1949 ல் கட்சி ஆரம்பிக்கப்பட்டு,
1957ல் முதல் தேர்தலை சந்தித்து,
1967ல் வலுவான காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, ஆட்சியை பிடித்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

1975ல் அவரச நிலை சட்டத்தை இந்திராகாந்தி கொண்டு வந்த போது, அதை எதிர்த்து முதல் தீர்மானம் போட்டக்கட்சி திராவிட முன்னேற்றக்
கழகம்.

விளைவு, 1976ல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைப்பு. மிசா சட்டத்தில் எண்ணற்ற திமுகழகத்தினர் கைது. சிறையில் கொலை செய்யும் அளவுக்கு வன்மத்துடனான தாக்குதல். முதல்வர் மகன் என்று பாராமல் விழுந்த அடியை தாங்கிய முக. ஸ்டாலின். அவரை காப்பாற்றி உயர் துறந்த தியாக மறவர் சிட்டிபாபு.
வெளியே “தன்னந்தனியாக” ஜனநாயக போரை நடத்தினார் கலைஞர் கருணாநிதி. மு.க.ஸ்டாலின், ஆசிரியர் வீரமணி, டி.ஆர் பாலு, திருச்சி சிவா போன்றோர் இன்றும் மிசாவுக்கான வாழும் சாட்சிகள். அவர்கள் உடம்பிலும் மனதிலும் இன்னும் தழும்புகள் இருக்கும்!
அவசர நிலையை கொண்டு வந்த அதே இந்திராவை தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வைத்தவர் கலைஞர்.ஆனால்,இந்திரா காந்தி அதிமுகவிற்கு அன்றே வைத்த பெயர் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.”

கட்சத்தீவை மாநில அரசிடம் எந்த விதத்திலும் சொல்லாமல் “ஒன்றிய அரசு” தாரை வார்த்த போது,
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி எதிர்த்தவர் கலைஞர் கருணாநிதி.

அந்த கூட்டத்தையே புறக்கணித்தவர் எம்ஜிஆர்.

இன்றைய அமித்ஷா தயவில் இருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ் போலத்தான் அன்று எம்ஜிஆர் - இந்திரா உறவும் இருந்தது. அதன் விளைவு தான் இன்று அஇஅதிமுக இருக்கும் நிலை!
1989ல் ஈழத்தமிழர் ஆதரவை காரணம் காட்டி திமுக ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது.
1991ல் ராஜீவ் காந்தி படுகொலையை காரணம் காட்டி திமுக தேர்தலில் வீழ்த்தப்பட்டது.
திமுக ஆட்சி எந்த காரணம் சொல்லி கலைக்கப்பட்டாலும்,வீழ்த்தப்பட்டாலும் கட்சியை இம்மியளவும் ஒன்றும் செய்ய முடியவில்லை மத்திய அரசால்
ஏனெனில்,திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஜனநாயக கட்சி. மக்களே அதில் பிரதானம்.
1976ல் முயன்றார்கள்.1989 ல் முயன்றார்கள்.1991 ல் முயன்றார்கள். 2009 ல் முயன்றார்கள்.
அவர்களால் சில வியாபாரிகளைத் தான் உருவாக்க முடிந்ததே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.
2011 ல், 2016ல் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்து விட்டோம் என அவர்களும், அவர்களிடம் கூலி பெறும் வியாபாரிகளும் கொக்கரிக்கிறார்கள்.

ஆனால், இந்த பத்தாண்டில் தான் “தமிழ்நாட்டு” மக்கள் விழித்துக்கொண்டார்கள். யார் தங்களை இதுநாள் வரை காத்தது.
அவர்கள் இல்லையெனில் இங்கே என்ன நடக்கும் என கண்கூட பார்த்தார்கள்.

விளைவு, 2019 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதோ, 2021 தேர்தல் வந்துவிட்டது. மக்கள் காத்திருக்கிறார்கள். திமுக மீண்டும் வந்துவிடக் கூடாது என “அவர்கள்” போடும் குட்டிக்கரணங்கள்
அனைத்தையும் பார்க்கிறார்கள்.

சிஸ்டம் சரியில்லை என்று சொன்னவர் Shut down செய்துவிட்டார்.

சாக்கடை ஜலத்தையாவது பயன்படுத்தி திமுகவை வீழ்த்துவோம் என்று சொன்ன “நூலோர்கள்” இப்போது “ஜலம் போச்சே” என உட்கார்ந்து இருக்கிறார்கள்.
ஆனாலும் திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று “எதை வேண்டுமானாலும்” செய்யத்துணிவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் 1971 தேர்தலில் பெற்ற 184 இடங்களே திமுக வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக இருக்கிறது.
அந்த சாதனையை முறியடிக்கப் போவது தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களே. அதிகார பலத்தையும், பண பலத்தையும் மக்கள் தங்கள் “மன பலத்தால்” வீழ்த்துவார்கள்!

