். உண்மையில் விரிந்த வரலாறு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுடையது. சுருக்கமாக, ஜனரஞ்சகமான புத்தகமாய் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். தற்காலத்து இளைஞர்கள் வாசிக்க ஏற்றவாறு இருக்க வேண்டும் என
நினைத்தேன். அதே வேளையில், தளபதியின் வரலாறு கழகத்தின் வரலாறோடும், தமிழ்நாட்டின் வரலாற்றோடும் ஒன்றிப்போய் இருப்பதால், ஒரு வரலாற்று ஆவணமாகவும் இந்நூல் ஆகிவிட்டது!
எழுத ஆரம்பித்தவுடன் பிரபாவிடம் மீண்டும் சொன்னேன். அவரே பதிப்பிப்பதாகவும் சொன்னார். பிப்ரவரி வந்து விட்டது.
சுருக்க வரலாறு 200 பக்கங்கள் ஆகிவிட்டது. தலைவரின் வாழ்வில் எதையுமே விடமுடியாது. அவர் பிறந்த 1953 ஆம் ஆண்டுக்கூட கழக வரலாற்றில் முக்கியமான ஆண்டு. கல்லக்குடி போராட்டம் நடந்த ஆண்டு. எம்ஜிஆர் கழகத்தில் இணைந்த ஆண்டு. ஆக, ஆண்டு 1953 என்பதையே முதல் கட்டுரையாக எழுதி முடித்தேன்.
அதன் பிறகு இளைஞர் திமுக, மிசா, இளைஞர் அணி, சட்டமன்ற பயணம், மேயர் பொறுப்பு என விரிவாக அவரது பயணத்தை பதிவு செய்தேன். அதைத்தொடர்ந்து கட்சியில் அவரது வளர்ச்சி, அமைச்சராக,துணை முதலமைச்சராக அவரது பணிகள், அவர் சந்தித்த போராட்டங்கள், ராணி மேரி கல்லூரி கைது, கண்ணகி சிலை அகற்றப் பிரச்சனை,
அவரிடம் இருக்கும் அரசியல் பண்பு. அவரது அமெரிக்க, ஜப்பான் பயணக்குறிப்புகள், அவரது பேச்சுக்கள், எழுத்துக்கள், அறிக்கைகள், எதிர்கட்சி தலைவராக அவர் செய்த போராட்டங்கள், உரிமைக்குரல்கள், திமுக தலைவராக பொறுப்பேற்பு, மதவாதத்தை வீழ்த்தும் ஜனநாயகவாதி, 2019 தேர்தல் வெற்றி, 2021 பிரச்சாரம்
என எல்லா விசயங்களையும் தொட்டு இருக்கிறோம்.
இந்த புத்தகத்தின் முக்கியத்துவம் கருதி, ஒரு சரியான எடிட்டரை போட வேண்டும் என நினைத்தோம். அதன்படியே, Subhashini Siva புத்தகத்தை செம்மை படுத்தினார்.அவர் சுட்டிக்காட்டிய இடங்கள் சரிசெய்யப்பட்டது. நிகர்மொழி பதிப்பகத்தினரும் பல முறை வாசித்து
பிழை திருத்தினர். அப்படியும் சில பிழைகள் வந்ததற்கு காரணம், நேரமின்மை தான்.இவை அடுத்த பதிப்பில் சரிசெய்யப்படும். அச்சுப்புத்தகத்தின் அருமை புரிந்தது!
புத்தகத்திற்கு நல்ல எடிட்டர் கிடைத்துவிட்டார். அடுத்தது அட்டைப்படம். தலைவர் ஸ்டாலிலும் திருமதி. துர்கா ஸ்டாலினும் இருக்கும்
ஒரு படத்தில் தளபதி ஸ்டாலின் தனித்துவமாய் இருப்பார். அந்த படத்தையே போஸ்டர் ஆக்கினோம். ஆனால், படம் தெளிவாக இல்லை. பிரபா, Digital portrait ஆக்கலாம் என சில இணையதளத்தை காட்டினார். உடனே என் நினைவுக்கு வந்தது @kaamaddy. கார்த்தியிடம் இது தான் செய்யனும் என்று சொன்னதும் சிறப்பா
செஞ்சிடலாம் அண்ணே என்றார். கார்த்திக்கு வேலை பழு இருந்ததால் அவரை பிடிக்க முடியவில்லை. தினமும் கேப்பேன்.அவர் செஞ்சிட்டு இருக்கேன்னு சொல்வார். இவர் வரைகிறாரா இல்லையா என்ற சந்தேகமே வந்துவிட்டது எனக்கு. மார்ச் 1 புத்தகத்தை ரிலீஸ் செய்வதற்காக தான் எல்லோரையும் “படுத்தி” கொண்டிருந்தேன்.
கார்த்தி படத்தை தந்த வேளையில் உணர்ந்தோம், இந்த படமே மாஸ் ஹிட் ஆகும், It was worth waiting என்று.
