பணவீக்கமும், உங்கள் முதலீடுகளில் அதன் தாக்கங்களும் - ஓர் இழை.
Financial மற்றும் Retirement planningல் நமது வருங்காலப் பணத் தேவைகளை கணக்கிடுகையில் பணவீக்கத்தின் தாக்கத்தை கணக்கிலெடுக்க மறந்துவிடுகிறோம்.
பணவீக்கமென்பதுநம்மிடமுள்ள பணத்தின் வாங்குதிறன் மாற்றத்தின் ஒரு மதிப்பீடு. உதாரணமாக, 5% பணவீக்க விகிதத்தினால், 2021 வருடம் நீங்கள் வைத்திருக்கும் ₹100 மதிப்பு, 2022 வருடம் வெறும் ₹95 தான். அதாவது, இந்த வருடம் நீங்கள் ₹100 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பொருளை அடுத்த வருடம் ₹105 ஆகும்
உதாரணமாக உங்களின் தற்போதைய மாதாந்திர செலவு ₹25000 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் retirement planning செய்கையில், 20 வருடங்கள் கழித்து உங்கள் செலவுகள் இதே அளவு இருக்காது. பணவீக்கத்தை சேர்த்தால், உங்களுக்கு ₹66332 தேவைப்படும். ஆகையால் நீங்கள் plan பண்ண வேண்டிய தொகை ₹66332.
நம்முடைய முதலீடுகளுக்கும் இது பொருந்தும். உங்கள் முதலீடு உங்களுக்கு வருடம் 7% தருமென்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதனுடைய returns 7% என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள். அது தவறு. உங்களுடைய actual returns வெறும் 2% தான் (7% minus inflation 5%).
ஆகையால், நீங்கள் முதலீடு செய்யக்கூடிய instruments உங்களுக்கு 5%-6% மேல் inflation adjusted returns தருகிறதா என்று பார்க்கவேண்டும். அதற்க்கேற்றாற்போல் உங்கள் முதலீடு இருக்கவேண்டும். இன்றைய தேதிக்கு அரசின் எந்தவொரு திட்டமும் இந்த அளவுக்கு returns தரவல்லதல்ல.
பங்குச்சந்தை முதலீடுகள் மட்டுமே உங்களுக்கு இந்தவகை returns தரவல்லது. ரிஸ்க் அதற்க்கேற்றாற்போல் மாறுபடும்.
Risk ♾ Returns
அதிக வருமானத்திற்கு அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும். அரசு முதலீடு திட்டங்களில் (PPF / போஸ்ட் ஆபீஸ் / SSA) ரிஸ்க் மிகவும் குறைவாக இருப்பதால், வருமானமும் குறைவே.
ஆகவே, உங்கள் ஓய்வுக்கால முதலீட்டு தேவைகளுக்கு, பணவீக்கத்தையும் கணக்கிலெடுத்துக்கொண்டு, அதற்க்கேற்றாற்போல் எதில் முதலீடு செய்யவேண்டுமென்பதை முடிவு செய்யுங்கள்
உ.தா: உங்கள் தேவை 10% CAGR எனில், நீங்கள் முதலீடு செய்யவேண்டியது 15% (CAGR 10% + Inflation 5%) வருமானம் தரும் திட்டங்களில்
எப்படி கணக்கிடுவது, planning செய்வது போன்ற சந்தேகங்களுக்கும், மேலதிக தகவலுக்கும், TL ல் கேளுங்கள். அனைவருக்கும் பயன்தரட்டும்.
#Inflation and its impact on your Financial Planning - A thread
When doing Financial/Retirement Planning, almost all of us forget to account for the impact of inflation on our financial goals.
Inflation is nothing but a gradual decrease in the purchasing power of money over a period of time. To make it clear, if you can buy a product for ₹100 in 2021, with an annual inflation rate of 5%, you have to spend ₹105 in 2021 to buy that same product.
The actual value of ₹100 in 2022 will be only ₹95. That's inflation. How does it impact your savings and retirement plans?
All of us, calculate our current expenses and plan for the same amount during our retirement days as well. This would be a big mistake.
செல்வமகள் திட்டம்ன்னு நம்பி போய் பணத்தை அதுல போடாதீங்க. அவங்க உங்களுக்கு தர்ற வட்டி 6.6% (புதிய வட்டி). வருடாந்திர பணவீக்கம் 4.5-5%. உங்க மகளுக்கு கிடைக்கிற net returns வெறும் 2% க்கு கீழதான்.
#செல்வமகள் சேமிப்பு திட்டத்துல முதலீடு பண்றத முதல்ல நிறுத்துங்க. #SSA
இந்த மாசத்துலேர்ந்து, தனியா ஒரு டீமேட் அக்கௌன்ட் ஓபன் பண்ணி, மாசா மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்குகளாகவோ, mutual fund யூனிட்டாகவோ வாங்கி சேமியுங்கள். 20 வருஷம் கழிச்சி திருமணம் நடக்கும் தருவாயில், உங்கள் மகள் கோடீஸ்வரி. #SSA
செல்வமகள் திட்டத்துல பணத்தை போட்டா, திட்டத்து பேர்ல மட்டும்தான் செல்வம் இருக்கும். உங்க மகள் கிட்ட இருக்காது. நினைவுல வச்சிக்கோங்க. #SSA was created by govt to borrow money from the public at lesser rates. Not the other way around.
ஏப்ரல் 6. வாக்குச்சாவடிக்கு போய் வாக்குச் செலுத்திட்டு வந்த நேரத்துக்கும், IPL / பிக் பாஸ் தொடங்குற நாளுக்கும்இடைப்பட்ட கொஞ்ச நாட்கள்ல உங்களோட பைனான்சியல் ஸ்டேட்டஸ், எவ்வளவு சேமிக்கப்போறீங்க / இன்வெஸ்ட் பண்ண போறீங்க, எவ்வ்ளவு வருமான வரி மிச்சம் பண்ணப் போறீங்க, இதெல்லாம் பேசுவோமா?
இந்த கொஞ்ச நாள்ல நாம செய்யப்போற பைனான்சியல் பிளானிங் தான் இந்த வருஷம் முழுமைக்குமான GOALS. நம்மள ஒரு பொருட்டா கூட மதிக்காத கம்பெனி க்கு Goals & Objectives போட்டு வேலை செய்யுறோம். நமக்கே நமக்கு ஏன் செய்ய மாட்டேங்கிறோம்?
இந்த வருஷம் எல்லாத்தையும் மாத்துவோம். The first step in solving any problem is to accept that there is one. நம்மளோட தற்போதைய நிதிநிலைமை எப்படி இருக்குன்னு பாப்போம். இந்த வருடம் இவ்வளவு சேமிக்கணும் ன்னு ஒரு டார்கெட் வச்சிப்போம். Disciplined ஆ அதை செய்வோம்.