#TaxPlanning
ஏப்ரல் மாதத்தில் நீங்கள் செய்யவேண்டிய மற்றுமொரு முக்கிய கடமை - Tax Planning.
இதற்கான வழிமுறைகள் என்ன?
எப்படி செய்வது?
எந்தெந்த வழிகளில் முதலீடு செய்வது?
மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகள் - இந்த இழையில்.
To begin, நீங்கள் செய்யவேண்டியது - உங்கள் அலுவலகத்தில்.
1. New/Old Regime - Select 2. Declaration - எந்தெந்த இடங்களில், எவ்வளவு முதலீடு செய்யப்போகிறீர்கள் என்கிற விவரங்கள் பதியப்பட வேண்டும்
Declaration செய்வதற்கு எந்தெந்த section உங்களுக்கு exemptions அளிக்கும் என்கிற விவரங்கள்:
Exemption category யில், அனைவருக்கும் மிக பரிச்சயமான ஒன்று Section 80C (முதலீடுகள்).
என்னென்ன முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன?
அவைகளில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
படத்தில் காண்க.
இந்த sectionல் உங்களுக்கு அதிகப்படியாக ஒன்றரை லட்சம் வரையில் exemption கிடைக்கும்.
Exemption category யில், மிக சிலருக்கே பரிச்சயமான ஒன்று Section 80 (செலவினங்கள்). இதில் நமக்கு ஏற்படும் செலவுகளை காண்பித்து அதற்கு exemption பெறலாம்.
எந்தெந்த செலவுகள் வரி சேமிப்பு categoryல் வரும்?
அவைகளில் அதிகப்படியாக எவ்வளவு claim செய்யலாம்?
படத்தில் காண்க.
வரி சேமிப்பில் மற்றுமொரு section க்கு நிறைய பங்குண்டு. அது Section 24 (வீட்டுக்கடன் வட்டி).
நீங்கள் வீட்டுக்கடன் வாங்கி, அந்த வீட்டை நீங்கள் வேறொருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தால், நீங்கள் வீட்டுக்கடனுக்கான வட்டி முழுவதற்கும் tax exemption பெறலாம். மற்ற விவரங்கள் இணைப்பில்.
கடைசியாக, 80CCD ல் கூடுதலாக ருபாய் 50,000 க்கு NPS ல் நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.
இந்த 50,000 நீங்களாகவோ, அல்லது உங்கள் அலுவலகத்திலோ (சம்பளத்தில் பிடித்தம் செய்து) முதலீடு செய்யலாம்
Max Combined deduction u/s #80C & #80CCD is 2 lakhs
மேற்கண்ட வழிகளில் நீங்கள் வரி சேமிக்கலாம். இந்த ஆண்டு Tax Slabs ல் எந்தவொரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இணைக்கப்பட்ட படத்தில் உள்ள slabs ஐ கொண்டு உங்கள் வரியை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு என்னுடைய Tax சம்பந்தப்பட்ட பிந்தைய இழைகளை / பதில்களை படிக்கவும். 🙏🙏🙏
இந்த நிதியாண்டு தொடங்கி விட்டது. நம்மில் பலர், இந்த ஆண்டிற்கான GOALS மற்றும் OBJECTIVES உங்களது அலுவலகத்தில் முடிவு செய்து அதற்கான வேலைகளையும் தொடங்கியிருப்பீர்கள் இல்லையா?
நமக்கான பொருளாதார இலக்குகள் என்ன? அதை எவ்வாறு தேர்வு செய்து, அதனை அடைவது? அதற்கான இழை.
இந்த இழையை படிப்பதற்கு முன், எனது Telegram சேனலுக்கு சென்று Financial Planning Excel ஷீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். t.me/myfinancialind…
இந்த இழையில் சொல்லும் அனைத்தும் அந்த ஷீட்டுடன் பொருத்திப் பார்க்கவும். புரிந்துகொள்ள இன்னும் சுலபமாக இருக்கும்.
Financial Planning இன் முதற் படி, Financial Goals. இந்த வருடத்திற்கான உங்கள் பொருளாதார இலக்குகள். இலக்குகள் SMART ஆக இருத்தல் அவசியம்.
