ஒரு பிரம்மச்சாரி திருமணதிற்கு பணம் வேண்டி ஊரில் பலரிடம் கேட்டு கிடைக்காததால் #சுவாமிதேசிகர் இடம் கேட்க, அவர் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வேண்டி அருளியது #ஸ்ரீஸ்துதி இது போல் #ஆதிசங்கரர் ஒரு ஏழை பெண்மணிக்கு #கனகதாராஸ்தோத்திரம் மூலம் அனுக்கிரகம் செய்துள்ளார். இருவருமே அந்தத் தங்கக்
காசுகளை கையாலும் தொடாமல் உதவி கேட்டு வந்தவருக்கும், மிக ஏழ்மை நிலையில் உஞ்சவிருத்திக்கு போட ஒரு நெல் மணி கூட இல்லாதவருக்கும் மனம் இரங்கி செல்வம் கிடைக்க அருளினார்கள். வந்தனா அனுக்கிரகம் இது. நமக்காக எழுதிய ஸ்துதிகள் இவை. அவர்களுக்கு இதன் தேவை கிடையாது. தமக்கென்று திரவியமே வைத்து்
கொள்ளாமல் யாசகம் எடுத்து ஜீவித்து வந்தவர் #வேதாந்ததேசிகர் பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்களும் இருப்பார்கள். ஸ்ரீவேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள்
“ஸர்வதந்திர ஸ்வதந்திரர்” என்று போற்றப்படுபவர் தேசிகர், அதாவது வெளி உதவி எதுவும் இல்லாமலே தாமே எதையும் சாதிக்கக்கூடியவராக இருப்பவருக்கு இந்தப் பட்டம் அருளப்படும். அவருக்கு இது பொருந்தாது என உலகுக்குக் காட்டி அவரை அவமானப்படுத்து வேண்டும் என அவர் விரோதிகள் நினைத்து சூழ்ச்சி செய்தனர்
பரம ஏழையான ஓர் அந்தணன் பணம் இல்லாததால் திருமணமே ஆகாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். தேசிகரின் விரோதிகள் அவனிடம் தேசிகரிடம் சென்று திருமணம் நடக்க பண உதவி கேட்க சொன்னார்கள். ‘ஸர்வதந்திர ஸ்வதந்திர’ என்பதால் இவனுக்காக அவர் பிறரிடம் யாசிக்க முடியாது. இவரால் பணம் கொடுக்க முடியாமல்
போகும்போது அவரை அவமானப் படுத்த திட்டம் போட்டனர். தேசிகருக்கு இது விரோதிகள் சூழ்ச்சி என்று தெரிந்து விட்டது. ஆயினும் அவர் தன்னை அவமானப்படுத்த வந்தவனிடம் கருணை கொண்டார். வெள்ளிக்கிழமையான நாளை காலை காஞ்சி பெருந்தேவித் தாயார் சந்நதிக்கு வா என்று சொல்லி அனுப்பினார். ஏழையும், தேசிகரும்
கோவிலுக்குச் செல்வதை அறிந்த மக்களும் ஆலயத்தில் திரண்டனர். பெருந்தேவித் தாயாரான மஹாலட்சுமியை மனமுருக வேண்டி, ஒரு ‘ஸ்துதி’ செய்தார். அதுவே, உத்தமமான #ஸ்ரீஸ்துதிஸ்தோத்திரம். உடனே பொன் மழை பொழிந்தது. அதை பிரம்மச்சாரிக்கு கொடுத்தார். விரோதிகளால், பெரியவர்களுக்குக் கடைசியில் மேலும்
மேலும் பெருமையே உண்டாகும். தேசிகருக்கும் அப்படிப் பெருமை உண்டாயிற்று. தேசிகர் திருமகள் அருள் பெறவேண்டி “ஸ்ரீஸ்துதி’’ என்னும் 25 ஸ்லோகங்களை, கொண்ட ஸ்தோத்திரத்தை ராகத்துடன் பாடினார். 21 வது ஸ்லோகத்தை சொல்லும் பொழுது திருமகளும் தங்கக்காசுகளை அள்ளிக் கொடுத்தாள். எனவே திருமணம் போன்ற
சுபநிகழ்ச்சிகளுக்கு பணத்தடை ஏற்பட்டாலோ, தினமும் கையில் பணம் புழங்கவும் ஸ்ரீஸ்துதியின் 21-வது ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வது நல்லது.
