"விளம்பரங்களைப் பெறுவது தொடர்பான தரம் குறைந்துவிட்டது" - என். ராம் பேட்டி
-------------------------------------------------
இன்றைய நாளிதழ்களில் செய்திகளைப் போலவே விளம்பரங்கள் அளிக்கப்பட்டிருப்பது குறித்து தி ஹிந்து குழுமத்தின் என். ராமிடம் பேசியபோது,
பொதுவாகவே விளம்பரங்களைப் பெறுவது தொடர்பான நெறிமுறைகள் மிகவும் கீழிறங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், இந்த விளம்பரங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றப்போவதில்லை என்கிறார் அவர். விளம்பரங்களைப் பெறுவது தொடர்பான தி ஹிந்துவின் நெறிமுறைகளும் கீழிறங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார் ராம்.
""தி ஹிந்துவிலும் விளம்பரங்கள் தொடர்பான standard have slipped. நல்லவேளை நான் இப்போது அங்கு பொறுப்பில் இல்லை. இருந்திருந்தால், கருத்து வேறுபாடுகள் வந்திருக்கும். இதை நான் ஏற்கவில்லை. இது இதழியலுக்கு நல்லதில்லை. சில பேருக்கு வேண்டுமானால் புரியலாம்.
பல வாசர்கள் இதனைத் தவறாக புரிந்துகொள்ளக்கூடும். படித்தவர்களே இது தொடர்பாக ஃபோன் செய்து கேட்கிறார்கள். இரு தரப்பிலும் இது போலத்தான் விளம்பரம் செய்கிறார்கள் என்று மட்டும் நான் சொன்னேன். இதுதான் இன்று நிதர்சனம். தரம் குறைந்துவிட்டது என்று அதனால்தான் சொல்கிறேன், .
கே. ஒரு விளம்பரம் வரும்போது அதில் உள்ளவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு பத்திரிகைகளுக்கு உண்டா?
ப. இந்த இரண்டு விளம்பரங்கள் தொடர்பாகவும் அவதூறு வழக்குகள் தொடரலாம். பத்திரிகைகள் மீதும் அம்மாதிரி வழக்குகளைத் தொடரலாம்.
ஆனால், அரசியல் கட்சிகள் யாரும் வழக்குத் தொடர்வதில்லை. எல்லோருக்கும் பழகிப்போய்விட்டது. ஆனால், ஒரு ரிஸ்க் இருக்கிறது என்பது உண்மைதான்.
முன்பெல்லாம் ஒரு விளம்பரம் வரும்போது மிகக் கவனமாகப் பார்ப்பார்கள்.
அவதூறு வழக்கு வரக்கூடுமா, தங்கள் பாரம்பரியத்திற்கு இழுக்கு ஏற்படுமா என்றெல்லாம் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் அது விற்பவர்களின் சந்தையாக இருந்தது. அதனால் விளம்பரங்களை நிராகரிக்கும் நிலை இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. அதனால், எதையும் விளம்பரமாக வெளியிடும் போக்கு ஏற்பட்டுவிட்டது."
“ஜெயமோகன் இன்று ''இந்து என உணர்தல்" என்ற கட்டுரையை எழுதியுள்ளார். சிக்கலான விஷயம்...அவரிடம் மொழிவளம் அபாரமாக உள்ளது...மொழி வசீகரத்தில் வாசகன் மயங்கிவிடும் அபாயமும் உள்ளது...
இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வான சாதிப்படிநிலைகள் உள்ளன என்பதை அவர் மறுக்கவில்லை. அதே வேளையில் கலைக்கும், தத்துவத்திற்கும் இந்து மதம் வழங்கிய கொடைகளும் உண்டு. மரபின் சிந்தனைகளை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மதத்திலும் ஞானிகளின் சிந்தனைகள், இலக்கியங்கள், கலைப்படைப்புகள்
திரட்டப்பட்டுள்ளன. இதை கற்க/ரசிக்க ஒருவர் தன் மதத்தோடு இணைத்துக்கொண்டு பெருமிததோடு அணுக வேண்டும் என்பது பிழையான வாதம். வாடிக்கன் போப் ஆண்டவர் ஆலய கூரையில் டாவின்சி வரைந்த ஓவியத்தை ரசிப்பதற்கு நான் கிறிஸ்துவனாக அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில்லை. இஸ்லாமியர்களின்
நம் வாக்கு, நம் உரிமை!
* பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க பிரிட்டனுக்கு விருப்பம் இல்லை. பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது சரியாக இருக்காது என்று நினைத்தது.
* சிறுபான்மையினருக்கு வாக்குரிமை வழங்குவதாகச் சொன்ன பிரிட்டன்,
சில பெண்களே உரிமைகள் வேண்டாம் என்று சொன்னதால் ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கும் வாக்குரிமை கிடையாது என்று கூறிவிட்டது.
* பெண்களுக்கு வாக்குரிமையைப் பயன்படுத்த தெரியாது என்பதால் அவர்களுக்கு அந்த உரிமை வேண்டாம் என்று பெரும்பான்மையினர் கருதினர்.
* தங்களுக்கு வாக்குரிமை அளிப்பதை கணவருக்கும் மகன்களுக்கும் பிடிக்காது என்பதால், வாக்குரிமை வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு பெண்ளும் கருதினர்.
* ஆரம்பத்தில் மகாத்மா காந்திகூட பெண்களுக்கு வாக்குரிமைக்கு வழங்க ஆதரவு தெரிவிக்கவில்லை.
