உலகப் புகழ் பெற்ற சிறார் நாவலின் கதை சுருக்கம்.
எழுத்தாளர்கள் ரோல் தால்,எனிட் பிளைடன், டாக்டர் சூஸ், பி. டி ஈஸ்ட்மேன், ஷெல் சில்வர்ஸ்டைன், அண்ணா சிவல், ஹாரியட் பீச்சர், என உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய
கதைகள், கதாபாத்திரங்கள் பிரபலமானவை. அவர்களுடைய சில கதைகளின் சாரத்தை சுவாரசியம் குறையாமல் சுருக்கி தந்திருக்கிறது இந்த நூல்.
ஒன்பது நாவல்களின் சுருக்கத்தை இங்கே கூறி அந்த நாவல்களைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார் எழுத்தாளர்.
டாம் மாமாவின் குடிசை மிக அற்புதமான கதை வாசித்து மனம் நெகழ்ந்த கதை.
ஏழு தலைமுறைகளின் கதை குழந்தைகள் நமது வரலாற்றில் மட்டுமல்லாமல் உலக வரலாற்றையும் அறிந்து கொள்ளும் விதமாக இருக்கும்.
ஸ்கூலுக்கு போகிறாள் சுஜித் நன்மையே தரும் மரம் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் மொழிபெயர்த்த கதை.
இதில் வரும் ஒவ்வொரு கதைகளும் அந்த முழு கதையை தேடி வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
எந்த ஒரு கதையோ, நாவலோ தேடலை தருமானால் அது மிகச்சிறந்த புத்தகமாகவே கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்தப் புத்தகம் ஒரு மிகச்சிறந்த புத்தகம்.
*பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒரு போதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன அரசியலில் அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டான்.*
*சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்கள் மீது ஐ லவ் யூ என கிறுக்க மாட்டான்.*
*இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முடியாது.*
*நமது அறிதல் முறைகளை, தத்துவங்களை வாசித்து விட்ட ஒருவன் ஒருபோதும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் காலடியில் பணத்தைக் கொட்ட மாட்டான்.*
No one can live on this planet without exposing hypocrisy...!
18.09.2005 அன்று அம்பலம் இணைய இதழில், சுஜாதா...
விஜய் டிவி யிலிருந்து சாமக்கிரியைகளுடன் வந்து இறங்கினார்கள். "எங்களது 'ஆட்டோகிராப்' நிகழ்ச்சிக்காக உங்களுக்கு மதன் ஒரு பரிசு அனுப்பியிருக்கிறார்" என்றனர்.
அது ஒரு நடுத்தர சைஸ் மரப்பெட்டி. 'இதை நீங்கள் திறந்து பார்ப்பதைப் படம் பிடிக்க வேண்டும்' என்றார்கள். வெளிச்சம் போட்டார்கள். சட்டைக்குள் மைக் வைத்து, ஒன் டூ த்ரி சொல்லச் சொன்னார்கள்.
"ரெடி சார்? நீங்க என்ன பண்றீங்க? யார் கிட்டருந்து வந்திருக்குன்னு கன்னத்தில் கை வெச்சு
அல்லது விட்டத்தைக் பார்த்து முதல்ல யோசியுங்க. 1992 ன்னு போட்டிருக்கு. அதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லிக்கிட்டே யோசிங்க. அப்றம் பெட்டியைத் திறங்க. அதுக்குள்ள இருக்குற புத்தகங்களைப் பாருங்க. உள்ள ஒரு கார்டூன் இருக்கும். அதைப் பார்த்த உடனே, 'ஆஹா இதை நம்ம மதன் அனுப்பிச்சிருக்காரு.
“ஜெயமோகன் இன்று ''இந்து என உணர்தல்" என்ற கட்டுரையை எழுதியுள்ளார். சிக்கலான விஷயம்...அவரிடம் மொழிவளம் அபாரமாக உள்ளது...மொழி வசீகரத்தில் வாசகன் மயங்கிவிடும் அபாயமும் உள்ளது...
இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வான சாதிப்படிநிலைகள் உள்ளன என்பதை அவர் மறுக்கவில்லை. அதே வேளையில் கலைக்கும், தத்துவத்திற்கும் இந்து மதம் வழங்கிய கொடைகளும் உண்டு. மரபின் சிந்தனைகளை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மதத்திலும் ஞானிகளின் சிந்தனைகள், இலக்கியங்கள், கலைப்படைப்புகள்
திரட்டப்பட்டுள்ளன. இதை கற்க/ரசிக்க ஒருவர் தன் மதத்தோடு இணைத்துக்கொண்டு பெருமிததோடு அணுக வேண்டும் என்பது பிழையான வாதம். வாடிக்கன் போப் ஆண்டவர் ஆலய கூரையில் டாவின்சி வரைந்த ஓவியத்தை ரசிப்பதற்கு நான் கிறிஸ்துவனாக அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில்லை. இஸ்லாமியர்களின்
நம் வாக்கு, நம் உரிமை!
* பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க பிரிட்டனுக்கு விருப்பம் இல்லை. பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது சரியாக இருக்காது என்று நினைத்தது.
* சிறுபான்மையினருக்கு வாக்குரிமை வழங்குவதாகச் சொன்ன பிரிட்டன்,
சில பெண்களே உரிமைகள் வேண்டாம் என்று சொன்னதால் ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கும் வாக்குரிமை கிடையாது என்று கூறிவிட்டது.
* பெண்களுக்கு வாக்குரிமையைப் பயன்படுத்த தெரியாது என்பதால் அவர்களுக்கு அந்த உரிமை வேண்டாம் என்று பெரும்பான்மையினர் கருதினர்.
* தங்களுக்கு வாக்குரிமை அளிப்பதை கணவருக்கும் மகன்களுக்கும் பிடிக்காது என்பதால், வாக்குரிமை வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு பெண்ளும் கருதினர்.
* ஆரம்பத்தில் மகாத்மா காந்திகூட பெண்களுக்கு வாக்குரிமைக்கு வழங்க ஆதரவு தெரிவிக்கவில்லை.
Game Over படம் பார்த்து இருப்பீர்கள். முதல்முறை கொலைகாரன் வருகையை எதிர்பாராத டாப்சீ அவனை தடுக்க முடியாமல் அல்லது எப்படி தடுப்பது என்று சுதாரிப்பதற்குள் அந்த கொலைகாரன் டாப்சீயை கொன்று விடுவான்.
கடைசி முறையில் கொலைகாரன் எப்படி வருவான் என்ன ஆயுதம் வைத்து இருப்பான் எப்படி தாக்குவான் என்று எல்லாம் முன்கூட்டியே தெரிந்து இருப்பதால் டாப்சீ அதற்கேற்றார் போல் செயல்பட்டு தப்பித்து விடுவார்.
டாப்சீ நமது ரத்த அணுக்கள், கொலைகாரன் கொரோனா வைரஸ்.
முதல் முறை கொரோனா வைரஸ் நம்மை தாக்கும்போது அது என்ன ஏது என்று நமது ரத்த அணுக்கள் சுதாரிப்பதற்குள் கொரோனா வைரஸ் பெரிய சேதாரத்தை நமக்குள் உண்டு பண்ணி இருக்கும் அதில் இருந்து மீண்டு வருவது கடினம்.
தடுப்பூசி என்பது fire drill போல. ஒரு டம்மி வைரஸ் ஐ நமது உடலில் செலுத்துவதன் மூலம்
"விளம்பரங்களைப் பெறுவது தொடர்பான தரம் குறைந்துவிட்டது" - என். ராம் பேட்டி
-------------------------------------------------
இன்றைய நாளிதழ்களில் செய்திகளைப் போலவே விளம்பரங்கள் அளிக்கப்பட்டிருப்பது குறித்து தி ஹிந்து குழுமத்தின் என். ராமிடம் பேசியபோது,
பொதுவாகவே விளம்பரங்களைப் பெறுவது தொடர்பான நெறிமுறைகள் மிகவும் கீழிறங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், இந்த விளம்பரங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றப்போவதில்லை என்கிறார் அவர். விளம்பரங்களைப் பெறுவது தொடர்பான தி ஹிந்துவின் நெறிமுறைகளும் கீழிறங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார் ராம்.
""தி ஹிந்துவிலும் விளம்பரங்கள் தொடர்பான standard have slipped. நல்லவேளை நான் இப்போது அங்கு பொறுப்பில் இல்லை. இருந்திருந்தால், கருத்து வேறுபாடுகள் வந்திருக்கும். இதை நான் ஏற்கவில்லை. இது இதழியலுக்கு நல்லதில்லை. சில பேருக்கு வேண்டுமானால் புரியலாம்.