ஸானுப்ராஸ ப்ரகடித தயை
ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தை:
அம்ப! ஸ்நிக்தைர் அம்ருத லஹரீ
ளப்த ஸப்ரஸ்மசர்யை:
ங்கர்மே தாபத்ரய விரசிதே
காட தப்தம் ணம் மாம்
ஆகிஞ்சன்ய
க்லபிதம் அங்கைர்
ஆத்ரியேதா கடாசை
- இந்த ஸ்லோகத்தை சொல்ல இயலாதவர்கள் அதன் பொருளைச் சொல்லலாம்.
கருணை மிக்க லட்சமி தாயே! தாயன்பைத் தருபவளே! பக்தர்களுக்கு துணை செய்பவளே! அமிர்தம் போல் குளிர்ச்சிமிக்கதும், பரிசுத்தமானதுமான அருளைத் தருபவளே கடும் வெயிலில் நடப்பவன் தாகத்தால் தவிப்பது போல
பொருளில்லாமல் வாடும் என்னை ஒரு கணநேரம் உன் கடைக்கண் பார்வையால் குளிரச் செய்வாயாக!
இந்த ஸ்தோத்திரத்தை கற்றுக் கொள்ளவோ அல்லது கேட்டு பயனடையவோ இந்த லிங்க் உதவும்.
கவி-தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே!
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:!!
ஒரு பிழை திருத்தம்- 16 ஸ்லோகத்தை சுவாமி தேசிகன் சொன்ன பொழுது பொன் மழை பொழிந்தார் தாயார்.
யோகாரம்பத்வரித மநஸோயுஷ்மதை காந்த்ய யுக்தம்
தர்மம் ப்ராப்தும் ப்ரதமமிஹயே தாரயந்தே தநாயாம் |
தேஷாம் பூமேர்தந பதி க்ருஹாதம் பராதம்புதேர்வா
தாரா நிர்யாந்த்யதிக மதிகம் வாஞ்சிதா - நாம் வஸுநாம் ||
@threadreaderapp please compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

27 Mar
கஜேந்திர மோக்ஷம்- தெரிந்த கதை, தெரியாத அரத்தங்கள். anbezhil.wixsite.com/blog/post/%E0%…
என் புதிய பதிவு 🙏🏾
Read 4 tweets
27 Mar
மாலன் நாராயணன் பதிவு:
எடப்பாடியாரின் தாய் குறித்த @dmk_raja பேச்சு கண்டிக்கத்தக்கது. அறுவருப்பானது. இது போன்று பெண்களை இழிவுபடுத்திப் பேசும் பாரம்பரியம் #திமுக வில் நெடுங்காலமாக உண்டு. 'நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும்' என்பதில் தொடங்கி பேரன் #உதயநிதி சசிகலா பற்றிப் பேசுவது
வரை அந்தப் பாரம்பரியம் நீள்கிறது. இந்தப் பேச்சுக்கள் spontaneous ஆக அந்த நொடியில் வெளிப்படுபவை. ஆழ்மனதில் பெண்களைப் பற்றி இருக்கும் அபிப்பிராயம்தான் அந்தக் கணத்தில் வெளிப்படுகிறது. ஜெயலலிதாவின் சேலையை உருவ முற்பட்டதும் அது போன்ற ஸ்பான்டேனியஸ் ரெஸ்பான்ஸ்தான். பெண்களை உடலைத் தாண்டி
பார்க்க முடியாத பார்வையின் வெளிப்பாடு அது. வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத நேரங்களில் எல்லாம் வன்மத்தோடு வசைகளிலும் தனிமனித தாக்குதலிலும் ஈடுபடுவது #திமுக வின் வழக்கம். அது காமராசரின் கருநிறத்தில், #எம்ஜிஆர் ஐக் கிழவராக சித்தரிக்கும் முரசொலி கார்ட்டூனில், ராஜாஜியின் ஜாதி பற்றிய
Read 8 tweets
25 Mar
28-4-1963 ஸ்ரீசங்கர ஜயந்தி புண்ய காலத்தன்று காலையில் ஸ்ரீராமநாத ஸ்வாமிக்கும், ஸ்ரீபர்வதவர்தனி அம்பாளுக்கும் ஸ்ரீமடத்திற்கென்று விசேஷமாக ஏற்பட்ட நெடுங்கால மரபு வழக்கப்படி தமது திருக்கரங்களால் அபிஷேக ஆராதனைகளைச் செய்து மஹாராஷ்ட்ர அர்ச்சகர் ப்ரஹ்மஸ்ரீ பாலாஜி பட்டருக்கு ஆசி அருளுதல்
ராமேச்வரம் விஷயத்தில் நாம் இதுவரையிலும் பதிவிட்டவற்றின் ஸாரம்:
1. ஸ்ரீராமநாதஸ்வாமி திருக்கோயிலில் நடந்து வருவது வைதிக பூஜைதான். ஸித்தாந்த சைவாகம பூஜை அல்ல.