ஹிட்லர்களை வெல்வது ஸ்டாலின்களே!

- ராஜராஜன் ஆர்.ஜெ

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Rajarajan RJ

Rajarajan RJ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RajarajanRj

4 Mar
நாம் தமிழர் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் ஒருவரின் பேட்டி Red Pix ல் இருக்கிறது. அதிமுகவுக்கு ஊதுகுழலாக நாதக இருக்கிறது. சீமானின் அசைன்மெண்ட் வாக்குகளை பிரிப்பது தான், தமிழ் தேசியம் எல்லாம் ஒன்றுமில்லை என சராமாரியான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். 11 ஆண்டுகளாக நாம் தமிழர்
கட்சிக்கு தனது இளமை, உடைமை என எல்லாம் அர்பணித்தும், கட்சியில் அவரை போன்றோருக்கு எந்த ஜனநாயக உரிமையையும் தரவில்லை என்கிறார். சீமான் - சசிகலா உறவினர் என சொல்லும் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதிமுகவின் கள்ளக்கூட்டாளி சீமான் என சொல்கிறார். மன்சூர் அலிகானை தனியாக கட்சி
ஆரம்பிக்க வைத்து ஏதேனும் முக்கிய தொகுதியில் திமுகவை எதிர்த்து வாக்குகளை பிரிக்க வைக்க நினைக்கிறார் சீமான் என பல விசயங்களை அந்த பேட்டியில் சொல்கிறார்.

அந்த மனிதரின் பேச்சும், உடல் மொழியும் அவரது ஆழமான வேதனையை வெளிப்படுத்துகிறது. இந்த பேட்டியை வைத்தே கட்சி தன்னை நீக்கிவிடும்
Read 7 tweets
2 Mar
எங்கு தொடங்குவது?

நவம்பர் 7 2020 அன்று நானும் @praba_alagar அவர்களும் பேசினோம். அவரிடம் தலைவரின் நெஞ்சுக்கு நீதி தொகுதியும், தளபதி குறித்து வந்த அனைத்து புத்தகங்களும் வேண்டும் என்றேன். தளபதி குறித்து மார்ச் 1 க்குள் ஒரு புத்தகம் எழுத வேண்டும். திராவிட வாசிப்பில் ஒரு
சிறப்பிதழ் கொண்டு வரவேண்டும் என்றுச் சொன்னேன்.

பிரபா,புத்தகங்களை அனுப்பி வைத்தார். புத்தகங்கள் 15 டிசம்பர் 2020 அன்று சிங்கப்பூர் வந்து சேர்ந்தது.மார்சுக்கு இரண்டரை மாதம் இருந்தது.பல்வேறு சூழ்நிலைகளால் உடனே ஆரம்பிக்க முடியவில்லை.தளபதியின் வரலாறை படிக்க படிக்க அதில் கழக வரலாறும்
அடங்கி இருப்பது தெரிந்தது. என்னென்ன தலைப்புகளில் எழுத வேண்டும் என குறிப்பெடுத்துக்கொண்டேன். உண்மையில் விரிந்த வரலாறு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுடையது. சுருக்கமாக, ஜனரஞ்சகமான புத்தகமாய் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். தற்காலத்து இளைஞர்கள் வாசிக்க ஏற்றவாறு இருக்க வேண்டும் என
Read 14 tweets
18 Feb
திமுகவை ஆதரிப்பது என்பது பதவிக்காகவோ, பணத்துக்காகவோ அல்ல. அது ஒரு நன்றிக்கடன்!

திமுக மீது எவ்வளவு அவதூறை, வன்மத்தை இன்றைய இளைஞர்களிடம் பரப்பி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தம்பியின் புரிதல் ஒரு உதாரணம்!

பெரியார் ஏன் சிறந்தவர், காமராசர் ஏன் சிறந்தவர் என்பது மக்களுக்கு எளிதில்
புரிந்து விடும். ஏனெனில், அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் என்பதை திரும்பத்திரும்ப பேசியும், சொல்லியும், எழுதியும் வருகிறோம்.

ஆனால், அண்ணா ஏன் சிறந்தவர்? கலைஞர் ஏன் சிறந்தவர்?என அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால்,அவர்கள் மக்களை அதிகாரம் பக்கம் திருப்பினார்கள். பொருளாதார சுதந்திரம்
தந்தார்கள். ஆகையால், திமுக என்றால் பணம், பதவி, அதிகாரம் தான் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது. அதை தவிர்க்கவும் முடியாது. திமுக என்றால் வெறும் ஊழல் கட்சி மட்டும் தான் என்ற சங்கிகளின் தொடர் பரப்புரை வென்றதும் இப்படித்தான்!