பிரபா படத்தையும்/ புத்தகத்தையும் தலைவர் அல்லது இளைஞரணி செயலாளரிடம் கொடுத்து வெளியிட செய்வோம் என்றார். அணுகினோம். தேர்தல் நேரம், பல்வேறு பணிகளுக்கு மத்தியில் அவர் சென்னை புத்தக
சந்தைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வருவதை அறிந்து எங்கள் விருப்பத்தை சொன்னோம். அதன் பின் நடந்தது வரலாற்று நிகழ்வு!
நம் தலைவருக்கு ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணவிதை விழுந்து அதை சில மாதங்களுக்குள் செயல்படுத்திய மகிழ்ச்சி ஒருபக்கம், இவ்வகை புத்தகங்கள் தரும் பொறுப்பும்,
பயமும் ஒரு பக்கம் என கலவையான மனநிலையில் இருக்கிறேன்.
திராவிட இயக்க வரலாற்றை தொடர்ந்து ஆவணப்படுத்த வேண்டும் என்கிற முனைப்பின் ஆரம்ப புள்ளி இது. இனி தான் ஆரம்பம்!
நாம் தமிழர் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் ஒருவரின் பேட்டி Red Pix ல் இருக்கிறது. அதிமுகவுக்கு ஊதுகுழலாக நாதக இருக்கிறது. சீமானின் அசைன்மெண்ட் வாக்குகளை பிரிப்பது தான், தமிழ் தேசியம் எல்லாம் ஒன்றுமில்லை என சராமாரியான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். 11 ஆண்டுகளாக நாம் தமிழர்
கட்சிக்கு தனது இளமை, உடைமை என எல்லாம் அர்பணித்தும், கட்சியில் அவரை போன்றோருக்கு எந்த ஜனநாயக உரிமையையும் தரவில்லை என்கிறார். சீமான் - சசிகலா உறவினர் என சொல்லும் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதிமுகவின் கள்ளக்கூட்டாளி சீமான் என சொல்கிறார். மன்சூர் அலிகானை தனியாக கட்சி
ஆரம்பிக்க வைத்து ஏதேனும் முக்கிய தொகுதியில் திமுகவை எதிர்த்து வாக்குகளை பிரிக்க வைக்க நினைக்கிறார் சீமான் என பல விசயங்களை அந்த பேட்டியில் சொல்கிறார்.
அந்த மனிதரின் பேச்சும், உடல் மொழியும் அவரது ஆழமான வேதனையை வெளிப்படுத்துகிறது. இந்த பேட்டியை வைத்தே கட்சி தன்னை நீக்கிவிடும்
1949 ல் கட்சி ஆரம்பிக்கப்பட்டு,
1957ல் முதல் தேர்தலை சந்தித்து,
1967ல் வலுவான காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, ஆட்சியை பிடித்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
1975ல் அவரச நிலை சட்டத்தை இந்திராகாந்தி கொண்டு வந்த போது, அதை எதிர்த்து முதல் தீர்மானம் போட்டக்கட்சி திராவிட முன்னேற்றக்
கழகம்.
விளைவு, 1976ல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைப்பு. மிசா சட்டத்தில் எண்ணற்ற திமுகழகத்தினர் கைது. சிறையில் கொலை செய்யும் அளவுக்கு வன்மத்துடனான தாக்குதல். முதல்வர் மகன் என்று பாராமல் விழுந்த அடியை தாங்கிய முக. ஸ்டாலின். அவரை காப்பாற்றி உயர் துறந்த தியாக மறவர் சிட்டிபாபு.
வெளியே “தன்னந்தனியாக” ஜனநாயக போரை நடத்தினார் கலைஞர் கருணாநிதி. மு.க.ஸ்டாலின், ஆசிரியர் வீரமணி, டி.ஆர் பாலு, திருச்சி சிவா போன்றோர் இன்றும் மிசாவுக்கான வாழும் சாட்சிகள். அவர்கள் உடம்பிலும் மனதிலும் இன்னும் தழும்புகள் இருக்கும்!
திமுகவை ஆதரிப்பது என்பது பதவிக்காகவோ, பணத்துக்காகவோ அல்ல. அது ஒரு நன்றிக்கடன்!
திமுக மீது எவ்வளவு அவதூறை, வன்மத்தை இன்றைய இளைஞர்களிடம் பரப்பி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தம்பியின் புரிதல் ஒரு உதாரணம்!
பெரியார் ஏன் சிறந்தவர், காமராசர் ஏன் சிறந்தவர் என்பது மக்களுக்கு எளிதில்
புரிந்து விடும். ஏனெனில், அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் என்பதை திரும்பத்திரும்ப பேசியும், சொல்லியும், எழுதியும் வருகிறோம்.