2. அதைச் செய்யும் பொறுப்பைத் தொடக்கத்தில் ஏற்றிருந்தவர்கள் திருவானைக்கா பஞ்சஸ்தலகர்த்தர்கள் எனப்பட்ட தீக்ஷிதர்கள்.
3. அவர்களிடம் தீக்ஷையும், அனுமதியும் பெற்று ராமேச்வரத்தில் பூஜை செய்யத் தொடங்கியவர்கள் பஞ்சதேசத்து ஸ்மார்த்தர்கள். இவர்கள் பாசுபதர்கள் அல்லர். இவர்கள் அத்வைதிகள்.
4. ராமேஸ்வரம் அர்ச்சகர்கள் 512 பேர்களும் ஐந்து தேசத்தவர்கள் ஆவர்.
5. இவர்களுள் மஹாராஷ்ட்ர ஸ்மார்த்த அர்ச்சகரும்
Read 9 tweets
24 Mar
#ஒளவையார் #வள்ளலார் இவர்களுக்குள் அதிசயமாக பல ஒற்றுமைகளும் ஒரே ஒரு வேற்றுமையும் உள்ளது. அது என்ன?
ஔவையார் இயற்றிய #உலகநீதிசெய்யுள்.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்
நெஞ்சாரப்பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
சினந் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந் திருந்தார் வாசல்
வழிச் சேரல் வேண்டாம்
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தை தனை மறக்க வேண்டாம்
முற்கோபக்காரரோடிணங்க வேண்டாம்.

பத்து வயது கூட நிரம்பாமல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு சிறிய மாணவனாக இருந்த வள்ளலார்
Read 10 tweets
22 Mar
கடந்த சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் கூட தமிழகத்திலும் சரி மற்ற மாநிலங்களிலும் சரி #பாஜக கணிசமான வாக்குகள் வாங்குகிறதே அந்த ரகசியம் என்ன? வேறு மத ஆண்களுக்கும் பெண்களுக்கும் புரியாத விஷயம். ஏன் நிறைய முஸ்லிம் ஆண்களுக்கே புரியாதது அது. பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமிய
பெண்கள் அனுபவித்து வந்த கொடுமை என்ன என்று பார்ப்போம். எந்த முஸ்லிம் வீட்டிலும் பார்த்தீர்களானால் குடும்பம் இல்லாமல் ஒரு முஸ்லிம் பெண் வாழ்ந்து வருவார். 30 வயது 40 50 60 எந்த வயசிலும் இருப்பாங்க. இவர்கள் அந்த வீட்டில் உள்ள யாருக்காவது அக்கா முறையோ அத்தை முறையோ சித்தி பெரியம்மா
முறையோ பாட்டி முறையோ இருப்பாங்க. இவர்கள் தான் வசிக்கும் அந்த வீட்டில் முடிந்த வரையான வீட்டு வேலைகளை செய்து கொடுத்து தன் உறவுகளோடு உணவு பகிர்ந்து உண்டு அமைதியாக வாழ்ந்து வருவார்கள். குடும்பம் குழந்தைகள் இல்லாமல், அவர்களுடைய மனதிலே வெளியில் சொல்லமுடியாத தாங்கமுடியாத துயரம் வேதனை
Read 10 tweets
22 Mar
ஒரு இளம் ராணுவ அதிகாரி தீவிரவாதிபோல் உருமாறி தீவிரவாத இயக்கத்திற்குலேயே புகுந்து அதிரடி காட்டி அவர்களின் இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிட்டார். அந்த ஒப்பற்ற மாவீரனின் வீர சாகசங்கள் கீழே. காஷ்மீரில் ஹிஸ்புல் இயக்கத்தின் தளபதிகளான அபு தோறாரா & அபு சப்ஜார் ஆகிய இருவரின் தலைமையின்
கீழ் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்திய ராணுவமும், உளவு அமைப்புகளும் எவ்வளவோ முயன்றும் இவர்கள் இருவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் கட்டுக்கடங்காமல் சென்றன.
ஹிஸ்புலின் இரு தளபதிகளை தீர்த்துக்கட்ட ஆபரேஷன் இப்திகார் என்னும் ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாரானது.. அந்த ரகசிய ஆபரேஷனின் கதாநாயகன் மேலே படத்தில் உள்ளவர். அவர் இப்திகார் பட் என்று தனது பெயரை மாற்றி காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடம் தேடி
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!