இங்கே இன்னொரு முரண் என்னவென்றால்,
Read 15 tweets
17 Feb
கேள்வி: உங்கள் மூளைக்குள் இந்துத்துவம் இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது?

பதில்: இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று ஒரு மீம் பார்க்கிறீர்கள். நீங்கள், அதை பார்த்ததும் , "ஆகா சூப்பர்" என்று அதை ஷேர் செய்கிறீர்கள்.
உங்கள் பதிவில், உங்கள் நட்பு பட்டியலில் உள்ள ஒருவர் வந்து இடஒதுக்கீடு ஏன் தேவை என்று விளக்கம் தருகிறார். நீங்களும் அவர் என்ன சாதியாக இருப்பார் என்று யோசித்துக்கொண்டே இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
அந்த நேரத்தில், உங்கள் நட்பு பட்டியலில் இல்லாத ஒரு வேற்று மத பெயர் கொண்ட நபர் உங்கள் பதிவுக்கு எதிர்வினை ஆற்றுகிறார். உடனே, அவர் பெயரை பார்த்தவுடனேயே அவர் எதிர்வினைக்கு பதில் சொல்லாமல், அவர்கள் மதத்தில் உள்ள பிரச்சனையை பேச ஆரம்பித்தால்..
Read 4 tweets
17 Feb
திமுக வை ஏன் பாஜக ஒண்ணுமே செய்யல. ஆனா, சசிகலா, அதிமுகவை படுத்தி எடுக்குது! இதுல இருந்து என்ன தெரியுது? திமுக - பாஜக கள்ளக்கூட்டணின்னு தெரியுது!

- பெரியாரிய உணர்வாளர்கள், அதிமுக ஒன்றிய கிளை, சின்னம்மா பேரவை

1976 ல் கலைஞர் “எமர்ஜென்சி” சர்வாதிகாரத்துக்கு அடிபணிந்திருந்தால்,
ஆட்சியிலேயே இருந்திருப்பார். சர்வாதிகாரத்தை எதிர்த்ததால், ஆட்சி கலைக்கப்பட்டது.

இந்திராகாந்தி, உம்மென்றதும் குடுகுடுன்னு ஒடிப்போய் எம்ஜிஆர், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்ன்னு மாத்தினார்.
1989ல் கலைஞர் சிறந்த ஒரு ஆட்சியை தருகிறார். விடுதலை புலிகள் ஆதரவுன்னு சொல்லி ஆட்சி கலைக்கப்படுகிறது.

1991ல் ராஜீவ் காந்தி கொலைப்பழி திமுக மீது வஞ்சமாக சுமத்தப்பட்டு,ஊழல் ராணி தமிழகத்தின் முதல்வர் ஆகிறார்.

1996-2001,கலைஞரின் பொற்கால ஆட்சி. இருப்பினும், 2001 ல் ஜெயா ஜெயிக்கிறார்.
Read 8 tweets
16 Feb
இணைய உபிக்கள், அவர்களது Attitude ஐ மாத்தினால் திமுக நிச்சயம் வெற்றி பெறும்! - நடுநிலை கருத்தாளர்கள்

1996 ல் கலைஞரோட பொற்கால ஆட்சியில பள்ளிப்படிப்பை இலவச பஸ் பாசில் சென்று படிச்சு, அத்தோட தமிழ், தமிழன், தமிழ்நாடுங்கிற அரசியலை கலைஞரிடமிருந்து உள்வாங்கி,
2000 ல் கலைஞர் கொண்டு வந்த Single window System ல என்ஜினியர் ஆகி,

2004ல் கலைஞர் உருவாக்கின டைடல் பார்க்ல பிராஜக்ட் பண்ணி,

2005ல் சென்னைலயே ஒரு ஐடி வேலைல சேர்ந்து, பல பெரிய நிறுவனங்கள்ல, பல நாடுகள்ல வேலைப்பார்த்து,

2007ல் கலைஞரின் உதவியால் கொண்டுவரப்பட்ட தமிழ் எழுத்துருவால்
தமிழை இணையத்தில் எழுத ஆரம்பித்து,

2009 ல் அதே தமிழில் கலைஞரை திட்ட ஆரம்பித்து,

2013ல் மோடின்னு ஒரு கேடியை மேலே கொண்டுவரும் போது, என்னவோ தப்பாகுதேன்னு யோசிச்சு,

2014ல் மோடி ஜெயித்த இரவு, லண்டனில் தூக்கமில்லாமல் தவித்து,
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!