காலந்தோரும் திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். திமுக ஆட்சி கலைக்கப்பட்டது 31/1/1976. திமுக மீதான ஊழல் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது 3/2/1976. 1/n #DMK4TN#VoteForDMK
திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு தான், சர்க்காரியா கமிஷனே அமைக்கப்பட்டது. அப்புறம் எப்படி ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டு இருக்க முடியும்.?
காங்கிரஸ் கூட்டணி அரசு மீது "2ஜி ஊழல்" என்று எப்படி பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகள்
2/n
பாஜக என்ற கட்சியை எப்படி ஆட்சிக்கு வர வைத்தார்களோ.. அதே போல தான் எமர்ஜென்சியை இந்தியாவிலேயே கடுமையாக எதிர்த்த திமுகவை ஒழிக்க, சர்க்காரியா கமிஷன் என்ற பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகள் எம்ஜிஆர் - அதிமுக என்ற கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். 3/n
2ஜி வழக்கே ஆதாரமற்ற பொய் என்று நீதிமன்றத்தில் எப்படி தள்ளுபடி செய்யப்பட்டதோ, அது போலத்தான் சர்க்காரியா கமிஷன் அறிக்கையும். எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.
4/n
ஆனால், இன்று MGR ஆட்சி என்று பேசும் நடுநிலைகள் யாரும் MGR ஒரு நிரூபிக்கப்பட்ட ஊழல் குற்றவாளி என்ற உண்மையை பேசமாட்டார்கள். இன்று சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டலும், அவர் உயிரோடு இல்லை என்பதால் எப்படி தண்டனை அளிக்கப்படாமல் போனதோ.. 5/n
அதே போல எம்ஜிஆர் ஆட்சியில் நடந்த எரிசாராய ஊழல் வழக்கில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட "ரே கமிஷன்" தீர்ப்பில் எம்ஜிஆர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது... அப்போது அவர் உயிரோடு இல்லை என்பதால் எம்ஜிஆர் க்கு தண்டனை அளிக்கப்படாமல் போனது.
6/n
அதிமுக கட்சியின் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் நிரூபிக்கப்பட்ட ஊழல் குற்றவாளிகள் என்றாலும் அவர்களை வேறு விதமாகவும்... திமுக கட்சியின் தலைவர்கள் மறைந்த கலைஞர், ஸ்டாலின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் சுமத்த ஒரு எப்ஐஆர் கூட இல்லை என்றாலும்
7/n
அவர்களை வேறு விதமாகவும் பார்க்கும் படி ஒரு மாய கட்டமைப்பு ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
இன்னும் ஒரு படி மேலே போய், இனநல நடுநிலைகளும், சீமான் போன்ற B- டீம் களும்... ஜெயலலிதா ஊழல் செய்து இருந்தாலும், மக்களால் தண்டிக்கப்பட்டு,
8/n
மீண்டும் மக்களால் அவர் தேர்தல் மூலம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடே செய்து இருக்க கூடாது என்று புது மாதிரியாக உருட்டுவார்கள்.
இனநலவாதிகள் மன்னர் ஆட்சி காலத்தில் ராஜகுருவாக இருந்து கொண்டு,
9/n
ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமை செலுத்தியவர்கள்.. மக்கள் ஆட்சி காலத்திலும் தங்கள் ஆளுமையை செலுத்த காலந்தோரும் முற்பட்டு வருகின்றனர்.
கல்வி, வேலை வாய்ப்புகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களை அனுபவித்து வந்ததை மாற்றி, இட ஒதுக்கீடு சட்டம் மூலம் அனைத்து சமூக மக்களுக்கும்
10/n
அதை பகிர்ந்து அளித்த போதும்... கோவில், சொத்துக்கள், அதில் வரும் வருமானங்கள் அனைத்தையும் அவர்களே அனுபவித்து வந்ததை மாற்றி, அது மக்கள் சொத்து... அது மக்களுக்கே சொந்தம் என்று அறநிலைத்துறையை உருவாக்கிய போதே திராவிட இயக்கங்களுக்கு எதிரான இனப் பகை ஆரம்பித்துவிட்டது.
11/n
இன்றும் நீட், ஓபிசி இட ஒதுக்கீடு பறிப்பு போன்ற விஷயத்தில் பொது சமூகத்தின் பக்கம் நின்று மிகத் தீவிரமாக போராடும், திராவிட இயக்க கொள்கையை இன்றும் உயர்த்திப் பிடிக்கும் திமுக என்ற இயக்கம் அவர்களுக்கு நிரந்தர எதிரியாகிப்போனது. பொது சமூகத்திற்கு ஆதரவான, தங்கள் இனநலத்திற்கு எதிரான
12/n
திமுகவை வீழ்த்த அவர்கள் காலந்தோரும் புதுப் புது குற்றச்சாட்டுகளை சுமத்தி பழிதீர்க்க எந்த எல்லைக்கும் போவார்கள்.
அதே நேரத்தில் தங்கள் இனநலத்திற்கு பாதிப்பு இல்லாத ஆட்சி என்றால், அது சாக்கடை நீராக இருந்தாலும், கங்கா ஜலமாக எடுத்து பருகுவார்கள்.
14/n
இந்த தேர்தல் என்பது வெறும் பாஜக- அதிமுக வுக்கு எதிரான தேர்தல் இல்லை, பொது சமூகத்திற்கு எதிரான இனநலவாதிகளுக்கு எதிரான தேர்தல். n/n
தற்போதைய தேர்தல் அரசியல் நடைமுறை என்பது, உதாரணத்துக்கு A, B, C, D என்று இருக்கும் கட்சிகளில் இருந்து ஏதாவது ஒரு கட்சியை தேர்ந்தெடுப்பது தான். இந்த கட்சியிகளிடம் நிறை குறைகள் கலந்து இருக்கும். #Winning_RisingSun
1/n
அவற்றில் குறைகளை விட நிறைகள் அதிகம் இருக்கும் ஒரு கட்சியை தேர்ந்தெடுக்க முடியும் என்பது தான் தேர்தல் நடைமுறையில் நம் முன் இருக்கும் சாத்தியம்.
அதை விட்டுவிட்டு இதில் எதுவுமே சரியில்லை என்று பொத்தாம் பொதுவாக பேசுவதும், அதனால் நோட்டாவுக்கு ஓட்டு போடுவதும், 2/n
நிறைகளை விட குறைகள் அதிகமாக இருக்கும் கட்சியை ஆட்சிக்கு வரவே அது வழி வகுத்து விடும்.
தமிழ்நாட்டின் உயிர்நாடிக் கொள்கைகளான சமத்துவம், சமூகநீதி, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, மொழியுரிமை, மதச்சார்பற்ற சகோதரத்துவம் போன்ற கொள்கைகளை "வலுவாக" பேசுகின்ற அதன்வழி "நிற்கின்ற" கட்சி எது?3/n
கி.மீ கணக்கில் இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்த நிலையிலும் சீனாவின் பெயரை கூட நேரடியாக சொல்ல மறுக்கிறார் மோடி. நேபாளம் கூட இந்தியாவின் பகுதியை இணைத்து வரைபடம் வெயிடுகிறது. தேசபக்தி, தேச பாதுகாப்பு பற்றி கடந்த ஆட்சியில் வாய்கிழிய பேசிய பாஜக வாயடைத்துள்ளது
இந்து -
இந்து, இந்துக்கள் என்று பேசும் பாஜக தான், மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இந்துக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடியது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதுபற்றி மோடி இது வரை வாய் திறக்கவில்லை. #GoBackModi