Game Over படம் பார்த்து இருப்பீர்கள். முதல்முறை கொலைகாரன் வருகையை எதிர்பாராத டாப்சீ அவனை தடுக்க முடியாமல் அல்லது எப்படி தடுப்பது என்று சுதாரிப்பதற்குள் அந்த கொலைகாரன் டாப்சீயை கொன்று விடுவான்.
கடைசி முறையில் கொலைகாரன் எப்படி வருவான் என்ன ஆயுதம் வைத்து இருப்பான் எப்படி தாக்குவான் என்று எல்லாம் முன்கூட்டியே தெரிந்து இருப்பதால் டாப்சீ அதற்கேற்றார் போல் செயல்பட்டு தப்பித்து விடுவார்.
டாப்சீ நமது ரத்த அணுக்கள், கொலைகாரன் கொரோனா வைரஸ்.
முதல் முறை கொரோனா வைரஸ் நம்மை தாக்கும்போது அது என்ன ஏது என்று நமது ரத்த அணுக்கள் சுதாரிப்பதற்குள் கொரோனா வைரஸ் பெரிய சேதாரத்தை நமக்குள் உண்டு பண்ணி இருக்கும் அதில் இருந்து மீண்டு வருவது கடினம்.
தடுப்பூசி என்பது fire drill போல. ஒரு டம்மி வைரஸ் ஐ நமது உடலில் செலுத்துவதன் மூலம்
லியோ டால்ஸ்டாய் மாபெருங் கலைஞர் என்றும், இலக்கிய மேதை என்றும் உலகமே கொண்டாடுகின்றது. டால்ஸ்டாயின் கதைகளையும் நவீனங்களையும் மக்கள் படிக்கும் அளவுக்கு அவருடைய கட்டுரைகளைப் படிப்பதில்லை. இக் கட்டுரைகள் மதம், அரசாங்கம், பொருளாதாரம், சமூக அமைப்பு.
ஒழுக்கம் முதலிய பல விஷயங்களையும் பற்றியவை. இவைகளில் ரஷ்ய மேதையான டால்ஸ்டாயின் ஆணித்தாரமான அபிப்பிராயங்களைக் காணலாம். ஆனால், கதைகளைப் படிப்பதுபோல் இவைகளை இலேசாகப் படித்துத் தள்ளிவிட முடியாது. இவைகளைப் பொறுமையோடு ஊன்றிப் படிக்க வேண்டியிருக்கும்.
இத்தகைய கட்டுரைகளில் முக்கியமான ஒன்று ‘வாழ்க்கை’, இது மிகவும் விரிவானது. உலகம், உயிர், உடல், வாழ்வு, மரணம், இன்பம், துன்பம் முதலிய விஷயங்களைப் பற்றி இந்நூலில் விரிவாக ஆராய்ச்சிசெய்யப் பெற்றிருக்கிறது.
டால்ஸ்டாயின் 81-வருட வாழ்க்கை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த பெண் இப்படி உடை அணிய வேண்டும் அப்படி உடை அணிய வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாமே patriarchy ல இருந்து கிளை விடுவது தான். அதாவது பெண் என்பவள் உடமை. ஆணின் property. அதாவது தோட்டம், ஆடு, மாடு, வீடு, கார் மாதிரி பெண்ணும் ஆணின் உடமை.
திருமணத்திற்கு முன் அப்பாவின்/சகோதரனின் பொறுப்பு அதன்பின் கணவன்/பையனின் பொறுப்பு.
இந்த உடமை அப்படின்ற எண்ணம் இருப்பதால் தான் தங்கத்தை பெட்டிக்குள்ள வைக்கிறேன், இனிப்பை ஈ மொய்க்காம மூடி வைக்கிறேன், சேலையை முள்ளு படாம பாக்குறேன் என்று அஃறிணை கூட பெண்களை ஒப்பிடுற மனம் வருது.
எப்படி தோட்டத்தில் இருந்து வரும் காய்கள் அந்த தோட்டக்காரனுக்கு சொந்தமோ, மாடு கறக்கும் பால் பால்காரன் க்கு சொந்தமோ, அது மாதிரி பெண்கள் பெற்று எடுத்தும் தரும் பிள்ளைகள் அந்த ஆணுக்கு சொந்தமாகி விடுகிறது அப்பாவோட initial போட்டாச்சு.
புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? - முதல் நிலை வாசிப்பாளர்களின் கவனத்திற்கு!-
மணிகண்டபிரபு
புத்தக தினத்தில் எல்லாரும் புத்தகங்களை சிலாகித்து பேச.. நாம் செய்வதறியாமல் நிற்போம். வாங்கி வைத்த தலையணை சைஸ் புத்தகங்கள் எல்லாம் நம்மைப்பார்த்து என்னைப் பார் தூக்கம் வரும் ரேஞ்சிலேயே
அலமாரியிலிருந்து அழைப்பு விடுக்கும். `நானும் படிக்க நினைக்கிறேன். ஆனால் முடியல’ என்பதே பலரின் ஒப்புதல் வாக்குமூலம்.
தேர்ந்தெடுப்பதில் கவனமின்மை
ஹாலோ மாப்பிளே! இங்க புக் ஃபேர் வந்தேன்..எதாச்சும் நல்ல புக் இருந்தா சொல்லு வாங்கறேன்.. என்ற குரல்கள் அடிக்கடி கேட்பதை
புத்தகக் கண்காட்சியில் நாம் பார்க்கலாம்.
உண்மையில் புத்தகம் படிப்பதை விட சவாலானது புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்குவது. நல்ல புத்தகத்தை வாங்க பிறர் உதவியை நாடுவது நல்லதெனினும் முழுதாய் அவரையே நம்பி வாங்குவது நல்லதல்ல. நாமே நம் ரசனைக்கு ஏற்றதை தேர்ந்தெடுக்கப் பழக வேண்டும்