நகைச்சுவை நடிகராக இருந்த காலத்தில் #சோ அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை கையாண்டார். கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்று வேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது. காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர்
பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து சோ வெற்றிபெற்று பின் காமராஜரையே அழைத்து வைத்து நாடகம் நடத்திய காட்சிகளும் உண்டு. காமராஜரை முழுக்க புரிந்தவர் சோ, அதனால்தான் அவர் இறந்த அன்று, இந்திராகாந்தியும் கருணாநிதியும்
காமராஜர் உடல் அருகே நின்றபொழுது ஆத்திரத்தின் உச்சியில் எழுதினார் சோ. யார் காமராஜரை கொன்றார்களோ அவர்களே அஞ்சலியும் செலுத்துகின்றார்கள். என அவர் எழுதிய வரிகள் சாகா வரம் பெற்றவை. நல்ல அறிவாளியும், சிந்தனையாளரும், தொலைநோக்கு பார்வையும் எல்லாவற்றிற்கும் மேல் மிகுந்த தைரியமும் கொண்ட
எழுத்தாளர் அவர். துக்ளக் பத்திரிக்கையை தொடங்கி நாட்டுக்கு நற்பணி ஆற்றினார். திமுக புரட்சி காலம், மிசா காலம், புலிகள் கொலைகார காலம் என எல்லா சமயங்களிலும் அவரின் பேனா சீறிகொண்டே இருந்தது. எல்லாவற்றையும் விட மேலாக வணங்க வேண்டியது அவரின் நாட்டுபற்று. திராவிட போலிகள் பிரிவினை வாதம்
என பேசும்பொழுது, பகுத்தறிவு பேசும்பொழுது அவர் மத நம்பிக்கை பேசினார். அவர் கொடுத்த துணிச்சலின் பேரிலே கண்ணதாசன் போன்றோர் #அர்த்தமுள்ளஇந்துமதம் போன்ற காவியங்களை எழுத முடிந்தது, ஜெயகாந்தன் போன்றோர் தேசியம் பேச முடிந்தது. அவரிடம் மத நெறி உண்டே தவிர மதவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது
இந்துமதத்தை சாடியே வளர்த்த போலிகளை அவர் கண்டித்து, கிண்டலடித்து உண்மையினை எழுதினார். இன்றுவரை அவர் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு பதில் எந்த பகுத்தறிவாளனிடமும் இல்லை. பிராமணன் எங்கே ஆண்டான், ஒரு பிராமண அரசனை காட்டுங்கள் என அவர் கேட்டதற்கும், ராமன் சத்திரியன் கண்ணன் வேறு சாதி
ஆனாலும் இந்துமதம் அவர்களை கடவுளாக காட்டவில்லையா என கேட்டதற்கும் யாரிடமும் பதில் இல்லை. புலிகளை தமிழகம் கொண்டாடிய போது 1986லே எச்சரித்தது அவர்தான், பெரும் தைரியத்துடன் அவர்களை எதிர்த்து எழுதினார். அவர் வீட்டுக்கு மிக அருகில்தான் பத்மநாபா கொலை நடந்தது, அப்பொழுதும் அவர் புலிகளை
கண்டித்து எழுதினார். பின்னாளில் அவர் கணித்து எழுதியதுதான் நடந்தது, புலிகள் அழிந்தும் போயினர். பத்மநாபா அஞ்சலியின் பொழுது இன்னமும் பொறுங்கள் பல அஞ்சலிகளை செய்யவேண்டி இருக்கின்றது என அவர் எச்சரித்த பின்புதான் ராஜிவ் கொலை எல்லாம் நடந்தது. இவ்வளவிற்கும் கொழும்பு சென்று சிங்கள அரசிடம்
புலிகளுக்காக வாதாடியவர் சோ. சிங்கள அடக்குமுறை இன்னும் பல புலிகளை உருவாக்கும் என தீர்க்கமாக சொன்னவர் அவர். #ராஜாஜி க்குப் பின் மிகச் சிறந்த தமிழக அறிவாளி சோ என்பதில் மாற்று கருத்தே இல்லை. கருணாநிதியை அரசியல் சாணக்கியன் என்பர், சாணக்கியன் இன்னொருவனை திறம்பட உருவாக்குவானே தவிர தான்
சென்று சிம்மாசனத்தில் அமரமாட்டான். அப்படி சாணக்கியன் சோவினால் உருவாக்கபட்டவர் தான் மறைந்த ஜெயலலிதா. இந்திரா ஜெயலலிதாவினை கொண்டாட முதல் காரணமாக இருந்தது சோ எழுதிக் கொடுத்த எழுத்துக்கள். ஜெயலலிதா பிரகாசிக்க அவரும் காரணம், பின்பு #தமாகா அமையவும் அவரே காரணம், பின்பு #விஜயகாந்த்
எதிர்கட்சி தலைவர் என அமர வைத்ததிலும் அவர் பங்கு உண்டு. வயது இருந்திருந்தால் நிச்சயம் இன்னொரு அரசன் அல்லது அரசியினை அவர் உருவாக்கி கொடுத்திருப்பார், #ரஜினிகாந்த் இப்பொழுது சோ இருந்திருந்தால் ஆயிரம் யானை பலம் எனக்கிருக்கும் என சொன்ன செய்தி சாதாரண விஷயம் அல்ல. எத்தனை அரசியல்
பத்திரிகைகள் வந்தாலும் #துக்ளக் இடமே தனி, இன்னொரு பத்திரிகையாளன் இவ்வளவு துணிச்சலாக வரமாட்டான், வந்தாலும் சோ சொல்லும் விதத்தின் நக்கலும் அழகும் ஆழமும் இன்னொருவருக்கு வராது. கருணாநிதியை அவர் காய்ச்சி எடுத்தது போல இன்னொருவன் எழுத முடியாது, ஆனால் இருவரும் அவ்வப்போது சந்திப்பார்கள்.
