கல்விக்கட்டணம் என்ன பெருசா வந்துடப்போவுது... அதை ரத்து பண்ணுறதெல்லாம் பெரிய விஷயமான்னு கேட்கிறவங்க, குஜராத் அரசு அறிவியல் கல்லூரில BCA படிப்புக்கு செமஸ்டர் கட்டணம் எவ்வளவுன்னு கொஞ்சம் பாத்துக்கோங்க.
ஆனா, "நிலம் அபகரிக்கப்பட்டது" என்று சொல்வதன் மூலமா, அது திமுக ஆட்சியில் ஒரு திமுக பிரமுகர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த நிலத்தை அடாவடியாக கிரயம் செய்தது மாதிரியோ, அல்லது ஆக்கிரமிப்பு செய்த மாதிரியோ ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறான்.
அந்த உத்தரவை எதிர்த்து அற்புதம் அம்மாள் சென்னை உயர்நீதி மன்றத்துல வழக்கு போட்டாங்க.
நீதிமன்றத்துல அரசு தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளனுக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி மாசம்தான் பரோல்ல போனதால இன்னும் 2 ஆண்டு காத்திருக்கணும்னு சொன்னாரு.
ஆனாலும், பேரறிவாளன் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு சிறை விடுப்பு வழங்க முடியாது என்று எடப்பாடி அரசு போட்ட உத்தரவை ரத்து செய்தது.
1981ஆம் ஆண்டு நடராஜ குஞ்சித தீட்சிதர் என்பவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் கோவிலில் நடந்த சோதனையில் கோவில் நகைகளின் எடை 860 கிராம் குறைவாக இருப்பது தெரியவந்தது!
என்னாச்சுன்னு கேட்டா... தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றிய கணக்கில் 860 கிராம் சேதாரம் ஆயிடுச்சாம்!
கோவிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம், அதன் மூலம் வரும் வருவாய், கோவிலுக்கு காணிக்கையாக வந்த பணம் மற்றும் நகைகள் பற்றிய கணக்கு எதுவும் அவர்களிடம் இல்லையாம்.
ஈஷா பவுண்டேஷன் கட்டிய கட்டிடங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டவை என்று தமிழக அரசு சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டு விட்டது.