Specific
Measurable
Achievable
Realistic
Time-Bound
இந்த வருடத்திலிருந்து (2021-22) EPF சட்டத்தில் மாற்றங்கள்.
ஒரு வருடத்திற்கு ₹2.5 லட்சத்திற்கு மேல் உங்கள் contribution (உங்களுடைய contribution மட்டும்) இருந்தால், ₹2.5 லட்சம் வரையில் மட்டும் தான் உங்களுக்கு வட்டியிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்படும்.
உதாரணமாக, இந்த வருடம் உங்களுடைய contribution ₹3 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். வருட முடிவில் அதற்கான வரி ₹30,000 @ 10% வருட வட்டி என்று வைத்துக்கொள்வோம் (கணக்கிற்காக), அதில் ₹2.5 லட்சத்திற்கான வட்டி ₹25,000 க்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படும்.
₹2.5 லட்சத்திற்கு மேல் உள்ள உங்கள் contribution (₹50,000) ஈன்ற வட்டியான ₹5,000 உங்கள் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, tax slab படி, வரி விதிக்கப்படும்.
இதனால் ஏற்படும் மாற்றங்கள்: 1. உங்கள் PF contribution ₹2.5 லட்சம் என்றிருந்தால், VPF Contribution இனி உங்களுக்கு பயனளிக்காது.
நிறைய பேர் கேக்குறாங்க. ஒரு குறிப்பிட்ட பங்கு பேர சொல்லி, இந்த பங்கு 50% க்கு மேல வருமான குடுத்துருக்கே இந்த வருஷம், அதுல முதலீடு பண்ணலாமா?ன்னு.
அதற்கான பதில் இந்த இழையில்.
இந்த 2020-21 வருடம், பங்குச்சந்தைக்கு ஒரு outlier வருடம். 2020 மார்ச் 25 வாக்குல 7500 வரைக்கும் இறங்கிய #NIFTY குறியீடு, தற்போதைக்கு 100% recover ஆகியிருக்கு. ஆடி காத்துல அம்மியும் பறக்கும்ன்னு சொல்ற மாதிரி, இந்த recovery ல almost எல்லா பங்குகளும் உயரத்தான் செஞ்சிது.
இந்த outlier வருடத்துல, எந்தவொரு பங்கினுடைய performance எ அதோட actual performance ஆ பாக்க கூடாது. இது ஒரு one-off event தான். வலுவான அடிப்படை கொண்ட பங்குகள பத்தி கவலை வேண்டாம். அப்படி இல்லாத பங்குகள், ஒரு சிறு இறக்கம் வந்தாலே, அதள பாதாளத்துக்கு போகும்.
பணவீக்கமும், உங்கள் முதலீடுகளில் அதன் தாக்கங்களும் - ஓர் இழை.
Financial மற்றும் Retirement planningல் நமது வருங்காலப் பணத் தேவைகளை கணக்கிடுகையில் பணவீக்கத்தின் தாக்கத்தை கணக்கிலெடுக்க மறந்துவிடுகிறோம்.
பணவீக்கமென்பதுநம்மிடமுள்ள பணத்தின் வாங்குதிறன் மாற்றத்தின் ஒரு மதிப்பீடு. உதாரணமாக, 5% பணவீக்க விகிதத்தினால், 2021 வருடம் நீங்கள் வைத்திருக்கும் ₹100 மதிப்பு, 2022 வருடம் வெறும் ₹95 தான். அதாவது, இந்த வருடம் நீங்கள் ₹100 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பொருளை அடுத்த வருடம் ₹105 ஆகும்
உதாரணமாக உங்களின் தற்போதைய மாதாந்திர செலவு ₹25000 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் retirement planning செய்கையில், 20 வருடங்கள் கழித்து உங்கள் செலவுகள் இதே அளவு இருக்காது. பணவீக்கத்தை சேர்த்தால், உங்களுக்கு ₹66332 தேவைப்படும். ஆகையால் நீங்கள் plan பண்ண வேண்டிய தொகை ₹66332.