சீனா பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுப்பது கவலையே இல்லை, காரணம் சீன தயாரிப்பு பற்றி எல்லோருக்கும் தெரியும், ஆனால் அமெரிக்கா கொடுத்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என சொன்ன இடமாகட்டும், கம்யூனிஸ்டுகள் மாஸ்கோவில் மழை பெய்தால் சென்னையில் குடை பிடித்த காலத்தில், கருப்பு பணம் போல சிகப்பு
பணமும் இருக்கும் போல என சொன்னதாகட்டும் தனித்து நின்றார் சோ. ஏராளமான எழுத்துக்கள், அர்த்தமுள்ள வாதங்கள், குறும்பான பதில்கள். இறுதி பேட்டிகளில் அவரிடம் கேட்டார்கள், காங்கிரசினை கண்டிப்பவர் நீங்கள், தற்போதைய காங்கிரசின் பின்னடைவினை எப்படி காண்கின்றீர்கள்? சோ சொன்னார் "காங்கிரஸ்
பின்னடைவது நாட்டிற்கு நல்லதல்ல, தேசிய ஆளும் கட்சிக்கு ஒரு தேசிய கட்சி எதிர்கட்சியாக இருப்பதே இந்தியாவிற்கு நல்லது" இதுதான் சோ. நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டு நிறைவாக எழுதிவிட்டு நாட்டுபற்றும் அதற்குரிய எழுத்தும் எப்படி இருக்கவேண்டும் என்பதனை சொல்லி சென்றதற்காக சோவிற்கு நன்றி. போலி
பகுத்தறிவாளர்களை நார் நாராக கிழித்து காட்டியதற்கு நன்றி. புலிகளின் போக்கு எதில் முடியும் என அன்றே சொன்னதற்காக நன்றி. தமிழகம் கண்ட மிகசிறந்த நாட்டுபற்றுமிக்க பத்திரிகையாளரும், தன் கருத்துக்களை கொஞ்சமும் அச்சமின்றி இறுதிவரை சொன்ன, போலிகளை தோலுரித்துகாட்டிய‌ பத்திரிகையாளரும் இன்றுவர
அவர் ஒருவர்தான். பகுத்தறிவினை காட்டி அரசியலை பலர் ஆட்டிபடைத்தபொழுது உண்மையான பகுத்தறிவு பேசி மக்களை சிந்திக்க சொன்ன பெரும் "பகுத்தறிவு பகலவன்" #சோராமசாமி ஒருவரே. அப்படி ஒரு தைரியமும் அறிவும் இனி எந்த பத்திரிகையாளனுக்கும் நடிகனுக்கும் வரப்போவதே இல்லை.
edited from a WA forward.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

10 Apr
I got a forward in my school group. So many Hindus in the group were going 👏🏽👌🏼👌🏼 over it! I am posting the FW & my reply given there!
A pregnant mother asked her daughter, What do u want- A brother or a sister?
Daughter: Brother
Mother: Like whom?
Daughter: Like RAVAN
Mother:
What the hell are you saying? Are you out of your mind?
Daughter: Why not Mom? He left all his Royalship & Kingdom all because his sister was disrespected. Even after picking up his enemy’s wife, he didn’t ever touch her. Why wouldn’t I want to have a brother like him?
What would
I do with a brother like Ram who left his pregnant wife after listening to a Dhobi though his wife always stood by his side like a shadow? After giving Agni Pareeksha & suffering 14 years of exile. Mom, you being a wife & sister to someone, until when will you keep on asking for
Read 21 tweets
10 Apr
Jaya Jaya Sankara Hara Hara Sankara,
I really don’t know what to say except for the fact that humanity is dying right in front of our eyes. This shows one thing clearly, rapidly deteriorating dharma and a big gaping hole in this Punniya Bhumi when it comes Gho Matha Samrakshanam.