ஆனால், அண்ணா ஏன் சிறந்தவர்? கலைஞர் ஏன் சிறந்தவர்?என அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால்,அவர்கள் மக்களை அதிகாரம் பக்கம் திருப்பினார்கள். பொருளாதார சுதந்திரம்
தந்தார்கள். ஆகையால், திமுக என்றால் பணம், பதவி, அதிகாரம் தான் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது. அதை தவிர்க்கவும் முடியாது. திமுக என்றால் வெறும் ஊழல் கட்சி மட்டும் தான் என்ற சங்கிகளின் தொடர் பரப்புரை வென்றதும் இப்படித்தான்!
கேள்வி: உங்கள் மூளைக்குள் இந்துத்துவம் இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது?
பதில்: இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று ஒரு மீம் பார்க்கிறீர்கள். நீங்கள், அதை பார்த்ததும் , "ஆகா சூப்பர்" என்று அதை ஷேர் செய்கிறீர்கள்.
உங்கள் பதிவில், உங்கள் நட்பு பட்டியலில் உள்ள ஒருவர் வந்து இடஒதுக்கீடு ஏன் தேவை என்று விளக்கம் தருகிறார். நீங்களும் அவர் என்ன சாதியாக இருப்பார் என்று யோசித்துக்கொண்டே இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
அந்த நேரத்தில், உங்கள் நட்பு பட்டியலில் இல்லாத ஒரு வேற்று மத பெயர் கொண்ட நபர் உங்கள் பதிவுக்கு எதிர்வினை ஆற்றுகிறார். உடனே, அவர் பெயரை பார்த்தவுடனேயே அவர் எதிர்வினைக்கு பதில் சொல்லாமல், அவர்கள் மதத்தில் உள்ள பிரச்சனையை பேச ஆரம்பித்தால்..
திமுக வை ஏன் பாஜக ஒண்ணுமே செய்யல. ஆனா, சசிகலா, அதிமுகவை படுத்தி எடுக்குது! இதுல இருந்து என்ன தெரியுது? திமுக - பாஜக கள்ளக்கூட்டணின்னு தெரியுது!
- பெரியாரிய உணர்வாளர்கள், அதிமுக ஒன்றிய கிளை, சின்னம்மா பேரவை
1976 ல் கலைஞர் “எமர்ஜென்சி” சர்வாதிகாரத்துக்கு அடிபணிந்திருந்தால்,
ஆட்சியிலேயே இருந்திருப்பார். சர்வாதிகாரத்தை எதிர்த்ததால், ஆட்சி கலைக்கப்பட்டது.
இந்திராகாந்தி, உம்மென்றதும் குடுகுடுன்னு ஒடிப்போய் எம்ஜிஆர், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்ன்னு மாத்தினார்.
1989ல் கலைஞர் சிறந்த ஒரு ஆட்சியை தருகிறார். விடுதலை புலிகள் ஆதரவுன்னு சொல்லி ஆட்சி கலைக்கப்படுகிறது.
1991ல் ராஜீவ் காந்தி கொலைப்பழி திமுக மீது வஞ்சமாக சுமத்தப்பட்டு,ஊழல் ராணி தமிழகத்தின் முதல்வர் ஆகிறார்.
1996-2001,கலைஞரின் பொற்கால ஆட்சி. இருப்பினும், 2001 ல் ஜெயா ஜெயிக்கிறார்.
இணைய உபிக்கள், அவர்களது Attitude ஐ மாத்தினால் திமுக நிச்சயம் வெற்றி பெறும்! - நடுநிலை கருத்தாளர்கள்
1996 ல் கலைஞரோட பொற்கால ஆட்சியில பள்ளிப்படிப்பை இலவச பஸ் பாசில் சென்று படிச்சு, அத்தோட தமிழ், தமிழன், தமிழ்நாடுங்கிற அரசியலை கலைஞரிடமிருந்து உள்வாங்கி,
2000 ல் கலைஞர் கொண்டு வந்த Single window System ல என்ஜினியர் ஆகி,
2004ல் கலைஞர் உருவாக்கின டைடல் பார்க்ல பிராஜக்ட் பண்ணி,
2005ல் சென்னைலயே ஒரு ஐடி வேலைல சேர்ந்து, பல பெரிய நிறுவனங்கள்ல, பல நாடுகள்ல வேலைப்பார்த்து,
2007ல் கலைஞரின் உதவியால் கொண்டுவரப்பட்ட தமிழ் எழுத்துருவால்
தமிழை இணையத்தில் எழுத ஆரம்பித்து,
2009 ல் அதே தமிழில் கலைஞரை திட்ட ஆரம்பித்து,
2013ல் மோடின்னு ஒரு கேடியை மேலே கொண்டுவரும் போது, என்னவோ தப்பாகுதேன்னு யோசிச்சு,
2014ல் மோடி ஜெயித்த இரவு, லண்டனில் தூக்கமில்லாமல் தவித்து,