All these cows that were cruelly attacked have been roaming around in severe pain for several days with the Madurai public watching it doing nothing about the situation despite it being in the local news papers. What is more inhumane and pathetic some local groups took pictures
of the cows, flaunted it in social media, collected funds but did nothing for the cows. While there are animal welfare activists in many areas who take interest in such incidents and come forward to help, they do not have the people, resources, funds, experience, or other means
Read 5 tweets
10 Apr
மகாபாரத #கர்ணன் என்பவன் எப்படிப்பட்டவன்? ஹீரோ சிவாஜிக்காக எழுதிய திரைக்கதை தானே நமக்கெல்லாம் ரெபரன்ஸ்? அதில் அவன் உத்தமன். ஏமாற்றப்பட்டவன். ஆனால் இதிகாசப்படி கர்ணன் மிகுந்த அசூயை உடையவன். வள்ளலா இருக்கலாம் ஆனால் நல்லவனா? துஸ்ஸாசனால் சபைக்கு இழுத்து வரப்பட்ட துரௌபதிக்கு மாதவிடாய்
நேரம் அது. அவள் ஒரே ஒரு துணி அணிந்திருந்தாள். ரத்தப்போக்கு தரையை நனைத்தது. அங்கு கூடியிருந்த சபையோரை கேட்கிறாள், தருமர் தன்னைப் பணையம் வைத்தப் பின் என்னை பணையம் வைத்தாரா அல்லது அதற்கு பின்பா என்று, ஏனென்றால் அதற்குப் பின் என்றால் அவரே அடிமையாகிவிட்ட பிறகு என்னை பணையம் வைக்க என்ன
உரிமை என்று. அப்பொழுது அனைவரும் வாய் மூடி இருக்கையில் துரியோதனின் ஒரு சகோதரன் விகரணன் மட்டும் சபையில் எழுந்து நின்று அண்ணனிடம், உனக்கும் பாண்டவர்களுக்கும் ஆயிரம் இருக்கலாம் ஆனால் ஒரு பெண்ணை அவமானம் செய்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறான். அங்கிருந்த கர்ணன் என்ன சொல்கிறான்
Read 4 tweets
9 Apr
அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபசரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேஸ்வரனின் அன்பு
நமக்கும் கிடைக்கும். ஈஸ்வராநுக்ரஹம் எங்கேயும் ப்ரவாஹம் மாதிரி ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நம் மனஸ் கல்லாக இருந்தால், கல்லுக்குள் ஜலம் ஊறாத மாதிரி அநுக்ரஹத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதுவே ஒரு துணியை வெள்ளத்தில் போட்டால் அதுதானே விரிந்து ஜலத்தை இழுத்துக்
கொள்கிறது. துணியை வெளியே இழுத்துப் பிழிந்தால் ஜலம் கொடுக்கிறது. கல் மனஸைப் பரோபகாரத்தில் இப்படி லேசாகத் துணி மாதிரி ஆக்கிக் கொண்டால் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிற அநுக்ரஹத்தை நன்றாக உறிஞ்சிக் கொள்ளலாம். ஜீவனுக்குச் செய்கிற பெரிய உபகாரம் அவனுக்குக் கருணாமூர்த்தியான ஈசனிடம்
Read 4 tweets
3 Apr
ஒரு பிரம்மச்சாரி திருமணதிற்கு பணம் வேண்டி ஊரில் பலரிடம் கேட்டு கிடைக்காததால் #சுவாமிதேசிகர் இடம் கேட்க, அவர் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வேண்டி அருளியது #ஸ்ரீஸ்துதி இது போல் #ஆதிசங்கரர் ஒரு ஏழை பெண்மணிக்கு #கனகதாராஸ்தோத்திரம் மூலம் அனுக்கிரகம் செய்துள்ளார். இருவருமே அந்தத் தங்கக்
காசுகளை கையாலும் தொடாமல் உதவி கேட்டு வந்தவருக்கும், மிக ஏழ்மை நிலையில் உஞ்சவிருத்திக்கு போட ஒரு நெல் மணி கூட இல்லாதவருக்கும் மனம் இரங்கி செல்வம் கிடைக்க அருளினார்கள். வந்தனா அனுக்கிரகம் இது. நமக்காக எழுதிய ஸ்துதிகள் இவை. அவர்களுக்கு இதன் தேவை கிடையாது. தமக்கென்று திரவியமே வைத்து்
கொள்ளாமல் யாசகம் எடுத்து ஜீவித்து வந்தவர் #வேதாந்ததேசிகர் பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்களும் இருப்பார்கள். ஸ்ரீவேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள்
Read 13 tweets
27 Mar
கஜேந்திர மோக்ஷம்- தெரிந்த கதை, தெரியாத அரத்தங்கள். anbezhil.wixsite.com/blog/post/%E0%…
என் புதிய பதிவு 🙏🏾
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!